Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ரொரன்ரோவில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை

Posted: 23 Jun 2017 07:44 AM PDT

ரொரன்ரோ நகரம் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகத்தில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையினை அடுத்து, இந்தப் பிராந்தியத்திற்கான வெள்ள எச்சரிக்கை இன்று காலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 வரையிலான நிலவரப்படி, 20 இலிருந்து 40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், இன்று பகல் முழுவதும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, ரொரன்ரோ பிராந்திய பாதுகாப்பு அதிகார சபை இந்த வெள்ளக் கண்காணிப்பு எச்சரிக்கையினை பிறப்பித்துள்ளது. இதேவேளை இன்று வெப்பமான வானிலை நிலவும் என்ற போதிலும், இன்றும் […]

The post ரொரன்ரோவில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை appeared first on TamilStar.com.

ரொரன்ரோவில் இன்று அதிகாலை பலர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்

Posted: 23 Jun 2017 07:42 AM PDT

ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்த்துறையினர் அறிவித்துள்ளனர். டஃப்ரின் வீதி மற்றும் டூப்போண்ட் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றின் தென்மேற்கு புறத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், மிக மோசமான காயங்களுடன் குறித்த அந்த சிறுவன் இன்று அதிகாலை 12.30 அளவில் மீட்கப்பட்டுள்ளார். அடி வயிற்றுப் பகுதியில் பலமான காயங்களுடன் மயங்கி வீழ்நது கிடந்த நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு, அவசர […]

The post ரொரன்ரோவில் இன்று அதிகாலை பலர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர் appeared first on TamilStar.com.

அடுத்த அவைத்தலைவர் நீங்களா? சிவாஜியின் பதில் இதுதான்

Posted: 23 Jun 2017 07:38 AM PDT

வடமாகாண அவைத்தலைவராக நான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது விரும்பினால் அதற்காக என்னால் ஒன்றும் செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அடுத்த வடமாகாண அவைத்தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இது தொடர்பில் அவரின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அவைத்தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் பதவி வகித்து வரும் நிலையில் புதிய […]

The post அடுத்த அவைத்தலைவர் நீங்களா? சிவாஜியின் பதில் இதுதான் appeared first on TamilStar.com.

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பு குறித்து விசாரணை வேண்டும்! சுமந்திரன் வலிறுத்தல்

Posted: 23 Jun 2017 07:34 AM PDT

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான உண்மைகளை தெரிவித்தால் தம்மை தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் இவை குறித்து வாய்திறப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் […]

The post புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பு குறித்து விசாரணை வேண்டும்! சுமந்திரன் வலிறுத்தல் appeared first on TamilStar.com.

பல்கலைக்கழக மாணவர்களா? பயங்கரவாதிகளா? – மஹிந்தவின் கேள்வி

Posted: 23 Jun 2017 07:31 AM PDT

பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்து கொண்டனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மஹாவலி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்த பொருத்தமான தனியிடமொன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும். அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் நடந்து கொண்ட விதம் பயங்கரவாதிகளைப் போன்றது. பெற்றோர் இந்தப் பிள்ளைகளை பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனேயே பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றனர். ஒவ்வொரு […]

The post பல்கலைக்கழக மாணவர்களா? பயங்கரவாதிகளா? – மஹிந்தவின் கேள்வி appeared first on TamilStar.com.

மாணவர்கள் மீதான தாக்குதல் வரலாற்றில் நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல்: மகிந்த ராஜபக்ச

Posted: 23 Jun 2017 07:29 AM PDT

இலங்கையின் பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் அரசாங்கம் ஒன்று மேற்கொண்ட மிலேச்சத்தமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்வியின் எதிர்கால நலனுக்காக மாணவர்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் மருத்துவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மேசையில் அமருமாறு ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கத்திடம் தான் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தமான தாக்குதல் வரலாற்றில் பதியப்படும். பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நான் இந்தத் தாக்குதல் அடங்கிய காட்சிகளை […]

The post மாணவர்கள் மீதான தாக்குதல் வரலாற்றில் நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல்: மகிந்த ராஜபக்ச appeared first on TamilStar.com.

தேசிய அரசியலில் நீடிப்பதா? – 3 மாதங்களில் முடிவு என்கிறார் டிலான்

Posted: 23 Jun 2017 07:25 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது. ஏனெனில் குறித்த காலப்பகுதியில் இடம்பெறும் விடயங்களை அடிப்படையாக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்பட்ட வகையில் தனக்கு திருப்தியில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அக்கட்சியின் […]

The post தேசிய அரசியலில் நீடிப்பதா? – 3 மாதங்களில் முடிவு என்கிறார் டிலான் appeared first on TamilStar.com.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி விலகல்

Posted: 23 Jun 2017 07:22 AM PDT

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனது பேஸ்புக் பதவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரியந்த ஜயகொடியின் உடல் நிலை கரணமாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் படி இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகரவை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார். அத்துடன், தனது கடமையின் போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிக்கூறுவதாக அவர் கூறியுள்ளார். […]

The post பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி விலகல் appeared first on TamilStar.com.

விளையாட்டு வீரர்களை விமர்சிக்காதீர்கள்! நாமல் கோரிக்கை

Posted: 23 Jun 2017 07:19 AM PDT

அரசியல்வாதிகள் அரசியல் வேலைகளையும், உங்களது கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள், விளையாட்டு சம்பந்தமான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது பதிவை இட்டுள்ளார். விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் குறித்த விமர்சனங்களை தவிர்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில், இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளின் இலங்கை அணியின் வீரர்கள் தோல்வியடைந்தமையால், இலங்கை வீரர்கள், கொளுத்த உடலமைப்பை கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை […]

The post விளையாட்டு வீரர்களை விமர்சிக்காதீர்கள்! நாமல் கோரிக்கை appeared first on TamilStar.com.

எவராக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது! – ரணில்

Posted: 23 Jun 2017 07:17 AM PDT

சாதாரண மக்கள், மதப்பெரியார் யாராக இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தை முறியடிக்கும் அல்லது அதனை கவனத்தில் கொள்ளாது யாராலும் செயற்பட முடியாது. நாம் அனைவரும் சட்ட திட்டங்களுக்கு செயலாற்றுவதற்கும் சட்டத்தை நிலைநாட்டுவதற்கும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

The post எவராக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது! – ரணில் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™