Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அடடே! ஒரு பக்கம் நீட்; மற்றொரு பக்கம் குட்கா

Posted: 20 Jul 2017 09:46 AM PDT

அ.தி.மு.க.,வில் ஒரு தரப்பினர், 'நீட்' தேர்விலி ருந்து விலக்கு கோரி, டில்லியில் பிரதமரை சந்தித்தனர். அதேநேரத்தில், அந்த கட்சியின், மற்றொரு தரப்பினர், 'குட்கா' விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழக அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தி, பார்லிமென்டில் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட் நுழைவுத் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது' என, மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து விட்டது. இந்நிலையில், அதே கோரிக்கையை, மத்திய அரசிடம் வலியுறுத்து வதற்காக, தமிழக அமைச்சர்கள் ஐந்து பேர், நேற்று ...

நாட்டின் 14வது ஜனாதிபதியாக தேர்வானார் ராம்நாத் கோவிந்த் அபாரம்

Posted: 20 Jul 2017 10:10 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்காக நடந்த தேர்த லில், 65 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் பெற்று, ராம்நாத் கோவிந்த், 71, அமோக வெற்றி பெற்று, நாட்டின், 14வது ஜனாதிபதியாக தேர் வாகி உள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர், முதன்முறையாக ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைகிறார்.

வரும், 25ல் பதவியேற்கும் ராம்நாத் கோவிந்துக்கு, பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்தத் தேர்தலில், காங்., உட்பட, 18 எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப் பட்ட, முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீரா குமார், தோல்வி அடைந்தார்.ஜனாதிபதி பிரணாப் ...

விஜயபாஸ்கர் வழக்கு விஸ்வரூபம் இன்று ஆஜராக உத்தரவு

Posted: 20 Jul 2017 10:28 AM PDT

குட்கா தயாரிப்பாளர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, வருமான வரித்துறை யினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று விசாரணைக்கு ஆஜராக, உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஏப்ரலில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனை
சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகில் உள்ள, விஜயபாஸ் கருக்கு சொந்தமான வீடு, குவாரி மற்றும் கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.சென்னையில் ...

கமல் அரசியல் பிரவேசம் விஸ்வரூபமா; புஸ்வாணமா?

Posted: 20 Jul 2017 10:33 AM PDT

தமிழக அரசின் ஊழல் புகார்களை பட்டியலிட கோரி, நடிகர் கமல் விடுத்த வேண்டுகோள், அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது. இதனால், கமலுக்கு ஆதரவு பெருகி வருவதோடு, ஒரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக அரசியலில், குழப்பமான சூழல் நிலவுகிறது. வெற்றிடத்தை நிரப்ப போகிறோம் என, சின்ன கட்சிகள் எல்லாம், வேட்டியை மடித்து கட்டி, களம் இறங்கி உள்ளன.அ.தி.மு.க., - தி.மு.க.,வும், மக்களிடம் இருந்து செல்வாக்கை காப்பாற்றிக்கொள்ள, தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. இந்நிலையில், ரஜினி, கமல் என, உச்ச ...

கான்ட்ராக்டர் வீட்டில் 32 கிலோ தங்கம் சிக்கியது

Posted: 20 Jul 2017 10:42 AM PDT

சென்னையில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலை துறை பொறியாளர் வீடு, அலுவலகம், கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள அவரது மனைவி மற்றும் மகனின் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, 32 கிலோ தங்கம்; 41 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.

சென்னை, கே.கே.நகர், 11வது செக்டார், 66வது குறுக்கு தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி. இவர், தமிழக நெடுஞ்சாலை துறையில் பணி புரிந்து, சமீபத்தில் ஓய்வு பெற்றவர்.
வருமான வரிதுறையினர் நடத்திய புலனாய்வு விசாரணையில்,இவர் ஒருசொத்தை விலைக்கு வாங்கியதில்முறைகேடு நடந்தது தெரிய
வந்தது.அதைத் ...

முரசொலி பவள விழாவில் கமல் ரஜினியும் பங்கேற்பு; ஸ்டாலின் தகவல்

Posted: 20 Jul 2017 11:01 AM PDT

சென்னை:'முரசொலி பவள விழாவில், கமல் பங்கேற்பார்; மேடையில் அமர்ந்து, வாழ்த்தி பேசுவார். ரஜினி, முன் வரிசையில் அமர்ந்து பங்கேற்பார்' என, தி.மு.க., செயலர் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்த, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கட்சி தலைவர்கள் பற்றி, ஸ்டாலின் உருக்க மாக பேசியுள்ளார்.
இது குறித்து, ஸ்டாலின் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடான, 'முரசொலி'யின் பவள விழாவில், அனைத்து கட்சிகளின்
தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி உள்ளேன். வைகோவை தொலைபேசியில் தொடர்பு ...

