Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அதிகாலையில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

Posted: 11 Jun 2017 08:30 AM PDT

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். நோர்த் யோர்க் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஃபின்ஞ் மற்றும் இஸ்லிங்டன் அவனியூ ஆகியவற்றிற்கு அருகில் உள்ள Blue Haven Crescent இல் அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், குறித்த அந்த நபர் வாகனத்தினுள் வைத்து அல்லது அதன் அருகில் வைத்து சுடப்பட்டிருக்கலாம் என்றும் […]

The post அதிகாலையில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் appeared first on TamilStar.com.

ரொரன்ரோவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விபத்தில் பலி

Posted: 11 Jun 2017 08:27 AM PDT

ரொரன்ரோவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். Innisfil இல் Shore Acres Drive ற்கும் Line 14ற்கும் இடைப்பட்ட பகுதியில், நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், வாகனம் ஒன்றின் பக்கவாட்டில் இன்னொரு வாகனம் மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்று அருகே இருந்த கம்பம் ஒன்றுடனும் மோதுண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் குறித்த சிறுவன் […]

The post ரொரன்ரோவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விபத்தில் பலி appeared first on TamilStar.com.

இன முறுகலை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Posted: 11 Jun 2017 08:19 AM PDT

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில், விரோதங்கள் ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபட சட்டத்தில் இடமளிக்கப்பட மாட்டது எனவும் 2007 இலக்கம் 56 சிவில் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஏப்பிரல் மாதம் நாடு முழுவதும் இனங்களுக்கு இடையில் விரோதங்களை ஏற்படுத்தும் வகையில் 16 பிரதான […]

The post இன முறுகலை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை appeared first on TamilStar.com.

திரிசங்கு நிலையில் வடக்கு முதலமைச்சர்!

Posted: 11 Jun 2017 08:12 AM PDT

வடக்கு மாகா­ண­ச­பையின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களும், அவை தொடர்­பான விசா­ர­ணையின் முடி­வு­களும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அமிலப் பரி­சோ­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. சபை உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களைப் புறக்­க­ணிக்க முடி­யாமல், தானே நிய­மித்த அமைச்சர்களுக்கு எதி­ராக, விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மிக்க வேண்­டிய நிலை முத­ல­மைச்­ச­ருக்கு ஏற்பட்டிருந்தது. அர­சியல் ரீதி­யாக இது அவ­ரது முதல் தோல்வி.ஆனால், வெளிப்­ப­டைத்­தன்­மை­யான நிர்­வாகம், பொறுப்­புக்­கூ­றலில் உறு­தி­யாக இருப்­ப­தையும் அவ­ரது இந்த முடிவு காட்டி நின்­றது, விசா­ரணை அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டதும், அதில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது […]

The post திரிசங்கு நிலையில் வடக்கு முதலமைச்சர்! appeared first on TamilStar.com.

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

Posted: 11 Jun 2017 08:02 AM PDT

கட்டார் நாட்டில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் லியனகே தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் புதன் கிழமை (14) இடம்பெறவுள்ளது. மேலும், கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தொழில் தொடர்பில் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் லியனகே குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு […]

The post கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! appeared first on TamilStar.com.

ஞானசாரருக்கு இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முடியாது! பொலிஸார் தீவிர முயற்சி

Posted: 11 Jun 2017 07:58 AM PDT

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு பொலிஸார் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்படி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கூறியுள்ளனர். அவ்வாறு வெளியேறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமிடத்து தமக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத ஞானசார தேரருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]

The post ஞானசாரருக்கு இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முடியாது! பொலிஸார் தீவிர முயற்சி appeared first on TamilStar.com.

கை விரித்தார் சம்பந்தன்!! முடிவுகள் வடக்கு முதல்வரின் கைகளில்..

Posted: 11 Jun 2017 07:53 AM PDT

வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் தாம் தலையிடப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்று நியமிக்கப்பட்ட நிலையில், அந்த குழுவின் அறிக்கை அண்மையில் வடமாகாண சபையில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள […]

The post கை விரித்தார் சம்பந்தன்!! முடிவுகள் வடக்கு முதல்வரின் கைகளில்.. appeared first on TamilStar.com.

இனரீதியான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும்! – ஐ.நா

Posted: 11 Jun 2017 07:44 AM PDT

இன ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி உனா மெக்கலி தெரிவித்துள்ளார். ருவிட்டர் செய்தி ஒன்றில் அவர்,ஒற்றுமை மாத்திரமே இலங்கையை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும். இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்தது. எனவே இன ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெறுக்கத்தக்க வன்முறைகள் இடம்பெற்றுள்ளமையை அடுத்தே ஐக்கிய நாடுகள் அதிகாரியின் கருத்துகள் வெளியாகியுள்ளன.

The post இனரீதியான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும்! – ஐ.நா appeared first on TamilStar.com.

ஜனாதிபதி மீண்டும் யாழ். விஜயம் : வட மாகாண அரசியலில் பரபரப்பு

Posted: 11 Jun 2017 07:41 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அமைச்சர்கள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை வெளியாகி வட மாகாண அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பாக மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு நேற்று காலை தொலைபேசியூடாக தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, மாவட்டத்தின் சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம், […]

The post ஜனாதிபதி மீண்டும் யாழ். விஜயம் : வட மாகாண அரசியலில் பரபரப்பு appeared first on TamilStar.com.

விரைவில் கைதாவார் கோத்தா!

Posted: 11 Jun 2017 07:37 AM PDT

பல்வேறு கொலை சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றுக்கான சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களுக்கு அமைய கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் குற்ற புலனாய்வு பிரிவு நீண்ட […]

The post விரைவில் கைதாவார் கோத்தா! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™