Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


துணை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி உறுதி! காந்தி பேரனை களமிறக்கின எதிர்க்கட்சிகள்

Posted: 11 Jul 2017 09:19 AM PDT

துணை ஜனாதிபதி தேர்தலில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்து, தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், காங்., தலைமையிலான, 18 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, மஹாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான, கோபாலகிருஷ்ண காந்தியை, வேட்பாளராக தேர்வு செய்துள்ளன. இதனால், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உறுதியாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மீரா குமாரும், பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, ஆதரவு ...

நம்பிக்கை தீர்மானம் செல்லுமா? பதில் தர சுப்ரீம் கோர்ட் அவகாசம்

Posted: 11 Jul 2017 09:22 AM PDT

தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, சொலிசிட்டர் ஜெனரல், ரஞ்சித் குமாருக்கு, ஆக., 12 வரை, சுப்ரீம் கோர்ட் அவகாசம் தந்துள்ளது.

தமிழக சட்டசபையில், பிப்., 18ல், முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது. இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும், ரகசிய ஓட்டு நடத்தக்கூடாது என்ற, சபாநாயகரின் முடிவை ரத்து செய்யக் கோரியும், முன்னாள் முதல்வர் ...

தினகரன் எதிர்ப்பு: திவாகரன் கூட்டம் ரத்து

Posted: 11 Jul 2017 09:22 AM PDT

தினகரன் எதிர்ப்பு காரணமாக, மன்னார்குடியில், 15ம் தேதி, திவாகரன் ஏற்பாட்டில் நடக்கவிருந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவை, மதுரையில், அரசு சார்பில், முதல்வர் பழனிசாமி அணியினர் நடத்தினர். மன்னார்குடியில், வரும், 15ல், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த, சசிகலா தம்பி திவாகரன் ஏற்பாடு செய்து இருந்தார்.
இதற்காக, மன்னார்குடியில் வைக்கப்பட்ட பேனர்களில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி, சசிகலா, திவாகரன், அவரது மகன்
ஜெயானந்த் ஆகியோரின் படங்கள் இடம் ...

மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்ற... தடையில்லை!

Posted: 11 Jul 2017 09:36 AM PDT

மதுக்கடைகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றும் மாநில அரசுகளின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சாலை விபத்துகளால் உயிரிழப்புஏற்படுவதை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இயங்குவதற்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் 2016, டிச., 15ல் தீர்ப்பு அளித்தது. அதன்பின் 20 ஆயிரம் மக்கள் தொகை உடைய நகரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 220 மீட்டருக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என, இந்த ஆண்டு மார்ச், 31ல் தீர்ப்பில் திருத்தம் ...

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆய்வு

Posted: 11 Jul 2017 10:06 AM PDT

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில், ஏழு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள அமர்நாத் பனி குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம் ...

'மாடு விற்பனை அரசாணைக்கான தடை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்'

Posted: 11 Jul 2017 10:15 AM PDT

புதுடில்லி: 'மாடு உள்ளிட்ட கால்நடைகளை, இறைச்சிக்காக விற்பது தொடர்பான அரசாணைக்கு, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை விதித்துள்ள தடை, நாடு முழுவதுக்கும் பொருந்தும். இந்த அரசாணையை செயல்படுத்த, மூன்று மாதங்கள் தடை விதிக்கப்படுகிறது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இறைச்சிக்காக மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதை தடுக்கும் வகையில், மத்திய அரசு, மே, 23ல், அரசாணை வெளியிட்டது. 'சந்தைகளில், மாடு உள்ளிட்ட கால்நடைகளை, விவசாயிகளுக்கு மட்டுமே விற்க வேண்டும்; இறைச்சிக்காக விற்கக் கூடாது' என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில், ...

இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனையை தடுக்க அரசு திட்டம்

Posted: 11 Jul 2017 10:18 AM PDT

சென்னை : ''கால்நடைகளை இறைச்சிக்கு விற்பதை தடுக்க, ஆறு கோடி ரூபாயில், மலடு நீக்க சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, கால்நடை பராமரிப்பு துறை பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
விவசாயிகளுக்கு, கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி அளிப்பதற்காக, 100 சிறு கால்நடை பண்ணைகள், 1.25 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். இதற்காக, ஊராட்சி ஒன்றியங்களில், இரண்டு முதல், 10 பசுக்கள் அல்லது எருமைகளை உடைய அலகு ஒன்றை அமைக்கும் விவசாயிக்கு,
25 ...

'கச்சத்தீவை மீட்டே தீருவோம்!': ஜெயகுமார் பேச்சு

Posted: 11 Jul 2017 10:37 AM PDT

சென்னை: ''ஜெயலலிதா சபதத்தை நிறைவேற்றும் வகையில், கச்சத்தீவை மீட்டே தீருவோம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - கே.பி.பி.சாமி: தமிழக மீனவர்களின், 160 படகுகள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் உள்ளன. அதேபோல், 60 மீனவர்கள் சிறையில் உள்ளனர்.
அமைச்சர் ஜெயகுமார்: மீனவர்கள் பிரச்னைக்கு காரணம், 1974ல், கச்சத்தீவை தாரை வார்த்தது. அதை, மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என,
ஜெ., வலியுறுத்தினார். நம் மீனவர்கள், தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில், மீன் பிடிக்கக் ...

நெடுவாசல் திட்டம் துவக்கப்படாது! மத்திய அரசு கூறியுள்ளதாக மந்திரி தகவல்

Posted: 11 Jul 2017 10:45 AM PDT

சென்னை:''மாநில அரசின் அனுமதி இல்லாமல், எந்த திட்டத்தையும் துவக்க மாட்டோம் என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்,'' என, அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில், மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான, ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக, மே, 19 முதல், தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. எண்ணெய் கசிவால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன; நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளது.
சுமுகமான ...

'ஜிகா வைரஸ்' காய்ச்சலால் உயிருக்கு ஆபத்தில்லை!

Posted: 11 Jul 2017 12:13 PM PDT

சென்னை: ''தமிழகத்தில், 'ஜிகா வைரஸ்' பரவாமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
தி.மு.க., - பிரகாஷ்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சட்டி அருகே நாட்றாம்பாளையம் கிராமத்தில், ஜிகா வைரஸ் காய்ச்சலால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் காய்ச்சலை தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
துணை சபாநாயகர் ஜெயராமன்: பொள்ளாச்சி, ஆனைமலை, ...

இலவச ஆடு, மாடு திட்டம் திடீர் நிறுத்தம்

Posted: 11 Jul 2017 01:17 PM PDT

சென்னை: ''தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக, இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது,'' என, கால்நடை துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் கூறியதாவது: தமிழகத்தில், கிராமப் பகுதிகளில் வாழும் பெண்களுக்கு, இலவச கறவை பசு வழங்கும் திட்டம், 2011 முதல் செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு தகுதிகள் மற்றும் அம்சங்கள் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், கிராமங்களில், ஒரு குடும்பத்திற்கு, ஒரு கிடா மற்றும் மூன்று பெட்டைஆடுகள், இலவசமாக வழங்கப்படுகின்றன.
இலவச கறவை பசு வழங்கும் ...

தக்காளி கிலோ ரூ.100:இன்னும் கூடுமாம்

Posted: 11 Jul 2017 02:14 PM PDT

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'இன்னும் விலை கூடும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிக்கு பெங்களூருவில் இருந்து ‛ஹைபிரீடு' வகை தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது, தக்காளி வரத்து குறைந்துள்ளது. வறட்சி காரணமாக தமிழகத்திலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.
தேனி மாவட்டம் கண்டமனுார் பகுதியில் அதிகளவு நாட்டுத்தக்காளி சாகுபடி நடக்கிறது.
இங்கும் விளைச்சல் குறைவால் தக்காளி வரத்து குறைந்தது. நேற்று ராமநாதபுரத்தில் கிலோ 85 முதல் 90 ரூபாய் வரையிலும், சில்லரை கடைகளில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™