Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவக்கம்!

Posted: 16 Jul 2017 09:18 AM PDT

புதுடில்லி: பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. சீனாவுடனான எல்லை பிரச்னை, ஜம்மு - காஷ்மீரில் நிலவும் பதற்றம் உட்பட, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. வரும், ஆக., 11ம் தேதி வரையில் நடக்கும் இந்தக் கூட்டத் தொடரில், 20 நாட்கள் அலுவல் நடக்க உள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், இன்று நடக்க உள்ளது.
வலியுறுத்தல்
ராஜ்யசபா தலைவராக உள்ள, துணை ஜனாதிபதி ஹமீது ...

கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி

Posted: 16 Jul 2017 09:39 AM PDT

புதுடில்லி:''ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதி களால் கடத்தப்பட்ட, 39 இந்தியர்களையும் மீட்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

மேற்காசிய நாடான ஈராக்கில், 2014ல், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, 39 இந்திய தொழிலாளர்களை கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க, வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அவர்களை எங்கே கடத்திச் சென்றுள்ளனர் என தெரியாமல் இருந்தது.ஐ.எஸ்., பயங்ரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வந்த ஈராக் ...

சசிகலாவுக்கு சிறப்பு வசதி; உதவிய தமிழக பிரமுகர்கள்?

Posted: 16 Jul 2017 10:42 AM PDT

சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைக்க, தமிழக காங்., பிரமுகர்கள் சிலர், திரைமறைவில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்., துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு, சிறைத் துறை உயர் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார்.
உத்தரவு
இது குறித்து விசாரணை நடத்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ...

முத்திரை தாள் மோசடி தெல்கிக்கு உதவியாளர்களாக சிறை கைதிகள்

Posted: 16 Jul 2017 10:51 AM PDT

பெங்களூரு: முத்திரை தாள் மோசடி வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் அப்துல் கரீம்லால் தெல்கிக்கு, சிறைத்துறை விதிமுறைகளை மீறி, உதவியாளராக விசாரணை கைதிகள் நியமிக்கப்பட்டுள்ள, வீடியோ காட்சிகள் வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முத்திரை தாள் மோசடி வழக்கில், அப்துல் கரீம்லால் தெல்கி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவருக்கு, எச்.ஐ.வி., நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் உள்ளன. இதனால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, தனக்கு உதவியாளர்கள் ...

கமலுக்கு ஸ்டாலின் ஆதரவு; அமைச்சர்களுக்கு கண்டனம்

Posted: 16 Jul 2017 10:58 AM PDT

சென்னை: நடிகர் கமலை மிரட்டிய அமைச்சர் களுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்டாலினுக்கு, கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சமீபத்தில், நடிகர் கமல் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 'குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா... ஆதாரம் இல்லாமல் கமல் பேசக் கூடாது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடர்வோம்'என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று முன்தினம் கூறினார்.
அதுபோல, 'கமல் ஒரு ஆளே கிடையாது' என, அமைச்சர் அன்பழகனும், 'கமல் மீது
வன்கொடுமை ...

உள்ளாட்சித் தேர்தலுக்கு 'தடா' போட்ட உளவுத்துறை

Posted: 16 Jul 2017 11:07 AM PDT

சிவகங்கை: உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது மட்டும் காரணமில்லை... சட்டம் ஒழுங்கு பிரச்னையில் உளவுத்துறை அளித்த எச்சரிக்கையும் முக்கிய காரணம் என தெரிந்துள்ளது.

கடந்த 2016 அக்., 24 வுடன் உள்ளாட்சி பிரநிதிகளின் பதவிகாலம் முடிவடைந்தது. தேர்தலுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றமே, 'எப்போது நடத்துவீர்கள்' என, தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. அ.தி.மு.க., இரு அணியாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.தற்போது சசிகலா அணியும் பழனிசாமி, தினகரன் அணி என, மேலும் இரண்டாக உடைந்தது. இது ...

புதுச்சேரியில் முட்டல் மோதல்; மதுரையில் கெஞ்சல் கொஞ்சல்

Posted: 16 Jul 2017 11:18 AM PDT

மதுரை: மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சந்தித்து, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து ஜாலியாக பேசினர்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 'கவர்னரின் செயல்பாடுகளுக்கு பா.ஜ., பின்னணியில் உள்ளது' என காங்., குற்றம்சாட்டுகிறது. சட்டசபைக்கு பா.ஜ.,வை சேர்ந்த மூவர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டனர். இதை சபாநாயகர் வைத்தியலிங்கம் நிராகரித்தார். இதனால், மோதல் உச்சத்தில் உள்ளது. இந்நிலை யில் விருது நகரில் நிகழ்ச்சியில் ...

சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்த சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?

Posted: 16 Jul 2017 11:22 AM PDT

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பெங்களூரு சிறை விவகாரம் பற்றி பேச உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். இதற்கிடையில், சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி., ரூபாவிடம் தகவல் கொடுத்த கைதிகள் 32பேர் பலமாக தாக்கப்பட்டதுடன் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். சொத்து குவிப்பு ...

இன்று ஜனாதிபதி பதவிக்கு தேர்தல்; ராம்நாத்துக்கு வெற்றி வாய்ப்பு

Posted: 16 Jul 2017 11:28 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ள, ராம்நாத் கோவிந்துக்கு, அதிக ஆதரவு உள்ளதால், அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வரும், 24ல் முடிவுக்கு வருவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், இன்று நடக்க உள்ளது.
இதில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த், 71, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் ...

பிரதமருக்கு எதிராக வழக்கு; டில்லி கோர்ட் தள்ளுபடி

Posted: 16 Jul 2017 12:02 PM PDT

புதுடில்லி: 'ராணுவ அமைச்சகத்தில் நடந்த ஊழல் புகார் குறித்து, நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரி, ராணுவ அமைச்சக முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த மனுவை, டில்லி சிறப்பு கோர்ட், தள்ளுபடி செய்தது.
ராணுவ அமைச்சகத்தில் பணியாற்றியவர், கே.என்.மஞ்சுநாதா. துறை ரீதியாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையால், பணியிலிருந்து மஞ்சுநாத், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். இதை, எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த தீர்ப்பாயம், மஞ்சுநாத்தின் மனநிலையை பரிசோதிக்க, எய்ம்ஸ் ...

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த 'பேஸ்புக்'

Posted: 16 Jul 2017 12:58 PM PDT

இஸ்லாமாபாத்: 'பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும்' என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, பேஸ்புக் நிர்வாகம் மறுத்து விட்டது.
சமூக வலைதளங்களில் ஒன்றான, 'பேஸ்புக்'கில், ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். 'இ - மெயில்' முகவரி மூலம், பேஸ்புக்கில் சேருகின்றனர். இதில், தங்கள் எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மொபைல் எண்:
இந்நிலையில், பேஸ்புக் நிர்வாகத்துக்கு, பாகிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: பேஸ்புக் பயன்படுத்துவோரில் ...

இன்று (ஜூலை 17) பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

Posted: 16 Jul 2017 02:26 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.61 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.98 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை- 17) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.61 காசுகளும், டீசல் லிட்டருக்கு 6 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.98காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™