Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்

Posted: 26 Jun 2017 04:00 PM PDT

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி' பயங்கரம் ''சென்னையைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தலைவிக்கு, தெரியாத எண்ணில் இருந்து தொடர் மொபைல் அழைப்பு. 'நீங்க இன்னிக்கு ரெட் கலர் புடவையில சூப்பரா இருந்தீங்க', 'வெள்ளை சுடிதாரில் நீங்க தேவதை மாதிரி இருந்தீங்க', 'இன்னிக்கு ஏன் டல்லா இருக்கீங்க?', 'ஒருநாள்கூட உங்களைப் பார்க்காம என்னால் இருக்க முடியல' என்று அந்த எண்ணில் வழிந்த ஆண் குரல் இவர் நிம்மதியைப் பறிக்க, கணவரிடம் விஷயத்தைச் சொல்லி, தம்பதி காவல் நிலையம் சென்றனர். சைபர் க்ரைம் செல்லில், அவர்கள். குழந்தை படிக்கும் ...

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Posted: 26 Jun 2017 01:53 PM PDT

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர். உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். மாதவிடாய் ஏற்படும் ...

தமிழ்நாட்டில் கூகுள்?

Posted: 26 Jun 2017 01:14 PM PDT

தமிழ்நாட்டில் கூகுள்? சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில் பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம் தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்... கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. ...

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.

Posted: 26 Jun 2017 12:05 PM PDT

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா. நாவினால் வாழ்த்தவா பாவினால் வாழ்த்தவா "நா"வும் "பா"வும் பட்டிமன்றம்  நடத்த ,..... நடுவர், "தி .நா. பா".வின் உள்மனமோ "நாவினால் வாழ்த்தினால் செவிதனை அடையாது பாவினால் வாழ்த்தினால் பார்வையிலும் படாதேன பூவினால் வாழ்த்து, புவிதனை மாற்று " எனக்  கூற, பூச்செடி இரெண்டு வீடு தேடி வர பிறந்த நாளாம்  இன்று புத்துயிர் கொடுத்தோம் அவற்றிற்கு. மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா. செடி ...

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?

Posted: 26 Jun 2017 10:25 AM PDT

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்? சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை. இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய ...

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு

Posted: 26 Jun 2017 09:38 AM PDT

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு உச்ச நீதிமன்ற உத்தரவால் சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தனக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்குமாறு மேற்கு வங்க ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து தலைமறைவான கர்ணன், தலைமறைவு காலத்திலேயே பணி ஓய்வு பெற்றார். அவரை மேற்கு வங்க போலீஸார் ...

நாவல்கள்தலைப்பு

Posted: 26 Jun 2017 08:31 AM PDT

ஐயா

எனக்கு தேவை சேரர் பற்றி என்ன தலைப்பு கதைகள் புத்தகங்கள் உள்ளன.
உதாரணம் :பொன்னின் செல்வன் -சோழர்சிவகாமியின் சபதம்- பல்லவர்.
போன்ற சேர சோழ பாண்டியர் மற்றும் பல்லவரின் தமிழ் வரலாற்று நாவல்கள்தலைப்பு மற்றும் அதன் ஆசிரியர் தேவை.

நன்றி

ராம்

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012

Posted: 26 Jun 2017 08:01 AM PDT

ஆனந்த விகடனில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆண்டி வாரியாக தொகுத்துள்ளேன்

விகடன் சிறுகதைகள் 2011
https://db.tt/h089pRZ8

விகடன் சிறுகதைகள் 2012
https://db.tt/8IrnaiDd

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?

Posted: 26 Jun 2017 05:47 AM PDT

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே? – கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகப் போறாராம்…! – சிவகுமார் – —————————————- – எனக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லை …! – நல்லா ஆ காட்டுங்க பார்க்கலாம்…? – தீபிகா சாரதி – ————————————– – என்னடா, நீ தினமும் எடுத்து வரும் சாப்பாட்டுலே கூந்தல் முடி இருந்துகிட்டே இருக்கே…யார் சமைச்சது! – என் மனைவிதான் …. நான்தான் அப்பவே சொன்னேன்ல, என் மனைவி சமையல்ல 'பின்னுவா'ன்னு! – ரமேஷ்பாபு – ————————————— குமுதம்

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?

