Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'மாட்டிறைச்சி தடை' குறித்து அரவிந்த்சாமி கருத்து..!

Posted:

கடந்த இரண்டு வாரங்களாக 'மாட்டிறைச்சி தடை' குறித்த செய்திகள் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது. மத்திய அரசின் இந்த தடை குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சினிமா துறையில் இருந்து பெரிய அளவில் ஆதரவுக்குரலோ அல்லது எதிர்ப்புக்குரலோ கிளம்பவில்லை. கமல் மற்றும் நடிகர் சித்தார்த் என விரல்விட்டு ...

“ராஜமவுலி படத்தின் கதை என்னுடையது தான்” : பிரபல எழுத்தாளர் வழக்கு..!

Posted:

'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வழக்கமான கமர்ஷியல் படங்களை இயக்கி வந்தாலும் அவர் மீது ஒட்டுமொத்த கவனத்தையும் திரும்ப வைத்தது அவர் இயக்கத்தில் உருவான மகதீரா தான். ராம்சரண்-காஜல் அகர்வால் நடித்த இந்தப்படத்தின் கதையையும், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் எழுதியிருந்தார். ஆனால் சமீபத்தில் இந்தப்படத்தின் கதையை ...

பிரபாஸ்-துல்கர் சல்மான் கூட்டணி உருவாவது இதற்காகத்தான்..!

Posted:

பாகுபலி படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸை பல நிறுவனங்கள் தங்களது விளம்பர தூதராக நியமிக்க போட்டி போட்டன. ஆனால் பாகுபலி-2 வெளியாகும் வரை விளம்பர படங்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பாமல் இருந்தார் பிரபாஸ். தற்போது 'பாகுபலி-2' வெளியாகி பிரபாஸின் புகழை இன்னும் அதிகப்படுத்தியுள்ள நிலையில் பிரபல மொபைல் நிறுவனமான ஜியானி, பிரபாஸை ...

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

Posted:

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் இணைந்த படம் 'இருமுகன்'. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் 'இருமுகன்' படம் 'இண்டர்நேஷனல் ரவுடி 2017' என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியுப்பில் ...

2000 கோடியை நெருங்கும் 'தங்கல்'

Posted:

இந்தியாவில் கூட இப்படி ஒரு வசூலைப் பெறவில்லை, ஆனால், நம்மை விட சீன மக்கள் விளையாட்டின் மீது எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதற்கு சீனாவில் 'தங்கல்' படத்திற்குக் கிடைத்த வெற்றியே மிகப் பெரும் சாட்சி.
படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்த வரவேற்பால் 'தங்கல்' படம் தற்போது வரை சீனாவில் மட்டும் 1097 கோடி ...

டிச., 1-ல் "102 நாட் அவுட்" ரிலீஸ்

Posted:

பாலிவுட்டின் பிரபலமான மாஜி ஹீரோக்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர். அமிதாப், 70 வயதையும், ரிஷி கபூர் 60 வயதையும் கடந்தவர்கள். தற்போதும் இருவரும் தங்களது வயதுக்கு ஏற்ற கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அப்பா, மகனாக, 102 நாட் அவுட் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இதில் 102 வயது அப்பாவாக ...

தமிழிலும் தயாராக உள்ளது 'பியான்ட் த கிளவுட்ஸ்'

Posted:

ஆஸ்கர் விருது வென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த இயக்குனர் மஜித் மஜிதி தற்போது இயக்கி வரும் 'பியான்ட் தி கிளவுட்ஸ்' (Beyond The Clouds) படத்தை தமிழிலும் உருவாக்க உள்ளார். இந்தியாவில் படமாக்கப்படும் இந்தப் படத்தை முதலில் ஹிந்தியில் மட்டுமே தயாரிக்க இருந்தார்கள். தற்போது உலக அளவில் திரையிட ஆங்கில மொழியிலும், கூடுதலாக தமிழ் மொழியிலும் தயாரிக்க ...

கேன்சர் நோயாளிகளுக்கு உதவ இயக்குனர் உஷா கிருஷ்ணன் தலைமுடி தானம்

Posted:

கலையரசன், காளி வெங்கட், ஷாலின், வைஷாலி மற்றும் பலர் நடித்த ராஜா மந்திரி படத்தை இயக்கியவர் உஷா கிருஷ்ணன். கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் எண்ணத்தில் தன்னுடைய தலை முடியை தானம் செய்திருக்கிறார். இது பற்றி அவருடைய முகப் புத்தகத்தில் கூறியிருப்பதாவது,
ஏன்..? ஏன் திடீர்னு hair donation? திடீர்னுலாம் இல்ல.. நிறைய தடைவை யோசிச்சிருக்கேன். கேன்சர் ...

