Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புதிய கல்வி கொள்கையை உருவாக்க குழு..! கஸ்தூரிரங்கன் தலைமையில் நியமனம்

Posted: 26 Jun 2017 09:31 AM PDT

நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி, கே.கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் உடைய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.

நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்பது உறுப்பினர்கள் உடைய குழுவை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
100 சதவீதம்
இந்த குழுவுக்கு, விண்வெளி விஞ்ஞானியும், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ...

'பரோல்' அல்லது ஜாமின் கவர்னரிடம் கர்ணன் மனு

Posted: 26 Jun 2017 09:35 AM PDT

கோல்கட்டா: கோர்ட் அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, கோல்கட்டா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி, சி.எஸ்.கர்ணன், தனக்கு ஜாமின் அல்லது 'பரோல்' அளிக்கக் கோரி, மேற்கு வங்க கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த கர்ணனுக்கு, கோர்ட் அவமதிப்பு வழக்கில், ஆறு மாத சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் விதித்திருந்தது.தலைமறைவாக இருந்தகர்ணன், சமீபத்தில், தமிழகத்தின் கோவையில் கைது செய்யப்பட்டார். ...

பொது செயலர் யார் என்பதை தெளிவுபடுத்துங்க! முதல்வருக்கு தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி

Posted: 26 Jun 2017 10:04 AM PDT

'முதல்வர் பழனிசாமி மவுனம் காக்காமல், கட்சியின் பொதுச் செயலர் யார் என்பதை, தெளிவுபடுத்த வேண்டும்; இல்லாவிட்டால், பொறுத்திருக்க மாட்டோம்' என, தினகரன் ஆதரவாளர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். இது, அ.தி.மு.க., சசிகலா அணியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரு பிரிவுகள் உருவாகி, அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பேட்டி அளித்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன் தான், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு ...

தமிழக உற்பத்தி துறை வீழ்ச்சி; அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Posted: 26 Jun 2017 10:05 AM PDT

சென்னை: ''ஊழலில் திளைக்கும், குதிரை பேர பினாமி ஆட்சியால், தமிழகத்தில் உற்பத்தித் துறை, வீழ்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டது,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பின்னோக்கி செல்கின்றன
அவரது அறிக்கை:
'தமிழக உற்பத்தித் துறை, 2016 - 17ல், மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது' என,
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், தொழில் வளர்ச்சியும், முதலீடுகளும், பின்னோக்கி செல்கின்றன என்பதற்கு, இந்த அறிக்கை முக்கியசான்று.
'தொலை நோக்கு திட்டம் - 2023' அயர்ந்து ...

விஜிெலன்ஸ் கமிஷன் அறிவிப்பால் தனியார் வங்கியினர் 'வெலவெல!'

Posted: 26 Jun 2017 10:20 AM PDT

புதுடில்லி: தனியார் வங்கி தலைவர்கள், மேலாண் இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, சி.வி.சி., எனப்படும், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் விசாரிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், தனியார் வங்கி அதிகாரிகள், சி.வி.சி., கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர்.

மத்திய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை, விஜிலென்ஸ் கமிஷன் எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்கிறது. மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழல் நடக்காமல் தடுக்கும் கண்காணிப்பு பணியிலும், சி.வி.சி., ...

'சர்ஜிகல் ஸ்டிரைக்' நியாயம் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன

Posted: 26 Jun 2017 10:26 AM PDT

வாஷிங்டன்: ''அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும், துல்லியமான தாக்குதல் நடத்தி அழித்த நம் நடவடிக்கை நியாயமானது என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. அதனால் தான் யாரும் அது குறித்து கேள்வி எழுப்பவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். வாஷிங்டனின் புறநகர் பகுதியான விர்ஜினியாவில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே உரையாற்றினார்.
பிரதமர் மோடி ...

கேடு விளைவிக்கும் மசூர் பருப்பு; ரூ.144 கோடிக்கு வாங்க அரசு முடிவு

Posted: 26 Jun 2017 10:58 AM PDT

ரேஷனில் வழங்குவதற்காக, உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய, மசூர் பருப்பை, 144 கோடி ரூபாய்க்கு வாங்க, நுகர்பொருள் வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 1 கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்போது, துவரம் பருப்புக்கு பதில், கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது. தற்போது, உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய மசூர் பருப்பை வாங்க, வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு, மசூர் பருப்பு என, ஏதேனும் ஒன்றை, 30 ஆயிரம் டன் வாங்க, வாணிப கழகம், ...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜினாமா செய்வாரா?

