Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சாவித்ரி படத்தில் சமந்தாவுக்கு கௌரவ வேடம்

Posted:

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் நம்பர் ஒன் நடிகையாக கோலோச்சியவர் 'நடிகையர் திலகம்' சாவித்ரி. மகாநதி என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கு பட இயக்குனரான நாக் அஸ்வின் இப்படத்தை தெலுங்கில் இயக்குகிறார். அந்தப் படத்தை தமிழ், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் மூன்று ...

வேதாளம் சாதனையை முறியடித்த ஸ்பைடர்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியிடவிருந்தனர். தெலுங்குப் பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் மற்றும் கன்னட தயாரிப்பாளரும், ராஜ்குமாரின் மனைவியுமான பர்வதம்மா ஆகியோரின் மறைவால் 'ஸ்பைடர்' படத்தின் டீஸர் வெளியீட்டை ரத்து செய்துள்ளனர்.
பின்னர் இன்று (ஜூன் 1) காலை 10.30 ...

தொடரும் சண்டைக்கோழி-2 சஸ்பென்ஸ்

Posted:

10 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'சண்டக்கோழி'. இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் இந்தப்படத்தில் பணியாற்றியபோது விஷால் - லிங்குசாமி இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், இருவரும் எங்காவது நேரில் பார்த்தால் கூட பேசாமல் முறைத்துக்கொண்டு போவார்கள் என்று செய்திகள் வந்தன. அந்தளவுக்கு கொளுந்துவிட்டு எரிந்த விரோதம் காலப்போக்கில் ...

நரகாசுரன்-ல் இணைந்த சந்தீப் கிஷன்

Posted:

கடந்த வருடம் வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகவும் கவனிக்கப்பட்டவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் படத்தை அவரே தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.
'நரகாசூரன்' என பெயரிடப்பட்ட இந்த படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டினார் இயக்குநர் கௌதம் மேனன். ...

தாத்தா பிறந்தநாளில் அருள்நிதி பட டீசர்

Posted:

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிருந்தாவனம்'. குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது ஒரு பக்கம், எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட்டும் வசூலும் இல்லாமல்போனது இன்னொரு பக்கம் என பிருந்தாவனம் சோக அனுபவமாகிவிட்டது.
இந்தப் படத்தை நம்பிக்கொண்டிருந்த அருள்நிதியின் அடுத்த நம்பிக்கை, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ...

கீர்த்தி சுரேஷின் 'சாவித்ரி' லுக் : பவன் கல்யாண் ரசிகர்கள் கவலை..!

Posted:

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'மகாநதி' படத்தில் சாவித்ரியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இரண்டு தினங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் லீக்கானது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேசமயம் இன்னொரு பக்கம் ...

மம்முட்டி படத்திற்கு இளம்பெண் தேடும் ஜாய் மேத்யூ..!

Posted:

கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் 'ஷட்டர்'. மலையாள இயக்குனர் ஜாய் மேத்யூ இந்தப்படத்தை இயக்கிருந்தார். தமிழில் கூட இந்தப்படம் ரீமேக்கானது. ஆனால் இப்படி ஒரு ஹிட்டை கொடுத்த பின்னர், அடுத்ததாக படம் எதுவும் இயக்காமல், கதையும் எழுதாமல் மிகவும் பிசியான குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார் ஜாய் மேத்யூ. ...

தாசரி நாராயணராவ் சாவில் சந்தேகம் கிளப்பும் மருமகள்..!

Posted:

அதிக படங்களை இயக்கியவர் என்கிற உலக சாதனைக்கு சொந்தமான பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ் நேற்று முன்தினம் காலமானார். நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.. நேற்று தாசரி நாராயணராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது மருமகள் சுசீலா தனது மாமானாரின் சாவில் சந்தேகம் உள்ளதாக தான் கருதுவதாக ...

'காலா' ஜீப் நம்பரில் இப்படி ஒரு விஷயம் ஒளிந்துள்ளதா.?

Posted:

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் 'காலா' படத்தின் சில புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.. மஹிந்திரா தர் வகையை சேர்ந்த அந்த ஜீப்பை மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் அருண் மஹிந்திரா வாங்கி தங்களது ஆட்டோ மியூசியத்தில் வைப்பதாக சொலும் அளவுக்கு அந்த ஜீப்பும் புகழ்பெற்றுவிட்டது. எம்.ஹெச் என்கிற ...