கணித புலி ஆனந்த் குமாராக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்

Posted:

பாலிவுட்டில் தற்போது பயோபிக் சீசன். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள்.... என பலரது வாழ்க்கை படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் பாட்னாவை சேர்ந்த கணித புலி ஆனந்த குமாரின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது.
கணிதத்தில் கில்லாடியான ஆனந்த், ஐஐடி.,யில் 30 வகையான புரொகிராம் ...

"செப்" ரிலீஸ் தேதி தள்ளிப்போனது

Posted:

சைப் அலிகான் நடிப்பில் உருவாகி வரும் படம் "செப்". ராஜ் கிருஷ்ணா மேனன் இயக்குகிறார். சைப் அலிகான் உடன் பத்மபிரியா முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான "செப்" படத்தை தழுவி இப்படம் உருவாகி வருகிறது. சைப், சமையல் கலை நிபுணராக நடிக்கிறார். முன்னதாக இப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். ...

தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் - அமீர்கான் நெகிழ்ச்சி

Posted:

தங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான் நடிக்க உள்ள படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். அமீர்கான் உடன் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி அமீர்கான் கூறியிருப்பதாவது... "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் கதை அருமையானது. என்னுடைய கேரக்டர் எனக்கு ...

மகேஷ்பாபுவின் அப்பாவாக சரத்குமார்

Posted:

சண்டமாருதம் படத்தை அடுத்து அடங்காதே, ரெண்டாவது ஆட்டம், சென்னையில் ஒருநாள்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். முக்கியமாக ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் அடங்காதே படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். கதைப்படி ...

பாகுபலி தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தில் சர்வானந்த்!

Posted:

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பிரசாத் தேவினேனி, ஷோபூ யர்லஹட்டா ஆகிய இருவரும் இணைந்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரித்தனர். இரண்டு பாகங்களையும் தலா 250 கோடி செலவு செய்து தயாரித்த அவர்கள் ரூ. 1600 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்தபடியாக ஆர்கா மீடியா நிறுவனம் சார்பில் நடிகர் ...

கோபிசந்த் படம் ஹன்சிகாவுக்கு கைகொடுக்குமா?

Posted:

போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்து விட்டது போன்ற நிலை இருந்தபோதும், தற்போதும் அவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளன. மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் வில்லன், தமிழில் பிரபுதேவா நடிக்கயிருக்கும் குலேபகாவலி, தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் கெளதம் நந்தா ஆகிய படங்கள் உள்ளன. இதில் கோபிசந்துடன் நடிக்கும் தெலுங்கு ...

ஆஸ்திரேலியால் துப்பாக்கி : விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

Posted:

விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளையும் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அவரது ரசிகர்கள் படுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களை தியேட்டர்களில் திரையிட்டு பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். அதேபோல் வருகிற ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் இந்த பிறந்த நாளிலும் விஜய்யின் சூப்பர் ஹிட் ...

ஆடியோ விழாவில் சினேகனை கலாய்த்த ஜாகுவார் தங்கம்

Posted:

குருசேகரா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வளையல். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. விழாவில், படக்குழுவினருடன் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், பாடலாசிரியர் சினேகன், லொள்ளுசபா ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் வருகை புரிந்த இயக்குனர் பாரதிராஜா ஆடியோவை வெளியிட்டார். ...

தென்னிந்தியாவில் 620 கோடி வசூலித்த 'பாகுபலி 2'

Posted:

'பாகுபலி 2' திரைப்படம் வெளிவந்து 40 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாத காலம் மட்டுமே படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 நாட்களைக் கடந்து 50வது நாளை நோக்கி படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த 40 நாட்களில் சுமார் 1620 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2' படம். ...

இரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை...??

Posted:

தென்னிந்தியத் திரையுலகின் இரு பெரும் சூப்பர்ஸ்டார்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி. தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் சிரஞ்சீவியும் சுமார் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக வசூல் மன்னர்களாக இருக்கிறார்கள். இருவருமே 60 வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ...

விஜய் டி.வியில் மீண்டும் டப்பிங் சீரியல்

Posted:

சமீபகாலமாக நேரடி தமிழ் சீரியல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வந்த விஜய் டி.வி., மீண்டும் டப்பிங் சீரியல் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான இஷ்க்பாஸ் என்ற தொடரை காதலா காதலா என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்புகிறது. நேற்று முன்தினம் முதல் இதன் ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி ...

ஒரு வாரத்தில் 1 கோடி பார்வை, 'ஸ்பைடர்' டீசர் சாதனை

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்'. இப்படத்தின் டீசர் கடந்த வாரம் 1ம் தேதி காலை வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் 'விவேகம், கபாலி' டீசர் ஆகியவற்றின் சாதனையை முறியடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™