Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதராக ஸ்டீஃபான் டியோன் : எதிர்கட்சிகள் அதிருப்தி

Posted: 03 May 2017 07:34 AM PDT

ஸ்டீஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கனடாவின் சிறப்புத் தூதராக நியமிக்க்பபட்டுள்ள நிலையில், அவரின் அந்த நியமனம் தொடர்பில் எதி்ர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் முதலில் கனடாவின் வெளிவிவகார அமைச்சராக ஸ்டீஃபான் டியோன் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரின் அமைச்சுப் பதவி கிரிஸ்டியா ஃபிரிலாட்ரிற்கு மாற்றி வழங்கப்பட்டதுடன், ஸ்டீஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யேர்மனிக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதராகவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ […]

The post ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதராக ஸ்டீஃபான் டியோன் : எதிர்கட்சிகள் அதிருப்தி appeared first on TamilStar.com.

ஸ்டீல்ஸ் அவனியூ விபத்தில் இருவர் படுகாயம்

Posted: 03 May 2017 07:32 AM PDT

ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். Don Mills வீதி மற்றும் Steeles Avenue பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில், இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்ததாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும், மற்றையவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், காவல்த்துறையினர் […]

The post ஸ்டீல்ஸ் அவனியூ விபத்தில் இருவர் படுகாயம் appeared first on TamilStar.com.

ஐ.நா பிரதிநிதியிடம் விசனத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்!

Posted: 03 May 2017 07:30 AM PDT

மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐக்கிய நாடுகள் சபை, போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவதுடன் பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐ.நா. அபிவிருத்தி செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்கும் இடையே முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேற்படி சந்திப்பின் […]

The post ஐ.நா பிரதிநிதியிடம் விசனத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்! appeared first on TamilStar.com.

இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் நாடாளுமன்றில் இருக்கின்றார்கள் : தயாசிறி

Posted: 03 May 2017 07:27 AM PDT

இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் இந்த நாடாளுமன்றில் இருக்கின்றார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இரட்டைக் குடியுரிமையின் அடிப்படையில் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிட்டால் அதே சட்டத்தின் கீழ் மேலும் சிலரும் உறுப்புரிமையை இழக்க நேரிடலாம். இரட்டைக் குடியுரிமையை கொண்டிருப்பதனால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி […]

The post இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் நாடாளுமன்றில் இருக்கின்றார்கள் : தயாசிறி appeared first on TamilStar.com.

முழு நாட்டையும் ஸ்தம்பிக்க வைக்க மஹிந்த திட்டம்!

Posted: 03 May 2017 07:23 AM PDT

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, ஒரு நாள் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தி நாடு முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்வதற்கு ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. காலி முகத்திடலில் நடத்திய மே தினக்கூட்டத்துக்குச் சமுகமளித்திருந்த சனத்திரளைப் பார்த்த பின்னரே, ஒன்றிணைந்த எதிரணி மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால், தங்களுக்கு எதிராக எவ்வாறான தீர்மானத்தை எடுத்தாலும், அதற்கு முகம்கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளதாகவும் அறிமுடிகிறது. மே தினத்தன்று தம்முடைய பலத்தை நிரூபிப்பதற்கே, […]

The post முழு நாட்டையும் ஸ்தம்பிக்க வைக்க மஹிந்த திட்டம்! appeared first on TamilStar.com.

பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிக்க எந்த தீர்மானமும் எடுக்கவில்லை: ரணில்!

Posted: 03 May 2017 07:17 AM PDT

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணியின்நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதேபிரதமர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பிரதமர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் சிறப்பு இராணுவம் அமைப்பதற்கு தற்போது எந்த தேவையும் இல்லை. கடந்தஅமைச்சரவையின் போது குப்பை பிரச்சினை தொடர்பிலேயேகலந்துரையாடப்பட்டது. பொன்சேகாவைபற்றியல்ல என ரணில் […]

The post பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிக்க எந்த தீர்மானமும் எடுக்கவில்லை: ரணில்! appeared first on TamilStar.com.

பொன்சேகா தலைமையில் அத்தியாவசியச் செயலணி உருவாக்கப்படும் : ஜனாதிபதி திட்டவட்டம்

Posted: 03 May 2017 07:13 AM PDT

அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள் என்று அமைச்சர்களைக் கடிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணி நிறுவப்படும் முடிவில் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட, சரத் பொன்சேகா விவகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது மக்களுக்கான அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்புக்களையும் உள்ளடக்கிய செயலணியை […]

The post பொன்சேகா தலைமையில் அத்தியாவசியச் செயலணி உருவாக்கப்படும் : ஜனாதிபதி திட்டவட்டம் appeared first on TamilStar.com.

மகிந்த ராஜபக்ச­வின் மே தினக் கூட்டம் நல்லாட்சிக்கான வால் முறுக்கல்!

Posted: 03 May 2017 07:10 AM PDT

இப்போதெல்லாம் தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் உரிமைக்கான; ஊதியத்துக்கான; உழைப்புக்கான நாளாக இல்லாமல், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை அடையாளப்படுத்துகின்ற நாளாகி விட்டது. மே தினத்தில் அரசியல் கட்சிகள் நடத்துகின்ற ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மக்கள் மத்தியில் தமக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை அரசியல் கட்சிகள் காட்டுகின்ற நாளாக மே தினத்தைக் கூறிக் கொள்ளலாம். அந்த வகையில், நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஏகப்பட்ட மக்கள் கூட்டம் கலந்து […]

The post மகிந்த ராஜபக்ச­வின் மே தினக் கூட்டம் நல்லாட்சிக்கான வால் முறுக்கல்! appeared first on TamilStar.com.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைக்க முதலமைச்சர் முயற்சி!

Posted: 03 May 2017 07:06 AM PDT

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் காணி விவகாரம் குறித்து இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த 30ஆம் திகதி வடக்கு முதலமைச்சர், வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குரல் அமைப்பின் 8 மாவட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதியைச் சந்திக்க […]

The post காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைக்க முதலமைச்சர் முயற்சி! appeared first on TamilStar.com.

மகிந்தவை தண்டிக்க களத்தில் பொன்சேகா : காப்பதற்கு மூன்று புதல்வர்களும் மக்களும்!

Posted: 03 May 2017 07:03 AM PDT

மூன்று புதல்வர்கள் இருக்கும் வரை மகிந்த ராஜபக்சவை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம் பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவை தண்டிக்க போவதாக தெரிவித்திருந்தார். அவரின் அந்தக் கருத்து மகிந்த மீது அவர் கொண்டிருந்த வெறுப்பை காட்டுகின்றது. அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அதேபோல் ஒரு […]

The post மகிந்தவை தண்டிக்க களத்தில் பொன்சேகா : காப்பதற்கு மூன்று புதல்வர்களும் மக்களும்! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™