Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ரொரன்ரோ கபேஜ்டவுனில் கத்திக்குத்து

Posted: 22 Jun 2017 08:39 AM PDT

ரொரன்ரோ கபேஜ்டவுன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அபெர்டீன் அவனியூவுக்கும் வின்செஸ்டன் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில், நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள, மூன்று மாடி ரொரன்ரோ வீடமைப்பு பேட்டைக் குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 9.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர், மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட, சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபரை உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி […]

The post ரொரன்ரோ கபேஜ்டவுனில் கத்திக்குத்து appeared first on TamilStar.com.

ஆண்டு முழுவதும் நீச்சல் தடாகங்கள் இலவசம்

Posted: 22 Jun 2017 08:36 AM PDT

எதிர்வரும் "கனடா டே" நாளில் இருந்து இந்த 2017ஆம் ஆண்டு முழுவதற்கும் எட்மண்டனில் உள்ள வெளிக்கள நீச்சல் தடாகங்கள் அனைத்தையும் மக்கள் இலவசமாக பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் 150ஆவது பிறந்த நாள் இந்த ஆண்டில் கொண்டாடப்படுகின்றமையை முன்னிட்டு இந்த சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் தேசிய அளவிலான பல பூங்காக்களை இந்த ஆண்டில் பயணிகள் இலவசமாக பயன்படுத்த முடியும் என்ற அறிவிப்பினை கனேடிய மத்திய அரசாங்கம் விடுத்துள்ளதுடன், அது பெருமளவிலான சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ள […]

The post ஆண்டு முழுவதும் நீச்சல் தடாகங்கள் இலவசம் appeared first on TamilStar.com.

வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும்! – ஐ.நாவில் கோரிக்கை

Posted: 22 Jun 2017 08:24 AM PDT

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை பேராசிரியர் போல் நியூவ்மன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். சர்வதேச நீதிபதிகளின் முன்னிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

The post வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும்! – ஐ.நாவில் கோரிக்கை appeared first on TamilStar.com.

புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து விரைவில் முடிவு!

Posted: 22 Jun 2017 07:56 AM PDT

கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக இதுவரையில் முடிவு எடுக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். "வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களை நியமிப்பதற்காக உறுப்பினர்களில் இருவரை தெரிவு செய்வதற்காக அவர்களிடம் சுயவிபர கோவைகளை தருமாறு கோரி இருந்தேன். அதன் அடிப்பையில் சில உறுப்பினர்கள் தங்களுடைய சுய விபர கோவைகளை கையளித்துள்ளனர். ஏனையவர்களும் தமது சுய விபர கோவைகளை கையளித்ததும் அது தொடர்பில் கட்சி மற்றும் மாவட்டங்களை ஆராய்ந்து தகுதியான உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை […]

The post புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து விரைவில் முடிவு! appeared first on TamilStar.com.

இலங்கையில் பியருக்கு அதிக வரி! பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தகவல்

Posted: 22 Jun 2017 07:49 AM PDT

எத்தனோல் மதுசாரத்திற்கு அறவிடப்படும் வரியை விட அதிகளவான வரி இலங்கையில் பியருக்கு அறவிடப்படுவதாக அரச கொள்கை மற்றும் பொருளாதார விவகார பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இதனை கூறியுள்ளார். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் எத்தனோல் வரிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மதுவரி கட்டளைச் சட்டத்தின் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன் […]

The post இலங்கையில் பியருக்கு அதிக வரி! பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தகவல் appeared first on TamilStar.com.

அவுஸ்திரேலியா, அமெரிக்கா வங்கிகளில் உள்ள நாமலின் பணம் எங்கே?

Posted: 22 Jun 2017 07:46 AM PDT

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சேவைகளை வழங்கிய நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்தது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்கவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இதனை அறிவித்துள்ளனர். நாமல் ராஜபக்ச அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் சில வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணம் தொடர்பாக அறிக்கைகளை கோரியுள்ள போதிலும் அந்த […]

The post அவுஸ்திரேலியா, அமெரிக்கா வங்கிகளில் உள்ள நாமலின் பணம் எங்கே? appeared first on TamilStar.com.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக சரத் வீரசேகர முறைப்பாடு!

Posted: 22 Jun 2017 07:36 AM PDT

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவரிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படையதிகாரி றியர் அட்மிரல் சரத் வீரசேகரவே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். குறித்த இருவரது அறிக்கைகளும் உண்மைக்கு புறம்பானவை எனவும், இலங்கையின் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அவர்கள் இவ்வாறான […]

The post ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக சரத் வீரசேகர முறைப்பாடு! appeared first on TamilStar.com.

கண்காணிப்புக் குழுவில் இருந்து மங்களவை வெளியேற்றிய ரணில்!

Posted: 22 Jun 2017 07:26 AM PDT

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை மத்திய ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பொறிமுறையை உருவாக்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று 1அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக கடுமையாக செயற்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த குழுவில் நியமிக்கப்படவில்லை. ரவி கருணாநாயக்க, மஹிந்த சமரசிங்க, சாகல ரத்னாயக்க, விஜயதாச ராஜபக்ச, திலக் மாரப்பன, ருவன் விஜேவர்தன மற்றும் ஹர்ஷா […]

The post கண்காணிப்புக் குழுவில் இருந்து மங்களவை வெளியேற்றிய ரணில்! appeared first on TamilStar.com.

அடுத்த விசாரணை சத்தியலிங்கம், டெனிஸ்வரனின் அமைச்சு மீது மட்டுமே! முதலமைச்சர்

Posted: 22 Jun 2017 07:24 AM PDT

புதிதாக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவானது சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரரின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணைகளை நடத்தும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணைகளை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பதற்கு அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் […]

The post அடுத்த விசாரணை சத்தியலிங்கம், டெனிஸ்வரனின் அமைச்சு மீது மட்டுமே! முதலமைச்சர் appeared first on TamilStar.com.

காணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும்! – சம்பந்தன்

Posted: 22 Jun 2017 07:19 AM PDT

காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான செயலகத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் மதீப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். "காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நாங்கள் தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம். குறித்த அலுவலகத்தின் ஊடாக உயிரோடு இருக்கின்றவர்கள் […]

The post காணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும்! – சம்பந்தன் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™