Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு; உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடி

Posted: 14 Jul 2017 08:52 AM PDT

புதுடில்லி: மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அரசுகள் பட்டியலில், 73 சதவீத மக்களின் ஆதர வோடு, உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு, மக்களின் ஆதரவை பெற்றுள்ள அரசுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 73 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று, பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு காரணமாக, அந்த அமைப்பு கூறி உள்ளதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற,
பிரதமர்நரேந்திர மோடி, செல்லாத ரூபாய் நோட்டு, ...

அதிரடி! உ.பி., சட்டசபையில் போன், பை எடுத்து வர தடை

Posted: 14 Jul 2017 09:53 AM PDT

லக்னோ: 'உத்தர பிரதேச சட்டசபையில், சக்திவாய்ந்த வெடிபொருள் கண்டுபிடிக்கப் பட்டது, பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது, மிகவும் பாதுகாப்பு நிறைந்த சட்டசபை வளாகத்துக்குள், வெடிபொருளை கொண்டு வந்தது யார் என்பது பற்றி, என்.ஐ.ஏ., எனப் படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்' என,முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த, 11ல் துவங்கியது. 12ம் தேதி, சட்டசபை கூட்டம் துவங்குவதற்கு முன், போலீசார் வழக்கமான சோதனையில் ...

லஞ்சம் கொடுக்க முயற்சி: தப்புவாரா தினகரன்?

Posted: 14 Jul 2017 09:56 AM PDT

புதுடில்லி: முடக்கப்பட்ட, அ.தி.மு.க.,வின் சின்னமான,இரட்டை இலையை மீட்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்,முதல் குற்றபத்திரிகையை, டில்லி போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

முடக்கம்:அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களால், அது இரண்டாகப் பிரிந்தது. அதைத்தொடர்ந்து,அதன் சின்னமான இரட்டை இலையை,
தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்ப தற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு,ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலா வின் அக்கா மகன் தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ...

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து; சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Posted: 14 Jul 2017 10:11 AM PDT

சென்னை: மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் ௨ முடித்தவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு தரப்பில், 17ல், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது.'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்து வப் படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர் களுக்கு, 85 ...

சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்

Posted: 14 Jul 2017 10:28 AM PDT

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, அத்துறையின் டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் மீதே புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, கர்நாடகா, 'மாஜி' முதல்வர் குமாரசாமி கூறியதாவது: சிறை அதிகாரிகள், டி.ஜி.பி.,க்கு மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதில், 25 லட்சம் ரூபாய், டி.ஐ.ஜி.,க்கு செல்ல வேண்டும். இந்த பணத்தை வழங்காமல், டி.ஜி.பி.,யே பெற்றுக் கொண்டதால் தான், ...

ரூ.600 கோடி தந்தால் கிருஷ்ணா நீர்; ஆந்திர மாநில அரசு கிடுக்கிப்பிடி

Posted: 14 Jul 2017 10:31 AM PDT

'தமிழக அரசு நிலுவை வைத்துள்ள, 600 கோடி ரூபாயை கொடுத்தால் மட்டுமே, சாய்கங்கை நீர் திறக்கப்படும்' என, ஆந்திர அரசு கிடுக்கிப் பிடி போட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு திறக்க வேண்டும். இதற்கு பிரதிபலனாக கால்வாய் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான செலவை, ஆந்திர அரசுடன், தமிழக அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆந்திர அரசு ஒப்பந்தப்படி, முழுமையாக, 12 டி.எம்.சி., நீரை வழங்குவது இல்லை. நடப்பு நிதியாண்டுக்கான நீர் வழங்கும் காலம், ஜூலை,1ல், துவங்கியது. ஆனால், கண்டலேறு அணையில், போதிய நீர் இருப்பு ...

வீட்டு வாடகையை முறைப்படுத்த புதிய சட்டம்

Posted: 14 Jul 2017 10:37 AM PDT

சென்னை: தமிழகத்தில் வீட்டு வாடகை மற்றும் குத்தகையில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, புதிய சட்டம் இயற்றுவதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

வீடுகள், கடைகள் மற்றும் மனைகளை வாடகைக்கு விடுவதில் உள்ள நடைமுறை சிக்கல் களுக்கு தீர்வு காண, மாதிரி வீட்டு வாடகை சட்டத்தை, 2015ல், மத்திய அரசு உருவாக்கியது. இதை ஏற்று, பெரும்பாலான மாநில அரசுகள் சட்டம் இயற்றி, அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில், இச்சட்டத்தை அமல்படுத்த, நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான மசோதாவை, ...

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பு; பிரபல நிறுவனத்திடம் தர முடிவு

Posted: 14 Jul 2017 10:40 AM PDT

அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கணினி வழி கல்வியை ஊக்குவிக்க, மத்திய அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இதில், 'நிதி உதவி திட்டம் - 2010'ன் கீழ், 5,265 பள்ளிகளில், கணினி வசதியுள்ள,'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.
முதற் கட்டமாக, 920 பள்ளிகளில், அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, 'டெண்டர்' முறையில் வழங்காததால், பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்ததால், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டது. பின், ...

அ.தி.மு.க., சசிகலா விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தால்... 'கவலையில்லை '

Posted: 14 Jul 2017 10:45 AM PDT

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிடம், லஞ்சம் பெற்று, சலுகைகள் வழங்கப்பட்டதாக பரபரப்பு புகார் கூறிய, சிறை துறை, டி.ஐ.ஜி., ரூபா, 'என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை; உண்மையை கூறுவதால், அதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனர்' என, கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை கட்டிக் கொடுப்பதற்கு, 2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத் துறை, டி.ஜி.பி., மீது குற்றஞ்சாட்டி, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட அறிக்கை, மீடியாக்களில் ...

பெட்ரோல் டீசல் விலை இன்று(ஜூலை 15) எவ்வளவு?

Posted: 14 Jul 2017 12:38 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.49 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.83 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை- 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 15 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.49 காசுகளும், டீசல் லிட்டருக்கு 20 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.83 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. ...

என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்

Posted: 14 Jul 2017 01:34 PM PDT

புதுடில்லி: என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது தொடர்பாக, ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விளக்கம்:
என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இங்கு நடக்கும் தேர்தலில் ஓட்டுரிமை அளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'என்.ஆர்.ஐ.,க்கள் ஓட்டளிக்க வசதியாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வந்தால், ஓட்டளிப்பதற்கான வழிமுறைகளை வகுக்க தயாராக உள்ளோம்' என, தேர்தல் ...

காஷ்மீரில் ஜூலை 18-ம் தேதி முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ்.மாநாடு

Posted: 14 Jul 2017 02:08 PM PDT

ஸ்ரீநகர்: ஜூலை 18-ம் தேதி காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ்.மாநாடு நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புபடையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள்,வன்முறை சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற சம்பவங்கள்நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஜூலை 18-ம் தேதி முதல் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மாநாடு முதன்முறையாக நடக்கிறது. இம்மாநாட்டினை மூத்த தலைவர் மோகன்பகவத் துவக்கி வைக்கிறார். இதில் 195-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அனுதாபிகள் கலந்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™