Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கத்தாருடன் தூதரக உறவு துண்டிப்பு: சவுதி உட்பட நான்கு நாடுகள் அறிவிப்பு

Posted: 05 Jun 2017 09:42 AM PDT

துபாய்: 'ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்,'' என, சவுதி அரேபியா உட்பட, நான்கு நாடுகள் நேற்று அறிவித்துள்ளன.

அதிக அளவு எண்ணெய் வளமுள்ள மேற்காசிய நாடான கத்தார், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வருவதாக, சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., ஆகிய வளைகுடா நாடுகளும், எகிப்தும் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
நீண்ட இழுபறி
மேலும், ஷியா முஸ்லிம்கள் அதிகம் உள்ள, ஷியா ...

தன்னை ஒதுக்கிய பழனிசாமி அணிக்கு தினகரன் கெடு!

Posted: 05 Jun 2017 09:59 AM PDT

அ.தி.மு.க.,வில் இருந்து, தன்னை ஒதுக்கிய, முதல்வர் பழனிசாமி அணியினருக்கு, துணை பொதுச் செயலராக தன்னை நியமிக்க வைத்த தினகரன், திடீர் கெடு விதித்துள்ளார்.

சசிகலா அறிவுரையை ஏற்று, 60 நாட்கள் ஒதுங்கியிருந்து, கட்சியை கண்காணிக்கப் போவதாகவும், 'அதற்குள் ஒன்றுபடாவிட்டால், எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வேன்' என்றும், அவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தன்னுடைய பதவியை, யாராலும் பறிக்க முடியாது என்றும் கொக்கரித்து உள்ளார்.
அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வீரமணி உள்ளிட்ட சிலரை நீக்கும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் நெருக்கடி ...

தினகரனை ஏற்க மாட்டோம்: அமைச்சர்கள் திட்டவட்டம்

Posted: 05 Jun 2017 10:02 AM PDT

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று அமைச்சர்கள் கூட்டம், அதைத் தொடர்ந்து முதல்வருடன் சந்திப்பு என, அடுத்தடுத்து நடந்த ஆலோசனைகளுக்கு பின், 'கட்சியில் இருந்து, தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றமில்லை' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, நிதியமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
ஜெயலலிதாவின் லட்சியங்களை காக்கும் வகையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது. அது, எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதற்காகவே, கூட்டம் நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க.,வை, ஜெயலலிதா வழிகாட்டியாக இருந்து ...

நாட்டின் பொருளாதாரத்தில் ஜி.எஸ்.டி., விதிப்பு திருப்புமுனை! ஆய்வு செய்த பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 05 Jun 2017 10:03 AM PDT

புதுடில்லி : ''நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, வரலாற்றில் மிகவும் முக்கியமான சம்பவமாக இருக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

நாட்டில் தற்போது உள்ள பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.ஜி.எஸ்.டி.,யை கொண்டு வருவதற்கான சட்டம், பார்லி.,யில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, ...

அணிகள் இணையுமா: தினகரன் சந்தேகம்

Posted: 05 Jun 2017 10:04 AM PDT

ஓசூர்: ''அ.தி.மு.க.,வில், இரு அணிகள் இணைப்புக்கான சூழல் தெரியவில்லை,'' என, துணை பொதுச்செயலர் தினகரன் கூறினார்.

சென்னையில் இருந்து, நேற்று காலை கார் மூலம், சசிகலாவை சந்திப்பதற்காக, பெங்களூரு புறப்பட்ட தினகரன், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
நான் செயல்படுகிறேன்
அவர் கூறியதாவது:அ.தி.மு.க., இரு அணிகள் இணைவதற்கு, நான் தடையாக இருப்பதாக, சில அமைச்சர்கள் கூறியதால், ஒதுங்கி இருந்தேன். ஆனால், இரு அணிகள் இணைப்புக்கானஅறிகுறி தெரியவில்லை. இரு அணிகள் இணைப்புக்கு, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ...

விளைவுகளை சந்திக்க நேரிடும்: கவர்னருக்கு முதல்வர் எச்சரிக்கை

Posted: 05 Jun 2017 10:05 AM PDT

புதுச்சேரி: ''கவர்னர் அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார். அவர் எல்லை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில், நேற்று, அமைச்சர்கள் சிலர் பேசுகையில், 'கவர்னர் கிரண்பேடி, தொடர்ச்சியாக அரசையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் விமர்சித்து வருகிறார். இதற்கு, சட்டசபையில் ஒரு முடிவெடுக்க வேண்டும்' என்றனர்.
தனியாக சட்டம் இல்லை
இதற்கு பதிலளித்து, முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்பின்படி, கவர்னர் செயல்பட வேண்டும். யூனியன்
பிரதேச ...

