Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தீபா - தீபக் மோதல் பின்னணியில் தினகரன்:கார்டனில் நடந்த கலாட்டா

Posted: 17 Jun 2017 06:16 AM PDT

சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும், அவரது சகோதர ருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு, தினகரன் தரப்பினரே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது.

ஜெ.,மறைவுக்கு பின், அவரது சொத்துக்களுக்கு, அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், உரிமை கொண்டாடி வருகின்றனர். சொத்துக்கள் தொடர்பாக, ஜெ., உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்த தகவல் எதுவும், இதுவரை வெளியாகவில்லை.
தனிக்கட்சி
தற்போதைய நிலையில், ஜெ., சொத்துக்கள் அனைத்தும், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. தீபக்கும், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார். தீபா மட்டும், ...

கட்சி எங்களுக்கு... ஆட்சி பன்னீருக்கு... : சசி குடும்பம் யோசனை; பழனிசாமி கொந்தளிப்பு

Posted: 17 Jun 2017 06:25 AM PDT

'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்' என, முதல்வர் பழனிசாமி கூறியது, சசிகலா குடும்பத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்தினர் கோலோச்சுவதை, பா.ஜ., தலைவர்கள் விரும்ப வில்லை. எனவே, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு, பன்னீர் அணியுடன் இணையும் படி, முதல்வர் பழனிசாமி தரப்பினருக்கு, அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
தடைபட்டது
ஆனால், முதல்வர் பதவியில் திடமாக அமர்ந்த பழனிசாமி, அதை துறக்க தயாராக இல்லை. இதன் காரணமாகவே, பன்னீர் அணியுடனான இணைப்பு தடைபட்டது. பன்னீர் அணியினர், முதல்வர் மற்றும் ...

போலி ஜாதி சான்றிதழ் தந்த ஊழியர்கள்... டிஸ்மிஸ்!

Posted: 17 Jun 2017 07:21 AM PDT

போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, அரசு பணியில் சேர்ந்தவர்கள் பற்றி கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களை பணியிலி ருந்து, 'டிஸ்மிஸ்' செய்யவும் முடிவு செய்துள்ளது.

அரசு பணிகளில், எஸ்.சி., - எஸ்.டி., எனப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுகி றது. இதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும், இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஆனால், பலர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, மத்திய அரசு பணியில் சேர்ந்துள்ள தாக புகார்கள் வந்தன.பார்லிமென்ட் பட்ஜெட் ...

ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு... வாய்ப்பில்லை?

Posted: 17 Jun 2017 07:42 AM PDT

அ.தி.மு.க., அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் ஆர்வமாக இல்லை. எனவே, ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல், 2016 அக்டோபரில், இரண்டு கட்டங்களாக நடக்க இருந்தது.
சிறப்பு அதிகாரி
இட ...

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா வாரியம்?

Posted: 17 Jun 2017 08:12 AM PDT

சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற் கான டெண்டரில், 39 நிறுவனங்கள், 3,774 மெகாவாட் அளவுக்கு, மின்சாரம் சப்ளை செய்ய ஒப்பந்த புள்ளி வழங்கியுள்ள நிலை யில், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை, மின் வாரியம் பூர்த்தி செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், அதிகபட்சமாக, 1 யூனிட் நான்கு ரூபாய் என்ற விலையில், 1,500 மெகாவாட், சூரிய சக்தி மின்சாரம் வாங்க, மே மாதம் டெண்டர் கோரியது. இந்த டெண்டரில், 'ரிவர்ஸ் பிட்டிங்' என்ற, நிபந்தனை விதிக்கப் பட்டது. அதன்படி, டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம், 1 யூனிட் மின்சாரத்தை என்ன விலைக்கு வழங்க முடியும் என, ...

ரூ.71 கோடி போதைப்பொருள் பறிமுதல் தொழிற்சாலைக்கு 'சீல்'

Posted: 17 Jun 2017 09:47 AM PDT

சென்னையில், சோப்பு பவுடர் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட, 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை, டி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி கள் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு ஆண்டு களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான, போதை மருந்துகள், சென்னையில் பறிமுதலாகி உள்ளன.

சென்னை, செங்குன்றம் அருகே, சட்ட விரோத மாக செயல்பட்ட ஆலையில், சில தினங் களுக்கு முன், டி.ஆர்.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, 'மீத்தாம் பெட்டாமைன்' என்ற போதை மருந்து தயாரிக்க உதவும், மூலப்பொருட்கள் சிக்கின. மேலும், 'சூடோ எபிடிரின், ஹெராயின்' போன்றவையும், பெட்டிகளில் ...