'ஹிந்து தேசிய கொள்கையே போருக்கு இந்தியாவை தூண்டுகிறது' சீன பத்திரிகையின் விஷமத்தனம்

Posted: 20 Jul 2017 11:08 AM PDT

புதுடில்லி: 'ஹிந்து தேசிய கொள்கையே, சீனாவுக்கு எதிராக போர் புரிவதற்கு, இந்திய அரசை துாண்டி விடுகிறது' என, சீன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சிக்கிம் எல்லை - சீனா - பூட்டான் இடையேயுள்ள டோகோலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட, சீனா முயன்றது; இது, நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், நம் படைகள், அதை தடுத்து நிறுத்தின.அதையடுத்து, எல்லையில், ஒரு மாதத்துக்கு மேலாக,பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து, சீன அரசு நடத்தும் மற்றும் அதன் ஆதரவு பத்திரிகைகள், தொடர்ந்து, ...

சசிக்கு பணிவிடை செய்த புகாரில் அதிகாரி அனிதா தூக்கியடிப்பு

Posted: 20 Jul 2017 11:13 AM PDT

பெங்களூரு: அ.தி.மு.க., சசிகலாவுக்கு உதவிய குற்றச்சாட்டில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி, அனிதாவும் துாக்கியடிக்கப்பட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும், பிப்ரவரி, 15ல், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், சிறைத் துறை, டி.ஜி.பி.,யாக இருந்த, சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்று, சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்ததாக, ...

ஜனாதிபதி தேர்தல் சிறப்பம்சங்கள்

Posted: 20 Jul 2017 11:17 AM PDT

1: போட்டியின்றி தேர்வான ஜனாதிபதி நீலம் சஞ்சீவி ரெட்டி (1977). இந்த தேர்தலில் 37 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மனு சரிபார்த்தலின் போது, இவரை தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடி யானது. மேலும் லோக்சபா சபாநாய கராக இருந்து, ஜனாதிபதியானவர் இவர் மட்டுமே.

2 :1967ல் மூன்றாவது ஜனாதிபதியான ஜாகிர் உசேன் குறைந்த காலம் (1 ஆண்டு, 355 நாட்கள்) பதவி வகித்தவர். இவர் பதவிக்காலத்தில் (1969, மே 3) மறைந்தார். அதேபோல 5வது ஜனாதிபதி (1974 தேர்தல்) பக்ருதீன் அலி அகமது, பதவிக்காலத்தில் மறைந்த மற்றொரு ஜனாதிபதி. 5 : 1952ல் நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் 5 பேர் போட்டியிட்டனர். 6: துணை ஜனாதிபதியாக ...

ஹர்மன்பிரீத் 'சூறாவளி' சதம்: பைனலில் இந்திய அணி

Posted: 20 Jul 2017 11:53 AM PDT

டெர்பி: பெண்கள் உலக கோப்பை தொடரின் பைனலுக்கு ஜோராக முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங்கில் 'சூறாவளியாக' சுழன்ற ஹர்மன்பிரீத் கவுர், 115 பந்தில் 171 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்சில், பெண்களுக்கான 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது அரையிறுதியில் நேற்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் துவங்க சுமார் மூன்று மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் தலா 42 ஓவர்கள் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது.'டாஸ்' வென்ற இந்திய அணி ...

இன்றைய(ஜூலை 21) பெட்ரோல், டீசல் விலை?

Posted: 20 Jul 2017 01:12 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 3 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 3 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.58.02 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 21) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

ஏர்-இந்தியா பங்குகள் விற்பனையில் தகுந்த முடிவு: மத்திய அமைச்சர்

Posted: 20 Jul 2017 02:04 PM PDT

புதுடில்லி: ஏர் - இந்தியா நிறுவன பங்குகளை விற்பதற்கு முன், பலதரப்பட்ட கருத்துக்களும் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டு தகுந்த முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
லோக்சபாவில், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியதாவது: நஷ்டத்தில் இயங்கும் ஏர் - இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை ரீதியிலான ஒப்புதலை அளித்துள்ளது. இதுவரை, இந்த நிறுவன பங்குகளை வாங்குவதற்கு பலர் முன்வந்துள்ளனர். அதே நேரத்தில், நிறுவனத்தை மீட்பது குறித்தும், பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™