Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)

Posted: 03 Jun 2017 09:40 AM PDT

வழக்கு! அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராக இருந்தபோது, ஒருநாள் பணக்காரர் ஒருவர் லிங்கனிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் ஐந்து டாலர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. பணக்காரர் விவரத்தைச் சொல்லி, வழக்குப் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ""வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப் போகிறீர்கள்?'' என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை. ""சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் கட்டணமாக நீங்கள் தர வேண்டும்'' ...

ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடந்த நிகழ்ச்சி.

Posted: 03 Jun 2017 09:36 AM PDT

ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடந்த நிகழ்ச்சி.நன்றி-தmerica TV

3D ஓவியங்கள் !

Posted: 03 Jun 2017 09:32 AM PDT3D ஓவியம்........

அமெரிக்காவில் சாதித்து காட்டிய 12 வயது இந்திய வம்சாவளி சிறுமி

Posted: 03 Jun 2017 06:36 AM PDT

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி அனன்னயா(12)  ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியின் பரபரப்பான இறுதி சுற்றில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இந்நிலையில் அனன்யா வாஷிங்டனில் நடைபெற்ற Cripps National Spelling Bee (1925 இல் ஆரம்பிக்கப்பட்ட்து) எனப்படும் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியில் பங்குபெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் அனன்யா, ஓக்லஹோமாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ரோஹன் ராஜீவ்வுடன் மோதியுள்ளார். அந்த நேரத்தில் ...

இதிலென்ன அதிசயம்!

Posted: 03 Jun 2017 03:23 AM PDT

காந்தி ஒருமுறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார். அவருடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரும் சென்றிருந்தனர். ""இங்கே ஜோக் ஃபால்ஸ் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம். அதைப் பார்க்கலாமே!'' என்றனர் அவர்கள். ""எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நீங்கள் போய்ப் பாருங்கள்'' என்றார் காந்தி. ""என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். நயாகராவைவிட மிக உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த அதிசயத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்'' என்றனர் அவர்கள். காந்தி சொன்னார், "இதிலென்ன ...

கவலைகள் எப்படி இருக்கும்?

Posted: 03 Jun 2017 12:45 AM PDT

விவேகானந்தரின் தந்தை இறந்தபோது வீட்டில் சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை. அப்போது ராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம்,""நீ கோயிலுக்குச் சென்று அன்னையிடம் முறையிடு. அவள் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள், கவலைப்படாதே!'' என்று கூறி தான் வாசற்படியில் அமர்ந்து கொண்டு அவரைக் கோயிலுக்குள் அனுப்பினார். பல மணி நேரம் கழித்து வெளியில் வந்தவரிடம், "முறையிட்டாயா?'' எனக் கேட்டார். விவேகானந்தர், "அடடா! அதை நான் மறந்தேவிட்டேன்'' என்றார். இவ்வாறே மூன்று நாட்கள் நடந்தது. இறுதியாக அவர் ...

வள்ளலா கருணை உள்ளம்

Posted: 03 Jun 2017 12:44 AM PDT

ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த சமயம், அவருடைய சொற்பொழிவைக் கேட்க அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடினார்கள். மாட்டு வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார் பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னால் அங்கு சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் மாட்டை அடித்து வேக வேகமாக ஓட்டி வந்தார். பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார், நுரை தள்ளியபடியே மூச்சிரைத்தப்படி நின்று கொண்டு இருந்த மாட்டைப் பார்த்தார். உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே சென்றார். அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, ...

உயர்ந்த உள்ளம்

Posted: 03 Jun 2017 12:41 AM PDT

ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார். அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் பாரதியார். அவர் சென்ற வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைப் பார்த்த பாரதியார் அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்தி விட்டார். துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் கண்ட நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். பாரதியார் நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் தெருவில் உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார். இந்தச் செயலைக் கண்டு உருகிய ...

முன்மாதிரி...

