Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் எப்போது? : அரசு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு

Posted: 08 Jun 2017 08:05 AM PDT

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் துவங்கா ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
இடைக்கால தடை :
தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் எழுதியு உள்ளனர். இங்கு, அரசு மற்றும் தனியார் மருத் துவ கல்லுாரிகளில் உள்ள,5,650 எம்.பி. பி.எஸ்., இடங்களுக்கு, மே மாதத்தில் விண்ணப்பங்கள் ...

பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம்!

Posted: 08 Jun 2017 09:51 AM PDT

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை, தினமும் மாற்றியமைக்கும் முறை, நாடு முழுவதும், வரும், 16ம் தேதி அமலாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை, 15 நாட்களுக்கு ஒரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை, பல நாடுகளில், தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், இந்தியாவிலும், சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்க, எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்துவந்தன. சோதனை அடிப் படையில், புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில், பெட்ரோல், ...

நில வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைப்பு!

Posted: 08 Jun 2017 09:52 AM PDT

தற்போது நடைமுறையில் உள்ள, நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் குறைக்கவும், சில ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை, 3 சதவீதம் அதிகரிக்கவும், தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில், நேற்று மாலை, 3:00 மணிக்கு துவங்கி, 3:30க்கு நிறைவடைந்தது. கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரில், துறை வாரியாக வெளியிடப்பட உள்ள அறிவிப் புகள், 110 விதியில் வெளியிட வேண்டிய அறிவிப்புகள் முடிவு செய்யப்பட்டன. ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்பின், நிலங்களின் வழிகாட்டி ...

எழும்பூர் கோர்ட்டில் தினகரன் ஆஜர் : 'பெரா' வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

Posted: 08 Jun 2017 09:56 AM PDT

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், நேற்று ஆஜரான தினகரன் மீது, மேலும் ஒரு அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 1995 - 96ல், இங்கிலாந்து, கனடா உட்பட, பல நாடுகளில் உள்ள, பார்கிலேஸ் வங்கியில், சட்ட விரோத மாக, பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் என, அமலாக்கத் துறை, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், இரு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை தொடுத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முற்பட்ட வழக்கில் கைதான தினக ரன், டில்லி திஹார் சிறையில் ...

தினகரன், திவாகரனுக்கு சசிகலா அவசர அழைப்பு! : பெங்களூரு சிறையில் இன்று 'குடும்ப பஞ்சாயத்து'

Posted: 08 Jun 2017 10:00 AM PDT

அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பத்தை போக்க வும், குடும்பத்தில் காணப்படும் சச்சரவுகளை தீர்க்கவும், தினகரன், திவாகரன் உள்ளிட்ட, தன் சொந்தங்கள் ஆறு பேரை, சிறைக்கு வந்து தன்னை சந்திக்கும்படி, சசிகலா அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து, கட்சி வட்டாரம் கூறியதாவது: சசிகலா தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் திருமணம், சசிகலா தலைமையில் நடக்க வேண்டும் என்பது, குடும்ப உறுப்பினர்கள் விருப்பம்.
சட்ட ஆலோசனை
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள, சசிகலாவின் மறு சீராய்வு மனு விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், அவருக்கு ஜாமின் ...

தஞ்சையில் எய்ம்ஸ் அமைக்க அரசு பரிந்துரை : மதுரையில் அதிக வசதிகள் இருக்காம்

Posted: 08 Jun 2017 10:06 AM PDT

தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அரசு கேட்ட, 10 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, தஞ்சையில் மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில், எய்ம்ஸ் அமைக்கப்படும் என, 2015ல், மத்திய அரசு அறிவித்தது. அதற்காக, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சி புரம் ஆகிய, ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர். ஐந்து இடங்களில், ஏதாவது ஒன்றை உறுதி செய்ய, அனைத்து இடங்கள் குறித்தும், சவாலான, 10 கேள்விகள் கேட்டு, மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், ரயில், விமான ...

போலீஸ் துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் உயிரிழந்ததால்... பதற்றம்!

