Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அடுத்த செயலர் பதவி யாருக்கு? சட்டசபை செயலகத்தில் சலசலப்பு

Posted: 03 Jun 2017 05:57 AM PDT

கடும் எதிர்ப்புக்கு பின், சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஓய்வு பெற்றாலும், கூடுதல் செயல ருக்கு, செயலராக பதவி உயர்வு வழங்காமல், பொறுப்பு பதவி வழங்கிஇருப்பது, சட்டசபை செயலக ஊழியர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை செயலராக இருந்த ஜமாலுதீன், 2012 மே மாதம் ஓய்வு பெற்றார்.அவருக்கு, அப்போது முதல்வராக இருந்த ஜெ., ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார். இவரது பணி நீட்டிப்பால், மற்ற அலுவலர்களின் பதவி உயர்வு பறிபோனது.
எதிர்ப்பு
இரண்டு கூடுதல் செயலர்கள், பதவி உயர்வு பெறாமலே ஓய்வு பெற்றனர். பணி நீட்டிப்பு பெற்ற ஜமாலுதீன், ...

பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம்

Posted: 03 Jun 2017 05:58 AM PDT

முதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார் பில், மனு அளிக்கப்பட்டுஉள்ளது; இம்மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. குறுகிய காலத்திற்குள், முடிவெடுக்க முடியா ...

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மின்னணு பண பரிவர்த்தனை...அதிகரிப்பு! கை கொடுக்கும் ஆதார்; இன்டர்நெட் கட்டணம் குறைப்பு

Posted: 03 Jun 2017 06:38 AM PDT

புதுடில்லி, மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மின்னணு முறை யிலான பணப் பரிவர்த்தனை பெருமளவு உயர்ந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தவிர, மொத்தம், 100 கோடி பேருக்கு, 'ஆதார்' எண் வழங்கப்பட்டதும், சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தை கணிசமாக குறைத்ததும், மின்னணு பணப் பரிவர்த்தனை உயர்ந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த, 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது உட்பட, பல்வேறு ...

தினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்...! 'அடிமைத்தனத்தை' ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு

Posted: 03 Jun 2017 07:22 AM PDT

திகார் சிறையில் இருந்து, சென்னை திரும்பிய தினகரன், 'நான் தான், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்; சசிகலாவை தவிர, வேறு யாராலும் என்னை நீக்க முடியாது' என அறி வித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரது தலைமையை விரும்பாத அமைச்சர் கள், கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனை அடியோடு ஓரங்கட்டவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக, முழுவீச்சில் களமிறங்க ஆர்வமாக உள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியி னர் விதித்த நிபந்தனை காரணமாக, தினக ரனை, கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக, ஏப்., ...

பிறந்த நாளில் கருணாநிதிக்கு மகள் ஊட்டினார்... 'கேக்!': பிரம்மாண்ட விழாவில் பல தலைவர்கள் பங்கேற்பு

Posted: 03 Jun 2017 10:26 AM PDT

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் 'கேக்' வெட்டி கொண்டாடினர். கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சி யில் பிறந்த நாள் கேக்கை கருணாநிதிக்கு, அவரது மகள் செல்வி ஊட்டினார்.

மாலையில், கருணாநிதியை பாராட்டி நடந்த பிரம்மாண்ட விழாவில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர்.சென்னை, கோபாலபுரம் வீட்டில், நேற்று கருணாநிதியின் பிறந்த நாளை, அவரது மனைவி தயாளுவுடன், குடும்ப உறுப்பினர்கள், 'கேக்' வெட்டி கொண்டாடினர். பின், பிறந்த நாள் கேக் துண்டை, ...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 2 பேர் வீர மரணம்

Posted: 03 Jun 2017 10:44 AM PDT

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குவாசி கண்ட்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத் தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இச்சம்பவத்தில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் ...

பயங்கரவாதத்திற்கு எதிராக போர் மக்ரோன் - மோடி கூட்டாக அறிவிப்பு

Posted: 03 Jun 2017 10:50 AM PDT

பாரிஸ்:'பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், ஒருங்கிணைந்து கூட்டாக செயல்படுவோம்' என, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடனான சந்திப்புக்கு பின், பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆறு நாட்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய, நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா பயணத்தை முடித்து நேற்று அவர், பிரான்ஸ் சென்றார்; தலைநகர் பாரிசில், பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை, பிரதமர் மோடி, சந்தித்து பேசினார். அப்போது, பயங்கரவாத ...

