Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை

Posted: 20 Jul 2017 03:48 PM PDT

டெர்பி, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் 8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து ...

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --8}-- (9 )

Posted: 20 Jul 2017 03:27 PM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}ரமணியன்

படம் முகநூல் நன்றி

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 20 Jul 2017 12:08 PM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி

Posted: 20 Jul 2017 08:55 AM PDT

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி புதுடில்லி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் மீராகுமாவரை விட 65 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பா.ஜ., கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். தேர்தலில் 99 சதவீத ஓட்டுகள் பதிவாகின. முதல் சுற்றில் ராம்நாத் கோவிந்த் 4,79,585 மதிப்பு ஒட்டுக்களும், ...

என்னை பற்றி ----ராஜேஷ்

Posted: 20 Jul 2017 08:53 AM PDT

பெயர்:  ராஜேஷ் பிள்ளை
சொந்த ஊர்: நாசிக்- மகாராஷ்டிரா - இந்தியா
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: மின் புத்தக தேடல் வழியாக
பொழுதுபோக்கு:இணையதளம் , புத்தகங்கள்
தொழில்:பொறியாளன்
மேலும் என்னைப் பற்றி:வாசிப்பை நேசிக்கும் ஒரு எளிய வாசகன் ,
முகநூல் மற்றும் கிச்சுக்கள்  வாயிலாக மன தோன்றல்களை வெளிப்படுத்தும் மானிடன்  

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?

Posted: 20 Jul 2017 07:35 AM PDT

'ஆஹா! ஆடி வந்துவிட்டது. அனைத்தையும் தள்ளுபடியில் வாங்கிக் குவிப்போம் என்று பலருக்கும் மனதில் உற்சாகம் துள்ளல் நடை போடும் நேரம் வந்துவிட்டது. 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பதற்கு தக்கபடி விவசாய வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள் புறப்படுகிறார்கள். 'ஆடியில் தேடிக் குளி' என ஆடி 18-ம் பெருக்கை வரவேற்க தயாராகிவிட்டனர் பெண்கள். ஆடி வந்துவிட்டது, அம்மனுக்கு கூழ் ஊற்றி மனம் குளிர ஏற்பாடு செய்கின்றனர் ஆன்மிக அன்பர்கள். இப்படி எல்லோரும் ஆடியின் வருகையை ஆரவாரமாகக் கொண்டாடிக்கொண்டு ...

லிஸ்பனில் காந்திஜி சிலை…

Posted: 20 Jul 2017 06:24 AM PDT


--
போர்ச்சுக்கலின் லிஸ்பனில் உள்ள ராதாகிருஷ்ணா
கோவிலில் அமைக்கப்பட்டுள்ள மோகன்தாஸ் காந்தி, 
அவரது மனைவியான கஸ்தூரிபாயின் சிலையின் 
அருகில் குழந்தைகள் அமர்ந்துள்ள காட்சி இது.
-
இந்திய பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்
பயணத்தில் போர்ச்சுக்கல் நாட்டிற்கும் செல்கிறார்.

—————————
நன்றி-முத்தாரம்

_________________

கேட்கக் கூடாத கேள்விகள்

Posted: 20 Jul 2017 06:21 AM PDT

இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்  என்கிற டிப்ஸ் தேவைதான். ஆனால் இன்டர்வியூவில்  சில தவறுகள் செய்துவிடுகிறீர்கள்.  வேலை அங்கு கிடைக்காது எனினும், அத்தவறுகளை  செய்யக்கூடாது என்ற விஷயம் புத்திக்கு சுருக்கென  புரிவது பிராஃபிட்தானே! அந்த கேள்விகளின் லிஸ்ட்  இதோ! – உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம்.  ஆனால் அவர்கள் உங்களைத் தெரியாது என்று  கூறுகிறார்களே?   இதன் அர்த்தம்,  ரெஸ்யூமில் நீங்கள்  பொய் சொல்லிவிட்டீர்கள் என்பதே மெய்.  இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் ...

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்

Posted: 20 Jul 2017 06:16 AM PDT

ராம்நாத் கோவிந்த். கோப்புப்படம் - குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் -சில தகவல்கள் - * உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி விவசாயக் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். - தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். - * பிறகு டெல்லி உயர் நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். - * வழக்கறிஞர் என்ற முறையில், தலித் ...

கூழாங்கற்கள்...!!

Posted: 20 Jul 2017 06:11 AM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

தக்காளியும் வெங்காயமும் !

Posted: 20 Jul 2017 05:58 AM PDT

விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று எல்லோரும் பொங்குகிறார்கள். வருடத்திற்கு ஒரு முறையோ , இரு முறையோ வெங்காயம் , தக்காளி கிலோ நூறு ரூபாயைத் தாண்டுகிறது. அதைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வருடம் முழுவதும் விவசாயிகள் இழப்பை மட்டும் சந்திக்க வேண்டுமா ? இந்த விலையேற்றம் கொடுக்கும் நம்பிக்கை தான் விவசாயிகளைத் தொடர்ந்து உழைக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த விசயம் பெரிதாக்கப்படுகிறது. கமிசன் போக விவசாயிகளுக்கு என்ன கிடைத்துவிடும். அப்படியே விலை கிடைத்தாலும் இதுவரையிலான இழப்புகளை சரிசெய்யவா ...

தென்னங்கீற்று !

Posted: 20 Jul 2017 02:41 AM PDT

1975-ல் வெளிவந்த இந்த திரைப்படம் 25 வயதான பிறகும் பருவமடையாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடைமுறை சிக்கல்களுடன் விவாதிக்கிறது. ஒரு பெண் 25 வயதில் திருமணம் ஆகாமல் இருப்பதே பெரும் சுமையாக நினைக்கும் சமூகம் நம்முடையது. இந்த சூழலில் வயதிற்கு வராமல் இருந்தால் ? கதாப்பாத்திரங்கள் அதன் போக்கிலேயே இருக்க அனுமதிக்கப்படுகின்றன. யாருக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. யாரையும் எதிர்மறையாக காட்டவில்லை. சூழல்களைக் கொண்டே கதை நகர்கிறது. நடிகை சுஜாதாவிற்கு பொருத்தமான கதாப்பாத்திரம் (வசுமதி ) . நல்ல நடிப்பு. ...

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்

Posted: 19 Jul 2017 06:59 PM PDT

சென்னை: ஊழல் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்புங்கள் ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு என்றோ வந்து விட்டேன். துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும். நான் அரசியலுக்கு வந்து விட்டதை அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா ஆகியோர் உணர வில்லை. வரி ஏய்ப்பபு நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுவது கோபத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. இந்திதிணிப்பு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே ...

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை

Posted: 19 Jul 2017 06:57 PM PDT

புதுடில்லி: நாட்டின், 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று(ஜூலை 20) எண்ணப்பட்டு, முடிவு, மாலை, 5:00 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், 17ல் நடந்தது. பார்லி., வளாகம் மற்றும் மாநில சட்டசபைகளில் நடந்த தேர்தலில், லோக்சபா, ராஜ்யசபா, எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளித்தனர். மொத்தம், 99 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™