Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்: 10 அம்சங்கள்

Posted: 19 Jun 2017 03:03 AM PDT

புதுடில்லி : ஜனாதிபதி தேர்லில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய 10 அம்சங்கள் :
1. ராம்நாத் கோவிந்த், உ.பி.,யின் கான்பூரில் 1945 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தவர்.
2. இவர் கான்பூர் பல்கலை.,யில் வணிகவியல் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்.
3. தலிக் சமூக தலைவரான இவர் 1994 முதல் 2006 வரை 12 ஆண்டுகள் உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்.
4. வழக்கறிஞரான இவர், 1977 முதல் 1979 வரை டில்லி ஐகோர்ட்டில் ...

இடைத்தேர்தல் பணம் பட்டுவாடா வழக்கு; முதல்வர் - ஸ்டாலின் வாக்குவாதம்

Posted: 19 Jun 2017 09:25 AM PDT

சென்னை :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், வழக்கு பதிவு செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது தொடர்பாக, சட்டசபையில் நேற்று, முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். அதில் அதிருப்தி தெரிவித்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சட்டசபையில் நேற்று, கேள்வி நேரம் முடிந்ததும் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: தேர்தல் கமிஷன் ஒரு அறிக்கையை, தலைமை செயலருக்கு அனுப்பி உள்ளது. அதில், முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளதாக, தகவலறியும் ...

கூவத்தூர் பேரம் தொடர்பாக ஸ்டாலின் 'சிடி': ஆதாரமாக ஏற்க சபாநாயகர் தனபால் மறுப்பு

Posted: 19 Jun 2017 09:28 AM PDT

சென்னை: ''எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அளித்த, 'சிடி'யை ஆதாரமாகக் கொண்டு, அந்த பிரச்னையை, சட்டசபையில் விவாதிக்க இயலாது,'' என, சபாநாயகர் தனபால், நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.

சபாநயகரிடம் சிடி:அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேரம் தொடர்பாக, வெளியான செய்தி குறித்து, சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் வலியுறுத்தினர்; அதை, சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் பேரம் தொடர்பான ஆதாரம் உள்ளதாகக் கூறி, 'சிடி' ஒன்றை, சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கி ...

100 மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனை திட்டம் புதுமை! தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு பயன்

Posted: 19 Jun 2017 09:33 AM PDT

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யும் திட்டம், தமிழகத்தின், நான்கு மாவட்டங்கள் உட்பட, நாடுமுழுவதும், 100 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

'நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட, நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, சமீபத்தில் வெளியிடப்பட்ட, தேசிய சுகாதார கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, நோய்கள் குறித்த மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
புற்று நோய்
அதிக ...

சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்; தி.மு.க., வெளிநடப்பு

Posted: 19 Jun 2017 10:07 AM PDT

தமிழக சட்டசபையில், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., சட்ட மசோதா, நேற்று நிறைவேறியது. அதை, ஆய்வுக் குழுக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., வரி, ஜூலை, 1ல் அறிமுகமாக உள்ளது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், சட்டசபையில், மாநில ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பெரும்பாலான மாநிலங்கள் நிறைவேற்றி விட்டன. இந்நிலையில், தமிழக சட்டசபையில், 2017க்கான, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் சட்ட முன்வடிவு, ஜூன், 14ல், அறிமுகம் செய்யப்பட்டது.
அது தொடர்பாக நேற்று ...

ஜனாதிபதி வேட்பாளராக தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு!

Posted: 19 Jun 2017 10:17 AM PDT

ஜனாதிபதி தேர்தலுக்கான, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் வேட்பாளராக, பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், 71, அறிவிக்கப்பட்டுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்க, பிரதமர் மோடி, வியூகம் வகுத்து வருகிறார். வரும், ௨௨ல் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், தங்களின் முடிவை எதிர்க்கட்சிகள் அறிவிக்க உள்ளன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஜூலை, 17ல் நடைபெறும் என, தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ...

வெங்காய குடோனான பள்ளிகள்; வியாபாரியாக மாறிய ஆசிரியர்கள்

Posted: 19 Jun 2017 10:25 AM PDT

போபால்: மத்திய பிரதேசத்தில், வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளதால், அரசுப் பள்ளிகள் குடோன்களாகவும், ஆசிரியர்கள் வியாபாரிகளாகவும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். மாநிலத்தில் இந்த ஆண்டு விவசாய உற்பத்தி பொருட்கள் அதிகம் விளைந்துள்ள நிலையில், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கக் கோரி, மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் ...

லட்டு, தலைமுடிக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு

Posted: 19 Jun 2017 10:39 AM PDT

திருப்பதி: திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனைக்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர நிதி அமைச்சர், ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

விலை உயர வாய்ப்புஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஆந்திர நிதி அமைச்சர் ராமகிருஷ்ணா கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை, அடுத்த மாதத்திலிருந்து மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
இந்த புதிய வரி ...

'டாஸ்மாக்' மது விற்பனை ரூ.27 ஆயிரம் கோடி வருவாய்

Posted: 19 Jun 2017 10:47 AM PDT

'டாஸ்மாக்' மது விற்பனை மூலம், தமிழக அரசுக்கு, 26 ஆயிரத்து, 995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 6,300 மதுக்கடைகள் இருந்தன. அவற்றில், தினமும் சராசரியாக, 80 கோடி ரூபாய் மதிப்பிலான,பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின.
வருவாய் பாதிக்கவில்லை.
அரசுக்கு, மதுவிற்பனையில் இருந்து, ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் வருவாய் கிடைக்கிறது. அதன்படி, 2015 - 16ல், டாஸ்மாக் மூலம், தமிழக அரசுக்கு, 25 ஆயிரத்து, 845 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இது, 2016 - 17ல், 26 ஆயிரத்து, 995 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது ...

ஐ.எஸ்., பிடியில் சிக்கியதா கேரள மாநில கிராமம்?

Posted: 19 Jun 2017 12:45 PM PDT

காசர்கோடு: இஸ்ரேல் - எகிப்து இடையே உள்ள, பாலஸ்தீனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பகுதியான, காஸா முனையின் பெயரை, கேரளாவில் உள்ள ஒரு கிராம சாலைக்கு சூட்ட, அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசர்கோடு மாவட்டம், படானே கிராமத்தில் இருந்து மட்டும், 21 இளைஞர்கள், ...

பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி

Posted: 19 Jun 2017 01:41 PM PDT

புதுடில்லி: சர்வதேச யோகா தினமான, நாளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உ.பி.,யில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசு அமைந்த பின், மூன்றாம் ஆண்டாக, நாளை, சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
ஏற்பாடு :
இதையொட்டி, மத்திய அமைச்சர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, யோகா நிகழ்ச்சிகளுக்கு ...

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு

Posted: 19 Jun 2017 02:35 PM PDT

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம், எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில், விளக்கம் கேட்டுள்ளது.
'அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது; தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை ...

'பிளாஸ்டிக்' அரிசி தமிழகத்தில் இல்லை

Posted: 19 Jun 2017 03:45 PM PDT

சென்னை : தமிழகத்தில் 'பிளாஸ்டிக்' அரிசி இல்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில், 3,124 கடைகளில், அரிசி மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒன்றில் கூட, பிளாஸ்டிக் அரிசி இல்லை. பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டில் உள்ளதாக, பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை, சமூக வலைதளங்களில், யாரும் பகிர ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™