Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை நோக்கி ராப்தா

Posted:

சுஷாந்த் சிங் மற்றும் கிர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராப்தா. சரித்திரம் மற்றும் இந்தக்காலம் இரண்டையும் கலந்து ராஜமெளலியின் மகதீரா பாணியில் இப்படம் உருவாகி உள்ளது. ஆனால் இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் போதிய வரவேற்பு இல்லை. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.55 ...

விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவாக அமீர் நடிப்பது உறுதி

Posted:

தங்கல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அமீர்கான், "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" என்ற படத்தில் முதன்முறையாக அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கிறார். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா இயக்குகிறார். இதையடுத்து அமீர், விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரோலில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இப்போது அது உறுதியாகியிருக்கிறது. ...

மாவட்டம்தோறும் மகிளா கோர்ட் : முதல்வரிடம் வரலட்சுமி கோரிக்கை

Posted:

நடிகை வரலட்சுமி சரத்குமார், பெண்களை பாதுகாக்கும் பொருட்டு சேவ் சக்தி என்று அமைப்பை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கினார். பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வரலட்சுமி கூறியிருந்தார். மேலும் இதுதொடர்பாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி, அதுகுறித்து மாநில ...

இன்றைய இசையின் நிலை... : இளையராஜா வேதனை

Posted:

"திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தமாதிரி இருக்கிறது இன்றைய இசையின் நிலைமை என இளையராஜா வேதனை தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையாராஜா. சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கும் இவர், ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார். இளையராஜா தனது ...

த்ரிஷாவுடன் நடிப்பேன் என்று நினைக்கவேயில்லை - விஜய்சேதுபதி

Posted:

முதன்முறையாக விஜய்சேதுபதி - த்ரிஷா இணைந்து நடிக்கும் 96 படத்தின் பூஜை முறைப்படி இன்று(ஜூன் 12-ம் தேதி) ஆரம்பமானது. ஒளிப்பதிவாளர் பிரேம் 96 படத்தை இயக்க, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார்.
இப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி.... "இது ஒரு அழகிய காதல் கதை. உணர்வுகளால் பின்னப்பட்ட ஒரு கதை. டைம் ...

“சம்பளம் தரவில்லை” : தேசிய விருதுபெற்ற சிறுவன் குற்றச்சாட்டு..!

Posted:

மலையாள சினிமாவில் கவனிக்கத்தக்க குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் சிறுவன் கௌரவ்.. 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' படத்தில் தனது சுட்டித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் 2015ல் வெளியான 'பென்' படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும், மாநில அரசு விருதையும் பெற்றவர். தற்போது 'கொலு ...

மோகன்லாலுக்கு உடை வடிவமைத்த ஜெயசூர்யா மனைவி..!

Posted:

மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மனைவி சரிதா. இவர் தனது கணவர் நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். அந்தவகையில் ஜெயசூர்யா நடித்த பிரேதம், புக்ரி ஆகிய படங்களில் இவர் வடிவமைத்த உடைகள் மலையாள ரசிகர்களிடையே டிரென்ட் ஆனது. அவரது காஸ்ட்யூம் டிசைனர் பணிக்கு மகுடம் சூட்டுவது போல சமீபத்திய நிகழ்வு ஒன்று ...

'தியான்' படத்தின் 10 நிமிட சண்டைக்காட்சியில் மிரட்டிய அன்பறிவ்..!

Posted:

பிரமிக்கத்தக வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைப்பதில் தமிழ் சினிமாவில் பணியாற்றும் சண்டைக்கலைஞர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.. அதனால் மலையாள சினிமா ஆக்சன் காட்சிகளை பொறுத்தவரை முழுக்க முழுக்க நம்மவர்களையே நம்பி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அந்தவகையில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரை தொடர்ந்து அன்பறிவ் (அன்பு-அறிவு) ...

மோகன்லால் ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த பிரியதர்ஷன்..!

Posted:

நடிகர் மோகன்லால் தற்போது ஒரே நேரத்தில் மலையாளத்தில் 'வில்லன்' மற்றும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.. இதில் 'வில்லன்' படத்தில் ஏறத்தாழ மோகன்லாலின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது விஷால், ஹன்ஷிகா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.. காம்பினேஷன் காட்சிகள் இருந்தால் மட்டும் ...

பிலிம்பேர் விருது 2017 ; 8 பிரிவுகளில் போட்டியிட தேர்வான 'மகேஷிண்டே பிரதிகாரம்'...!

