Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜனநாயகத்தை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!

Posted: 25 Jun 2017 10:27 AM PDT

புதுடில்லி: ''நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான, கறுப்பு நாளாக, 'எமர்ஜென்சி' எனப்படும், அவசர நிலை அறிவிக்கப்பட்ட நாள் அமைந்துள்ளது; ஜனநாயகம் என்பது நமது பாரம்பரியம், அது பாதுகாக்கப்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மன் கீ பாத்' என்ற பெயரில், ரேடியோ மூலம், நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். நேற்று ஒலிபரப்பான, மன் கீ பாத் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
திறந்தவெளி சிறை
கடந்த, 1975, ஜூன், 25ம் தேதி, நம் வரலாற்றில் மிகவும் மோசமான, கறுப்பு தினமாக அமைந்து விட்டது. ...

நடுநிலை தவறினாரா மீரா குமார்? சுஷ்மா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Posted: 25 Jun 2017 10:39 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி கள் களமிறக்கி உள்ள, மீரா குமார், 2013ல், லோக்சபா சபாநாயகராக இருந்தபோது, தன் பேச்சில் அடிக்கடி குறுக்கிட்ட வீடியோவை, மத்திய வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

முன்னாள் சபாநாயகர்ஜனாதிபதி தேர்தல், வரும், ஜூலை, 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி வேட்பாளராக, ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக, காங்., மூத்த தலை வரும், லோக்சபா முன்னாள் சபாநாயகருமான, மீரா குமார் களமிறங்கி உள்ளார்.இந்நிலையில், மீரா குமாரின் ...

லாக்கர் பொருள்: வங்கிகள் கைவிரிப்பு

Posted: 25 Jun 2017 10:42 AM PDT

புதுடில்லி:'வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு, வங்கிகள் பொறுப்பேற்காது' என்பது, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

திருட்டு, தீ விபத்து உள்ளிட்டவற்றில் இருந்து, நகைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க, வாடிக்கையாளர்கள், வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கரில், அவற்றை வைக்கின்ற னர். ஆனால், இந்த லாக்கரில் வைக்கப்படும் பொருட்கள், திருடப்பட்டால், தீவிபத்து உள்ளிட்ட விபத்துகளால் சேதமடைந்தால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது. இது குறித்து டில்லி யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தகவல் அறியும் உரிமை ...

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

Posted: 25 Jun 2017 11:09 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ராம்நாத் கோவிந்த், 62 சதவீத ஓட்டுகளுடன் அபார வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்காமல் மவுனம் காத்திருக்கும் நிலையில், ஆதரவு திரட்டுவதற்காக, ராம்நாத் கோவிந்த் நாடு தழுவிய சுற்றுப் பயணத்தை துவக்கியுள்ளார்.புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம், 17ல் நடக்கவுள்ளது.பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ...

நிலம் கையகப்படுத்துதல் சட்ட வரைவு விதிகள் வெளியீடு

Posted: 25 Jun 2017 11:12 AM PDT

அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது அதனால் பாதிக்கப்படுவோருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 'வெளிப்படை யானநிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்வு சட்டம் - 2013'ஐ, மத்திய அரசு நிறைவேற்றியது.

இதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி விதிகளை மத்திய ஊரக வளர்ச்சித்துறை தயாரித்து மாநில அரசுகளுக்கு அனுப்பியது. தமிழகத்தில், இந்த விதிகள் அமலுக்கு வராததால், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு, நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில் மத்திய அரசின் நிலம் கையகப் படுத் துதல்சட்டத்தை ...

டிரம்ப் - மோடி சந்திப்பு: விசா பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

Posted: 25 Jun 2017 11:15 AM PDT

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக, இந்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப். 'அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்ற கோஷத்துடன், அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால், அமெரிக்காவில் வேலை பார்ப்ப தற்காக செல்லும் இந்தியர்களுக்கான, எச் - 1பி விசா முறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், சீனாவுடன், டிரம்ப் நிர்வாகம் நெருக்கமாக உள்ளது.அதனால், முன்னாள் அதிபர், ஒபாமா நிர்வாகத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையே இருந்த நெருக்கமான உறவு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ...

ஜி.எஸ்.டி.,யால் விலைவாசி உயராது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Posted: 25 Jun 2017 11:18 AM PDT

சென்னை:''ஜி.எஸ்.டி., வரியால், எந்த வகையிலும் விலைவாசி உயராது,'' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., சார்பில், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., விளக்க கருத்தரங்கம், சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது. இதில், வணிகர்களின் கேள்விகளுக்கு, வணிக வரித்துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.பின், மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சரக்கு மற்றும் சேவைக்காக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதித்து, நாட்டை முன்னேற்றும் பணியில், பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.
'ஜி.எஸ்.டி., ...