Posted: 08 Jun 2017 10:54 AM PDT

போபால்:மத்தியப் பிரதேசத்தில் போராட்டத் தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், ஐந்து விவசாயிகள் உயிரிழந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க, மத்தியப் படைகள் விரைந்துள்ளன; மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பயிர்க் கடன் களை ரத்து செய்ய வேண்டும், தங்களு டைய உற்பத்தி பொருள்களுக்கான குறைந்த பட்ச கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் ...

கஜகஸ்தானில் மோடி: பாக்., பிரதமருடன் சந்திப்பு?

Posted: 08 Jun 2017 10:57 AM PDT

அஸ்தானா:எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ப தற்காக, மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவுக்கு வந்தடைந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பிய,ஆசிய நாடுகள்அடங்கிய, பொருளா தார, அரசியல், ராணுவ ஒத்துழைப்புக் கான அமைப்பான, எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு,1996ல் உருவாக்கப் பட் டது. சீனா, கஜகஸ்தான், கிர் கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ் தான் ஆகியவை இந்த ...

சேகர் ரெட்டி - ராவ் பணப் பரிமாற்ற விவகாரம் மீண்டும்...விசுவரூபம்!

Posted: 08 Jun 2017 11:03 AM PDT

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டிக்கும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்ற விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. சேகர் ரெட்டியிடம் இருந்து, மாதந்தோறும், ஒரு கோடி ரூபாயை ராவ் பெற்று வந்தது வருமான வரித்துறை விசார ணையில் தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் 2016 டிசம்பரில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரது வீடு மற்றும் இதர இடங்களில் இருந்து 131 கோடி ரூபாய் பணம் 177 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அவரது ...

'பிளாஸ்டிக்' அரிசி வர விடமாட்டோம்! : அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்

Posted: 08 Jun 2017 11:36 AM PDT

சென்னை: ''தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு இடமே இல்லை. அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,'' என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில், அரிசி பஞ்சம் இல்லை. மத்திய அரசிடமிருந்து, மாதத்திற்கு, 2.96 லட்சம் டன் அரிசியை, விலை கொடுத்து வாங்கி, இலவசமாக வழங்குகிறோம். கூடுதல் தேவை என்றால், தேவைக்கேற்ப, 26 ஆயிரம் டன் அரிசி வாங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், 3.14 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு ...

உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தொய்வு

Posted: 08 Jun 2017 12:31 PM PDT

மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, ஆளுங்கட்சியினரின் ஆர்வமின்மையால் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தொய்வு நிலவுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், கடந்தாண்டு அக்டோபரில் முடிந்ததையடுத்து, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முறையான இடஒதுக்கீடு இன்றி, அவசர கோலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., உட்பட சில அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப் பட்டது.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இடஒதுக்கீடு போன்ற பணிகளை விரைந்து ...

'சசி குடும்பம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது!'

Posted: 08 Jun 2017 01:39 PM PDT

சென்னை: ''சசிகலா தான், அ.தி.மு.க., பொதுச்செயலர். அவரது குடும்பம் இல்லாமல், எதையும் செய்ய முடியாது,'' என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
அவர் கூறியதாவது: குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு வருவது போல, கட்சியில், சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. சசிகலா பழிவாங்கப்பட்டு, சிறையில் உள்ளார். அவர் வெளியே வந்ததும், கட்சிப் பணியாற்றுவார். தற்போது, தினகரன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். யாரும், யாரையும் ஒதுக்கி வைக்க முடியாது. அணிகள் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு சில பிரச்னைகள் உள்ளன; அனைத்தும் சரியாகி விடும். அனைவரும், சசிகலா ...

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள் : எச்.ராஜா

Posted: 08 Jun 2017 02:32 PM PDT

காரைக்குடி: ''அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜனாதிபதி தேர்தலில், தோற்க கூடிய வேட்பாளருக்கு ஓட்டு போட மாட்டார்கள்,'' என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தல் நடந்து ஓராண்டுதான் ஆகிறது. அடுத்த தேர்தல் உடனே வர வேண்டும் என எந்த எம்.எல்.ஏ.,வும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தில் இருக்கும் சட்டசபை உறுப்பினர்களின் ஓட்டுக்களை கணக்கில் எடுக்காமலேயே பா.ஜ.,வுக்கு உபரி ஓட்டுக்கள் உள்ளன. அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™