Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஒட்டி உறவாடுவதா; ஒதுக்கி வைப்பதா? குழப்பத்தில் தவிக்கும் தமிழக மந்திரிகள்

Posted: 10 Jun 2017 05:58 AM PDT

சசிகலா குடும்பத்தை விரட்டவும் முடியாமல், ஒட்டி உறவாடவும் முடியாமல், அமைச்சர்கள் தடுமாறி வருகின்றனர்.

ஜெ., இருந்த வரை, அமைச்சர்கள், அவர் சொல்லுக்கு மறு சொல் கூறாமல், அடக்கமாக இருந்தனர். அவர் மறைவுக்கு பின், சசிகலா சொல்லுக்கு கட்டுப்பட்டனர். அவர் சிறைக்கு சென்றதும், தினகரன் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். தினகரன் சிறைக்கு சென்றதும், சுதந்திரமாக செயல்படத் துவங்கினர்.கடும் அதிர்ச்சிஅதே நிலையை தற்போதும் தொடர விரும்புகின்றனர். எனவே, சசிகலா மற்றும் தினகரனை சந்திக்க, யாரும் செல்ல வில்லை. இது, சசிகலா குடும்பத்தின ருக்கு, கடும் அதிர்ச்சியை அளித்தது. ...

வரி தாக்கலில் கூடுதல் வருமானம் காட்டப்பட்டிருந்தால்... நடவடிக்கை..! செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு பின் ஏய்ப்பாளர்களுக்கு சிக்கல்

Posted: 10 Jun 2017 06:28 AM PDT

புதுடில்லி, 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வருமான வரி தாக்கலில், கூடுதல் வருமானம் காட்டப்பட்டிருந்தால், அது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிப்பதற் காக இந்த நடவடிக்கை என, பிரதமர் அறிவித் தார். மேலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளவும், டிசம்பர், 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.இந்த கால கட்டத்தில், வங்கியில் யாருடைய கணக்கில், அதிகளவில் செல்லாத ...

ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.,வின் வியூகத்திற்கு அ.தி.மு.க.,மடங்குமா? மூன்று அணிகள் ஒருமித்த கருத்துடன் ஓட்டளிப்பதில் சிக்கல்

Posted: 10 Jun 2017 07:07 AM PDT

ஜனாதிபதி தேர்தலில், எல்லா மாநில, எம்.எல். ஏ.,க்கள், எம்.பி.,க்களின் ஆதரவுடன், பதவியை பிடிக்க வேண்டும் என்ற, பா.ஜ.,வின் வியூகத் திற்கு, தமிழகத்தில், அ.தி.மு.க., மடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இக்கட்சியில் மூன்று அணிகள் உள்ளதால், உறுப்பினர்களின் ஓட்டுகள், ஒரே வேட்பாளருக்கு செல்லுமா அல்லது இரண்டாக பிரியுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம், அடுத்த மாதம் நிறைவு பெற உள்ளது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக, ஜூலை, 17ல் தேர்தல் நடை பெறும் என, தேர்தல் கமிஷன் ...

'மேக் இன் உ.பி., திட்டம்' முதல்வர் ஆதித்யநாத் அதிரடி

Posted: 10 Jun 2017 09:04 AM PDT

லக்னோ, மத்திய அரசை பின்பற்றி, உத்தர பிரதேசமும், 'மேக் இன் உ.பி.,' திட்டத்தை அமல் படுத்த உள்ளது.தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்குடன், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்ட மான, இதன் மூலம், நாட்டின் பல பகுதிகளிலும், தொழில் துறையில் அன்னிய முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், மத்திய அரசை பின்பற்றி, பா.ஜ.,வை சேர்ந்த, யோகிஆதித்யநாத் முதல்வராக உள்ள, உ.பி., மாநிலமும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அம்மாநில தொழில் துறையின் கீழ், 'மேக் இன் உ.பி.,' என்ற ...

ஜி.எஸ்.டி., வந்தால் 37 முறை கணக்கு தாக்கல்

Posted: 10 Jun 2017 09:05 AM PDT

புதுடில்லி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால், ஒரு மாநிலத்திற்குள் தொழில் செய்து வருபவர்கள், ஆண்டுக்கு 37 முறை கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இறுதி கட்டம்நாடு முழுவதும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் மூலம், பலமுனை வரிக்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு அமலுக்கு வரும். ஜி.எஸ்.டி., வரியை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.இது குறித்து இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் ...

பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் 4 பேர்...ஊடுருவல்! காஷ்மீர், பஞ்சாபில் தாக்குதல் நடத்த சதி

Posted: 10 Jun 2017 09:34 AM PDT

ஸ்ரீநகர்,: ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பயங்கர தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., ஆதரவு பயங்கரவாதிகள் நான்கு பேர் ஊடுருவியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி கள், ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவி அவ்வப் போது நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்ற னர்; அவர்களுக்கு, பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பும் ஆதரவு அளித்து வருகின்றன.
துல்லிய ...

