Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜி.எஸ்.டி.,யில் வர்த்தகர் கவலையை போக்க தீர்வு!

Posted: 09 Jun 2017 09:56 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு துறையினரின் கவலையை போக்கி, பிரச்னையை தீர்க்க, பல்துறை சார்ந்த, 18 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

நாடு முழுவதும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் மூலம், பலமுனை வரிக்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு அமலுக்கு வரும். ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்துவதற்கான பணிகள், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநில நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதி காரிகள் இடம் ...

இறையாண்மையை மதிக்க வேண்டும் பாக்., - சீனா மீது பிரதமர் மோடி சாடல்

Posted: 09 Jun 2017 10:00 AM PDT

அஸ்தானா:''பொருளாதார வளர்ச்சிக்கு, நாடு களை இணைக்கும் வகையில் சாலை அமைப் பது தேவையான ஒன்று தான்; ஆனால், அது, மற்ற நாடுகளின் இறையாண்மையை பாதிக் கும் விதத்தில் அமையக்கூடாது,'' என, கஜகஸ்தான் மாநாட்டில், பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு, பிரதமர் மோடி மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

ஐரோப்பிய, ஆசிய நாடுகள் அடங்கிய, பொருளாதார, அரசியல், ராணுவ ஒத்துழைப்புக் கான அமைப்பான, எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங் காய் ஒத்துழைப்பு அமைப்பு, 1996ல் உருவாக்கப் பட்டது.சீனா,கஜகஸ்தான்,கிர்கிஸ்தான்,ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை இந்த அமைப்பில் உள்ளன. இதில், இந்தியாவும், ...

இனி, சென்னை - குமரி - திருவனந்தபுரம் இடையே கடல் பயணம்!

Posted: 09 Jun 2017 10:47 AM PDT

சென்னை:''தமிழக அரசுடன் இணைந்து, சென்னை - குமரி - திருவனந்தபுரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழகம் சிறிய அளவு முதலீடு செய்தால் போதும்; திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்து விடும்,'' என, மத்திய கப்பல்போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்தார்.

சென்னை அருகே உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், 1,270 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, புதிய கன்டெய்னர் முனையமும், 151 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, பல சரக்கு முனையமும் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. புதிய முனையங்களை துவக்கி வைத்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ...

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சோனியா முடிவு செய்வார்: ஸ்டாலின்

Posted: 09 Jun 2017 10:53 AM PDT

சென்னை:''ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளரை அறிவித்த பின், சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி, வேட்பாளரை தேர்வு செய்வர்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, பொழிச்சலுார், பேரேரி அம்மன் கோவில் குளம் மற்றும் தண்டலம், வடிவுடை அம்மன் கோவில் குளத்தை துார் வாரும் பணி களை, ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.
துார்வாரும் பணி
அப்போது, அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சியில், குளங்கள், ஏரிகள், அணைகள் துார்வாரப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி யில், நீர் நிலைகளை பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ளவில்லை. ...

சத்தமின்றி சமாதானம்: பழனிசாமி தந்திரம்!

Posted: 09 Jun 2017 10:57 AM PDT

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டினால், பிரச்னை எழும் என்பதால், எம்.எல்.ஏ.,க்க ளை மாவட்ட வாரியாக அழைத்து பேசி, முதல்வர் பழனிசாமி சமாதானப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர், வரும், 14ல், துவங்குகிறது. இதையொட்டி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டுவது மரபு. தற்போது, எம்.எல்.ஏ.,க்கள், மூன்று அணிகளாக பிரிந்துள்ளனர். இச்சூழ்நிலையில், கூட்டத்தை கூட்டினால், பிரச்னை வெடிக்கும். சிலர் வராமல் இருந்தால், அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்ற பேச்சு கிளம்பும். அதை தவிர்க்கவும், எம்.எல்.ஏ.,க்களை சமா தானப்படுத்தவும், மாவட்ட வாரியாக அழைத்து பேச, முதல்வர் ...

