Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு... அடி! விடுதலை உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Posted: 08 May 2017 10:06 AM PDT

புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் இருந்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை விடுவித்து, ஜார்க்கண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், நேற்று ரத்து செய்தது. 'அனைத்து வழக்குகளிலும், லாலு பிரசாத் யாதவ், சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், லாலுவின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு ...

வசமாக சிக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் ஆதாரம் போலீசில் ஒப்படைப்பு

Posted: 08 May 2017 10:09 AM PDT

புதுடில்லி : ''முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த, 400 கோடி ரூபாய் ஊழல் வழக்கின் விசாரணையை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே தாமதப்படுத்தினார்,'' என, குற்றஞ்சாட்டியுள்ள, டில்லி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, இது தொடர்பான ஆதாரங்களை, ஊழல் தடுப்பு அமைப்பிடம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. கட்சியில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து கபில் மிஸ்ரா சமீபத்தில் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 'அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து, ...

நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை; நீதிபதி கர்ணன் மீண்டும் அதிரடி

Posted: 08 May 2017 10:17 AM PDT

கோல்கட்டா: ''எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ள, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் மற்றும், ஏழு நீதிபதிகளுக்கு, தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது,'' என, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ணன், நேற்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான, கர்ணன் மீது, சுப்ரீம் கோர்ட் சுயமாக கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
மனநல மருத்துவப் பரிசோதனை
நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ...

தலைமையின்றி தவிக்கும் அ.தி.மு.க., கடும் குழப்பத்தில் தேசிய கட்சிகள்

Posted: 08 May 2017 10:26 AM PDT

ஜனாதிபதி தேர்தல் குறித்து, குட்டி கட்சிகள் கூட முக்கியத்துவம் பெற்று, தீவிர ஆலோசனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பலம் வாய்ந்த, அ.தி.மு.க.,வை எவ்வாறு அணுகுவது என்ற குழப்பத்தில், தேசிய கட்சிகள் சிக்கித் தவிக்கின்றன.

ஜூலையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி, டில்லியில், அரசியல் கட்சிகளின் அணி சேரும் படலம் துவங்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் தரப்பை காட்டிலும், சற்றே கூடுதலான ஓட்டு சதவீதம், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வசம் உள்ளது.
அதிக ஓட்டு
தமிழகத்தின் ஆளும் கட்சியும், 59 ஆயிரத்து, 224 ஓட்டுகளை, ஜனாதிபதி ...

மது கடைகளுக்கு எதிராக போராட்டம்; கைது செய்ய அரசுக்கு ஐகோர்ட் தடை

Posted: 08 May 2017 10:36 AM PDT

சென்னை: 'மதுக் கடைகள் திறக்கக் கூடாது என, எங்கெல்லாம் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றியதோ, அங்கெல்லாம், மதுக் கடைகளை திறக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், குடியிருப்பு பகுதிகளில் மதுக் கடைகளை திறக்கவும், பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல், போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யவும், உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர், கே.பாலு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகள் இருக்கக் கூடாது; அங்கு ...

மந்திரி விஜயபாஸ்கரின் நண்பர் மரணத்தில் மர்மம்! .. தோட்டத்தில் பிணமாக கிடந்தார்

Posted: 08 May 2017 10:42 AM PDT

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் கட்டட ஒப்பந்ததாரருமான நாமக்கல் சுப்ரமணியம், மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். விஜயபாஸ்கர் நண்பர் என்பதால் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி வந்த நிலையில் நாமக்கல் அருகே பண்ணை வீட்டில் அவர் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல், ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசித்தவர் அரசு கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம், 58. இவர் புதுக்கோட்டையில் ஒப்பந்த அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டடப் பணியை மேற்கொண்டு வந்தார்.கடந்த ஏப்ரல் 7ல், தமிழக ...

கருணாநிதியை சந்திக்கிறார் சோனியா

Posted: 08 May 2017 10:47 AM PDT

கருணாநிதியின், 94வது பிறந்த நாள் மற்றும் சட்டசபை வைர விழாவில் பங்கேற்க, ஜூன், 3ல், சென்னை வரும், காங்., தலைவர் சோனியா, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதியை சந்திக்கிறார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, 2016 டிச., முதல், உடல்நலம் குன்றி, வீட்டில் இருக்கிறார். துணைவி ராஜாத்தி, மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோர் அவரை கவனித்து வருகின்றனர். ராஜாத்தி, செல்வி வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் திரவ உணவுகள் மட்டுமே, அவருக்கு வழங்கப்படுகின்றன.
உடல்நலம் விசாரிக்க
சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறும், கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் பங்கேற்க, ...

