Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மின்நூல்

Posted: 11 Jul 2017 03:40 PM PDT

உங்கள் முதல் இரு பதிவுகள் தமிழில் இருப்பது போலவே ,
மூன்றாம் பதிவையும் தமிழிலேயே பதிவு செய்து இருக்கலாமே,சிட்ராஜ் அவர்களே.
உங்கள் இரண்டாம் பதிவின் ஆங்கில மொழிபெயர்ப்பே மேற்கண்ட பதிவும்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் ,தமிழிலேயே பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
ஆகவே உங்கள் ஆங்கில பதிவு நீக்கப்படுகிறது.

ரமணியன்.

குறிப்பாக சொன்னால்தானே புரியும் .

Posted: 11 Jul 2017 01:16 PM PDT

குறிப்பாக சொன்னால்தானே புரியும் .நன்றி முகநூல்

ரமணியன்

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு

Posted: 11 Jul 2017 10:45 AM PDT

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? " தென்னங்கன்று சொன்னது, " ஒரு வருஷம் ". "ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது. தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது. ஒவ்வொரு ...

பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

Posted: 11 Jul 2017 10:33 AM PDT

புதுடில்லி:
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்
என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை
எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம் என மத்திய அரசு
அறிவித்துள்ளது.

UIDPAN<12 digit aadhar no> 10 digit pan no டைப் செய்து
567678 மற்றும் 56161 என்ற எண்களுக்கு அனுப்பலாம்
என அறிவித்துள்ளது.
-
தினமலர்

பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 11 Jul 2017 09:53 AM PDT

சென்னை: பிரபல விளையாட்டு வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணிக்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன் வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள், ஸ்குவாஷ் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதோடு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகைளை வென்ற தமிழகத்தை சேர்ந்த வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு அரசு பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து அவருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு ...

மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது

Posted: 11 Jul 2017 09:51 AM PDT

- லண்டன்: 1931-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி லண்டன் நகருக்கு சென்றிருந்தார். நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்ஸ்லி ஹால் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்தபோது அவரை ஒவியமாக தீட்ட ஜான் ஹென்றி ஆம்ஷெவிட்ஸ் என்பவர் விருப்பப் பட்டார். பொதுவாக, ஓவியங்கள் வரைவதற்காக வெகுநேரம் வரை ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும் என்பதால் தன்னை சிலர் ஓவியமாக வரைய முன்வந்த வேளைகளில் காந்திஜி அதை பவ்யமாக தவிர்த்து வந்திருந்தார். ஆனால், அவரை ...

பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்

Posted: 11 Jul 2017 09:50 AM PDT

உடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கதைக்களம் கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம். மாறாக உடையார் ...

குழந்தைகள்தான் நமக்கு ஆசிரியர்கள்

Posted: 11 Jul 2017 09:08 AM PDT

குழந்தைகள்தான் நமக்கு ஆசிரியர்கள் இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?' ஆசையோடு கேட்டான் மகன்.. . "அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!' குதர்க்கமாய் பதில் சொன்னாள், என் மனைவி... . அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. "எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ' மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்... . "வணக்கம்ண்ணே, சொல்லுங்க' என்றேன். "என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?' அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் ...

திருப்பதியில் ரூ.24 கோடி பழைய நோட்டுகள்

Posted: 11 Jul 2017 06:06 AM PDT

திருப்பதி: உலகளவில் மிகப்பெரிய பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், 24 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் தேங்கி உள்ளன. உண்டியல் காணிக்கை இது குறித்த திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் கூறியதாவது: திருப்பதி கோவில் உண்டியல் காணிக்கையாக, கடந்த ஆறு மாதங்களில் பக்தர்கள் அளித்த வகையில், 24 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவற்றை மாற்ற ஒரு வாய்ப்பு தரலாம் என்று மத்திய அரசு மற்றும் ...

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Posted: 11 Jul 2017 05:09 AM PDT

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்புஸ்பெயின் நாட்டில் நடக்கும் சான் ஃபெர்மின் விழாவை முன்னிட்டு காளைகளுடன்
சண்டையிடும் நிகழ்ச்சி நடந்தது.

