Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜிகா வைரஸ் அச்சுறுத்தல்: 10 முக்கிய அம்சங்கள்

Posted: 28 May 2017 02:27 AM PDT

குஜராத் மாநிலத்தில், மூன்று பேர் உலகை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது. அதே நேரத்தில், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், மூன்று பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். இந்த ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு, முதன் முதலில், 2015ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, 60 ஆண்டுகளுக்கு மேல் பரவி உள்ளது. குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ...

பெரிதும் எதிர்பார்த்த தென் மேற்கு பருவமழை நாளை... துவங்குகிறது!

Posted: 28 May 2017 09:52 AM PDT

பெரிதும் எதிர்பார்த்த தென் மேற்கு பருவ மழை, நாளை துவங்கும் என்ற அறிவிப்பு, நாடு முழுவதும் வறட்சியால் பாதித்த விவசாயி களுக்கு, மகிழ்ச்சியான தகவலாக அமைந்துள்ளது.

அத்துடன், பருவமழையின் துவக்கமாக, 'வங் கக்கடலில் உருவாகியுள்ள, 'மோரா' புயலால், மழை வெளுத்து வாங்கும்' என்ற, வானிலை ஆய்வு மைய கணிப்பும் ஆறுதல் தருவதாக உள்ளது.
நாடு முழுவதும், மார்ச் மாதத்தில் கோடைக் காலம் துவங்கியது. வெயிலின் தாக்கத்தால், தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசியது. மே, 4ல் துவங்கிய கத்திரி வெயில், 24 நாட்கள் அனலாய் ஆட்டம் போட்டு, நேற்றுடன் முடிவு க்கு ...

ரேடியோ உரையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்!: நான் உங்கள் வீட்டு பிள்ளை என்கிறார்

Posted: 28 May 2017 10:08 AM PDT

புதுடில்லி: ''ரேடியோ உரையின் மூலம், நாட் டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பின ராகி விட்டேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, உருக்கமாக பேசினார்.

'மன் கீ பாத்' என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோ மூலம் உரையாற்றி வரு கிறார். இந்த நிகழ்ச்சியை விமர்சித்து, எதிர்க் கட்சிகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. மோடி தலைமையிலான அரசு மூன்றாண்டு களை நிறைவு செய்துள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று ஒலிபரப்பான ரேடியோ உரையில், பிரதமர் மோடி பேசிய தாவது:
சாதாரண மனிதன்
கடந்த, 2014, அக்டோபர், 2ல், இந்த ரேடியோ நிகழ்ச்சியை ...

தயார் நிலையில் ராணுவம்: அருண் ஜெட்லி விளக்கம்

Posted: 28 May 2017 10:38 AM PDT

சித்ரதுர்கா: ''அண்டை நாட்டால் எந்த நேரத்தி லும் ஆபத்து இருப்பதால், நம் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள, கர்நாடக மாநிலத்தின் சாலக்கெரேயில், போர் விமான சோதனை மையம் அமைந்துள்ளது; இதை, நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, நேற்று நடந்தது. இதில், மத்திய நிதி மற்றும் ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசியதாவது:கடந்த, 70 ஆண்டுகளாக,அண்டை நாட்டால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. ...

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு ஆதார் யு.பி.எஸ்.சி., அறிவிப்பு

Posted: 28 May 2017 10:45 AM PDT

புதுடில்லி:'சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அனுமதி அட்டையில், தரமற்ற புகைப்படம் இருந்தால், ஆதார் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்' என, தேர்வர்களுக்கு, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

முதல்நிலை தேர்வு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது. யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வுகள், ஜூன், 18ல் நடக்க உள்ளன. இதில் பங்கேற்கும் தேர்வர்களின்அனுமதி அட் டையில், அவர்களின் புகைப்படங்கள் தெளி வின்றி இருந்தால், ஆதார், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ...

காஷ்மீரில் முழு அடைப்பை மீறி ராணுவ தேர்வு எழுதிய இளைஞர்கள்

Posted: 28 May 2017 10:54 AM PDT

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலை வன், சப்ஸார் பட் கொல்லப்பட்டதை கண்டித்து, பிரிவினைவாதிகள் விடுத்த, முழு அடைப்பு போராட்ட அறிவிப்பை மீறி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ராணுவ தேர்வில் பங்கேற்றனர்.

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன், சப்ஸார் அஹமது பட், நேற்று முன்தினம், ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குத லில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பிரிவினைவாதிகள்
இந்த ...

