Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மிஷன் - 400: ஜெ., ஸ்டைலில் மோடி வியூகம்

Posted: 27 May 2017 05:57 AM PDT

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தேர்தலில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்ற, ஜெ., பாணியில், 2019 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., தயாராகி வருகிறது. ஆனால், அ.தி.மு.க., இரண்டு அணிகளாக பிளவுபட்டு, எதிர்கால திட்டங்களின்றி பரிதவித்து வருவது, தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் தொழில்நுட்பம்
ஜெ., முதல்வராக இருந்த போது, 2014ல் லோக் சபா தேர்தல் வந்தது. அந்த தேர்தலுக்கு தயாரா வதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக, அ.தி.மு.க.,வில், தகவல் தொழில் நுட்ப அணியை உருவாக்கினார். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, 'நாளை நமதே; நாற்பதும் நமதே' என்ற ...

இரு அணிக்கும் இல்லை இரட்டை இலை! பிரமாண பத்திரங்களை படிக்க போவதில்லை

Posted: 27 May 2017 06:05 AM PDT

தேர்தல் கமிஷனிடம், பலத்தை நிரூபிப்பதற் காக, கட்சி நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரங் களில் கையெழுத்து பெறுவதில், அ.தி.மு.க., அணிகளிடையே, கடும் போட்டி தொடர்கிறது. இதனால், இரு அணிகளுக்கும், இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் கமிஷனிடம், தங்களுடைய பலத்தை நிரூபிக்க, பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற னர். கட்சியில் இருப்பவர்களிடம், தங்களுக்கு சாதகமாக, பிரமாண பத்திரங்களை வாங்கி, ஒட்டுமொத்தமாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை, பன்னீர் அணி தரப்பில், 31 ஆயிரம் பிரமாண ...

ரூ.8 லட்சம் கோடி கடன் பாக்கியால் வங்கிகள்... தவிப்பு!

Posted: 27 May 2017 07:52 AM PDT

புதுடில்லி:தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாததால், வங்கிகள் தவிக்கின்றன. கடன் வாங்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடனை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வங்கிகள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

நாட்டில், தொலைத் தொடர்புத் துறையில், தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின் றன. நாட்டில், மொபைல் போன் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் நிலையில், தொலைத் தொடர்பு துறையில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது.
போட்டி அதிகம்
தொலைத் தொடர்பு ...

மந்திரி பதவி கேட்ட எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை... நிராகரிப்பு!

Posted: 27 May 2017 08:11 AM PDT

சேலம்:''தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இல்லை. அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக, பேச்சு நடந்து கொண்டிருக்கிறது,'' என, சேலத்தில் முதல்வர் பழனிசாமி கூறினார். இதன் மூலம், அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்த, எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை முதல்வர் நிராகரித்துள்ளார்.

முதல்வராக பழனிசாமி பதவியேற்று, 100 நாட்களை கடந்துள்ளார். இதற்கிடையில், அவர் பதவியேற்கும் முன், கூவத்துார் விடுதியில் தங்க வைக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் பலருக் கும், பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டி ருந்தன. அவற்றில், சிலருக்கு அமைச்சரவை யில் இடம் வழங்கப்படும் என்பதும் ...

மும்பையில் அமித் ஷா - ரஜினி விரைவில் சந்திப்பு:தமிழக அரசியலில் உதயமாகிறது புதிய கூட்டணி

Posted: 27 May 2017 09:22 AM PDT

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும், நடிகர் ரஜினியும், விரைவில் மும்பையில் சந்தித்து பேச உள்ளனர்.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

நடிகர் ரஜினி, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், ஒரு மாதம் தங்கி, 'காலா' படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அப்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும், அவரும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, தொலைபேசி மூலமாக, அமித் ஷாவும் ரஜினியும், ஆறு முறை பேசியுள்ளனர். ரஜினி, அரசியலுக்கு வருவதை, அமித் ஷா வரவேற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான பூர்வாங்க பேச்சு, ஏற்கனவே நிதின் கட்கரி ...

பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் விதிமீறல் புகார்... சலசலப்பு!

Posted: 27 May 2017 10:07 AM PDT

சென்னை, மதுரை பல்கலைகளுக்கு புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதில், விதிமீறல் கள் நிகழ்ந்துள்ளதாக, சலசலப்பு உருவாகியுள்ளது.

நேர்காணலில் பங்கேற்காதவருக்கு, பதவி வழங்கியுள்ளதாகவும், சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், புதிய தேடல் குழு அமைத்து, புதிதாக துணை வேந்தர்களை தேர்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை மற்றும் மதுரை பல்கலைகளுக்கு, புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள், தேர்வு நடவடிக்கையை, ஒன்றரை ஆண்டுகளாக தாமதப்படுத்தின.ஆனால், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் ...

தூக்கில் தொங்குவேன்: அமைச்சர் ஆவேசம்

Posted: 27 May 2017 10:10 AM PDT

சிவகாசி:''தனியார் பாலில் கெமிக்கல் இல்லை என, நிரூபித்து விட்டால், நான் ராஜினாமா செய்யத் தயார்; துாக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன்,'' என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கூறினார்.