பா.ஜ., அரசின் சாதனை மலரை வெளியிடுகிறது பழனிசாமி அரசு

Posted: 08 May 2017 10:58 AM PDT

தமிழக அரசின் சாதனைகளை மலர்களாக வெளியிட்டு வந்த, மாநில செய்தி மக்கள் தொடர்பு துறை, மத்திய பா.ஜ., அரசின் மூன்றாண்டு சாதனைகளை, மலராக வெளியிட முடிவு செய்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், வருமான வரித்துறையினரின் பிடியிலிருந்து தப்பவும், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
பா.ஜ., ஆட்டி வைக்கிறது
எனவே, மத்திய அரசையோ, மத்திய அமைச்சர்களையோ, விமர்சிக்க வேண்டாம் என, அமைச்சர்களுக்கு ...

உள்ளாடையை அகற்ற உத்தரவு : 'நீட்' தேர்வில் அநியாயம்

Posted: 08 May 2017 11:45 AM PDT

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணுாரில், 'நீட்' தேர்வு எழுதச் சென்ற பெண்ணின், மேல் உள்ளாடையை அகற்றும்படி, அதிகாரிகள் கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நீட்' எனப்படும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நேற்று முன்தினம், நாடு முழுவதும் நடந்தது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, மா.கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடக்கும், கேரளாவில், கண்ணுார் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு, 19 வயது மாணவி சென்றிருந்தார்.சி.பி.எஸ்.,இ., கல்வி முறை, ஆடை விதிகளின்படி,அந்த மாணவி, மேல் உள்ளாடையை அகற்றி விட்டு தேர்வு எழுதும்படி, தேர்வு ...

'போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதாது'

Posted: 08 May 2017 12:09 PM PDT

புதுடில்லி : 'குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தற்கொலைப் படைக்கு சமமானவர்கள்; இந்த குற்றத்துக்கு, வெறும் அபராதம் மட்டும் விதித்தால் போதாது, சிறையில் அடைக்க வேண்டும்' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.
தீர்ப்பு:
குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய, டில்லியைச் சேர்ந்தவருக்கு, ஐந்து நாட்கள் சிறை, ஆறு மாதங்களுக்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் மற்றும், 2,000 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, அவர், டில்லி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தன்னை சிறையில் அடைப்பதால், மிகப் பெரிய ...

அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு

Posted: 08 May 2017 01:17 PM PDT

ஆமதாபாத்: குஜராத் துணை முதல்வர் மகன் அளவுக்கு அதிகமான மது அருந்தியிருந்ததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

குஜராத்தில் பா.ஜ.தலைமையில் விஜய் ரூபானி ஆட்சி நடக்கிறது. இம்மாநில துணை முதல்வராக நிதின்பட்டேல் உள்ளார். இவருடைய மகன் ஜெயிமான் பட்டேல்,29, ரியல் எஸ்டே் புரோமோட்டராக உள்ளார். இவர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட கத்தர் ஏர்லைன் விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று இரவு ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு குடும்பத்தினருடன் வந்திருந்தார். . அப்போது ...

காஷ்மீரில் 200 பயங்கரவாதிகள் ; ஐ.ஜி., தகவல்

Posted: 08 May 2017 02:03 PM PDT

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 200 பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர் என அம்மாநில ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.ஸ்ரீநகரில் காஷ்மீர் மாநில ஐ.ஜி. எஸ்.ஜே. எம்.கிலானி கூறியது, கடந்த ஒரு வருடத்தில் 95 இளைஞர்கள் பயங்கராத அமைப்பில் இணைந்து விட்டனர். தற்போது காஷ்மீரில் 200 பயங்கரவாதிகள் இயங்கி கொண்டிருக்கின்றனர். இவர்களின் 110 பேர் உள்ளூர்வாசிகள். மீதமுள்ளவர்கள் வெளிநாட்டினர். இதற்கு காரணம் பணத்தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை ஆகும். கடந்த டிசம்பர் 8-ம்தேதி முதல் கடந்த மே.-1 2007-ம் ஆண்டு இடைவெளியில் காஷ்மீரில் பல்வறு இடங்களில் 13 வங்கி கொள்ளை சம்பவங்களும், 9 வங்கி ...

கோடநாடு காவலாளி கொலையாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்த திட்டம்

Posted: 08 May 2017 02:25 PM PDT

கோவை : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக, காயமடைந்த மற்றொரு காவலாளி மூலம், கோவை சிறையில், அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.

கோடநாடு எஸ்டேட் உள்ளே புகுந்த, 11 பேர் கும்பல், காவலாளி ஓம் பகதுாரை கொலை செய்தது; மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுாரை சரமாரியாக தாக்கியது. இதில், காயங்களுடன் உயிர் தப்பியவர், தற்போது, பணிக்கு திரும்பியுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக, கேரளாவில் உள்ள ஹவாலா கும்பலைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், சங்கனாசேரியைச் சேர்ந்த சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™