Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார் கிறிஸ்டி கிளார்க்

Posted: 13 Jun 2017 07:55 AM PDT

பிரிட்டிஷ் கொலம்பியா 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்று அமைத்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இம்முறை இடம்பெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தை முதல்வர் கிறிஸ்டி கிளார்க் அமைத்துள்ளார். எனினும் அவர் அமைத்துள்ள இந்த அரசு நிலைக்குமா என்பது இன்னமும் சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ள நிலையில், 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்றைய நாள் அவர் அமைத்துள்ளார். அத்துடன் நேற்றைய இந்த நிகழ்வில் […]

The post பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார் கிறிஸ்டி கிளார்க் appeared first on TamilStar.com.

ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 13 Jun 2017 07:53 AM PDT

ஸ்காபரோவின் Bay Mills Boulevard மற்றும் Birchmount வீதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதிப் பகுதியில் அமைந்துள்ள Tam O'Shanter குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை 5.30 அளவில் பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர் என்றும், கை மற்றும் கால் பகுதிகளில் காயமடைந்த அந்த இருவரும் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும் ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் […]

The post ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on TamilStar.com.

அமைச்சர்கள் குறித்த முடிவை நாளை அறிவிப்பார் முதலமைச்சர்!

Posted: 13 Jun 2017 07:49 AM PDT

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் இருவர் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பில் எனக்குத் தெரியாது. எனினும், எனது நிலைப்பாடு என்னவென்று முதலமைச்சருக்குத் தெரியும் என்று […]

The post அமைச்சர்கள் குறித்த முடிவை நாளை அறிவிப்பார் முதலமைச்சர்! appeared first on TamilStar.com.

உயர்நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மனுதாக்கல்

Posted: 13 Jun 2017 07:45 AM PDT

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரியே, ஞானசார தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரின் சட்டத் தரணிகள் ஊடாகவே அவர்,அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஞானசார தேரரை கைது […]

The post உயர்நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மனுதாக்கல் appeared first on TamilStar.com.

ஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்!

Posted: 13 Jun 2017 07:39 AM PDT

நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தீவிபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில்போலிக்கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு உடன் அமைச்சுப் பதவியைத் துறக்க வேண்டும் என்று பொதுபலசேனாஅமைப்பு வலியுறுத்தியுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப் பகல் அவ்வமைப்பின்தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயேஅமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த வித்தானகே இவ்வாறுவலியுறுத்தினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தொழில்சாலையொன்றில் தீவிபத்து ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அடிப்படைவாதிகள்இருக்கின்றனர் எனக் கூறும் யுகம் உருவாகியுள்ளது. […]

The post ஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்! appeared first on TamilStar.com.

வடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு! – விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம்

Posted: 13 Jun 2017 07:36 AM PDT

வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அமைச்சின் அதிகாரியொருவர், இதற்கான கோரிக்கை கடிதம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவித்தார். வடக்கு, வடமத்திய உட்பட சில மாகாண சபைகளில் நிதிப் பயன்பாடு பங்கீடுகளின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தனிநபர்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மாகாண சபைகள் இவ்வாறு […]

The post வடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு! – விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம் appeared first on TamilStar.com.

திடீரென வலுவடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி

Posted: 13 Jun 2017 07:33 AM PDT

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 – 85 ரூபாய் என பதிவாகியுள்ளது. ரூபாய் முறையாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் […]

The post திடீரென வலுவடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி appeared first on TamilStar.com.

விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும்! – என்கிறார் கோத்தா

Posted: 13 Jun 2017 07:30 AM PDT

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் மோசமான இனவாதிகள் என்றும் அவர்களைக் கைது செய்யுமாறும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். "யாழ்ப்பாணத்திற்குச் சென்றால் இனவாதக் குழுவினரை பிடித்துக்கொள்ள முடியும். அங்குதானே அனைவரும் உள்ளனர். இனவாதப் பிரிவினர் தெற்கில் இருக்கின்றனர் என யார் கூறியிருக்கின்றனர்? மிகப்பெரிய இனவாதியான விக்னேஸ்வரன் அங்கு இருக்கின்றார். அவரே இனவாதப் பேச்சுக்களைப் பேசுகிறார். அவரைப் பிடிப்பதாக யாராவது கூறியிருக்கிறார்களா? "பொதுபல சேனாவா அல்லது வேறு யாரும் செய்தார்களா என்பதை கைது செய்து தான் […]

The post விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும்! – என்கிறார் கோத்தா appeared first on TamilStar.com.

நாமல் ராஜபக்சவின் புதிய கண்டுபிடிப்பு இது!

Posted: 13 Jun 2017 07:23 AM PDT

நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரி மீது எமக்கு மதிப்பு உண்டேதவிர, அவர் மீது எமக்குக் கடுகளவேனும் விசுவாசம் இல்லை. இதனால்தான் மஹிந்தஅணியால் அவரின் தலைமையை ஏற்று அவருடன் இணைய முடியாமல் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்றஉறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- எம்மைச் சிறையில் அடைத்ததையும் பொருட்படுத்தாது எம்மை அமைப்பாளர்பதவியிலிருந்து நீக்கியதையும் பொருட்படுத்தாது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்நாம் அவருடன் இணைந்து செயற்பட்டோம். அவரது […]

The post நாமல் ராஜபக்சவின் புதிய கண்டுபிடிப்பு இது! appeared first on TamilStar.com.

திஸ்ஸ விதாரணவின் குற்றச்சாட்டை மறுக்கிறார் சம்பிக்க ரணவக்க!

Posted: 13 Jun 2017 07:19 AM PDT

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை சம்பிக்கவே மறைத்து வைத்திருக்கின்றார் என முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுமத்திய குற்றச்சாட்டை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளார். ஒரு காலத்தில் மிகச் சிறந்த முக்கிய கட்சிகளாக திகழ்ந்து தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ள அரசியல் கட்சிகளின் அரசியல் அனாதைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை. பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவிய அவர்களுக்கு பால் ஊட்டிய, அவர்களுக்கு […]

The post திஸ்ஸ விதாரணவின் குற்றச்சாட்டை மறுக்கிறார் சம்பிக்க ரணவக்க! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™