கறுப்பு பண முதலைகளுக்காக வழிகாட்டி மதிப்பு குறைப்பு?ரியல் எஸ்டேட் துறையினர் அதிருப்தி

Posted: 09 Jun 2017 11:01 AM PDT

'-மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப் பின் போது, நிலங்களில் முதலீடு செய்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட கறுப்பு பண முதலைகள், பத்திரப்பதிவு பணிகளை எளிதாக முடிக்கவே, வழிகாட்டி மதிப்பு குறைக்கப் பட்டுள்ளது' என, ரியல் எஸ்டேட் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில், நிலங்களுக்கான சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள், 2012 ஏப்., 1ல் அறிவிக்கப் பட்டன. இதில், மதிப்பு நிர்ணய குளறுபடியால், பத்திரப்பதிவு வீழ்ச்சி அடைந்தது; பதிவுத் துறைக்கும் வருவாய் குறைந்தது.இதனால், 'வழிகாட்டி மதிப்புகளை பகுதி வாரியாக ஆய்வு செய்து, தவறான மதிப்பீடுகளை சரி செய்ய ...

மீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் தெரசா மே

Posted: 09 Jun 2017 11:09 AM PDT

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக தெரசா மே மீண்டும் பதவியேற்க உள்ளார். ஆனால், பார்லிமென்ட்டில் பெரும்பான்மை கிடைக்கும் என்ற அவருடைய நம்பிக்கை பொய்த்து போனது.

பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்தது. இதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டுப்பதிவு, 2016, ஜூன் மாதம் நடந்தது. அதில், 52 சதவீதம் பேர், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர்.இதை எதிர்த்து வந்த, டேவிட் கேமரூன், பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகி னார். கடந்த, 2016, ஜூலையில், ...

தலைமறைவு நீதிபதி கர்ணனை சுற்றிவளைக்க போலீஸ் தீவிரம்

Posted: 09 Jun 2017 11:11 AM PDT

சென்னை: ஒரு மாதமாக, தலைமறைவாக இருந்து வரும், நீதிபதி கர்ணனை பிடிக்க, உளவு போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

கடலுாரைச் சேர்ந்த கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, எட்டு ஆண்டுகள் பணி யாற்றினார். அப்போது, தலைமை நீதிபதி உட்பட, 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத் தினார். இது குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு,கடிதமும் எழுதினார். இந்நிலையில், கர்ணன், 2017 பிப்ரவரியில், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கு, அவர் கண்டனம் தெரிவித்தார். இதனால்,உச்சநீதி மன்றம், அவர் மீது ...

‛விசா மறுப்பின் பின்னணியில் இலங்கை அரசு': வைகோ

Posted: 09 Jun 2017 11:45 AM PDT

சென்னை: விசா மறுப்பின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

மலேசியாவில் நுழைய தடை விதிப்பால், ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மலேசியாவிலிருந்து சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
கைதி போல்..
மலேசியாவில் நடைபெறும் பினாங்கு துணை முதல்வர் இல்ல திருமண விழாவுக்காக சென்றிருந்தேன். மலேசிய விமான நிலையத்தில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மலேசிய போலீஸ் என்னை கைதி போல் நடத்தினர். 16 மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன். 24 மணி நேரமாக ...

சென்னை ஐகோர்ட் உத்தரவு ரத்தாகுமா? 'நீட்' வழக்கை 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

Posted: 09 Jun 2017 12:02 PM PDT

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தாக்கல் செய்த மனு மீது, வரும், 12ல் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்காக, நீட் எனப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மே, 7ல் நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பிற மொழி கேள்வித் தாள்களில் வேறுபாடுகள் ...

நாகா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கெப்ளாங் காலமானார்

Posted: 09 Jun 2017 01:54 PM PDT

ராட்னாதிப் சவுத்ரி: 50 ஆண்டுகளாக இந்திய அரசால் தேடப்பட்டுவந்த நாகா பயங்கரவாத அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கெப்ளாங்க்,77 உடல் நலகுறைவு காரணமாக மியான்மரில் இறந்தார்.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசம்,மியான்மரின் ஒரு சில பகுதிகளை இணைத்து தனி நாடு கோரி வந்த நாகாலாந்து தேசிய சோஷியலிஸ் கவுன்சில் (என்.எஸ்.சி.என்) அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கெப்ளாங்,77 இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளார். இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பல்வேறு கிளர்ச்சி படைகளை உருவாக்கினார்.இந்தியாவால் தேடப்பட்டு வந்த நிலையில் மியான்மர் நாட்டின் டாகா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™