Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

Posted: 28 Jun 2017 09:45 AM PDT

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், எதிர்க் கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ள, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், 72, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

''சித்தாந்தங்களுக்கு இடையே நடைபெறும் இந்தத் தேர்தலில், அனைத்து கட்சியினரும் தங்களுடைய மனசாட்சிபடி ஓட்டளிக்க வேண்டும்,'' என, அவர் கோரிக்கை விடுத்துள் ளார். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சி வேட்பாளர், மீரா குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் ...

'ரேஷன் அரிசி, கோதுமை விலையை ஓராண்டுக்கு உயர்த்த மாட்டோம்'

Posted: 28 Jun 2017 09:53 AM PDT

புதுடில்லி: ''தேசிய உணவு பாதுகாப்பு சட்டத் தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப் படும் அரிசி, கோதுமை, தானியங்களின் விலை, ஓராண்டுக்கு உயர்த்தப்படாது,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

மானிய விலை : கடந்த, 2013ல் கொண்டு வரப்பட்ட, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொருவருக்கும் தலா,5 கிலோ உணவு தானியங்கள், மானிய விலையில் வழங்கப்படு கின்றன.1 கிலோ அரிசி,மூன்று ரூபாய்; 1 கிலோ கோதுமை,இரண்டு ரூபாய்;1 கிலோ தானியங்கள், 1 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இந்த சட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, விலையை மாற்றி அமைக்க முடியும். ...

'பான்' கார்டுக்கு ஆதார் கட்டாயம் : ஜூலை 1 முதல் அமலுக்கு வருது

Posted: 28 Jun 2017 09:59 AM PDT

புதுடில்லி: வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய பான் கார்டுக்கு, ஆதார் எண் குறிப்பிடுவதை, ஜூலை, 1 முதல் கட்டாயமாக்கும் முறையான அறிவிப்பை, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

பார்லியில் நிறைவேற்றம் : வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். புதிய பான் கார்டு வாங்குவதற்கும், ஆதார் எண்ணை குறிப் பிட வேண்டும். வரும், ஜூலை, 1 முதல் இது கட்டா யமாக்கப்படுகிறது. இதற்காக, வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பார்லி மென்ட்டில் நிறைவேறியது. ...

தினகரன் கோஷ்டிக்கு பழனிசாமி அணி பதிலடி!

Posted: 28 Jun 2017 10:05 AM PDT

முதல்வர் பழனிசாமிஆதரவு, எம்.எல்.ஏ.,க் களுக்கும், தினகரன்ஆதரவு, எம்.எல்.ஏ.,க் களுக்கும் இடையே, மோதல் அதிகரித்து வருகிறது.

அ.தி.மு.க., - சசிகலா அணியானது, தற்போது பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக பிளவுபட்டு உள்ளது. தினகரனுக்கு ஆதரவாக, எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், தங்க தமிழ்செல் வன் ஆகியோர், குரல் கொடுத்து வருகின்றனர்.'ஜனாதிபதி தேர்தலில், சசிகலா ஒப்புதலுடன், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். இதற்கு, எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், அரி, எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு ...

'குட்கா' விவகாரம் பற்றி பேச அனுமதி மறுப்பு : சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Posted: 28 Jun 2017 10:06 AM PDT

சென்னை: 'குட்கா' உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையாளர்களிடம், லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து, சட்டசபையில் பேச, எதிர்க்கட்சிகள் முயன்றன. அதற்கு, சபாநாயகர் அனுமதிக்காததை கண்டித்து, எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த தும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, ''2016 ஜூலை, 8ல் தடை செய்யப்பட்ட, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்களிடம், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்,'' என, பேசியதும், சபா நாயகர் தனபால் குறுக்கிட்டு, நீங்கள், என்னிடம் கடிதம் கொடுத்தீர்கள்; அது, என் ...

ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்

Posted: 28 Jun 2017 10:14 AM PDT

தமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 53 கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். மொத்தம், 2,720 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. தமிழகத்தில், 2,009 பேர் மட்டுமே, 'நாட்டா' என்ற தேசிய அளவிலான, ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும், பி.ஆர்க்., சேருவர் என, கூற முடியாது. அதனால், பி.ஆர்க்., படிப்பில், 1,000 இடங்கள் வரை காலியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், ...

