Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தினமும் 1,000 லோடு 'எம் சாண்ட்' கடத்தல்: லாபம் ஈட்ட மணல் மாபியாக்களின் புதிய 'ரூட்'

Posted: 31 May 2017 08:15 AM PDT

ஆற்று மணல் கடத்தலில் கொள்ளை லாபம் பார்த்த மாபியாக்கள், தற்போது, 'எம் சாண்ட்' என்ற, கருங்கல் துகள்களால் தயாரிக்கப்படும், மாற்று மணலை, கர்நாடகாவுக்கு, கடத்தத் துவங்கி உள்ளனர். தினமும், 1,000 லோடு கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும், புதிதாக சுற்றுச்சூழல் அனுமதியுடன் திறக்கப்படும் குவாரிகளில், அரசு நேரடியாக மணல் விற்பனை செய்கிறது. தட்டுப்பாட்டை சமாளிக்க, ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் சாண்ட் என்ற, மாற்று மணல் விற்பனை ஊக்கப்படுத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, கட்டுமான நிறுவனங்கள், எம் சாண்ட் பயன்படுத்துவதில், ஆர்வம் ...

டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம்

Posted: 31 May 2017 08:19 AM PDT

சென்னை: போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில், ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். இதில், தேர்வரின் அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும். இதில், முந்தைய, 'குரூப் - 2' தேர்வு அறிவித்த போது, ஒருமுறை பதிவுபட்டியலில் இருந்த,நத்தமன், மலையமன் ஆகிய ஜாதிகளின் பெயர், தற்போதைய தேர்வின் போது இல்லை என, தேர்வர்கள் ...

முகத்தை மூட ஆண்களுக்கு தடை

Posted: 31 May 2017 09:46 AM PDT

ஆக்ரா: உ.பி., மாநிலம், ஆக்ராவில், 18 - 30 வயதுள்ள ஆண்கள், சாலையில் செல்லும் போது, முகத்தை மூடக் கூடாதென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், பட்டப்பகலில், ஒரு நகைக் கடையில் நுழைந்த ஒரு கும்பல், அதன் உரிமையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, நான்கு கோடி ரூபாய் மதிப் புள்ள தங்க நகைகளைகொள்ளையடித்துச் சென்றது.இதைத் தொடர்ந்து, மேலும் சில கொள்ளை சம்பவங்களும், பகலில் நடந்தன. இதையடுத்து, 18 - 30 வயதுள்ள ஆண்கள் சாலையில் செல்லும்போது, துணி அல்லது ...

காங்., தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு'

Posted: 31 May 2017 10:01 AM PDT

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை யில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, காங்., தலைவர் பாபா சித்திக் உள்ளிட்ட பலரது இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று, அதிரடி சோதனை களில் ஈடுபட்டனர்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இங்கு, முந்தைய காங்., ஆட்சியில், மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில், குடிசைப் பகுதி களை மறுசீரமைக்கும் பணிகளில் நிதி முறை கேடுகள்நடந்ததாக, போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். போலி நிறுவனங்கள் துவக்கப்பட்டு, அவற்றின் மூலம் நிதி ...

ஸ்பெயின் தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

Posted: 31 May 2017 10:27 AM PDT

மேட்ரிட்: ''பல்வேறு துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகளை வாரி வழங்கும் இந்தியாவில், முதலீடு செய்ய வாருங்கள்,'' என, ஸ்பெயின் நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆறு நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது, மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில், பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த, 1992க்கு பின், ஸ்பெயின் செல்லும்,முதல் இந்திய பிரதமரான
மோடி, அந்நாட்டின் மூத்த தலைவர்களை சந்தித்து, இருதரப்பு உறவு மேம்பாடு, ...

அதிரடி! பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை!

Posted: 31 May 2017 10:31 AM PDT

ஜெய்ப்பூர்: இறைச்சிக்காக கால்நடை விற் பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ள பரபரப்பான சூழ்நிலையில், 'பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்; அதை கொன்றால், ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் ஐகோர்ட், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. நாட்டிலேயே, பசு பாதுகாப்புக்கென, தனி அமைச்சகம் உள்ள ஒரு மாநிலமாக ராஜஸ் தான் உள்ளது. பசு பாதுகாப்புக்காக, ஜெய்ப் பூருக்கு அருகே, ஹிங்கோனியாவில், மிகப் பெரிய கோசாலை எனப்படும், பசு பாதுகாப் பகத்தை, மாநில அரசு ...

தி சென்னை சில்க்ஸில் பயங்கர தீ: தீயை அணைக்க நாள் முழுதும் போராட்டம்

Posted: 31 May 2017 10:40 AM PDT

சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள, பிரபல ஜவுளி நிறுவனமான, சென்னை சிலக்ஸ் கட்டடத்தில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவியதில், அக்கட்டடத்தில் உள்ள ஏழு மாடிகளும் பற்றி எரிந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள், தங்க நகைகள், தீயில் கருகின. கட்டுக்கடங்காத தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் நாள் முழுவதும் போராடினர்.சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஏழு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தில், குமரன் தங்க மாளிகை என்ற நகை கடையும், சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி கடையும் செயல்பட்டு வருகின்றன.இரண்டு கடைகளுக்கும், ...