சஞ்சய் தத் மீது அலாதி பிரியம் கொண்டிருந்த ரவீணா

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகை ரவீணா டாண்டன். தமிழில் ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் மாத்தர் என்ற படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து இப்போது சாப் என்ற படம் வெளியாக உள்ளது. ஆகையால் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் ரவீணா. சமீபத்தில் சாப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ...

உண்மை சம்பவ கதையில் அக்ஷ்ய் குமார்

Posted:

சமீபகாலமாக அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான அநேக படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளன. ஏர்லிப்ட், ருஸ்டம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்துள்ள அக்ஷ்ய், இப்போது டாய்லட், பேடுமேன் போன்ற வித்தியாசமான சமூகம் சார்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்ஷ்ய், அடுத்தப்படியாக பொறியாளர் ஜேஎஸ் கில் ...

காமராஜர் அரங்கத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா

Posted:

இசைஞானி இளையராஜாவுக்கு நாளை(ஜூன் 2-ம் தேதி) 73வது பிறந்தநாள். இதையொட்டி சென்னை, காமராஜர் அரங்கத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 9 வரை 12மணிநேரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் இளையராஜாவும் கலந்து கொள்கிறார். காலையில் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. ...

'காலா'வில் 'ஜரீனா'வாக நடிக்கும் ஹுமா குரேஷி

Posted:

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமானது. தினமும் பெரும் திரளான மக்கள் மத்தியில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படத்தில் ஹுமா குரேஷி நாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்த ...

15 மொழிகளில் '2.0' படத்தை டப்பிங் செய்ய திட்டம்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படம் '2.0'. இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க மட்டும் ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகும் என்பதால் ...

'சங்கமித்ரா'வாக நடிக்க ஆசைப்படும் நீது சந்திரா

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிக்க 300 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'சங்கமித்ரா' படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அத்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த படத்தின் துவக்க விழாவிலும் கலந்து கொண்டார். இதனிடையே, சில நாட்களுக்கு முன் 'சங்கமித்ரா' படத்தில் ...

தங்கல்-ன் அடுத்த டார்க்கெட் ஜப்பான் - தென் அமெரிக்கா

Posted:

அமீர்கான் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் தங்கல். மல்யுத்த வீரர் மாவீர்சிங் போகத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்ட இப்படம் இந்தியாவை விட அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் தான் என்னவோ சீனாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி ...

சைப் அலிகான் படத்தில் இணைந்த சித்ரங்கடா சிங்

Posted:

இயக்குநர் கெளரவ் கே சாவ்லா இயக்கும் புதிய படம் பாஸார். சைப் அலிகான் ஹீரோவாக நடிக்கிறார். சைப், ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். படத்தின் ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் அரசு செயலாளராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஸார் படத்தில் மற்றுமொரு ஹீரோயின் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமல்ல, நடிகை ...

ஜூன் 11-ல் "டாய்லட்" டிரைலர் ரிலீஸ்

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை மையமாக வைத்து "டாய்லட் ஏக் பிரேம் கதா" என்ற படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் குமார், பூமி பதேன்கர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஸ்ரீ நாராயண் சிங் இயக்க, அக்ஷ்ய் குமார் மற்றும் நீரஜ் பாண்டே இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் ...

ரொமான்ட்டிக், திரில்லர் படத்தில் சஞ்சய் தத்

Posted:

சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கியிருக்கும் சஞ்சய் தத், முதற்கட்டமாக பூமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில், ஓமங் குமாரிடம் உதவியாளராக இருந்த ஆரம்பப் சிங் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு ரொமான்ட்டிக், ...

சரவணன் மீனாட்சி இயக்குனருக்காக சீரியலில் நடிக்கிறேன் : ஆலியா மானசா

Posted:

சமீபத்தில் திரைக்கு வந்த ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ஆலியா மானசா. அதைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் அவரோ, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் என்ட்ரியானது குறித்து அவர் கூறுகையில், ஜூலியும் நான்கு பேரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™