Posted: 26 Jun 2017 05:45 AM PDT

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா? – ஆமா டூ பீஸ் மட்டும் போட்டுத் தருவாங்க…! – கு.வைரச்சந்திரன் – ————————————- – அடியே! இந்த ஷாம்புல நுரையே வரலியே? – போதையில் டொமோட்டோ சாஸ் பாக்கெட்டை எடுத்துட்டுப் போயிட்டியா? – அஜித் – ————————————— – ராப்பிச்சை! திருவோட்டு அடில என்ன அது? – டிராவல் சார்ஜர் தாயீ…! – அம்பை தேவா – ———————————— – டாக்டர் என் கணவர் சிம்கார்டை தெரியாம முழுங்கிட்டாரு! – பேச முடியுதா? – பேச முடியும் டாக்டர்….நிறைய பேலன்ஸ் இருக்கு…! – வி.சாரதிடேச்சு – ————————————– குமுதம்

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்

Posted: 26 Jun 2017 05:10 AM PDT

- 1980-களில் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி 1978-ம் ஆண்டு 'சமயமாயில்லா போலும்' என்ற படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் கொடி கட்டிப் பறந்தார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990 வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடிகை அம்பிகா அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடு பட்டார். தற்போது ...

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!

Posted: 26 Jun 2017 04:58 AM PDT

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!

Posted: 26 Jun 2017 04:56 AM PDT

- எனக்கு தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சுடுவேன்...! - பாகவதரே...அப்படி எல்லாம் செய்யாதீங்க... நீங்க பாட ஆரம்பிச்சா தனிமை தானா கிடைக்கும் ....பில்டப்பை பாரு பில்டப்பை..!! - வேல் அரவிந்த் - ---------------------------------------- ஏன்டா திரும்பி வந்துட்டே? - எதிரிலே ஏணி எடுத்துட்டு வந்தாம்மா... அது நல்ல சகுனம் இல்லைன்னு சொல்லுவியே...! - அது அந்தக் காலம். இந்தக் காலத்துல எதிரில் ஏணி எடுத்துட்டு வந்தா வெற்றி நிச்சயம்னு- முன்னேற்றம்னு நினைச்சிக்கணும் தெரியுமா...! - -------------------------------------

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –

Posted: 26 Jun 2017 04:42 AM PDT

புலவரே…என் செல்போன் எண்ணைக் கேட்கறீரே, ஏன்? – மன்னா! அடிக்கடி என்னாலே அரண்மனைக்கு அலைய முடியலை! செல்போன்ல உங்களைப் புகழ்ந்து பாடிடுறேன். பரிசுப் பணத்தை என் பேங்க் அக்கவுண்ட்ல ஏற்றி விட்டுடுங்க! – கு.அருணாசலம் – ——————————————— – செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! – அப்படியா? – நல்லாருக்குன்னுதானே சொல்றேன். அப்புறம் ஏன் முறைக்கிறே? – அது கோதுமை தோசை..! – ஜெயக்குமார் – ————————————– – என்னது, நீ பண்றது பினாமி லவ்வா? – ஆமா…என் ஃப்ரண்ட் பிஸியா இருக்கா… அவளுக்குப் ...

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு

Posted: 26 Jun 2017 04:41 AM PDT

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!

Posted: 26 Jun 2017 04:36 AM PDT

- மும்பையில், ஆண்டுதோறும் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி நடைபெற்றுவருகின்றன. இந்த ஆண்டும் 54-வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டத்தைக் கைப்பற்றினார். மருத்துவ மாணவியான இவர் , 30 மாநிலங்களிலிருந்து வந்த போட்டியாளர்களை வென்று, பரிசைத் தட்டினார். இதற்கு அடுத்ததாக, ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த சனா தூவா இரண்டாம் பரிசையும், பீகாரைச் சேர்ந்த பிரியங்கா குமார் மூன்றாம் பரிசையும் வென்றனர். – ——————————— விகடன்

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!

