Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனடாவின் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பு: அமெரிக்க அதிபர் பாராட்டு

Posted: 18 Jun 2017 09:43 AM PDT

பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிப்பதான கனடாவின் அறிவிப்புக்கு அமெரிக்காவின் அதிபர் டொனாலட்ட டிரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பிரதமரிடம் தனது பாராட்டினை தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கனேடிய மத்திய அரசாங்கம் கனடாவின் பாதுகாப்பு கொள்கை மீளாய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளதுடன், அந்த அறிக்கையில் இராணுவத்துக்கான செலவீனத்தினை எதிர்வரும் பத்து ஆண்டுகளில் 32.7 பில்லியன் டொலர்களால் […]

The post கனடாவின் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பு: அமெரிக்க அதிபர் பாராட்டு appeared first on TamilStar.com.

பணக்கார குடும்பங்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் கனடா முன்னேற்றம்

Posted: 18 Jun 2017 09:38 AM PDT

உலக அளவில் அதிக அளவு பணக்கார குடும்பங்கள் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 2016 ஆண்டுக்கான அந்த பட்டியலில் கனடா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. போஸ்டன் ஆலோசனை ஆய்வுக் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் 3,85,000 செல்வந்தக் குடும்பங்கள் 2015ஆம் ஆண்டில் வாழ்ந்து வந்ததாக கணிப்பிடப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,85,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,85,000 குடும்பங்கள் என்ற இந்த எண்ணிக்கையானது, கனடாவின் மொத்த குடும்பங்களின் […]

The post பணக்கார குடும்பங்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் கனடா முன்னேற்றம் appeared first on TamilStar.com.

அன்புக்குரிய விக்னேஸ், திருத்த நடவடிக்கைகளை தாமதியாது எடுங்கள்: இப்படிக்கு உண்மையுள்ள சம்பந்தன்:-

Posted: 18 Jun 2017 09:34 AM PDT

வடமாகாண சபை தலைவரு விக்னேஸ்வரனுக்கு க்கு கூட்ட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எழுதிய கடிதம்.. கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை […]

The post அன்புக்குரிய விக்னேஸ், திருத்த நடவடிக்கைகளை தாமதியாது எடுங்கள்: இப்படிக்கு உண்மையுள்ள சம்பந்தன்:- appeared first on TamilStar.com.

கொழும்பில் குவிந்துள்ள குப்பை துரிதமாக அப்புறப்படுத்த பிரதமர் ஆலோசனை

Posted: 18 Jun 2017 09:31 AM PDT

கொழும்பு நகரில் பல இடங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை துரிதமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு நகரில் பல இடங்களில் குப்பைகள் சேர்ந்துள்ளதால், ஏற்பட்டுள்ள பிரச்சினை சம்பந்தமாக ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை புறக்கோட்டை பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். போதிராஜா மாவத்தை மற்றும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை பிரதமர் பார்வையிட்டுள்ளார். குப்பைகள் கொட்டப்படும் இடங்களை […]

The post கொழும்பில் குவிந்துள்ள குப்பை துரிதமாக அப்புறப்படுத்த பிரதமர் ஆலோசனை appeared first on TamilStar.com.

சம்பந்தனின் பதிலைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை!

Posted: 18 Jun 2017 09:29 AM PDT

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அனுக்கும் கடிதத்துக்கு அவர் பதில் தரும் வரைக்கும் தன்னால் எதனையும் கூற முடியாது என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் முதலமைச்சரை அவரது வீ்ட்டில் நேற்று சந்தித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்துத் […]

The post சம்பந்தனின் பதிலைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை! appeared first on TamilStar.com.

வடமாகாண சபையின் எதிர்காலம்?

Posted: 18 Jun 2017 09:25 AM PDT

வடக்கு அரசியல் களத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றங்களும் திருப்பங்களும், வடக்கு மாகாணசபையின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. 2013 செப்டெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக மக்கள் ஆணை வழங்கப்பட்டிருந்தது. இப்போது வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள உள்ளக குழப்பங்கள், வடக்கு மாகாணசபையின் ஆட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் […]

The post வடமாகாண சபையின் எதிர்காலம்? appeared first on TamilStar.com.

குற்றவாளிகளுக்கும் நிரபராதிகளுக்கும் தண்டனை விதிப்பது நியாயமா? – சத்தியலிங்கம் கேள்வி

Posted: 18 Jun 2017 09:20 AM PDT

முதலமைச்சரினால் குற்றவாளிக்கும், நிரபராதிக்கும் வழங்கப்பட்ட தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், எமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அறிக்கையில் இரண்டு அமைச்சர்கள் குற்றவாளிகள், இரண்டு அமைச்சர்கள் நிரபராதிகள் என்று கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரினால் குற்றவாளிக்கும், நிரபராதிக்கும் வழங்கப்பட்ட தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள […]

The post குற்றவாளிகளுக்கும் நிரபராதிகளுக்கும் தண்டனை விதிப்பது நியாயமா? – சத்தியலிங்கம் கேள்வி appeared first on TamilStar.com.

வடக்கில் இராணுவ ஆட்சியா? பூதாகரமாகும் பிரச்சினை

Posted: 18 Jun 2017 09:17 AM PDT

தமிழர்களிடையே முறையான தலைமைத்துவம் இருக்கின்றதா, இல்லையா? என்ற கேள்வியையும் தாண்டி, இதுவரையிலும் ஓர் ஒற்றுமை இருந்து வந்தது என்பது வடக்கைப் பொறுத்தவரை மெய்யாக இருந்தது. ஆனால் இன்று அந்த ஒற்றுமை கேள்விக்குறியாகி விட்ட நிலை தொடர்கின்றது. காரணம் வடமாகாண சபை குழப்பங்கள். இந்த குழப்ப நிலைகளுக்கு உள்ளே ஓர் ஆழ்ந்த உட்கருத்து அதாவது ஊர் இரண்டுபட்டு பற்றிக் கொள்ள, அதில் இதமான குளிர்காயல்கள் பல ஒளிந்துள்ளன. வெறும் பதவி அதிகாரத்தை மட்டும் உள்நோக்கத்தோடு கொண்டு அதற்காக மோதிக் […]

The post வடக்கில் இராணுவ ஆட்சியா? பூதாகரமாகும் பிரச்சினை appeared first on TamilStar.com.

மஹிந்த தரப்பு உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு!

Posted: 18 Jun 2017 09:12 AM PDT

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன கைச்சாத்திடவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே, அவர் கைச்சாத்திடவில்லை என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவிய போது, சில குற்றச்சாட்டு உள்ளவர்களை நீக்குவது குறித்து நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை. எனினும் கூறப்படும் இந்த விடயங்களுக்காக விக்னேஸ்வரன் நீக்கப்பட கூடாதென்றே நாங்கள் நம்புகின்றோம். […]

The post மஹிந்த தரப்பு உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு! appeared first on TamilStar.com.

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும்: அஜித் பீ. பெரேரா

Posted: 18 Jun 2017 09:09 AM PDT

புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வது போனதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை முறை ஒழிக்கப்படுவதை எதிர்த்து வருகிறது. அத்துடன் தற்போதைய […]

The post நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும்: அஜித் பீ. பெரேரா appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™