Posted: 03 Jun 2017 12:40 AM PDT

சர்.சி.வி.ராமன் பாரத் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். விருது பெற வரும்போது தனது சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். ஆனால், ""டாக்டர் பட்டம் பெற இருக்கும் எனது மாணவன் ஒருவனின் ஆய்வறிக்கையை நெறிப்படுத்தி உதவும் பணிக்கு அவருடன் தங்கவிருப்பதால், தங்கள் அழைப்பை என்னால் ஏற்க இயலாது'' என்று தெரிவித்துவிட்டார் ராமன். குடியரசுத் தலைவரின் விருந்தினராகும் கௌரவத்தைவிடத் ...

காலம்...

Posted: 03 Jun 2017 12:40 AM PDT

சிறந்த விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு புத்தகக்கடை நடத்தி வந்தார். அவருடைய கடைக்குப் புத்தகம் வாங்க வந்த ஒருவர், ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் விலை என்ன என்று கேட்டார். அதற்கு ஃப்ராங்க்ளின், ""ஒரு டாலர்...'' என்றார். வாடிக்கையாளர், புத்தகத்தின் விலையைக் குறைக்க 15 நிமிடங்கள் பேரம் பேசினார்... பொறுமையிழந்த பெஞ்சமின், ""புத்தகத்தின் விலை இப்போது ஒன்றரை டாலர்'' என்றார். அதிர்ச்சியுற்ற அந்த மனிதர், ""நான் புத்தகத்தின் விலையைக் குறைக்க முயற்சிக்கிறேன்... ...

நாணயம்!

Posted: 03 Jun 2017 12:39 AM PDT

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. "தேசபக்தன்' என்னும் தின தழை நடத்தி வந்தார். அந்தச் சமயத்தில் திரு.வி.க.வும் பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தனர். தேசபக்தன் இதழுக்கு நிதி உதவியாக, தம்முடைய பங்காக ரூபாய் ஆயிரம் அனுப்பியிருந்தார் பெரியார். இச்செய்தியை ""பெரியார் இராமசாமி நாயக்கர் ஆயிரம் ரூபாய் அளித்தார்'' என்று தேசபக்தனில் வெளியிட்டார் திரு.வி.க. அதைப் படித்த பெரியார், திரு.வி.க.வுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்- ""நான் ஆயிரம் ரூபாய் அளித்ததாக வந்திருப்பதிலே ஒரு திருத்தம் ...

ஆலயம் செல்!

Posted: 03 Jun 2017 12:38 AM PDT

் புக்கர் டி.வாஷிங்டன், புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும் எழுத்தாளராக இருந்தவர். இவர் பிரபலமாவதற்கு முன்னர், ஓர் ஆலயத்துக்குச் சென்றார். அவர் கருப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள் விட மறுத்தனர். "நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கடவுள் எனக்குச் சொல்வார்...'' என்று கூறிவிட்டுத் திரும்பினார். ஆண்டுகள் பல கடந்தன... புக்கர் டி.வாஷிங்டன் புகழ்மிக்க எழுத்தாளரானார். மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார். அப்போதும் அவரை உள்ளே செல்ல ...

மகனுக்கும் சலுகை கிடையாது...!!

Posted: 03 Jun 2017 12:32 AM PDT

- மொரார்ஜி தேசாய் - ---------------------------------- முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தந்தை ஆசிரியராக வேலை பார்த்தவர். அவர் வீட்டிலிருக்கும்போது ஒருமுறை கூட மொரார்ஜிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது கிடையாது. ""உனக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தால், மற்ற மாணவர்களைவிட உன்னை அதிகமாகக் கவனிக்கிறேன் என்று அர்த்தமாகும். என்னுடைய மாணவர்களுக்கிடையே பேதம் கற்பிக்கவோ ஒருவனுக்கு மட்டும் அதிக சலுகை காட்டவோ நான் தயாராக இல்லை. அதனால் வீட்டில் என்னிடம் பாட சம்பந்தமாக ...

Madisaar Maami 2017 !

Posted: 02 Jun 2017 11:20 PM PDT

எப்பூடி...

