Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நீர்மூழ்கியுடன் கப்பல் மோதி விபத்து

Posted: 16 Jun 2017 08:41 AM PDT

கனேடிய அரச கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது. கடற்படையின் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று, பிரிட்டிஷ் கொலம்பிய துறைமுகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே, அவ்வழியே சென்ற பிறிதோரு கடற்படைப் பயிற்சிக் கப்பல் அதனுடன் மோதியதாக கூறப்படுகிறது. குறித்த அந்த பயிற்சிக் கப்பல் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வேளையிலேயே, நீர்மூழ்கிக் கப்பலுடன் மோதியதாகவும், அதனால் இரண்டு கப்பல்களுக்கும் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் கடற்படையின் […]

The post நீர்மூழ்கியுடன் கப்பல் மோதி விபத்து appeared first on TamilStar.com.

விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

Posted: 16 Jun 2017 08:38 AM PDT

தமிழ் மக்களின் அபிமானம் பெற்றவொரு தலைவராகவும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய முயல்வது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயலாகவே அமையும் என நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, […]

The post விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் appeared first on TamilStar.com.

வடக்கு மாகாணசபை நெருக்கடி – சமரச முயற்சிகள் தீவிரம்!

Posted: 16 Jun 2017 08:34 AM PDT

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினால், ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தீர்ப்பதற்கான சமரச முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான சமரசப் பேச்சுக்கள் நேற்று இடம்பெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நீண்டநேர தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக நிலைமையை ஏற்படுத்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் கட்சியின் தலைவர் […]

The post வடக்கு மாகாணசபை நெருக்கடி – சமரச முயற்சிகள் தீவிரம்! appeared first on TamilStar.com.

காப்பாற்றப்படும் ராஜபக்சர்கள்! உண்மைகள் அம்பலப்படுத்தும் ஆயுதம் பிரயோகிக்கப்படுமா?

Posted: 16 Jun 2017 08:31 AM PDT

ஞானசாரரின் ஆட்டங்கள், அவர் ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டும் கண்ணாம்பூச்சி செயற்பாடுகளோடு, இயற்கையும் தன் சீற்றத்தைக் காட்டிவிட ஆரம்பகால பிரச்சினைகள் சில மறந்து போய்விட்டன. அவற்றில் பிரதானமானது ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள். இனவாதம் வெளிவர ஆட்சிக் கவிழ்ப்பு அடங்கியதா? என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது மீண்டும் அந்த விடயங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. மகிந்த குடும்பம் ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு அரசு தரப்பு அமைச்சர்கள் சிலர் ஆதரவு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இதேவேளை ஞானசாரரின் […]

The post காப்பாற்றப்படும் ராஜபக்சர்கள்! உண்மைகள் அம்பலப்படுத்தும் ஆயுதம் பிரயோகிக்கப்படுமா? appeared first on TamilStar.com.

தேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச

Posted: 16 Jun 2017 08:25 AM PDT

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 15.5 கோடி நிதி மோசடி தொடர்பாக பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமலசேன ரூபசிங்க, முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகே, முன்னாள் பணிப்பாளர் (விற்பனை) சனத் தளுவத்த உட்பட அழைப்பாணை விடுக்கப்பட்ட 8 பேர் இன்று (16) ஜனாதிபதி […]

The post தேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச appeared first on TamilStar.com.

முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்தமைக்கு இதுவே காரணம்! சுமந்திரன் விசேட அறிக்கை

Posted: 16 Jun 2017 08:21 AM PDT

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல் பணமோசடி மற்றும் லஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர்எதிரானதாகும். ஆரம்பத்திலிருந்தே […]

The post முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்தமைக்கு இதுவே காரணம்! சுமந்திரன் விசேட அறிக்கை appeared first on TamilStar.com.

வடக்கு மாகாணசபை விவகாரத்தில் தலையிட மாட்டேன்! – சம்பந்தன்

Posted: 16 Jun 2017 08:16 AM PDT

வடமாகாண சபையின் விடயங்களில் தலையிடமாட்டேன் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "வடமாகாண சபையின் தற்போதைய குழப்பநிலைகள் குறித்து முதலமைச்சரும் அதன் உறுப்பினர்களுமே முடிவெடுக்க வேண்டும். இதுவரையில் வடமாகாண முதலமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் விசாரணைக்கென நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கு முதல்வருக்கு அதிகாரமுள்ளதால் அவர்கள் தொடர்பான முடிவுகளை விசாரணைக்குழுவுடன் இணைந்து முதலமைச்சர் எடுப்பார் என நம்புகின்றேன்" என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு மாகாணசபை விவகாரத்தில் தலையிட மாட்டேன்! – சம்பந்தன் appeared first on TamilStar.com.

முதலமைச்சர் சாதகமான முடிவைத் தந்தால் நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்படும்! – சிறீதரன்

Posted: 16 Jun 2017 08:12 AM PDT

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் " இந்த விடயம் தொடர்பாக 3 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியுள்ளோம். எதிர்கட்சி தலைவர் சம்மந்தனுடனும் பேசியிருக்கிறேன். சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார். இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர்களும் முன்னதாக பேசியிருக்க வேண்டும் ஆனால் பேசவில்லை. இப்போது பேசியுள்ளார்கள் . […]

The post முதலமைச்சர் சாதகமான முடிவைத் தந்தால் நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்படும்! – சிறீதரன் appeared first on TamilStar.com.

விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிடப்போவதில்லை! ஜனாதிபதி

Posted: 16 Jun 2017 08:09 AM PDT

வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், ஊழலுக்கு எதிராக செயற்பட்டு வரும் நல்லாட்சி அரசில், ஊழல் தொடர்பான வடக்கு முதலமைச்சரின் விடயத்தில் தலையிடுவது பொறுத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பிலான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் […]

The post விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிடப்போவதில்லை! ஜனாதிபதி appeared first on TamilStar.com.

பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவேன்! – ஆளுநர்

Posted: 16 Jun 2017 08:05 AM PDT

வட மாகாண சபையில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைக் கோரவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று தெரிவித்தார். முதலமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பரிசீலித்து அந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளோர் யார் என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எழுத்து மூலம் கோரவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார். இந்த கோரிக்கைக்கு இணங்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிப்பாரானால் அவரே முதலமைச்சராக இருப்பார். அவ்வாறில்லாத பட்சத்தில் […]

The post பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவேன்! – ஆளுநர் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™