Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கனேடிய றோயல் வங்கி கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றம்

Posted: 02 May 2017 08:31 AM PDT

கனேடிய றோயல் வங்கி கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. King Street Westஇல், Bay street மற்றும் Yonge street ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் குறித்த வங்கி அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது. உயர் மின் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டதுடன், அங்கிருந்து பெரும் திரளாக கரும்புகை வெளியேறிய நிலையில், உடனடியகாவே அந்த கட்டத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக நேற்று இரவு […]

The post கனேடிய றோயல் வங்கி கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றம் appeared first on TamilStar.com.

ரொரன்ரோ பெண் பெலீஸ் நாட்டில் சடலாமாக மீட்பு

Posted: 02 May 2017 08:29 AM PDT

பெலீஸ்(Belize) நாட்டில் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த ரொரன்ரோவைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரொரன்ரோவைச் சேர்ந்த 52 வயதான குறித்த அந்த பெண்ணும், அவரது காதலரான அமெரிக்காவைச் சேர்நத 36 வயது ஆணும், மத்திய அமெரிக்க நாடான பெலீஸில் காணாமல் போயிருந்தனர். அதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக அவர்களைத் தேடி வந்த அந்த நாட்டுக் காவல்த்துறையினர், அங்குள்ள கரும்புத் தோட்டம் ஒன்றினுள் இருவரினதும் சடலங்களை நேற்றுக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த […]

The post ரொரன்ரோ பெண் பெலீஸ் நாட்டில் சடலாமாக மீட்பு appeared first on TamilStar.com.

மகிந்தவின் மே தினக் கூட்டத்திற்கு சென்றவர்களின் பதவிகளுக்கு ஆபத்து

Posted: 02 May 2017 08:26 AM PDT

கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, இவர்கள் மகிந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று கலந்துக்கொண்டுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 […]

The post மகிந்தவின் மே தினக் கூட்டத்திற்கு சென்றவர்களின் பதவிகளுக்கு ஆபத்து appeared first on TamilStar.com.

சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணையும் – ஜோன் செனவிரட்ன

Posted: 02 May 2017 08:24 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து கொள்ளும் என தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். கண்டி கெட்டம்பேயில் நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை ஜோன் செனவிரட்ன வெளியிட்டிருந்தார். அடுத்த மே தினக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேடையில் அமர்ந்திருந்த வேளையில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இதனைக் […]

The post சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணையும் – ஜோன் செனவிரட்ன appeared first on TamilStar.com.

பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் சம்பந்தனும் ஒருவர்! – கஜேந்திரன்

Posted: 02 May 2017 08:23 AM PDT

முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ்மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு நேற்றைய தினம் சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் உட்படாமல் எமது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே அன்றைய தினம் எம்மை பாதுகாத்ததிருந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை கூட தமிழ் மக்கள் […]

The post பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் சம்பந்தனும் ஒருவர்! – கஜேந்திரன் appeared first on TamilStar.com.

காலிமுகத்திடல் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை! – எஸ்.பி.திசாநாயக்க

Posted: 02 May 2017 08:19 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கட்சி கொள்கையை மீறி காலி முகத்திடலில் பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க இடமளிக்கமாட்டோம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post காலிமுகத்திடல் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை! – எஸ்.பி.திசாநாயக்க appeared first on TamilStar.com.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியவர் மனக் குழப்பத்தில் இருக்கின்றார்

Posted: 02 May 2017 08:16 AM PDT

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று தி.மு.க கட்சியின் ஊடகப் பேச்சாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே டி.கே.எஸ். இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், "தி.மு.க போட்ட பொய் வழக்கின் காரணமாக நான் சிறையில் இருக்கிறேன் என்கிறார் வைகோ. தி.மு.கவின் வழக்கால்தான் தான் சிறையில் இருப்பதாக காட்டிக்கொள்ள வைகோ முயற்சிக்கின்றார். வைகோ மனக் குழப்பத்தில் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது” என்று […]

The post விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியவர் மனக் குழப்பத்தில் இருக்கின்றார் appeared first on TamilStar.com.

இன்று நாம் போராடினால்த்தான் நாளை எம் வாரிசுக்கள் அதன் நன்மையைப் பெறுவார்கள்! – விக்னேஸ்வரன்

Posted: 02 May 2017 07:03 AM PDT

இன்று நாம் போராடினால்த்தான் நாளை எம் வாரிசுக்கள் அதன் நன்மையைப் பெறுவார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவாளர்களின் மேன தினப் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும், பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றே அப்போதைய தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்பு […]

The post இன்று நாம் போராடினால்த்தான் நாளை எம் வாரிசுக்கள் அதன் நன்மையைப் பெறுவார்கள்! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த மஹிந்தவுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை

Posted: 02 May 2017 07:00 AM PDT

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் 2005ஆம் ஆண்டு பெருந்தொகை பணத்தை வழங்கிய மஹிந்தவை வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொரளை, கெம்பல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொன்சேகா […]

The post விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த மஹிந்தவுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை appeared first on TamilStar.com.

வடக்கு மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை! – சுரேஸ் பிரேமசந்திரன்

Posted: 02 May 2017 06:58 AM PDT

போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு மக்களின் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘போரின் பின்னரான காலப் பகுதியில் வடக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் எதற்கும் தீர்வு வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை. வடக்கு மக்களுக்கு சொந்தமான […]

The post வடக்கு மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை! – சுரேஸ் பிரேமசந்திரன் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™