Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மெர்சல் டப்பிங் தொடங்கியது...

Posted:

'தெறி' வெற்றிப் படத்தை தொடர்ந்து அட்லியும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் - 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ...

வேறு வழியில்லை - சிம்பு கெட்டவனாகிறார்

Posted:

சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தோல்வியடைந்ததோடு, அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது. இன்னொரு பக்கம், இனி சிம்பு நடித்த படத்தை பார்க்கவே கூடாது என்று அவரது ரசிகர்களே புலம்புகிற அளவுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்துவிட்டது ஏஏஏ படம்.

ஏஏஏ ...

ஹீரோயினாக களமிறங்கும் ப்ரியதர்ஷன் - லிஸி மகள்

Posted:

அண்மையில் விவாகரத்து செய்து கொண்ட இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிஸி தம்பதியின் மகள் கல்யாணி. இருமுகன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள இவர் இன்னொரு பக்கம் நடிக்கவும் முயற்சி செய்து வந்தார்.

தமிழில் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் கல்யாணியின் புகைப்படங்கள் அனுப்பி வைத்து சான்ஸ் வேட்டை ...

போலி டுவிட்டர்: பிரபு சாலமனுக்கு தலைவலி

Posted:

தமிழ்த்திரையுலக பிரபலங்களின் பெயரில் போலியான டுவிட்டர் கணக்குகள் ஏராளம் உள்ளன. இதுபோன்ற போலி கணக்குகளினால் சர்ச்சை எழுந்து, நட்சத்திரங்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்றன. கடந்த காலங்களில் சூரி உட்பட பலர் இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். இந்த வரிசையில் இப்போது இயக்குநர் பிரபுசாலமன்.

"நாயகிகள் - ஒரு நாள் சம்பளம் 85,000 + 2 ...

ஜூலை 14-ஆம் தேதி 3 படங்கள்... கவலையில் தயாரிப்பாளர்கள்

Posted:

தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக இந்த வாரம் வெளியாகவிருந்த விக்ரம் வேதா, பண்டிகை, நிபுணன் போன்ற படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை-7 அன்று, ரிலீஸ் தேதி குறித்த ஸ்ரீதேவியின் 'மாம்' ஹிந்திப்படம் மட்டும்தான் நேற்று வெளியாகியுள்ளது.

ஜி.எஸ்.டி. காரணமாக தியேட்டர் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதால் ...

டியூப்லைட் நஷ்டம் : 55 கோடியை திருப்பி தரும் சல்மான்

Posted:

சல்மான் கான் படம் என்றால் வசூலுக்கு உத்தரவாதம் இருக்கும். ஆனால் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான டியூப்லைட் படம் அந்த உத்தரவாதத்தை தகர்த்துவிட்டது. சல்மான் ஒரு மாறுதலுக்காக வித்தியாசமாக நடித்தது அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. இதனால் படம் தோல்வியை தழுவியுள்ளது.

படம் வெளியான இதுநாள் வரை சுமார் ரூ.120 கோடி மட்டுமே ...

மாம் - கெஸ்ட் இன் லண்டன் முதல்நாள் வசூல் எப்படி

Posted:

பாலிவுட்டில் இந்தவாரம் மாம், கெஸ்ட் இன் லண்டன் என்ற இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இதில், ஸ்ரீதேவியின் மாம் படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது, அந்த எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்திருக்கிறது மாம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு பொங்கி எழும் ஒரு தாயின் உணர்வுப்பூர்மான படம் தான் ...

தடுமாற்றத்தில் தமிழ் சினிமா.... விழிக்குமா...?!

Posted:

100 ஆண்டு கால தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரும் பிரச்சனை அடுத்த சில நாட்களிலோ, வாரங்களிலோ வரலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

ஜிஎஸ்டி
மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஒரே வரி என்ற திட்டத்தை மையப்படுத்தி ஜிஎஸ்டி-யை கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தியது. தியேட்டர்களுக்கும் 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி என்பது ...

புது படங்களே வெளியாகாத வெள்ளிக்கிழமை

Posted:

2017ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து இதுவரை கடந்து போன 27 வெள்ளிக்கிழமைகளில் ஒரு வெள்ளிக்கிழமை கூட படங்கள் வெளிவராமல் இருந்ததில்லை. அப்படிப்பட்ட இடைவிடாத வெளியீட்டிற்கு தியேட்டர்காரர்கள் நடத்திய ஸ்டிரைக்கால் நேற்று ஜுலை 7ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நேரடி தமிழ் படம் கூட வெளியாகவில்லை. இப்படி ஒரு இடைவெளியால் அடுத்தடுத்து வெளிவரும் ...

விவேகம் டீசரை மிஞ்சிய விஐபி 2 டிரைலர்

Posted:

யு டியூப், பேஸ்புக் ஆகிய தளங்களில் டீசர்கள், டிரைலர்கள், முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகியவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துதான் இன்றைய ஹீரோக்களுக்கு அவர்களுடைய ரசிகர்களிடமும், மற்ற ரசிகர்களிடமும் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பது கணிக்கப்படுகிறது.

இணைய தளங்களில் பதிவேற்றப்படும் மேற்படி விஷயங்களைப் ...

