Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பீஹாரில் நிதிஷ் - லாலு இடையே மோதல் முற்றுகிறது..! பதவியை ராஜினாமா செய்ய தேஜஸ்வி மறுப்பு

Posted: 10 Jul 2017 09:15 AM PDT

பாட்னா: ஊழல் வழக்கில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், 'பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். கூட்டணி அரசில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் இடம் பெற்றுள்ளது. லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் சிங், சுகாதாரத் துறை அமைச்சராகவும், இளைய மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ், துணை முதல்வராகவும் உள்ளனர்.
ரயில்வே அமைச்சராக ...

சீன தூதருடன் ராகுல் சந்திப்பு? தேசிய அரசியலில் சர்ச்சை

Posted: 10 Jul 2017 09:20 AM PDT

புதுடில்லி: இந்தியாவுக்கான சீன துாதர், லுாவோ ஜவ்ஹுய்யை, காங்., துணைத் தலைவர் ராகுல் சந்தித்து பேசியதாக வெளியான செய்தியை, முதலில் மறுத்த, காங்., கட்சி, சில மணி நேரத்தில், அதை உறுதி செய்துள்ளது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கிம் அருகேயுள்ள, டோகோலாம் தொடர்பாக, இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டுள்ளது. டோகோலாம் பகுதியில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
சமீபத்தில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த, காங்., துணைத் தலைவர் ராகுல், 'எல்லை பிரச்னையில், பிரதமர் நரேந்திர மோடி ...

பாக்., செய்வது சரியா?: அமைச்சர் சுஷ்மா காட்டம்

Posted: 10 Jul 2017 10:00 AM PDT

புதுடில்லி: ''பாக்., சிறையில் வாடும், முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவை, அவரது தாயார் சந்திக்க அனுமதி கோரி, நான் எழுதிய கடிதத்திற்கு, அந்நாட்டு அரசு எவ்வித பதிலும் அளிக்கவில்லை,'' என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்து உள்ளார்.

தண்டனை :
நம் நாட்டைச் சேர்ந்த, முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவ், பாக்., ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறையில்
அடைக்கப்பட்டு உள்ளார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அந்நாட்டு ராணுவ கோர்ட், அவருக்கு துாக்கு தண்டனை ...

பன்னீர் குற்றச்சாட்டு தி.மு.க., கோஷம்

Posted: 10 Jul 2017 10:12 AM PDT

சென்னை: ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க.,வும், முதல்வர் பழனிசாமி தரப்பும், ரகசிய கூட்டு வைத்திருப்பதாக, குற்றம் சாட்டினார். அது குறித்து, சட்ட சபையில் பேச அனுமதி கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நேற்று கோஷம் எழுப்பினர்.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க., - சக்கரபாணி எழுந்து, ராமநாதபுரத்தில், பன்னீர்செல்வம் பேசியது குறித்து பேச, சபாநாயகரிடம் அனுமதி கோரினார்; சபாநாயகர், அனுமதி தரவில்லை.அதைத் தொடர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, அனுமதி கோரி கோஷமிட்டனர். ...

சட்டசபையில் வாய் திறக்காதது ஏன்? பன்னீருக்கு ஸ்டாலின் கேள்வி

Posted: 10 Jul 2017 10:16 AM PDT

சென்னை: 'தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து, டில்லியில் உள்ள, தன் ஆசான்களிடம், நல்ல பெயர் வாங்க, பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது என, ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பன்னீர்செல்வம் உளறிக்கொட்டியிருக்கிறார்.
பழனிசாமி அரசின் முகத்திரையை, நானும், எம்.எல்.ஏ.,க்களும், தினமும் கிழித்து வருவதை பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.
பா.ஜ.,வின் முகமூடியாக ...

புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.,க்களின் நியமனம் நிராகரிப்பு!.. கிரண்பேடிக்கு கடிதம் அனுப்பினார் பேரவை தலைவர்

Posted: 10 Jul 2017 10:28 AM PDT

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நியமனத்தை, சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்தார். இது தொடர்பாக, கவர்னர் கிரண்பேடிக்கு, அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதனால், கவர்னர் - ஆட்சியாளர்கள் மோதல், விஸ்வரூபம் எடுத்துள்ளது.புதுச்சேரி சட்டசபைக்கு, பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை, நியமன எம்.எல்.ஏ.,க் களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.தலைமை செயலர் மனோஜ் பரிதா, ஜூலை, 4ல், உத்தரவு ஆணையை மூவரிடமும் முறைப்படி வழங்கினார்.
இது, தலைமை செயலகம் மூலம், அரசு கெஜட்டிலும் ...

