Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted: 15 Jun 2017 07:15 AM PDT

ஹமில்ட்டனில் வீடு ஒன்று தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். Laird drive பகுதியில் அமைந்துள்ள ஓரடுக்கு வீடு ஒன்றில் இன்று அதிகாலை 12.30 அளவில் தீ பரவ ஆரம்பித்தாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கு வீட்டின் முகப்பு கதவு உட்பட அனைத்து வழிகள் ஊடகாவும் கரும்புகை வெளியேறியவாறு காணப்பட்டதாக ஹமில்ட்டன் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பின்னர் தீயணைப்புப் படையினர் அந்த வீட்டினுள் நுளைந்த போது […]

The post வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி appeared first on TamilStar.com.

பியர்சன் விமான நிலையத்தில் 43 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

Posted: 15 Jun 2017 07:13 AM PDT

ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 43 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் வகை போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் 5ஆம் திகதி, வெனிசுலாவின் அருகில் அமைந்துள்ள இரட்டைத் தீவுக் கருபியன் நாடான ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோவில் இருந்து பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் எடுத்துவரப்பட்ட பொதிகளை சோதனை செய்த கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகள் இதனை மீட்டுள்ளனர். மாப் பொருட்கள் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டிருந்த பொதியினுள், அந்த மாப் பொருட்களுக்கு மத்தியில் […]

The post பியர்சன் விமான நிலையத்தில் 43 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது appeared first on TamilStar.com.

எதிர்க்கட்சித் தலைவரும் ஆளுநருடன் சந்திப்பு!

Posted: 15 Jun 2017 07:07 AM PDT

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விடயத்தில், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 22 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் வடமாகாண ஆளுனரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர். குறித்த உறுப்பினர்கள் ஆளுனரின் […]

The post எதிர்க்கட்சித் தலைவரும் ஆளுநருடன் சந்திப்பு! appeared first on TamilStar.com.

மகிந்தவிற்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரர் : ஆபத்தில் நாடு! இக்கட்டில் அரசு

Posted: 15 Jun 2017 07:04 AM PDT

தற்போது நாட்டில் குறுகிய காலத்தில் மிகவும் பிரசித்தமான பெயரைப் பெற்றுள்ள பிரதான நபர் பொதுபலசேனாவின் ஞானசார தேரர். அவருக்கு கைது ஆபத்து தொடர்ந்து வருகின்றது. இப்போதைய அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையில், அவர்மீது கை வைப்பதும், விட்டுவிடுவதும் இரண்டுமே ஆபத்தான செயல் என்று கூறி விடலாம். இந்தக் கூற்றினை வலுப்படுத்திக் காட்டுகின்றது இப்போதைய அரசின் இழுபறி கொண்ட நகர்வுகள். இன்றைய நிலையில் ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள ஞானசாரர் தீவிர மதவாதத்தையும், இனவாதத்தையும் வெளிப்படையாகவே கக்கிவரும் ஒருவராக வர்ணிக்கப்பட்டு […]

The post மகிந்தவிற்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரர் : ஆபத்தில் நாடு! இக்கட்டில் அரசு appeared first on TamilStar.com.

ஈனச்செயலில் ஈடுபடேன்! – ஐங்கரநேசன்

Posted: 15 Jun 2017 06:57 AM PDT

அமைச்சராகப் பணிபுரியும் காலத்திலோ அரசியலுக்கு வர முன்னரோ எந்த ஊழல் மோசடிகளிலும் தான் ஈடுபட்டதில்லை என்று தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் நிலை வந்தாலும் இவ்வாறான ஈனச்செயலில் ஈடுபடப்போவதில்லையென்று கூறினார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக் குறித்து வடமாகாண சபையில் தன்னிலை விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘என் மீது மட்டுமல்ல, சகல அமைச்சர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் […]

The post ஈனச்செயலில் ஈடுபடேன்! – ஐங்கரநேசன் appeared first on TamilStar.com.

அவுஸ்ரேலிய நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பிய அதிகாரியை வீட்டுக்கு அனுப்பினார் ஜனாதிபதி!

Posted: 15 Jun 2017 06:47 AM PDT

இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையில் ஆவணங்களை தயாரித்து வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டின் பேரில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உப தலைவர் சட்டத்தரணி சுஜீவ சமரசிங்க பணி நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிக்கை ஒன்று அவுஸ்திரேலிய நீதிமன்றிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post அவுஸ்ரேலிய நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பிய அதிகாரியை வீட்டுக்கு அனுப்பினார் ஜனாதிபதி! appeared first on TamilStar.com.

பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு – நவம்பர் முதல் தினமும் விசாரணை

Posted: 15 Jun 2017 06:44 AM PDT

பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து தினமும் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இதனை அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான பணத்தில் 2 கோடியே 94 இலட்சம் ரூபாவை செலவு செய்து மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்துடன் கூடிய 50 இலட்சம் நாட்காட்டிகளை […]

The post பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு – நவம்பர் முதல் தினமும் விசாரணை appeared first on TamilStar.com.

காங்கேசன்துறை இரும்பு மோசடி – கோத்தாவிடம் இன்று விசாரணை!

Posted: 15 Jun 2017 06:38 AM PDT

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயந்திரங்களை பழைய இரும்புக்கு விற்பனை செய்த மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சீமெந்துத் தொழிற்சாலையினுள் இருந்த பல கோடி மதிப்புள்ள கருவிகள் பகுதி பகுதியாக வெட்டியெடுத்து பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த மோசடி வர்த்தகத்தில் குறித்த காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகளும் தொடர்புபட்டிருந்ததாக […]

The post காங்கேசன்துறை இரும்பு மோசடி – கோத்தாவிடம் இன்று விசாரணை! appeared first on TamilStar.com.

சீ.விக்கு எதிராக கையொப்பமிட்டவர்கள் குறித்து ஆராயும் ஆளுநர்! முடிவு ஜனாதிபதியின் கைகளில்?

Posted: 15 Jun 2017 06:35 AM PDT

வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா ஆகியோர் தாமாகவே தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 17 பேர் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 6 பேருமாக 22 பேர் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் […]

The post சீ.விக்கு எதிராக கையொப்பமிட்டவர்கள் குறித்து ஆராயும் ஆளுநர்! முடிவு ஜனாதிபதியின் கைகளில்? appeared first on TamilStar.com.

ஞானசார தேரரை மறைத்து வைத்துள்ள மஹிந்தவின் சட்டத்தரணி!

Posted: 15 Jun 2017 06:31 AM PDT

ஞானசார தேரரை மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணியே மறைத்து வைத்துள்ளார் என, சுகாதார அமைச்சரும்அ மைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார். கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத் தாக்குதல்கள், ஞானசார தேரர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஊடகவியலாளர்கள், இதன்போது கேள்வியெழுப்பினர். அதற்கு, அமைச்சரவை இணைப்பேச்சாளர்களான, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக்க, தயாசிறி ஜயசேகர […]

The post ஞானசார தேரரை மறைத்து வைத்துள்ள மஹிந்தவின் சட்டத்தரணி! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™