கோல்மாலுக்காக ரீ-மேக்காகும் இஷ்க் பாடல்

Posted:

1997-ம் ஆண்டு அமீர்கான், அஜய் தேவ்கன், கஜோல், ஜூகி சாவ்லா நடிப்பில் வெளியான படம் இஷ்க். இப்படத்தில் இடம்பெற்ற "நீன்த் ஜூவாரி மேரி..." என்ற பாடல் மிக பிரபலம். இப்போது இந்தப்பாடலை, கோல்மால் அகைன் படத்திற்காக ரீ-மேக் செய்ய இருக்கிறார்கள். அஜய் தேவ்கன் - பரிணிதி சோப்ரா இப்பாடலுக்கு ஆட, பாடகர் அர்மான் மாலிக் இப்பாடலை பாட உள்ளார். ...

இந்தியா - போலாந்து கூட்டு தயாரிப்பில் சஞ்சய் தத்

Posted:

சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், அடுத்தப்படியாக இந்தியா - போலாந்து கூட்டு தயாரிப்பில் உருவாகும் நய் மீன்ஸ் நய் என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் சஞ்சய் உடன் குல்சன் குரோவர், அர்மான் கோலி ஆகியோரும் முக்கிய ரோலில் ...

டாய்லெட் படம் இப்படி உருவாகியிருந்தால்...?

Posted:

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியுள்ளது அக்ஷ்ய் குமாரின் "டாய்லெட் ஏக் பிரேம் கதா" படம். ஸ்ரீ நாராயணன் சிங் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புகுந்த வீட்டிற்கு செல்லும் மணமகள், அந்த வீட்டில் கழிவறை ...

நிவேதா பெத்துராஜ் எதிர்பார்க்கும் படம்!

Posted:

அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்த ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதையடுத்து உதயநிதிக்கு ஜோடியாக பொதுவாக எம் மனசு தங்கம் படத்தில் நடித்திருப்பவர், தற்போது ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்து வருகிறார். விண்வெளியில் நடக்கும் கதையில் இப்படம் தயாராகி வருகிறது.

இதுபற்றி நிவேதா பெத்துராஜ் ...

சர்வானந்துக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

Posted:

தமிழில் வெற்றிப்படங்களில் நடித்திருந்தபோதும் இன்னமும் தனது நடிப்பால் பெரிய அளவில் ரசிகர்களை இம்பரஸ் பண்ணவில்லை கீர்த்தி சுரேஷ். ஆனால் தெலுங்கில் நடித்த நேனு சைலஜா படத்தில் அங்குள்ள பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அந்த அளவுக்கு அழுத்தமான கதாபாத்தில் நடித்திருக்கிறார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ...

சினிமாக்காரர்களுக்கும் பிரச்னைகள் உள்ளது - ஆர்.ஜே.பாலாஜி

Posted:

சமீபகாலமாக பல வீடியோ ஜாக்கிகள், ரேடியோ ஜாக்கிகள் சினிமாவில் நடிகர்களாகி வருகிறார்கள். அவர்களில் மிர்ச்சி சிவா, மிர்ச்சி செந்தில் வரிசையில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர். சமீபகாலமாக இவர் பேசும் காமெடிகளுக்கு தியேட்டர்களில் கைதட்டல் அதிகரித்து வருகிறது. அதனால் பல படங்களில் நடிக்கும் பிசியான காமெடியனாகி விட்டார் அவர்.

அந்த வகையில் ...

ஆகஸ்ட் 11-ந் தேதி ராணா படம் வெளியாகிறது

Posted:

பாகுபலி-2 படத்தில் நடித்து வந்தபோது தமிழில் மடை திறந்து, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வந்த ராணா, தெலுங்கில் நேனே ராஜூ நேனே மந்திரி என்ற அரசியல் திரில்லர் படத்திலும் நடித்து வந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா ...

ஓய்வின்றி நடிக்கும் சமந்தா

Posted:

சமந்தா-நாகசைதன்யா திருமணம் அக்டோபரில் நடைபெற இருக்கும் நிலையில், கைவசமுள்ள படங்களை வேகமாக முடித்து வருகிறார். அந்தவகையில், விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்து முடித்து விட்டவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் ரங்காஸ்தலம், விஷாலின் இரும்புத்திரை மற்றும் சாவித்ரி, அநீதி கதைகள் ஆகிய ...

சாதனை படைத்த ஜூனியர் என்டிஆரின் ஜெய் லவகுசா டீசர்

Posted:

ஜனதா கேரேஜ் படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. ராசி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் ஜூனியர் என்டிஆர். அதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ...

பிளாஷ்பேக்: புராண படத்தில் நடித்த எம்.ஜி.ஆர்

Posted:

எம்.ஜி.ஆர், படங்களில் நடிக்க சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தார். மது அருந்தும் காட்சியிலோ, புகைபிடிக்கும் காட்சியிலோ நடிக்க மாட்டார். அதேப்போல புராண படங்களிலோ, பக்தி படங்களிலோ நடிக்க மாட்டார், இறப்பது போன்று நடிக்க மாட்டார். இதெல்லாம் அவர் புகழ்பெற்ற பிறகு. ஆனால் அதற்கு முன் சில புராண படங்களில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™