Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரிட்டனில் மீண்டும் பயங்கரவாதிகள் அட்டூழியம்

Posted: 04 Jun 2017 09:15 AM PDT

லண்டன்: பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடத்திய தாக்குதல் சுவடுகள் மறைவதற்குள், தலைநகர் லண்டனில் பயங்கரவாதிகள் மீண்டும் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த தாக்குதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில், மே, 22ல், பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதலில், 22 பேர் கொல்லப் பட்டனர். இந்த தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், மீண்டும் அங்கு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
தாறுமாறாக ஓடிய வேன்
தலைநகர் லண்டனில், நேற்று முன்தினம் இரவு, ...

பாக்., விஷம வீடியோ வெளியீடு இந்திய நிலைகளை அழித்ததாக அண்டப்புளுகு

Posted: 04 Jun 2017 10:01 AM PDT

புதுடில்லி:இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக, பாகிஸ்தான் ராணுவம் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதற்கு, நம் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ் தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் பகுதியில் பாக்., ராணுவம் அமைத்திருந்த பதுங்கு குழிகள் மற்றும் நிலைகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது.அதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில், இந்திய நிலைகளை அழித்ததாக, பாகிஸ்தான் ...

டில்லி வாகன எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது

Posted: 04 Jun 2017 10:03 AM PDT

புதுடில்லி: காற்று மாசு பிரச்னையில் திணறி வரும் தேசியத் தலைநகர் டில்லியில் பதிவாகியுள்ள வாகனங்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டி உள்ளது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந் துள்ளது. உலக அளவில் அதிக மாசடைந்த நகரங்களில், டில்லியும் ஒன்றாக உள்ளது. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டில்லியில் காற்று மாசடைவதற்கு முக்கிய காரண மாக, வாகனங்களின் பெருக்கமே எனகூறப்படு கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயக்குவதற்கு, தேசிய பசுமை ...

கெரசின், பென்ஷனுக்கு ஆதார் எண் கட்டாயம் முறைகேடுகளை தடுக்க அரசு நடவடிக்கை

Posted: 04 Jun 2017 10:06 AM PDT

புதுடில்லி:ரேஷன் கடையில் கெரசின் எனப் படும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கும், அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறுவதற்கும், ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
அரசு நலத் திட்டப் பணிகள், மக்களை நேரடி யாக சென்றடைவதை உறுதி செய்யவும், மானியப் பலன்களில் மோசடி நடப்பதை தடுக் கவும், மானியப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார் அடிப்படையிலான இந்த திட்டத்தால், உண்மையான பயனாளி களுக்கு மானியங்கள் கிடைப்பது உறுதி ...

வர்த்தக மோசடிகளை கண்டுபிடிக்க புதிய திட்டம்

Posted: 04 Jun 2017 10:08 AM PDT

புதுடில்லி:பொதுமக்களிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றுவது உள்ளிட்ட வர்த்தக மோசடிகளை, சமூகவலைதளங்களின் மூலம் முன்கூட்டியே கண்டறியும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்க, மத்திய அரசின், எஸ்.எப். ஐ.ஓ.,எனப்படும்,தீவிர குற்ற புல னாய்வு அலுவலகம் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

விசாரணை: பொதுமக்களிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றுவது, முதலீட்டாளர் களை ஏமாற்றுவது போன்ற வர்த்தக குற்றங்களை, தீவிர குற்றப் புலனாய்வுஅலுவலகம் அமைப்பு விசாரித்து வருகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தில், இது போன்ற மோசடி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதை முன்னதாக எச்சரிக்கும் ...

முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் தரப்பில் மிரட்டல்!

Posted: 04 Jun 2017 10:26 AM PDT

தமிழக அமைச்சர்கள் சிலரை மாற்றும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை விட, கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என, அவர் கருதுவதால், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், சட்டசபையில், வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்ப்போம் என, மிரட்டல் விடுத்துள்ளதாக வும், தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்; 34 நாட் களுக்கு பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரை, ...

ஒற்றை கலாசாரத்தை திணிக்க பா.ஜ., முயற்சி: காங்., துணைத்தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

Posted: 04 Jun 2017 10:33 AM PDT

சென்னை: ''தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி நடப்பது போல, மத்திய அரசு செயல்படுகிறது,'' என, அகில இந்திய காங்., துணைத்தலைவர், ராகுல் கூறினார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ஜ., அரசும், அக்கட்சியை இயக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், நாட்டை ஒற்றை கலாசாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. 1,000 -2,000 ஆண்டுகளாக, பல்வேறு பழக்க, வழக்கங்களைக் கொண்டுள்ள இந்தியாவில், ஒற்றை கலாசாரத்தை திணிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வை எதிர்த்து, ஒன்று பட்ட யுத்தத்தை துவக்க, எதிர்க்கட்சியினர் தயாராகி விட்டனர். அதன் அடையாளம் தான், கருணாநிதியின் சட்டசபை ...

தனியார் பள்ளி அட்மிஷனுக்கு அமைச்சர் சிபாரிசு கடிதம்

Posted: 04 Jun 2017 10:47 AM PDT

தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு, அமைச்சர் சிபாரிசு கடிதம் கொடுத்தது, கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், 9ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை, பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. பெரும்பாலான பள்ளி களில், சேர்க்கை முடிந்து, நாளை மறுநாள் பள்ளி கள் திறக்கபடுகின்றன .தற்போது,பிளஸ் 1வகுப்புக்கான சேர்க்கை மட்டுமே நடந்துவருகிறது. சேர்க்கை கிடைக்காத பெற்றோர் பலர், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை சுற்றி வந்து, சிபாரிசு கடிதம் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், ...

41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை

Posted: 04 Jun 2017 11:09 AM PDT

தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்கள் தொடர்பாக, ௪௧ வகையான அறிவிப்புகளை, விரைவில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளார்.

இதுதொடர்பாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
* பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இதுவரை இல் லாத வகையில், அந்தந்த மாவட்டத்திலேயே, விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ள மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்க, உடற்கல்வி ஆசிரியர் நியமனங்கள் அதிகரிக்கப்படும். ...

லஞ்சத்தை திரும்ப பெற 1100க்கு போன் செய்யுங்க!

Posted: 04 Jun 2017 12:22 PM PDT

அமராவதி: அரசு சேவைகள் பெறுவதற்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். 1100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், கொடுத்த லஞ்சப் பணத்தை, அதிகாரிகள் திரும்ப கொண்டு வந்து தந்து விடுவர். இந்த புதிய சேவை ஆந்திராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு அமைந்துள்ளது. நாட்டில் அதிக அளவில் லஞ்சம் புழங்கும் மாநிலங்களில், கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது. இந்த களங்கத்தை துடைப்பதற்காக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிய ...

'மாடு விற்க தடையை பரிசீலிக்க அரசு தயார்' : ஹர்ஷ்வர்த்தன்

Posted: 04 Jun 2017 03:05 PM PDT

புதுடில்லி: ''இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை, மத்திய அரசு கவுரவ பிரச்னையாக கருதவில்லை. பரிந்துரை அனுப்பினால் பரிசீலிக்க தயார்,'' என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறினார்.

எதிர்ப்பு:
நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பரிசீலிக்க தயார்:
இதுகுறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியதாவது: ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™