Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சந்தேகத்திற்கிடமான வகையில் தீக்கு இரையான பேக்கரி

Posted: 12 Jun 2017 08:51 AM PDT

Vaughan பகுதியில் உள்ள பேக்கரி ஒன்று இன்று அதிகாலையில் தீக்கிரையாகியுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பட்டர்மில் அவனியூ பகுதியில் அமைந்துள்ள இந்த பேக்கரியில் அதிகாலை 1.30 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், வேகமான பரவிய அந்த தீ அந்த பேக்கரிக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் அந்த கட்டிடத்தினுள் யாரும் இருக்கவில்லை என்றும், அதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தீப்பரவல் சம்பவம் […]

The post சந்தேகத்திற்கிடமான வகையில் தீக்கு இரையான பேக்கரி appeared first on TamilStar.com.

சென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்

Posted: 12 Jun 2017 08:45 AM PDT

சென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Esplanade ற்கு வடக்கே, Church Streetஇல் வீதிக்கு கீழாக உள்ள நிலக்கீழ் வினியோக மற்றும் கழிவு நீர்ப் பாதைக்கான பகுதி ஒன்றினுள் நேற்று முற்பகல் 9.30 அளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீதி மீது அமைக்கப்பட்டிருந்த மூடி சுமார் ஐந்து அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாகவும், பாரிய சத்தம் மற்றும் பலத்த அதிர்வினை ஏற்படுத்திய […]

The post சென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் appeared first on TamilStar.com.

படையினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டடோர் விபரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்! – ஜனாதிபதி

Posted: 12 Jun 2017 08:41 AM PDT

போரின் போதும், போருக்குப் பின்னரும் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று மேற்கொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகளைச் […]

The post படையினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டடோர் விபரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்! – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

மாற்றமடையும் அரசியல் தளம்! மஹிந்த சொல்லும் புதுக்கதை

Posted: 12 Jun 2017 08:38 AM PDT

இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய சந்தையை வரிகளற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கின்ற போதிலும் அதற்காக […]

The post மாற்றமடையும் அரசியல் தளம்! மஹிந்த சொல்லும் புதுக்கதை appeared first on TamilStar.com.

உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிட்டால் ஜெனிவா செல்வோம்! – ரிஷாட் எச்சரிக்கை

Posted: 12 Jun 2017 08:33 AM PDT

முஸ்லிம்களுக்கு உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிடின், ஜெனிவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம், அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருதுவில் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். "முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அத்தனை பேர்களிடமும் மிகவும் ஆணித்தரமாகவும் பக்குவமாகவும் முஸ்லிம் அரசியல் சக்திகளும், சமூக […]

The post உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிட்டால் ஜெனிவா செல்வோம்! – ரிஷாட் எச்சரிக்கை appeared first on TamilStar.com.

போர்க்குற்ற விவகாரங்களில் வெளிநாட்சக்திகளின் தலையீட்டுக்கு இடமில்லை! – ரவி கருணாநாயக்க

Posted: 12 Jun 2017 08:26 AM PDT

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்ய அனுமதியளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளையோ அல்லது கண்காணிப்பாளர்களையோ இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டில் கடந்த அரசாங்கம் பல்வேறு சர்வதேச நிபந்தனைகளுக்கு இணங்கியிருந்தது. இதனால் இலங்கை சர்வதேச ரீதியில் சில விடயங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேசத்தின் இலக்காக மாறியிருந்த இலங்கையை […]

The post போர்க்குற்ற விவகாரங்களில் வெளிநாட்சக்திகளின் தலையீட்டுக்கு இடமில்லை! – ரவி கருணாநாயக்க appeared first on TamilStar.com.

இன்று யாழ். வருகிறார் ஜனாதிபதி – ஊடகங்களுக்கு தடை!

Posted: 12 Jun 2017 08:19 AM PDT

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு இன்று செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தை கடந்த மே மாதம் 30 ஆம் திகதி […]

The post இன்று யாழ். வருகிறார் ஜனாதிபதி – ஊடகங்களுக்கு தடை! appeared first on TamilStar.com.

விசாரணைக்குழுவின் பாலியல் குற்றச்சாட்டு – கிளிநொச்சி பொது அமைப்புகள் முதல்வருக்கு கண்டனக் கடிதம்!

Posted: 12 Jun 2017 08:16 AM PDT

கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவி ஒருவர், பாடசாலை அதிபரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அபாண்டமானது, அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என பிரதேசத்தைச் சேர்ந்த பதினொரு பொது அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. அத்தோடு பாரதிபுரம் பாடசாலையில் அக்காலப்பகுதியில் விசாரணைகுழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் போன்று எவையும் […]

The post விசாரணைக்குழுவின் பாலியல் குற்றச்சாட்டு – கிளிநொச்சி பொது அமைப்புகள் முதல்வருக்கு கண்டனக் கடிதம்! appeared first on TamilStar.com.

ஞானசாரரை மறைத்து வைத்துள்ள முக்கிய அரசியல்வாதி! உண்மையை கூறிய திஸ்ஸ

Posted: 12 Jun 2017 08:13 AM PDT

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே மறைத்து வைத்துள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முக்கிய அரசியல்வாதி ஒருவர் இந்த பிக்குவை மறைத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் மறைத்துள்ள அரசியல்வாதி யார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால், இந்த உண்மையை […]

The post ஞானசாரரை மறைத்து வைத்துள்ள முக்கிய அரசியல்வாதி! உண்மையை கூறிய திஸ்ஸ appeared first on TamilStar.com.

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் பிக்குகள் அல்ல! – சந்திரிகா

Posted: 12 Jun 2017 08:09 AM PDT

இனவாதத்தை தூண்டும் காவியுடை தரித்தவர்களை நான் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ” காவியுடை அணிந்த சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் இனவாத மதவாத அடிப்படையிலேயே செயற்படுகின்றார்கள். அவ்வாறான நபர்களை நான் பௌத்த பிக்குகள் என கூறுவதில்லை. காவி உடை தரித்தால் கௌதம புத்தரின் கொள்கைகளை பின்பற்றி அதன் வழி நடக்க வேண்டும் அதனை எமக்கு சொல்லி கொடுக்க வேண்டும். […]

The post இனவாதத்தைத் தூண்டுபவர்கள் பிக்குகள் அல்ல! – சந்திரிகா appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™