விவசாயிகள் நலனுக்காக உயிர் விட தயார்: முதல்வர் உருக்கம்

Posted: 10 Jun 2017 09:36 AM PDT

போபால், மத்திய பிரதேசத்தில், விவசாயிகள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காததாகக் கூறி, 1ம் தேதி முதல், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மண்ட்சாரில், 6ம் தேதி நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது.கலவரத்தை ஒடுக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், விவசாயிகள் ...

மந்திரிகளுக்குள் முட்டல், மோதல், கிண்டல்! ஆளும் அ.தி.மு.க.,வில் தொடரும் அவலம்

Posted: 10 Jun 2017 10:17 AM PDT

தலைமையும், கட்டுப்பாடும் இல்லாததால், ஆளும் அ.தி.மு.க.,வில், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றனர். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது, ஒருவர் பேச்சை, மற்றொருவர் கிண்டலடிப்பது என, கட்சி கலகலக்க துவங்கி உள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., என்ற கட்சி, அசைக்க முடியாத கட்டுக்கோப்புடன் இருந்தது. அவர் மறைவுக்கு பின், பன்னீர் அணி, சசிகலா அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. தற்போது, சசிகலா அணியிலும் பிளவு ஏற்பட்டு, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் ஆதரவு அணி என, கோஷ்டி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதனால், யார் உத்தரவையும், யாரும் ...

விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதம்... 500 சதவீதம்!

Posted: 10 Jun 2017 10:43 AM PDT

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் கட்டப் பட்ட கட்டடங்களை, வரன்முறை செய்வதற் கான விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் படி, கூடுதல்தளங்கள் உள்ள கட்டடங் களுக்கு,500 சதவீதம் வரை, அபராதம் விதிக்கப் பட உள்ளது.

விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆராய, 2007ல், நீதிபதி மோகன் தலைமை யில் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, '2007 ஜூலைக்கு முன், கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைப்படுத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, நகரமைப்பு சட்டத்தில், 113 சி என்ற, புதிய பிரிவும் சேர்க்கப்பட்டது.ஆனால், வரன்முறையை செயல்படுத்த பிறப் பிக்கப்பட்ட ...

15ல் அதிரடி அறிவிப்பு கல்வி அமைச்சர் பேச்சு

Posted: 10 Jun 2017 11:39 AM PDT

கோபி: ''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. வரும், 15ல் இதற்கான அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சாதனையாளர்கள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்த அரசு வெளிப்படை தன்மையோடு, கல்வித்துறையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது. ரேங்க் அடிப்படையில், தனியார் பள்ளிகள் வீரநடை போட்டன. அதை முறியடித்து காட்டியது இந்த அரசு. பிளஸ் 1 தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து, ...

3 ஆண்டில் 62 வெளிநாட்டு பயணம்

Posted: 10 Jun 2017 12:58 PM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாண்டுகளில், 62 வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்றது முதலே, தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.இதுபற்றி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தாலும், சர்வதேச அளவில், இந்தி யாவின் உறவுகளை மேம்படுத்தும் வகையில், அவர் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாக, ஆளும், பா.ஜ., கூறி வருகிறது.ரஷ்யா, ஸ்பெயின் உட்பட நான்கு நாடுகளுக்கு, சில தினங்களுக்கு முன், அவர் சுற்று பயணம் மேற்கொண்டார்.
நாடு திரும்பிய உடன், ...

விமான நிலையங்களில் மதுபானம் தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Posted: 10 Jun 2017 01:31 PM PDT

சென்னை : நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் 'மிலிட்டரி கேன்டீன்'களில், மது விற்பனைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மாநில அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையை அடுத்த, ஆவடியைச் சேர்ந்த, சாகுல் அமீது தாக்கல் செய்த மனு:தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்களிலும், மிலிட்டரி கேன்டீன்களிலும், மது பாட்டில்கள் ...

முதல்வருக்கு கறுப்பு கொடி காட்டிய வழக்கில் மாணவர்களுக்கு ஜாமின் மறுப்பு

Posted: 10 Jun 2017 02:17 PM PDT

லக்னோ: உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.ஆட்சி நடக்கிறது. கடந்த புதன்கிழமை லக்னோ பல்கலை. விழாவில் கலந்து கொள்ள முதல்வர் யோகிஆதித்யநாத் வந்தார். அப்போது மாணவர்கள் சிலர் முதல்வருக்கு கறுப்புகொடி காண்பித்தனர்.மேலும் மாநிலத்தில் ஜாதி, மத மோதல்களுக்கு முதல்வர் மீது குற்றம்சாட்டியும், பல்கலை.யை காவிமயமாக்காதே எனவும் கோஷமிட்டனர்.இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அம்மாணவர்களை கைது செய்தனர்.இதில் 9 மாணவர்கள், 2 மாணவிகள். என தெரியவந்தது. இவர்கள் ஹாசன்கஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு மாணவர்கள் மீது முதல் தகவல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™