சிவகாசியில், நேற்று அவர் அளித்த பேட்டி:
தனியாரில், ஒரு சில நிறுவனங்கள் தவிர, பெரும்பாலான நிறுவனங்கள், பாலில் கலப் படம் செய்வது, கெமிக்கல் கலப்பது உறுதியாகி யுள்ளது. 'பார்மாடிலேடு' என்ற, கெமிக்கலை, பாலில் கலக்கின்றனர்.இந்த கெமிக்கலை, மருத்துவ கல்லுாரியில், உடல்கள் கெடாமல் இருப்பதற்கு பயன்படுத் துவர். தனியார் பாலில், 'பார்மாடிலேடு' ...

அணி மாறுகிறாரா பீஹார் முதல்வர் நிதிஷ்? தாவல்! மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பரபரப்பு

Posted: 27 May 2017 10:27 AM PDT

புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலுக்காக, எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்து வது தொடர்பாக, காங்.,தலைவர் சோனியா அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்த, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார், அடுத்த நாளே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி,அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஜூலை மாத கடைசியில் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ...

'ஆம்புலன்ஸ் வாங்கியதில் கெஜ்ரிவால் அரசு முறைகேடு'

Posted: 27 May 2017 11:00 AM PDT

புதுடில்லி:''அரசு மருத்துவமனைகளுக்கு, மருந்துகள், ஆம்புலன்ஸ்கள் வாங்கியதில், கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி மாநில அரசு முறைகேடு செய்துள்ளது,'' என, டில்லி மாநில முன்னாள் அமைச்சர், கபில் மிஸ்ரா குற்றம்சாட்டினார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. கெஜ்ரிவால் அரசில், அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. சமீபத்தில், அமைச்சர் பதவியிலிருந்து, அவர் நீக்கப்பட்டார். இதை அடுத்து, கெஜ்ரிவால், அமைச்சர்களுக்கு எதிராக, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு களை அவர் கூறி வருகிறார்.
இந்நிலையில், கபில் ...

அமெரிக்க பொருளாதாரம் முடங்கும்; வெள்ளை மாளிகை கருத்து

Posted: 27 May 2017 12:29 PM PDT

வாஷிங்டன் : பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தினால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே டிரம்ப், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அந்த ஒப்பந்தம் குறித்து அவர் கடுமையாக
விமர்சித்தும் வந்தார்.
இந்நிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்பின், பொருளாதார ஆலோசகர் கேரிகோன் கூறியதாவது: முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் அமெரிக்க பொருளாதாரத்தில் முடக்கம் ஏற்பட்டதை நாம் அறிவோம். ...

மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ.3,000 கோடி நிதியுதவி

Posted: 27 May 2017 01:05 PM PDT

புதுடில்லி:''மொரீஷியஸ் நாட்டுக்கு, மத்திய அரசு, 3,227 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும்,''
என, பிரதமர் மோடிதெரிவித்தார்.
இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமர், பிரவிந்த் ஜகநாத், அரசு முறைப்பயணமாக, நேற்று, டில்லி வந்தார். அவரை, வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் சந்தித்தார்.அப்போது இரு நாடுகளுக்கு இடையே, வியாபார ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்பின், பிரதமர் நரேந்திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.பேச்சுக்குப் ...

ராகுலிடம் புகார் பட்டியல் வாசிக்க வரிந்து கட்டும் மாவட்ட தலைவர்கள்

Posted: 27 May 2017 01:53 PM PDT

சென்னை வரும், காங்கிரஸ் துணை தலைவர், ராகுலிடம், 45 மாவட்ட தலைவர்கள் கூட்டாக, புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னையில், ஜூன், 3ல் நடக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை வைர விழாவில், ராகுல் பங்கேற்கிறார். அவரை சந்தித்து பேச, குறிப்பிட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியல், தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராகுலிடம், கூட்டாக கையெழுத்திட்ட புகார் மனு வழங்க, 45 மாவட்ட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான மனுவையும் தயாராக வைத்துள்ளனர்.மனு விபரம் ...

பழனிசாமிக்குமா கெடுபிடி... சுற்றுலா பயணியர் ஆதங்கம்!

Posted: 27 May 2017 02:34 PM PDT

சேலம்:ஏற்காடு கோடை விழாவை ஆவலோடு பார்வையிட வந்த சுற்றுலா பயணியர், முதல்வர் பழனிசாமி வருகை கெடுபிடியால், பல மணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால், அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கோடை விழா
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 42வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. தோட்டக்கலைத் துறை சார்பில், அண்ணா பூங்காவில் ஒரு லட்சம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியில், மனிதக்குரங்கு, பாண்டா கரடி, பறக்கும் கழுகு, லேப்டாப், ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட உருவங்கள் வண்ண வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டு ...

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம் எப்போது?

Posted: 27 May 2017 03:11 PM PDT

நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமலாவதற்கு, ஒரு மாத அவகாசம் மட்டுமே உள்ள நிலையில், அது தொடர்பான சட்ட மசோதா, சட்டசபையில் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது, நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இதற்காக, அனைத்து மாநிலங்களும், நிர்வாக ரீதியாக, பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றன. தமிழகத்திலும், வணிகவரித் துறையினருக்கும், வணிகர் மற்றும் தொழில் துறையினருக்கு, அது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™