Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அகதிகள் விவகாரத்தில் கனடா இன்னும் கூடுதலாக செயற்பட வேண்டும் – ஐ.நா

Posted: 21 Jun 2017 06:36 AM PDT

அனைத்துலக அளவில் தீவிரமடைந்துவரும் அகதிகள் விவகாரத்தை தணிக்கும் வகையில் கனடா இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. உலக அகதிகள் நாள் நேற்றுச் செவ்வாய்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் ஐ.நா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. உலக அளவில் இடம்பெயர்ந்துள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா முகவராலயம், அகதிகள் விடயத்தில் கனடா ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு உதவிகளை மேறகொண்டுள்ள போதிலும், அதில் கனடா இன்னும் கூடுதலாக செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது. இது தொடர்பில் மேலும் […]

The post அகதிகள் விவகாரத்தில் கனடா இன்னும் கூடுதலாக செயற்பட வேண்டும் – ஐ.நா appeared first on TamilStar.com.

ரொரன்ரோ விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள்

Posted: 21 Jun 2017 06:34 AM PDT

ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் புதிய நடைமுறைகள் செயற்படுத்தப்படவுள்ளன. கனேடிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரசபை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கோடை காலத்திற்கான அதிகரித்த பயணிகள் போக்குவரத்துக்கான காலம் அண்மிக்கும் நிலையில், அதனை அடிப்படையாக கொண்டே, பயணிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவித்துள்ளது. பயணிகள் காத்திருக்கும் நேரத்தினை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய செயற்திட்டத்திற்காக 3.8 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுகிறது. இந்த புதிய பாதுகாப்பு […]

The post ரொரன்ரோ விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் appeared first on TamilStar.com.

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Posted: 21 Jun 2017 06:29 AM PDT

வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தற்காலிகமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து குறித்த இரு அமைச்சர்களையும் தாமாக பதவியிலிருந்து விலகுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதனால் கடந்த காலங்களில் வடக்கு அரசியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்றிருந்தன. […]

The post அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

விஜேதாச ராஜபக்சவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்!

Posted: 21 Jun 2017 06:26 AM PDT

மத அடிப்படையில் சிறுபான்மையினராகக் காணப்படும் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படையான கருத்துகளை முன்வைத்த பிரபல சட்டத்தரணி ஒருவருக்கு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ எச்சரிக்கை விடுத்தமைக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம், கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம், இலங்கையில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் முழுமையாக விசாரணை மேற்கொண்டு, வழக்குத் தொடர்வதில், அரசாங்கம் அடைந்துள்ள தோல்வியைக் காட்டுவதாகவும், அக்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அண்மையில் […]

The post விஜேதாச ராஜபக்சவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்! appeared first on TamilStar.com.

காணாமல் போனவர்கள் சம்பந்தமான செயலகத்திற்கு வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் கிடையாது: பிரதமர்

Posted: 21 Jun 2017 06:22 AM PDT

காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்கும் திருத்தச் சட்டமூல வரைவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். சட்டமூல வரைவை சமர்பித்து உரையாற்றிய பிரதமர், சான்றிதழை வழங்கும் அதிகாரம் மாத்திரமே இந்த செயலகத்திற்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கு வேறு சட்டம் கிடையாது. காணாமல் போனவர்கள் பற்றி தேடி அறியலாம், வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நாட்டில் பாரிய யுத்தம் நடைபெற்றது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை உறவினர்களுக்கு உள்ளது. […]

The post காணாமல் போனவர்கள் சம்பந்தமான செயலகத்திற்கு வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் கிடையாது: பிரதமர் appeared first on TamilStar.com.

சீ.வீ. கே. சிவஞானம் பதவி விலக வேண்டும்! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted: 21 Jun 2017 06:20 AM PDT

அவைத்தலைவர் பக்கச்சார்பாகச் செயற்படக் கூடாது. ஆனால் வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ. கே. சிவஞானத்தை முன்னிலைப்படுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பது மிக மோசமானதொரு முன்னுதாரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "சீ.வீ. கே. சிவஞானத்தை முன்னிலைப்படுத்தி வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பது மிக மோசாமானதொரு முன்னுதாரணம். அவ்வாறு வடமாகாண […]

The post சீ.வீ. கே. சிவஞானம் பதவி விலக வேண்டும்! – சுரேஸ் பிரேமச்சந்திரன் appeared first on TamilStar.com.

அஸ்கிரிய மாநாயக்கர் உட்பட பௌத்த தேரர்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

Posted: 21 Jun 2017 06:18 AM PDT

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அஸ்கிரிய மாநாயக்க தேரர் உட்பட பௌத்த தேரர்களிடம் இன்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பௌத்த தேரர் தன் மீது அதிருப்தி கொண்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். அஸ்கிரிய மாநாயக்க தேரர் உட்பட சங்க சபை நேற்று கூடிய போது வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தனக்கு எதிராக சில விடயங்களை முன்வைத்துள்ளதால், தான் அவர்களிடம் இந்த மன்னிப்பை கோரியதாகவும் அமைச்சர் […]

The post அஸ்கிரிய மாநாயக்கர் உட்பட பௌத்த தேரர்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க appeared first on TamilStar.com.

நடுநிலை தவறவில்லை என்கிறார் சி.வீ.கே.சிவஞானம்!

Posted: 21 Jun 2017 06:16 AM PDT

அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறி நடக்கவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அவைத்தலைவர் ஆளுனரிடம் கையளித்தமை சட்டத்திற்கு முரணானது என வடமாகாண முதலமைச்சர் கூறிய கருத்து தொடர்பில் அவைத்தலைவரிடம் வினாவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். ‘அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறியதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றுவது கட்சித் தீர்மானம். […]

The post நடுநிலை தவறவில்லை என்கிறார் சி.வீ.கே.சிவஞானம்! appeared first on TamilStar.com.

பிரபாகரனின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி! விக்கி, சம்பந்தன் பின்னணியில் புலி ஆதரவாளர்கள்

Posted: 21 Jun 2017 06:14 AM PDT

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் முடியாததை வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டு சாதித்துக்கொள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் வழிகாட்டுதலுக்கு அமையவே, வடமாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல […]

The post பிரபாகரனின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி! விக்கி, சம்பந்தன் பின்னணியில் புலி ஆதரவாளர்கள் appeared first on TamilStar.com.

வடபகுதி மக்களின் தங்கத்தை மஹிந்தவுடன் இணைந்து பங்கு போட்டார் பொன்சேகா!

Posted: 21 Jun 2017 06:12 AM PDT

போரின் இறுதிக்கட்டத்தில் கைப்பற்றப்பட்ட வடக்கு மக்களின் தங்கத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் தமக்குள் பங்கிட்டுக்கொண்டதாகவும், மக்களுக்கு அவற்றை மீளக் கையளிக்கவில்லையென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி மூலோபாய சட்டத்தின் மீதான, விவாதத்தில் உரையாற்றியபோதே சிறிதரன் இக் குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழீழ வைப்பகங்களில் மக்கள் வைப்பிலிட்டிருந்த 300 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் மஹிந்த அரசு கைப்பற்றிக் கொண்டது. குறித்த […]

The post வடபகுதி மக்களின் தங்கத்தை மஹிந்தவுடன் இணைந்து பங்கு போட்டார் பொன்சேகா! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™