Posted: 02 Jun 2017 10:40 PM PDT

முல்லா கதை.

Posted: 02 Jun 2017 10:28 PM PDT

உடன் இருத்தல்…!! " எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? " என்று பிரசவ வலியில் இருந்த மேரி, டாக்டரிடம் கேட்டாள். " ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…" என்று டாக்டர் பதிலளித்தார். " எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… " என்று சொன்னாள் மேரி. ஆதாரம் ; ஓஷோவின் – " கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி " நூல் பக்கம் ...

அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...

Posted: 02 Jun 2017 08:19 PM PDT

மரணம்: அறிவுடைய சிலர்தாம் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அதற்காக அஞ்சுவதோ, வருந்துவதோ அறியாமை என்று யதார்த்தமாக எடுத்துக்கொண்டு கிடைத்த வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள். பெரும்பாலான மனிதர்களை மரண பயம் ஆட்டிப் படைக்கிறது. மரணத்துக்கு அஞ்சுகிறவன் வாழ்க்கையை இழந்துவிடுகிறான். மரணம் என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல என்று அறிவதே ஞானம். வாழ்க்கையைப் போலவே மரணமும் ஓர் உண்மை. மரணம் என்பது முடிவு அல்ல, நிறைவு. மரணம் இல்லையென்றால் வாழ்க்கை பரிபூரணமடையாது. என் சுமைகளைச் சமாதியில்தான் இறக்கி ...

பொது அறிவு தகவல்

Posted: 02 Jun 2017 06:31 PM PDT

ஒரு குடும்பம் இரு மாநிலம்

Posted: 02 Jun 2017 06:29 PM PDT


-

சம்பந்திகள்

Posted: 02 Jun 2017 06:23 PM PDT

அக்காள் - சிறுவர் பாடல்

Posted: 02 Jun 2017 06:12 PM PDT


-
சுட்டி மயில்

இன்ப மலேசியா - சிறுவர் பாடல்

Posted: 02 Jun 2017 06:10 PM PDT


-

-
சுட்டிமயில்

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி

Posted: 02 Jun 2017 05:54 PM PDT

இளங்கோவடிகள்

Posted: 02 Jun 2017 05:14 PM PDT


--
சுட்டிமயில்

விடுகதைகள்

Posted: 02 Jun 2017 05:11 PM PDT


---

மகிழுந்தில் என் பயணம் - சிறுவர் பாடல்

Posted: 02 Jun 2017 05:06 PM PDT


-


சுட்டிமயில்

நேர்பட வாழ் – கவிதை

Posted: 02 Jun 2017 05:04 PM PDT


-
சுட்டிமயில்

முதலில் பயணச்சீட்டு பின்னர் கட்டணம்

Posted: 02 Jun 2017 05:03 PM PDT

புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு இன்டர்நெட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் பின்னர் தங்களது கட்டணத்தை செலுத்தும் வகையிலான புதிய வசதியை ஐஆர்சிடிசி செய்து தர உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஐஆர்சிடிசி இணைய தளத்தின் மூலம் இ-டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் 14 நாட்களுக்கு பிறகு 3.5 சதவீத சேவை கட்டணத்துடன் பயண சீட்டு கட்டணத்தை செலுத்தலாம். இதற்காக பயணிகள் தங்களது இமெயில், மொபைல் எண், பான் எண், ஆதார் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டியிருக்கும் என்றனர். – ——————————— தினகரன்

அழகு – சிறுவர் பாடல்

Posted: 02 Jun 2017 05:01 PM PDT


-

-
சுட்டிமயில்
படம் - இணையம்

தென்மேற்குபருவமழை துவங்கியதை தொடர்ந்து

Posted: 02 Jun 2017 04:30 PM PDT

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலை மற்றும் தென்மேற்குபருவமழை துவங்கியதை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை , காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், குந்தாரபள்ளி, வெப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் மழை பெய்தது. மேலும் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை,காரப்பட்டு, சாமல்பட்டி, பாம்பாறு,ஆகிய பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™