நன்றி தினமலர்

ரமணியன்

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Posted: 11 Jul 2017 01:22 AM PDT

நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே பேலியோ உணவு முறைக்கு மாறும்முன் திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்" திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள். சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் )

‘நகச்சுவை நடிகர்’

Posted: 10 Jul 2017 09:57 PM PDT

– என்ன ராப்பிச்சை, வாட்ஸ் அப்ல ஏதோ மெசேஜ் அனுப்பியிருக்கே? – உங்க சாப்பாட்டைப் பற்றி ஃபீட் பேக் தாயி…! – கடலூர் சார்லி – —————————————– – அந்த காலேஜ் நடிகருக்கு நகம் கடிக்கிற பழக்கமாம்…! அதுக்காக …டைட்டில்ல 'நகச்சுவை நடிகர்'னு அவர் பேரைக் காட்டறதா..? – பர்வின் யூனூஸ் – ——————————————- – இந்தியா…. – சிக்கனம் சேமிப்பு பற்றி பேச அமைச்சர் வந்தார்… தனி விமானத்தில்! – க.அருச்சுனன் – ———————————— – வல்லரசு…! – அங்கே அத்தனை கோடி… இங்கே இத்தனை கோடி… ஊழல் பட்டியலைப் படித்தான் ...

கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!

Posted: 10 Jul 2017 09:48 PM PDT

என் மனைவியோட பேச்சை நாள் முழுக்க கேட்கலாம் - அவ்வளவு நல்லா பேசுவாங்களா? - இல்ல...அவ்வளவு நேரம் பேசிக்கிட்டே இருப்பா....! - வி.ரேவதி - --------------------------------------------- - - என்னைப்பத்தி ஜனங்க என்ன பேசிக்கிறாங்கய்யா? - வாட்ஸ் அப்-லேயா, ஃபேஸ்புக்லேயா, தலைவரே? - எஸ்.கோபாலின் - ------------------------------------------- - ஓலையில் செய்தி கிசு கிசு பாணியல் வந்துள்ளது, மன்னா! - எப்படி? - ராவில் ஆரம்பித்து ன்-ல் முடியும் ஏழு எழுத்து மன்னன் படையெடுத்து வருகிறானாம்..! - க.கலைவாணன் - ------- - தலைவர் ...

நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!

Posted: 10 Jul 2017 09:37 PM PDT

தலைகீழா நின்னு பார்த்தும் அந்த வேலை கிடைக்கலை... - அப்படி என்ன வேலை? - யோகா மாஸ்டர் வேலைக்குத்தான்! - வசந்தா மாரிமுத்து - ----------------------------------------------- - சுயம்வரத்துக்கு ஏன் ஒரு இளவரசரும் வரவில்லை? - நாம், அவர்களுக்கு இளவரசியின் ஆதார் கார்டு போட்டோவை அனுப்பி விட்டோம், மன்னா! - பர்வின் யூனூஸ் - -------------------------------------------- - ஹீரோ ஒரு கூல்டிரிங் கடை வெச்சிருக்கார்! - படத்தோட பேரு? - கோலா..! - ராஜலட்சுமி - -------------------------------------------- - தலைவர் ...

அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்

Posted: 10 Jul 2017 07:41 PM PDT

- - ஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 யாத்திரிகள் பலியாகினர். 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். - ------------------------------ தினமலர்

வேலன்:- இலவச வீடியோ ஆடியோ டிவிடி போட்டோ கன்வர்ட்டர்.

Posted: 10 Jul 2017 07:28 PM PDT

நம்மிடம் உள்ள வீடியோ பைல்கள்.ஆடியோ பைல்கள்.போட்டோக்கள்.டிவிடி மற்றும் இணைய பதிவுகளை வேண்டிய பார்மெட்டுக்கு கன்வர்ட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட  இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வீடியோ.ஆடியோ.டிவிடி.போட்டோ மற்றும் இணைய யூஆர்எல் என எந்த பைலினை நீங்கள் கன்வர்ட் செய்ய விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்யவும்.   அதுபோல நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த ...

புத்தகத்தால் வந்த புகழ்

Posted: 10 Jul 2017 07:24 PM PDT
-
நன்றி= அமுதசுரபி

அரசியல்............

Posted: 10 Jul 2017 06:57 PM PDT

சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற.... அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......

கூழாங்கற்கள்...!!

Posted: 10 Jul 2017 05:56 PM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™