50 கி.மீ.,க்கு ஒரு பாஸ்போர்ட் ஆபீஸ் நீண்ட தூரம் அலைய வேண்டிய தேவையில்லை

Posted: 17 Jun 2017 10:05 AM PDT

புதுடில்லி:பாஸ்போர்ட்டுகள் வாங்குவதை எளிமைப்படுத்தும் வகையில்,149 புதிய, போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங் களை, வெளியுறவுத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.

இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறியதாவது:நாட்டில் பெரும்பாலானோர், பாஸ்போர்ட் பெறுவதற்கு, நீண்ட துாரம் செல்லும் நிலைஉள்ளது. இதற்கு தீர்வாக, 50 கி.மீ., சுற்றளவுக்குள், பாஸ் போர்ட் சேவை மையங்களை துவக்க திட்ட மிடப் பட்டு உள்ளது.இதன்படி,முதற்கட்டமாக,86 போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவக்கப் பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, மேலும், 149 பாஸ்போர்ட் சேவை ...

கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்; மோடி, பினராயி இணைந்து பயணம்

Posted: 17 Jun 2017 10:17 AM PDT

கொச்சி:கேரளாவின், கொச்சி நகரில், முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ள, மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், கொச்சி நகரில், மெட்ரோ ரயில்வே தொடர்பான, முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததை அடுத்து, ரயில் சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மெட்ரோ ரயில் நிலைய சேவையை துவக்கி வைத்தார். அப்போது, மோடி பேசியதாவது:மக்களுக்கு உதவும் வகையில், நகர்ப்புற திட்டங்கள் ...

ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

Posted: 17 Jun 2017 11:57 AM PDT

சென்னை: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டிய, 12 கோடி ரூபாய் கட்டணத்தை, ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்று செலுத்தும்படி கோரிய மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை, 7க்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னையை சேர்ந்த, குமரன் தாக்கல் செய்த மனு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட செலவுக்காக, 12 கோடி ரூபாயை வழங்கும்படி ...

கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி

Posted: 17 Jun 2017 12:12 PM PDT

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்,ஸ்டாலின் தலைமை யில், தி.மு.க., - காங்., உள்ளிட்ட, எதிர்க்கட்சி களின் தலைவர்கள் நேற்று சந்தித்து, கூவத்துாரில் நடந்த குதிரை பேரம் தொடர்பாக, 'சிடி' ஆதாரத்துடன் முறையிட்டனர். 'லஞ்சம் கொடுத்தே நம்பிக்கை ஓட்டெடுப்பில், பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, அ.தி.மு.க., ஆட்சியை உடனே கலைக்க வேண்டும்' என்றும், வலியுறுத்தினர்.தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு, பிப்., 18ல், நம்பிக்கை ஓட்டு கோரியது. அதில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க் களை, கூவத்துாரில் ...

'நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு?

Posted: 17 Jun 2017 12:45 PM PDT

'நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. உச்சநீதி மன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலானதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், 'நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம்' என, உயர்நீதிமன்றங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அத்துடன், தேர்வு முடிவை வெளியிடவும், சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தியது.
இதனால், 'நீட்' தேர்வுக்கான, 29 வகை வினாத்தாளின் ...

சொன்னது ஒண்ணு; செய்தது ஒண்ணு! போக்குவரத்து ஊழியர்கள் கொதிப்பு

Posted: 17 Jun 2017 01:40 PM PDT

''தமிழகத்தில், கடந்த மாதம் மூன்று நாட்கள் நடந்த, பஸ் ஸ்டிரைக்கில், பங்கேற்ற, சி.ஐ.டி.யூ., - தொ.மு.ச., தொழிற்சங்கங்களை சேர்ந்த, 500 பேர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக, பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளன, சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் அன்பழகன்
கூறினார்.
போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சம்பளம், அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே, 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் ஸ்டிரைக்கில் ...

அரசு கேபிள் 'டிவி'க்கு ஆப்பரேட்டர்கள் எதிர்ப்பு

Posted: 17 Jun 2017 02:35 PM PDT

தமிழக அரசு, 'செட் - டாப்' பாக்ஸ் மூலம் வழங்க உள்ள கேபிள், 'டிவி' சேவையை, புறக்கணிக்கப் போவதாக, கேபிள் ஆப்பரேட்டர் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
தமிழக அரசின் கேபிள், 'டிவி' சேவையை, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜூலை, 17க்குள், டிஜிட்டல் சேவையை உறுதி செய்யாவிட்டால், உரிமம் ரத்தாகி விடும் என்றும் எச்சரித்துள்ளது. அதனால், டிஜிட்டல் ஒளிபரப்புக்கான, 70 லட்சம், 'செட் - டாப்' பாக்ஸ்கள், கொள்முதல் செய்ய, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.
இருப்பினும், மத்திய அரசு நிர்ணயித்த ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™