Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெட்ரோல்,டீசல் விலை இன்று(ஜூலை 1) எவ்வளவு?

Posted: 29 Jun 2017 08:25 AM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 1) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 28காசுகள் குறைத்து ரூ.65.46காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 17 காசுகள் குறைத்து ரூ.56.13 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-01) காலை 6 மணி ...

சுதந்திரத்திற்கு பின் நள்ளிரவில் அமலாகும் ஜிஎஸ்டி : 10 அம்சங்கள்

Posted: 30 Jun 2017 12:25 AM PDT

புதுடில்லி : இன்று (ஜூன் 30) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,க்கான அறிமுக விழா பார்லி., மைய மண்டபத்தில் நடக்க உள்ளது. ஏறக்குறைய 1000 விஐபி.,க்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.நள்ளிரவில் அமலாகும் ஜிஎஸ்டி குறித்த 10 சிறப்பம்சங்கள் :

1. ஜிஎஸ்டி அறிமுக விழா இன்று இரவு 11 மணிக்கு நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் பிரதமர் மோடி ஜிஎஸ்டி., யை துவக்கி வைக்கிறார். இதற்காக பிரத்யேக ஒலி, ஒளி அமைப்புக்களுடனான ஏற்பாடுகள் பார்லி., மைய மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன.
2. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒரு மணி அடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி அமலாவது ...

பான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு

Posted: 30 Jun 2017 09:56 AM PDT

புதுடில்லி: 'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியான தகவலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய அரசு இன்னும் சரியான விளக்கம் அளிக்காத தால், மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

மத்திய, மாநில அரசின் சில திட்டங்களின் கீழ் பலன் அடைய, ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனினும், 'அரசின் மானிய ...

ஜூலை 1:நாடு முழுதும் ஜி.எஸ்.டி.,வரி முறை அமலானது

Posted: 30 Jun 2017 10:37 AM PDT

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, நேற்று நள்ளிரவு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்று முதல், நாடு முழுதும் இது நடைமுறைக்கு வருகிறது.

பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துடன், இந்த வரி முறையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளது.நாடு முழுதும் நடைமுறையில் இருந்த பலமுனை வரி விதிப்பு ...

ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று சென்னையில் முகாம்

Posted: 30 Jun 2017 11:20 AM PDT

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் ஆகியோர், இன்று சென்னை வருகின்றனர். தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, ஆதரவு கேட்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல், வரும், 17ல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, பா.ஜ., வேட்பாளருக்கு, அ.தி.மு.க., அணிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மீரா குமாருக்கு, காங்கிரஸ், தி.மு.க., முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பா.ம.க., இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை; அக்கட்சிக்கு, ஒரு எம்.பி., உள்ளார்.பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை, 11:00 மணிக்கு, தனி விமானம் மூலம், சென்னை ...

கட்சி, ஆட்சியை காப்பாற்ற ஒன்று சேர வேண்டும்; விழாவில் அழைப்பு

Posted: 30 Jun 2017 11:28 AM PDT

மதுரை:' 'எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சி, ஜெ., உருவாக்கிய ஆட்சியை காப்பாற்ற நண்பர்கள் பிரிந்து சென்றாலும் ஒன்று சேர வேண்டும்,'' என, மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு துவக்க விழாவில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கேட்டுக் கொண்டார்.

அரசு சார்பில் நடந்த விழாவில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
தம்பித்துரை பேசியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை ஜெ., கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார். அவரால் அமைக்கப்பட்ட இந்த ஆட்சிக்கு அந்த விழாவை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ...

அ.தி.மு.க, ஆட்சியை முடக்க தொடர் நடவடிக்கை: ஸ்டாலின்

Posted: 30 Jun 2017 11:31 AM PDT

சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியை முடக்க, சட்டத்திற்கு உட்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, கொளத்துாரில் அவரது பேட்டி:
இந்த ஆட்சியில், கைத்தறித் துறையில் மட்டுமல்ல, பால், அரிசி, குதிரை பேரம், குட்கா விவகாரம் என, எதுவாக இருந்தாலும், 'தகவல் வந்தால் நடவடிக்கை எடுப்போம்' என்கின்றனரே தவிர, முறையான நடவடிக்கைகள் எதையும் எடுப்பதில்லை. ஏனென்றால், இந்த ஆட்சியாளர்கள், அவற்றை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.குட்கா விற்பனை, கொலை குற்றத்துக்கு சமமானது. 'குட்கா' சாப்பிட்டால், உயிரே பறிபோகும் நிலை ...