Posted: 26 Jun 2017 04:35 AM PDT

- கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை, சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நாட்டிலேயே அதிக பட்சமாக கொச்சி மெட்ரோ நிறுவனத்தில்தான் 21 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால், கொச்சி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கிய ஒரு வாரத்துக்குள், எட்டு திருநங்கைகள் பணியை ராஜினாமா செய்துவிட்டனர். கொச்சி நகரில் தங்குவதற்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதால், அவர்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். – மாவட்ட ஆட்சியர், கொச்சி மேயர் ஆகியோரிடம் திருநங்கைகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ...

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை

Posted: 26 Jun 2017 04:33 AM PDT

- டெல்லி, மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மேற்கிந்தியா தீவுகள் டாசில் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் 43 ஒவர்களாக குறைக்கப்பட்டது. இந்தியா தரப்பில் ரகானே 103 ரன்களும் விராத் கோலி 87 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. பின்னர் ...

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 26 Jun 2017 03:33 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

காலண்டர் பொன்மொழிகள்

Posted: 26 Jun 2017 02:16 AM PDT


-

அனுபவம் நல்ல ஆசான்.

பயத்தை வெல்லாதவன் வாழ்வின் முதல் பாடத்தையே கல்லாதவன்.

வதந்தி ஆயிரம் நாக்குடன் கூடிய இரும்பின் குரல்.

வெட்கம்,தயக்கம்,வெறுப்பு உள்ளவன் மேன்மை அடைய முடியாது.

சிலர் பிறரைப்பார்த்து கற்பர்,சிலர் ஏமாந்தபின் கற்பர்.

ரமலான் நல் வாழ்த்துக்கள்!

Posted: 26 Jun 2017 12:38 AM PDT

பசி தாகம் இச்சை அடக்கி!
ஆசையுலகில் அன்பையிருத்தி!
சொல்லில் செயலில் கருணையுயர்த்தி!
அல்லும் பகலும் உழைப்பை பொருத்தி!
இறையின் வழியில் நோன்பை உணர்த்தி!
மறையின் முறையில் வாழ்வை நிறுத்தி!
இம்மை மறுமை இன்பம் செலுத்தி!
தம்மை உணரும் மெய்யை வருத்தி!
பிறையினை கண்டு குறையினை களைவோம் !
வரைமுறை இன்றி வாழ்த்துக்கள் பறைவோம்!

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 26 Jun 2017 12:34 AM PDT

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

ஆண்களின் வாழ்க்கை தேடல்..

Posted: 25 Jun 2017 10:11 PM PDT--
செருப்புதான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று
வாழவே வாழாது
-
மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!!
வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட
தலையில கட்டப்படும்!!
-

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு

Posted: 25 Jun 2017 07:52 PM PDT

ரிட்ஸ் கார்ல்டான் : இந்தியாவில் ஜி.எஸ்.டி அமலாகும் போது எதிர்காலத்தில் அமெரிக்காவின் வணிக பள்ளிகளில் பாடமாக உருவாகும் என கூறினார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை (ஜூன்-26) திங்கட்கிழமை அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். இன்று(ஜூன்-25) இரவில் 20 முன்னணி கார்ப்பரேட் நிறுவன தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இக்கூட்டத்தில்,ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக், வால்மார்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ., ...

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி

Posted: 25 Jun 2017 07:39 PM PDT

புதுடில்லி: வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோனால், அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது என ரிசர்வ்வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கூறியுள்ளன. தகவல் அறியும் சட்டம்: இது குறித்து வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி மற்றும் 19 பொதுத்துறை வங்கிகள் அளித்த பதில்: வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் லாக்கர் தொடர்பாக உள்ள உறவானது, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற அடிப்படையில் உள்ளது. இது போன்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™