கெஜ்ரிவால் மனைவிக்கு முதல்வர் பதவி? தீவிரமடைகிறது ஆம் ஆத்மி 'கசமுசா'

Posted: 05 Jun 2017 10:05 AM PDT

கட்சிக்குள் எழுந்துள்ள தீவிர நெருக்கடியை சமாளிக்க, தன் மனைவியை, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக்க வேண்டுமென்று, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்த துவங்கியுள்ளதால், ஆம் ஆத்மி கட்சிக்குள் புதிய பரபரப்பு காணப்படுகிறது.

தன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கபில் மிஸ்ராவை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீக்கியதில் இருந்தே, டில்லி அரசியலில் பரபரப்பு நீடித்தபடி உள்ளது. தினந்தோறும், முதல்வர் மீது, கபில் மிஸ்ரா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.
இது, ஆம் ஆத்மி கட்சிக்குள், பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் ...

ஐ.டி., நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்: அரசு தடுக்க ஊழியர்கள் வலியுறுத்தல்

Posted: 05 Jun 2017 10:37 AM PDT

சென்னை: ''ஐ.டி., நிறுவனங்களில் நடக்கும் பணி நீக்கம் உள்ளிட்ட குளறுபடிகளை, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்க்க வேண்டும்,'' என, தகவல் தொழிற்நுட்ப ஊழியர்கள் மன்றம் கோரியுள்ளது.

இது குறித்து, மன்றத்தின் மாநில தலைவர் பரிமளா கூறியதாவது: 'இந்திய, ஐ.டி., துறையில், மூன்று ஆண்டுகளில், 25 சதவீதம் பேர் வேலையிழப்பர்' என, 'நாஸ்காம், அசோசம்'
போன்றவை அறிவித்தது உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 'பணித்திறன் குறைவு' என, முத்திரை குத்தி, ஐ.டி., நிறுவனங்களில் இருந்து, ஊழியர்கள் வெளியேற்றப்படுவது தொடர்கதையாக உள்ளது.
பணி பாதுகாப்பு ...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை 14ல் கூடுகிறது

Posted: 05 Jun 2017 10:40 AM PDT

சென்னை : ஆளும், அ.தி.மு.க.,வில் சலசலப்புகள் ஏற்பட்டு உள்ள சூழலில், சட்டசபை கூட்டத்தொடர், வரும், 14ல் துவங்க உள்ளது.

தமிழக சட்டசபையில், 2017 - 18ம் நிதி ஆண்டுக் கான பட்ஜெட், மார்ச், 16ல் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்ததும், மார்ச், 24ல், மறு தேதி குறிப்பிடாமல், சபை ஒத்தி வைக்கப்பட்டது.
முதல்வரிடம் மனு
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின், அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக, சட்டசபை கூட்டப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டதாக, ...

ரயில்வே பாதுகாப்புக்கு ஆணையம்: 'நிடி ஆயோக்' பரிந்துரை

Posted: 05 Jun 2017 12:35 PM PDT

'பெரும்பாலான ரயில் விபத்துகள் மனிதத் தவறுகளாலேயே நடப்பதால், அதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்' என, ரயில்வே அமைச்சகத்துக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

ரயில்கள் தடம் புரள்வது, ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயல்வது போன்றவற்றால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.
அறிக்கை தாக்கல் :
இது போன்ற விபத்து களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, டாக்டர் அனில் ககோட்கர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ...

என்.எஸ்.ஜி.,யில் சேர்வதில் சிக்கல்: இந்தியாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

Posted: 05 Jun 2017 01:59 PM PDT

பீஜிங்: என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராகும் பிரச்னை, சிக்கலாகி உள்ளது என, சீனா கூறியுள்ளது.

இந்தியா முயற்சி:
அமெரிக்கா, சீனா உட்பட, 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தின் உறுப்பினராக இந்தியா முயற்சி மேற்கொண்டது. கடந்த ஆண்டு, தென் கொரியாவின் சியோலில் நடந்த, என்.எஸ்.ஜி., கூட்டத்தில், இந்தியாவின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு, அண்டை நாடான சீனா, முட்டுக்கட்டை போட்டது. அதன் துாண்டுதலில், ...

லண்டன் தாக்குதலில் முக்கிய குற்றவாளி பாக்., இளைஞன்

Posted: 05 Jun 2017 02:57 PM PDT

லண்டன்: லண்டனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்:
பிரிட்டன் தலைநகர் லண்டனில், மேம்பாலம், சந்தை, உணவு விடுதிகள், மதுபான விடுதிகள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் பயங்கரவாதிகள் வேனை தாறுமாறாக ஓட்டி சென்றும், பொதுமக்கள் மீது கத்தியால் குத்தியும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இரு சம்பவங்களிலும், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™