அமலானது ஜி.எஸ்.டி: ஜனாதிபதி பெருமிதம்

Posted: 30 Jun 2017 11:36 AM PDT

புதுடில்லி: பார்லிமென்டில் நேற்று நள்ளிரவு (ஜூன் 30) ஜிஎஸ்டியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார்.

ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் பேசியதாவது: பல்வேறு நீண்ட நெறிமுறைகளுக்கு பிறகு ஜி.எஸ்.டி அமலாகிறது. இது நாட்டின் முக்கியமான தருணம். இதனை சாத்தியப்படுத்திய அரசுக்கு எனது வாழ்த்துக்கள்.
நிதியமைச்சராக நான் இருந்தபோது ஜி.எஸ்.டி உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்காற்றி உள்ளேன். 14 ஆண்டு பயணம் பயனை எட்டும் நேரம் வந்தள்ளது. ஜி.எஸ்.டிக்கு நான் கடந்தாண்டு ஒப்புதல் அளித்தேன். ஜி.எஸ்.டிக்கு ஒப்புதல் அளித்ததை ...

குரூப் - 1 தேர்வில் எந்த முறைகேடும் இல்லை; டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

Posted: 30 Jun 2017 11:55 AM PDT

சென்னை:'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 1 தேர்வில், தேர்வு மையங்கள் தோறும், வினாத்தாள், விடைத்தாள் வழங்குவது, தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை கட்டி, பாதுகாப்பாக முத்திரையிட்டு ஒப்படைப்பது வரை, அனைத்தும், வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்காக, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். விடைத்தாள்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, பின், ...

எல்லையில் இந்தியா சீனா படைகள் குவிப்பால் பதற்றம்!

Posted: 30 Jun 2017 12:03 PM PDT

புதுடில்லி: இந்தியா - சீனா - பூட்டான் எல்லையில் சாலை அமைக்கும் சீனாவின் முயற்சியால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அத்துமீறல் ஏற்படுவதை தடுக்கவும், சாலைப் பணிகள் நடைபெறாமல் தடுக்கவும், நமது எல்லையில், 3,000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், சீனாவும், 3,000 வீரர்களை தனது எல்லையில் நிறுத்தியுள்ள தால் பரபரப்பு காணப்படுகிறது.இந்தியா - பூட்டான் - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் ஆகியவற்றின் பொது எல்லை யான உள்ள டோக்லாம் பகுதியில், சாலை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது.

சாலை அமைக்கும் பணிக்காக வந்தபோது, எல்லையில், சீன மற்றும் நமது ...

ஜி.எஸ்.டி., அமல்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 30 Jun 2017 01:50 PM PDT

லக்னோ: ஜி.எஸ்.டி., சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்களும், வணிகர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நள்ளிரவில் நாடு முழுவுதும் அமலானது. இனி நாடுமுழுமைக்கும் ஒரு வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி., அமலானதையடுத்து உ.பி., உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். லக்னோவில் வணிகர்கள் , பொதுமக்கள் சாலையில் சரவெடியை வைத்து ...

நாட்டின் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை!மோடி உரை

Posted: 30 Jun 2017 02:05 PM PDT

''ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்த நடவடிக்கையானது, நாட்டின் வளர்ச்சிச்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கை; 125 கோடி மக்களும் இந்த வரலாற்று நாளைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தனர்,'' என, நேற்று நள்ளிரவில் பார்லிமென்ட்டில் நடந்த ஜி.எஸ்.டி., அறிமுக விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

பலமுனை வரிகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:இந்த ...

தோனி அசத்தல்; இந்தியாவிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

Posted: 30 Jun 2017 02:42 PM PDT

நார்த் சவுண்டு: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 93 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்திருந்தது. நேற்று, மூன்றாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் (நார்த் சவுண்டு) நடந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால், சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக போட்டி துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் ஹோப், வில்லியம்ஸ் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™