ஜூலை 1ல் ஜி.எஸ்.டி., அமல்: தங்கத்திற்கு 3 சதவீத வரி

Posted: 03 Jun 2017 10:55 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை, ஜூலை,1 முதல் அமல்படுத்த, டில்லியில் நேற்று நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநில அரசு களும் ஒப்புக் கொண்டுள்ளன. தங்கத்திற்கு, 3 சதவீத வரி விதிக்க, கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

'வாட்' உள்ளிட்ட மாநில அரசு வரிகள்; கலால், சேவை வரி உள்ளிட்ட, மத்திய வரிகள் நீக்கப்பட்டு, ஒரே சீரான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, நாடு முழுவதும், ஜூலை, 1ல், அமலுக்கு வருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநில நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதி காரிகள் இடம் ...

மக்கள் உணர்வுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதா?கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ராகுல் கடும் எச்சரிக்கை

Posted: 03 Jun 2017 11:02 AM PDT

சென்னை:''யாரையும் கலந்து ஆலோசிக்கா மல், தன்னிச்சையாக பிரதமர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்; மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை, அனுமதிக்க முடியாது,''என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசினார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:
கோடானு கோடி மக்களால், கருணாநிதி நேசிக் கப்பட்டார். அதனால், அவருக்கு பலம் கிடைத் தது. தமிழக மக்களை, அவர் ஆழமாக நேசிக்கி றார். அதேபோல் மக்களும் நேசிப்பதால், அவ ரிடம் துணிவு தெரிகிறது. வலிமையும், துணி வும் இணைகிற போது, அறிவாற்றல் பெருகு கிறது. மக்களின் துயரம், கஷ்டத்தை ...

மதச்சார்பற்ற கூட்டணி: ஸ்டாலின் உறுதி

Posted: 03 Jun 2017 11:05 AM PDT

சென்னை:''தி.மு.க., தேசிய ஒருமைப்பாடு, பன்முகத் தன்மையில் நம்பிக்கை உடைய கட்சி. நாட்டின் நலன் காக்க, மதச்சார்பற்ற கூட்டணி அமைப்போம்,'' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கருணாநிதி பிறந்த நாள் விழாவில், அவர் பேசியதாவது:
தோல்வி இல்லாத தலைவராக, கட்சியை தொடர்ந்து, 48 ஆண்டுகளாக வழி நடத்தியவர் கருணாநிதி. 19 ஆண்டுகள், முதல்வர் பதவி வகித்து, சாதனை புரிந்தவர். திராவிட இயக்கத் தின், 100 ஆண்டு வரலாற்றில், 80 ஆண்டுகளாக பங்களித்து வருபவர். இந்த விழாவுக்கு,கருணாநிதியை எப்படியா வது அழைத்து வர திட்டமிட்டோம். ஆனால், தேறி வரும் ...

சி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு

Posted: 03 Jun 2017 12:26 PM PDT

திண்டுக்கல் : மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன.
'நீட்' தேர்வுமருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள்
கேட்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி ...

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் சாம்பியன்

Posted: 03 Jun 2017 01:51 PM PDT

கார்டிப்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைபற்றியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று கார்டிப் லால்ஸில் நடந்தது. இப்போட்டியில் ஜுவான்டஸ் அணியும் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. இப்போட்டியில் நட்சத்திர ஆட்டகாரரான கிறிஸ்டினோ ரொனால்டோ விளையாடும் அணியான ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜுவான்டஸ் அணியும், ரியல் மாட்ரிட் அணியும் தலா ஒரு கோல் அடித்து சம நிலை வகித்தன. ரியல் ...

'நீட்' தேர்வை ரத்து கோரி ஐகோர்ட்டில் மேலும் மனு

Posted: 03 Jun 2017 02:28 PM PDT

மதுரை, 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஜொனிலா உட்பட, 10 மாணவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:
'இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மே 7ல் நடந்தது. அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெறவில்லை. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். மே 7ல் நடந்த தேர்வை ...

அடித்தள குளறுபடியால் அதிகரிக்கும் விபத்துகள் : விழிப்புணர்வு ஏற்படுத்துவரா அதிகாரிகள்

Posted: 03 Jun 2017 03:07 PM PDT

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் அடித்தளத்தில், சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து, அந்த கட்டடத்தையே மொத்தமாக இடிக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது. இங்கு மட்டுமல்ல, சென்னையில் பல அடுக்குமாடி கட்டடங்களில் நிகழ்ந்த தீ விபத்துக்களுக்கும், அடித்தள பகுதியில் நடந்த தவறுகளே பிரதானமாக உள்ளன.

சமீபகாலமாக, அதிக தளங்களுடன் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில், வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவைகளுக்காக, தரை தளத்திற்கு கீழே, 'ஸ்டில்ட்' எனப்படும், அடித்தளம் அமைக்கப்படுகிறது. அதேநேரத்தில், கட்டடத்தின் பல பகுதிகளின் பாதுகாப்பு விஷயங்களை துல்லியமாக ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™