Posted:

சினிமா கலைஞர்களுக்கு பிலிம்பேர் விருது என்பது ரொம்பவே ஸ்பெஷலானது. இந்தவருடம் நடைபெறவுள்ள 64வது பிலிம்பேர் விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ள மலையாளத்தில் இருந்து பல படங்கள் அனுப்பப்பட்டன. அந்த படங்களில் இருந்து இறுதியாக ஒவ்வொரு பிரிவிலும் போட்டியிட நாமினேட் செய்யப்பட்ட படங்களையும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் ...

பாக்ஸராக நடிக்கிறார் பர்கான் அக்தர்

Posted:

ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் வேடத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பர்கான் அக்தர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் பாக்ஸராக நடிக்க உள்ளார். பிரபல இயக்குநர் மொகித் சூரி இந்தப்படத்தை இயக்க உள்ளார். கோல்டி பெல் தயாரிக்கிறார்.
இதுகுறித்து மொகித் சூரி கூறியிருப்பதாவது... "நானும், தயாரிப்பாளர் கோல்டியும், பர்கானை சந்தித்து ஒரு கதையை ...

தமிழ் படத்தில் நடிப்பது ஏன்.? - அபே தியோல்

Posted:

புதுமுக இயக்குனர் ரதீந்திரன் இயக்கத்தில், அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் அபய் தியோலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
தமிழ் படத்தில் நடிப்பது பற்றி அபே தியோல் கூறியதாவது... "தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் இரண்டாவது பெரிய ...

விஜய்சேதுபதி - த்ரிஷாவின் 96 படம் ஆரம்பம்

Posted:

பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குநராக களமிறங்கியுள்ள படம் 96. முதன்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். 90 காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. முற்றிலும் வித்தியாசமாக இதுவரை விஜய்சேதுபதி - த்ரிஷா இருவரும் நடித்திராத ஒருரோலில் இந்த 96 உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை ...

மராத்தில் நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராய்

Posted:

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறப்பிற்கு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் ஏய் தில் ஹே முஷ்கில் படம் வெளியானது. தற்போது, மணிரத்னம் உள்ளிட்டோரது படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், மராத்திய படமான ஹர்த்யாந்தர்-ன் இசை ...

பிரபாசுடன் ஐந்தாவது முறையாக இணைகிறார் அனுஷ்கா?

Posted:

பாகுபலி, பாகுபலி-2 படங்களின் மெகா ஹிட்டுக்குப்பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். யு.வி.வி. கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் வில்லனாக கத்தியில் விஜய்யுடன் மோதிய பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். பாகுபலி-2 படத்தில் நடித்து முடித்த பிறகு வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வரும் பிரபாஸ், ...

எம்ஜிஆர்-100 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பாக்கியமாக கருதுகிறேன்: ச.இளவேனில்

Posted:

ஜெயா, ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர் இளவேனில். தற்போது எம்ஜிஆர் -100 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர், இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
ஜெயா டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நான், தற்போது ஜெயா ...

விஜய் ஆண்டனியின் ஹீரோயின்கள் யார்.?

Posted:

பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சைத்தான் படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, தற்போது அண்ணாதுரை படத்தில் நடித்து வருகிறார். சுசீந்திரன் உதவியாளர் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்குகிறார். பிச்சைக்காரனுக்கு பிறகு தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் தயாராகி வருகிறது. ...

வைரலான அமலாபாலின் கிளாமர் போட்டோ

Posted:

வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், சிந்து சமவெளி படத்தில் நடித்தபோது ஆபாச நடிகை என்ற விமர்சனங்களுக்கு ஆளானார். என்றாலும், அதையடுத்து பிரபுசாலமனின் மைனா படத்தில் நடித்து தன் மீது விழுந்த ஆபாச நடிகை என்கிற இமேஜில் இருந்து விடுபட்டார். பின்னர், நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தவர், ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் ...

எதிரும் புதிருமான வேடங்களில் நடிக்கும் காஜல் - கேத்ரின்

Posted:

தெலுங்கில் ராணா நடித்து வரும் படம் நேனே ராஜூ நேனே மந்திரி. இந்த படத்தில் அவர் ஹீரோ - வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் நடித்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரபாசுடன் வில்லனாக மோதிய ராணா, இந்த படத்தில் அந்த படத்திற்கு இணையாக அதிரடி வில்லனாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு ராணாவுக்குமிடையே சண்டை ...

சூர்யா பிறந்த நாளில் தானா சேர்ந்த கூட்டம் பட டீசர்

Posted:

சிங்கம்-3 படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஆக்சன் திரில்லர் கதையில் தயாராகி வரும் இந்த படத்தை நானும் ரெளடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™