Posted: 26 Jun 2017 11:07 AM PDT

பாலில் ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்படாததால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராஜினாமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள், பாலில் ரசாயனம் கலப்பதாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது, தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக,சென்னை உயர் நீதி மன்றத்தில், தொடரப்பட்ட பொது நல வழக்கில், தமிழக சுகாதாரத் துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்ய வேண்டும்
அதில், 'தனியார் நிறுவனங்களின் பாலில், உயிருக்கு தீங்கிழைக்கும், வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லை' என, ...

பெட்ரோல்,டீசல் விலை இன்று(ஜூன் 26) எவ்வளவு?

Posted: 26 Jun 2017 11:32 AM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.89, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 27) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட11காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.65.89 காசுகளுக்கும், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.56.38 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த ...

ஹிஸ்புல் தலைவனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவிப்பு

Posted: 26 Jun 2017 11:54 AM PDT

வாஷிங்டன்: ஹிஸ்புல் அமைப்பின் தலைவன் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்- பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சில மணி நேரங்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து, அதற்கு பின்புலமாக இருந்து வந்த, பயங்கரவாத தலைவன் சையத் ...

சபரிமலை கொடிமரத்தை சேதப்படுத்திய 5 பேர் கோர்ட்டில் ஆஜர் சதித்திட்டம் இல்லை என கேரள போலீஸ் முடிவு

Posted: 26 Jun 2017 12:21 PM PDT

சபரிமலை, சபரிமலை கொடிமரத்தில் பாதரசம் ஊற்றி சேதப்படுத்திய ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் சதித்திட்டம் இல்லை என்ற முடிவுக்கு கேரள போலீசார் வந்துள்ளனர்.

சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் நிறுவப்பட்டு நேற்று முன்தினம் பிரதிஷ்டை நடைபெற்றது. இது முடிந்ததும் ஏராளமான பக்தர்கள் கொடி மர பீடத்தை தொட்டு வணங்கினர். இந்த நேரத்தில் யாரோ பீடத்தில் பாதரசத்தை ஊற்றினர். இதனால் அந்த பகுதியில் தங்கத்தின் நிறம் மாறியது. இதை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பம்பையில் வாகனங்கள் தணிக்கை ...

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

Posted: 26 Jun 2017 01:00 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு சென்றார். அதிபர் டிரம்ப், மோடியை வாயிலுக்கு வந்து வரவேற்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை சந்திப்பதற்காக அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையான வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மனைவியுடன் வெள்ளை மாளிகையின் வாயிலுக்கு வந்து, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார்.
தொடர்ந்து ...

மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை: டிரம்ப்

Posted: 26 Jun 2017 01:50 PM PDT

வாஷிங்டன்: ‛மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை சேர்க்கிறது' என அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெருமை:
இதுகுறித்து டிரம்ப் தெரிவித்ததாவது: மோடியின் வருகை அமெரிக்காவிற்கு பெருமை சேர்க்கிறது. பொருளாதாரத்தில் முக்கிய பணி செய்து வெற்றி கண்டவர் மோடி. இந்தியா ராணுவ உபகரணங்கள் வாங்கியதற்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ‛எனக்கு அளித்த வரவேற்பு, 125 கோடி இந்தியர்களுக்கும் ...

‛இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரறுப்போம்': டிரம்ப்-மோடி சபதம்

Posted: 26 Jun 2017 03:19 PM PDT

வாஷிங்டன்: ‛இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா- அமெரிக்கா அரசு இணைந்து பாடுபடும்' என டிரம்ப்-மோடி இருவரும் தெரிவித்துள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில் நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்கள் மத்தியில், பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் பேட்டியளித்தனர்.
இரக்கம் இல்லை:
டிரம்ப் பேசியதாவது:
இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன். இருநாடுகளுக்கிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. இஸ்லாமிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™