கலப்பட மணல் விற்பனை அமோகம்; புதிய கட்டுமானங்களுக்கு ஆபத்து

Posted: 25 Jun 2017 11:21 AM PDT

தமிழகம் முழுவதும், கலப்பட மணல் விற்பனை அதிகரித்துள்ளதால், புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, மே மாதம் முதல், நேரடி மணல் விற்பனையில் ஈடுபட்டு உள்ளது. அதனால், மாநிலம் முழுவதும், 75 குவாரிகளை திறக்க திட்டமிடப்பட்டு, முறையான அனுமதி பெற்று, 30 குவாரிகள் திறக்கப்பட்டன. பொதுப்பணித் துறையில் போதிய ஆட்கள் இல்லாததாலும், உள்ளூர் மக்கள் எதிர்ப்பாலும், தற்போது, 15 குவாரிகள் மட்டுமே இயங்குகின் றன. இவற்றில் இருந்து, தினமும், 5,000 லோடு மணல் மட்டுமே அள்ளப்படுகிறது.மாநிலம் முழுவதும் நடக்கும், புதிய கட்டுமான பணிகளுக்கு, ...

'ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழக சட்டசபை தேர்தல்'

Posted: 25 Jun 2017 11:25 AM PDT

திருவள்ளூர்:''ஜனாதிபதி தேர்தலுக்கு பின், சட்டசபை தேர்தல் வரும்'' என, திருவள்ளூரில் துார்வாரப்பட்ட குளத்தை பார்வையிட வந்த, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில், குளம்துார்வாரும் பணியை, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின், நேற்று, பார்வையிட்டார்.

அப்போது, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தை முன்னேற்றுவதற்காக, தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில், குளங்கள் துார்வாரும் பணி நடக்கிறது. அந்த பணியை, ...

இந்தியாவில் முதலீடு செய்ய பலர் ஆர்வம்: சுந்தர் பிச்சை

Posted: 25 Jun 2017 12:08 PM PDT

வாஷிங்டன்: இந்தியாவில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சி.இ.ஓ., சந்திப்பில் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் அமெரிக்காவை மையமாக வைத்து உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பல பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக உள்ள சுந்தர் பிச்சையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின் பேட்டியளித்த சுந்தர் பிச்சை கூறியதாவது : ...

அமெரிக்காவில் பாகிஸ்தானை தாக்கி பேசிய மோடி

Posted: 25 Jun 2017 12:58 PM PDT

வெர்ஜீனியா: ‛சர்ஜிக்கல் ஸ்டிரைக்' மூலம் இந்தியாவின் பலத்தை உலகம் உணர்ந்துள்ளது என பாக்.,கை தாக்கி பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசியுள்ளார்.

சாதனையை நோக்கி..
அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி வெர்ஜீனியா நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது : ‛‛இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களில் உள்ள மக்களும் இங்கு இருக்கிறீர்கள். உங்களது கனவுகளை நனவாக்க ஆர்வமுடன் இருக்கிறேன். இந்தியா துன்பத்தை சந்திக்கும் போது எல்லாம் நீங்கள் வலியை உணர்ந்து வருகிறீர்கள். இந்தியா ஓர் பெரிய சாதனையை ...

மோடி எதிர்ப்பு அரசியலை கைவிட்டது ஆம் ஆத்மி

Posted: 25 Jun 2017 02:07 PM PDT

புதுடில்லி:தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஆம் ஆத்மி கட்சி, பிரதமர் நரேந்திர மோடியைகுறிவைக்காமல், பா.ஜ., மீது மட்டும் கவனம் செலுத்தும் வகையில், அரசியல் வியூகத்தைமாற்றியுள்ளது.
டில்லியில், 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 70ல், 67 தொகுதிகளை வென்று வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் பின், நடந்த தேர்தல்களில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து, தேர்தலை சந்தித்தது. அதனால் பலன் கிடைக்காமல், மோசமான தோல்விகளை ஆம் ஆத்மி சந்தித்து வருகிறது.
டில்லியில் நடந்த ...

நேபாள பயணம்: ஆதார் செல்லாது

Posted: 25 Jun 2017 02:48 PM PDT

புதுடில்லி:'நேபாளம், பூட்டான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்தியர்கள், அடையாள அட்டை ஆவணமாக, ஆதாரை பயன்படுத்த முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சகம் கூறி
உள்ளது.
நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், 'விசா' பெறத் தேவை இல்லை. மாறாக, செல்லத்தக்க தேசிய பாஸ்போர்ட் அல்லது தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் போதும்.
அதே போல், 65 வயதுக்கு மேல், 15 வயதுக்கு கீழ் உள்ள இந்தியர்கள், தங்கள் வயதை உறுதி செய்வதற்கு, 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண், ஓட்டுனர் லைசென்ஸ், ரேஷன் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™