ஷாம்பூ போட்டு குளிச்சுட்டு வாங்க: முதல்வரை சந்திக்க கெடுபிடி

Posted: 28 May 2017 11:01 AM PDT

லக்னோ: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் நிகழ்ச்சியில், சோப்பு, ஷாம்பூ போட்டு குளித்துவிட்டு வரும்படி, பொதுமக்க ளிடம், அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியானதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்ய நாத் முதல்வராக உள்ளார். குஷி நகரில், நேற்று முன்தினம் நடந்த, நோய் தடுப்பு மருந்து அளிக்கும் முகாமில், யோகி ஆதித்யநாத் பங்கேற் றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழை மக்களுக்கு, உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை வழங்கி, குளித்து விட்டு வரும்படி கேட்டுக் கொண்டதாக சர்ச்சை ...

ராஜேந்திர பாலாஜி செயல்பாடு சரியல்ல: பாண்டியராஜன் குற்றச்சாட்டு

Posted: 28 May 2017 11:13 AM PDT

சென்னை:''பாலில் கலப்படம் தடுக்கும் அதிகாரம், மாநில பால்வளத்துறை ஆணைய ரகத்துக்கு உள்ளது. அதற்கும், ராஜேந்திர பாலாஜியே அமைச்சர். அதை மறந்து விட்டு, அவர் பேசும் பேச்சுக்கள், பழனிசாமி அரசின் மீதே குற்றம் சாட்டும்படி உள்ளது,'' என, முன் னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

சென்னையில் அவரது பேட்டி:
தமிழகத்தில், அரசு நிறுவனமான ஆவின், பால் விற்பனை செய்யும் போது, பால்வளத்துறை ஆணையரகம் தனியாக செயல்பட வேண்டும். அந்த ஆணையரகம் தான், தனியார் பால் மட்டுமின்றி, ஆவின் பால் மாதிரிகளையும் எடுத்து, சோதனை செய்ய வேண்டும். இரண்டையும் ஒன்றாக ...

தேசிய அரசியலில் திருப்பு முனை: ஸ்டாலின் நம்பிக்கை

Posted: 28 May 2017 11:15 AM PDT

சென்னை: 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, சட்டசபை பணி வைர விழா, தேசிய அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்' என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
உடல் நலம் குன்றியுள்ள கருணாநிதி, டாக்டர் களின் முழு கண்காணிப்பில் உள்ளதால், அவர்கள் அறிவுரைப்படி செயல்பட வேண்டி உள்ளது. எந்த நிலையிலும், தமிழக நலனை யும், தமிழரின் உயர்வையும், தமிழின் மேன்மையையுமே சிந்திப்பவர் கருணாநிதி. நாம், அவரின் மனம் அறிந்த தொண்டர்கள். அவர் நல்ல முறையில், சிகிச்சையை தொடரும் சூழலிலும், அவரின் பிறந்த நாளையும், ...

கருணை மதிப்பெண் தரலாமா?: அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்

Posted: 28 May 2017 12:03 PM PDT

புதுடில்லி: ''சி.பி.எஸ்.இ., பாடத்தேர்வில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
பள்ளித் தேர்வில் மிகக் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டால், கருணை மதிப்பெண்கள் வழங்கும் நடவடிக்கையை கைவிடுவதென, சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட, 32 பள்ளி தேர்வு வாரியங்கள், கடந்த மாதம், ஒரு மனதாக தீர்மானித்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, டில்லி ஐகோர்ட், கருணை மதிப்பெண் வழங்கும் நடைமுறையை தொடரும்படி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ...

டில்லி பல்கலை.,யில் ஐ.எஸ்., ஆதரவு வாசகங்கள்

Posted: 28 May 2017 01:14 PM PDT

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழக வளாகத்தில் ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளரான அங்கித் சங்க்வான் இதுதொடர்பாக மவுரிஸ் நகர் போலீசில் அளித்துள்ள புகாரில், பல்கலைக்கழகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பொருளாதார புலத்தின் சுவரில், ஐ ஆம் எஸ்.ஒய்.எவ்., ஐ.எஸ்.ஐ.எஸ்., (I am SYN ISIS) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகப்பணி துறை கட்டட சுவர்களில் நக்சல்களுக்கு நீதி, ஆசாதி உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், ...

போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்

Posted: 28 May 2017 02:19 PM PDT

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தன் மனைவியை, சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன், போன் மூலம், 'தலாக்' கூறி, அவரது கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23, ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன், அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம், மனைவியை கொடுமை படுத்தியுள்ளான்.
புரோக்கர் : ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™