இன்ஜினியரிங் படிக்க தமிழக மாணவர்களுக்கு...ஆர்வமில்லை!

Posted: 31 May 2017 10:59 AM PDT

இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. அதில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.50 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறை வாக பதிவு செய்துள்ளனர்; அதே நேரத்தில், கலை, அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க் கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, மே, 1 முதல், 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முடிந்தது. இதில், 1.50 லட்சம் பேர், ...

'இ - சந்தை'யில் இணையுது அரசு: விவசாய குழுக்கள் அமைப்பு

Posted: 31 May 2017 11:02 AM PDT

மத்திய அரசின், இ - சந்தை திட்டத்தில் இணைய வசதியாக, மாநிலம் முழுவதும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைக்கும் பணிகளை, வேளாண் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

நெல், கரும்பு உள்ளிட்ட சில வகை உணவுப் பொருட்களுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகள், விலை நிர்ணயம் செய்கின்றன. மற்ற உணவு பொருட்களுக்கு, இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதால், பொருட்களை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
விற்க முடியும்
இதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள வேளாண் விற்பனை மையங்களை, 'இ - சந்தை' மூலம் ஒருங்கிணைக்க, ...

தர வேண்டியது 192; தந்தது 69 டி.எம்.சி.,

Posted: 31 May 2017 11:57 AM PDT

மேட்டூர்: வரலாற்றில் முதல் முறையாக, கர்நாடகா, 2016 - 17ம் ஆண்டில் தான், மிக குறைந்தபட்சமாக, 69 டி.எம்.சி., நீர் மட்டும் வழங்கியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடகா, ஆண்டுதோறும் ஜூன், 1 முதல் மே, 31 வரை, 192 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணைக்கு வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 1 முதல், நேற்று வரை, 69, டி.எம்.சி., நீர் மட்டும் விடுவித்துள்ளது. மேட்டூர் அணை கட்டிய பின், கர்நாடகா, 2016 - 17ம் ஆண்டில் தான் மிக குறைந்த நீரை, தமிழகத்துக்கு விடுவித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை மட்டுமின்றி, சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் ...

இந்தோ - சீனா போரால் நிலங்களை பறிகொடுத்தவர்களுக்கு ரூ. 3000 கோடி இழப்பீடு

Posted: 31 May 2017 12:20 PM PDT

இடாநகர்: இந்தோ - சீன போரால் தங்களது நிலங்களை பறி கொடுத்த அருணாச்சல் பிரதேசவாசிகளுக்கு 55 ஆண்டுகளுக்கு பின்னர் இழப்பீடு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த 1962-ம் ஆண்டு இந்தியாவிற்கு-சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் நடந்தது இதில் அருணாச்ச்ல பிரதேச மாநிலத்தில் தவாங், மேற்குகெமங்க், சுபன்ஸ்ரீதிபாங்க், மேற்கு சயைாங்க உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராணுவம் கையகப்படுத்தியது. ஒரு மாதம் நடந்த இந்த போரில் இந்தியா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை குவித்து வைத்தது.

இப்போரால் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ...

மது பார்களுக்கு மீண்டும் அனுமதி: வருவாயை பெருக்க கேரளா திட்டம்

Posted: 31 May 2017 01:12 PM PDT

திருவனந்தபுரம்: கேரளாவில், மாநில அரசின் வருவாய் மற்றும் சுற்றுலாத்துறையை பாதிக்காத வகையில், புதிய மதுக்கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு ஈடுபட்டு உள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், இடதுசாரி முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், இதற்கு முன் ஆட்சி செய்த, காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, கேரளா முழுவதும், மது விற்பனையில் பல கெடுபிடிகளை ...

தனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்

Posted: 31 May 2017 02:07 PM PDT

'ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வரும் நிலையில், இந்த ஆண்டு, புதிய அம்சங்களை மட்டும், கூடுதல் இணைப்பாக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ...

'மத்திய அரசின் புது விதிமுறை; இடைத்தரகர் ஆதிக்கம் குறையும்'

Posted: 31 May 2017 02:39 PM PDT

கால்நடைகள் விற்பனை தொடர்பாக, மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையும் என, கூறப்படுகிறது.
விலங்கு நல ஆர்வலரான அருண் பிரசன்னா, தமிழக கால்நடை துறையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு செய்து, பெறப்பட்ட தகவல் குறித்து கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 100 கால்நடை சந்தைகள் மூலம், வாரத்திற்கு, 53 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாவதாக, கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கால்நடையின் விலை, 15 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டால், ஆண்டுக்கு, 26 லட்சம் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™