மோடியை ஹிந்தியில் வரவேற்று நெதர்லாந்து பிரதமர் அசத்தல்

Posted: 28 Jun 2017 10:16 AM PDT

புதுடில்லி: அரசு முறைப் பயணமாக, நெதர் லாந்து சென்ற, பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட், ஹிந்தி மொழியில், 'டுவிட்' செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போர்ச்சுகல், அமெரிக்கா, மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட, பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை முடித்து நாடு திரும்பினார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து சென்ற மோடிக்கு, அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. மோடியை வரவேற்று, டுவிட்டரில், ஹிந்தி மொழியில்பதிவிட்ட, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்,அவர் நாடு திரும்பிய பின், அவரின் ...

பார்லிமென்ட்டில் நாளை ஜி.எஸ்.டி., அறிமுக விழா நள்ளிரவு!

Posted: 28 Jun 2017 10:38 AM PDT

புதுடில்லி:ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

இதன் அறிமுக விழா பார்லிமென்ட்டின் மைய மண்டபத்தில் நாளை இரவு நடக்கிறது. இதற் கான ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் 'அனைத்து எம்.பி.,க்களும் இதில் பங்கேற்க வேண்டும்' என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.ஜூலை, 1 முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்டி., அமலுக்கு வருகிறது. புதிய வரி விதிப்பு முறைக்கு மாநிலங்கள், தொழில் துறையினர், வணிகர்கள் என பல்வேறு ...

7வது சம்பள கமிஷன் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 28 Jun 2017 10:52 AM PDT

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்த வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட முக்கிய அம்சங்க ளுக்கு சில திருத்தங்களுடன் மத்திய அமைச் சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேர் பலனடைவர்.இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. குறிப்பாக எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி ...

ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் தர திட்டம்

Posted: 28 Jun 2017 12:08 PM PDT

ரேஷனில் மக்கள் ஏமாறுவதை தடுக்க சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரிசி கார்டுதாரருக்கு அதிகபட்சமாக இரண்டு கிலோ; சர்க்கரை விருப்ப கார்டுதாரருக்கு மூன்று கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.
ரேஷனில் சர்க்கரை விலை குறைவு என்பதால் அரிசி வாங்காதவர்களும் சர்க்கரை மட்டும் வாங்குகின்றனர்.ஆனால் கடை ஊழியர்கள் எடையில் முறைகேடு செய்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் மக்கள் ஏமாறுகின்றனர். எனவே சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க உணவு ...

பெட்ரோல்,டீசல் விலை இன்று (ஜூன்-28) எவ்வளவு?

Posted: 28 Jun 2017 01:03 PM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 29) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட எந்த மாற்றமும் இன்றி ரூ.65.90 காசுகள், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.56.38 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூன் -29) காலை 6 ...

நதிநீர் இணைப்புக்கு முயற்சி : ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

Posted: 28 Jun 2017 01:54 PM PDT

அவனியாபுரம்: ''நதி நீர் இணைப்பு குறித்து பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பத்தாண்டுகள், மன்மோகன் அமைச்சரவையில், பதவி வகித்த போது ஏன் முயற்சி செய்யவில்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் மேலும் அவர் கூறியதாவது: போதைப்பொருளை ஒழிக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுக்கிறது. ஆனால் செங்குன்றம் அருகே போதைப் பொருள் கோடவுன்
கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர், டி.ஜி.பி.க்கள் மீது வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.திருச்சி விமான நிலையத்தில், 75 கோடி ரூபாய் ...

'பேஸ்புக்' பயன்படுத்துவோர் 200 கோடியை எட்டியது

Posted: 28 Jun 2017 02:47 PM PDT

சான்பிரான்சிஸ்கோ: உலகம் முழுவதும், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 200 கோடியை எட்டி உள்ளதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
கடந்த, 2004ல், மூன்று நண்பர்களுடன் இணைந்து, அமெரிக்க கல்லுாரி மாணவர்களுக்காக, 'பேஸ்புக்' என்னும் சமூக வலைதளத்தை, மார்க் ஜுக்கர்பெர்க் துவங்கினார். முதல் ஆண்டிலேயே இந்த வலைதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியது.
இந்நிறுவனம், 13 ஆண்டுகளில், 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™