3 நாடுகள் பங்கேற்கும் பிரமாண்ட போர் ஒத்திகை! 21 கப்பல்கள், 95 போர் விமானங்கள் பங்கேற்பு

Posted: 10 Jul 2017 10:47 AM PDT

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று நாடுகள் கூட்டாக நடத்தும், 'மலபார் எக்சர்சைஸ்' எனும் பிரமாண்ட போர் ஒத்திகை, சென்னை அருகே, வங்கக் கடலில் துவங்கியுள்ளது.கடந்த, 1992 முதல், இந்திய மற்றும் அமெரிக்க போர்க் கப்பல்கள், மலபார் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா, அணுகுண்டு சோதனை நடத்திய காரணத்தால், 1998 முதல், 2001 வரை, அது நிறுத்தப்பட்டது. பின், 2002 முதல், தொடர்ந்து நடந்து வருகிறது.

கூட்டு போர் ஒத்திகை
ஒரு முறை ஜப்பானும், ஒரு முறை ஆஸ்திரேலியாவும், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றன.இந்நிலையில், 2016 முதல், மலபார் போர் ...

கலப்பட பால் விவகாரம்: அமைச்சருக்கு ஐகோர்ட் அறிவுரை

Posted: 10 Jul 2017 11:06 AM PDT

சென்னை: 'பாலில் கலப்படம் செய்ததை நிரூபிக்க ஆதாரங்கள் இருந்தால், அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்; குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் அளிக்க வேண்டும்' என, பால்வளத் துறை அமைச்சருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை - ஹட்சன் அக்ரோ; திருச்சி - விஜய் டெய்ரி மற்றும் ஆந்திர மாநிலம் - டோட்லா டெய்ரி போன்ற நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தனியார் பால் நிறுவனங்களின் நடவடிக்கையில், பால்வளத் துறையும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பும் தேவையின்றி குறுக்கீடு ...

யாத்திரிகள் காயம்: மெகபூபா முப்தி நேரில் பார்வை

Posted: 10 Jul 2017 11:57 AM PDT

ஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 யாத்திரிகள் பலியாகினர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஆனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். ...

நடிகை பாவனா மானபங்க வழக்கில் கூட்டு சதி முன்னணி கதாநாயகன் நடிகர் திலிப் கைது

Posted: 10 Jul 2017 12:01 PM PDT

நடிகை பாவனா மானபங்க வழக்கில் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகன் நடிகர் திலீப்பை போலீசார் நேற்று மாலை கொச்சியில் கைது செய்தனர். இரவோடு இரவாக நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரளா மட்டுமல்ல அனைத்து திரையுலகையும் அதிர்ச்சி அடைய செய்த சம்பவம் கடந்த பிப்.,17- இரவு நடந்தது. இரவு 10:30 மணிக்கு டப்பிங் முடிந்து வீட்டுக்கு நடிகை பாவனா சென்று கொண்டிருந்த காரை அங்கமாலி அருகே அத்தாணி என்ற இடத்தில் வழிமறித்து பல்சர் சுனில் உட்பட சிலர் காரில் ஏறினர். பின்னர் காருக்குள் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்தனர். ...

நாடு முழுவதும் 3.33 கோடி பேர் 'பான் - ஆதார்' எண் இணைப்பு

Posted: 10 Jul 2017 12:15 PM PDT

திருப்பூர்: நாடு முழுவதும் இதுவரை, 3.33 கோடி பேர், 'பான்' கார்டுடன், 'ஆதார்' விபரங்களை இணைத்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தனிநபர், நிறுவனங்களின் கணக்கு பரிமாற்ற விபரங்களை முறைப்படுத்தும் வகையில், 'பான்' கார்டை, வருமான வரித்துறை வழங்குகிறது. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் சிலர், வெவ்வேறு பெயர், முகவரிகளில் போலியாக, 'பான்' கார்டு பெறுவது அதிகரித்தது. தனிநபரின் கருவிழி, கை ரேகைகள் பதிவு செய்து, ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
கறுப்புப் பண ஒழிப்புக்காக, பணம் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டது. அதன் ...

யாத்ரீகர்கள் தாக்குதலுக்கு பின்னணியில் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாதிகள்

Posted: 10 Jul 2017 12:37 PM PDT

ஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 4 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், போலீஸ் பஸ்சை தாக்குவதையே குறியாக இருந்ததாக கூறப்படுகிறது. தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமெண்டர் இஸ்மாயில் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. ...

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: பலியானவர் பெயர் வெளியீடு

Posted: 10 Jul 2017 02:11 PM PDT

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நேற்று நடத்திய கொடூர தாக்குதலில், அமர்நாத் யாத்திரைக்கு சென்று திரும்பிய பக்தர்கள் ஏழு பேர் பலியாகினர்; 12 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில், , நேற்று இரவு, அமர்நாத் யாத்திரையை முடித்து விட்டு, ஏராளமான பக்தர்கள், ஒரு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாத பயங்கரவாதிகள், தப்பி ஓடினர்.
அப்போது, யாத்திரை முடிந்து ...

யாத்திரிகள் மீது தாக்குதல் : தலைவர்கள் கண்டனம்

Posted: 10 Jul 2017 02:38 PM PDT

புதுடில்லி: அமர்நாத் யாத்திரிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் லக்சர் - இ - தொய்பா தீவிரவாதிகள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்திற்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., தலைவர் அமித் ஷா: பலியான யாத்திரிகளின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™