Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தல் ஆணையம் சவால்: 10 அம்சங்கள்

Posted: 20 May 2017 06:52 AM PDT

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தவறு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் ஆணித்தரமாக கூறி வருகிறது.

இத்துடன், விரும்பமுள்ள அரசியல் கட்சிகள், ஜூன், 3ம் தேதி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என நிரூபித்து காட்ட வேண்டும் என சவாலும் விட்டுள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருப்பதற்கான, 10 முக்கிய அம்சங்கள்:1. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது உண்மையில் இரண்டு இயந்திரங்கள் ஒயருடன் இணைக்கப்பட்டு இருக்கும். மக்கள் ஓட்டு போடுவதும், அது பதிவாவதும் தான் ஓட்டுப்பதிவு இயந்திரம் என்று அழைக்கப்படு கிறது. வாக்காளர்கள் இந்த ...

மின் வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்க அரசு...தீவிரம் ...! ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டம்

Posted: 20 May 2017 06:00 AM PDT

புதுடில்லி, :பெட்ரோல், டீசல் வாகனங்களால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

பஸ், கார், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. பெட்ரோல், அல்லது டீசலை பயன்படுத் தியே பெரும்பாலான வாகனங்கள் இயக்கப் படுகின்றன. இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, சுற்றுச்சூழலுக்கு பெரும் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
பல நோய்கள்
குறிப்பாக, பெரு நகரங்களில், வாகனங்களில் இருந்து ...

மனு கொடுக்க தொண்டர்களிடம் ஆர்வமில்லை அமைச்சர்கள் வருகை குறைந்தது

Posted: 20 May 2017 06:30 AM PDT

அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஒதுங்கு வதாக அறிவித்த பின், முதல்வர் பழனிசாமி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவல கம் வந்தார். அப்போது அவர், 'தினமும் நான்கு அமைச்சர்கள் கட்சி அலுவலகம் வருவர்; அவர் களிடம் கட்சி தொண்டர்கள் மனுக்கள் அளிக்க லாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அதன்படி, தொண்டர்களிடம் மனுக்கள் வாங்க, அமைச்சர்கள் தினமும், ஆர்வமாக கட்சி அலுவலகம் வந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வரவில்லை. சிலர் மட்டும் வந்து, மனு கொடுத்து செல்கின்றனர். இதனால், அமைச்சர்களுக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. மே, 7ல், ...

பரிகாரம் தேடினால் தான் ஸ்டாலினுக்கு மகுடம்? கோவில் குளங்களை தூர்வாரும் தி.மு.க.,

Posted: 20 May 2017 06:31 AM PDT

'கட்சியிலும், ஆட்சியிலும், மகுடம் சூட்ட வேண்டும் என்றால், பட்டாபிஷேக நாயகனாக கருதப்படும், கோதண்டர் ராமர் கோவில் குளத்தை துார்வார வேண்டும்' என்ற, ஜோதிடர் களின் ஆலோசனைப்படியே, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கோவில் குளங்களை துார்வாரி வருகிறார்.

அரசியல் பணிகளில் இருந்து, தி.மு.க., தலை வர் கருணாநிதி, முழு ஓய்வு பெற்றாலும், கட்சி தலைவர் பதவி அவரிடம் தான் உள்ளது. ஸ்டாலினுக்கு, செயல் தலைவர் பதவி தான் கிடைத்துள்ளது. இதுவரை ஸ்டாலினால், துணை முதல்வர் பதவியை ஏற்க முடிந்ததே தவிர, முதல்வர் பதவியை ஏற்க முடிய வில்லை. அதனால், அவரால் முதல்வராக முடியுமா, இல்லையா ...

பா.ஜ., கூட்டணி: பன்னீர் கருத்தால் பரபரப்பு

Posted: 20 May 2017 06:41 AM PDT

அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வம் அணியினரை, பா.ஜ., இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. டில்லியில், நேற்று முன் தினம், பிரதமர் மோடியை, பன்னீர் சந்தித்து பேசினார்.

பிரதமரிடம், பன்னீர் என்ன பேசினார் என்ற விவாதம் நடந்துவரும் சூழலில்,நேற்று காலை, பன்னீர்செல்வத்தின், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியான செய்தி, அரசியல் வட்டாரத்தில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தபின், பா.ஜ., கூட்டணி குறித்து அறிவிப்போம்' என, பன்னீர் செல்வம் கூறியதாக, கருத்து வெளியாகி ...

ஜெ., நியமித்தவர்களே மந்திரியாக நீடிப்பதா என அ.தி.மு.க.,வில்... போாக்கொடி!

Posted: 20 May 2017 08:14 AM PDT

அ.தி.மு.க., - சசிகலா அணியில் உள்ள எம்.எல். ஏ.,க்கள், அமைச்சர் பதவி கேட்டு, திடீர் போர்க் கொடி துாக்கியுள்ளனர். 'ஜெ., நியமித்தவர்களே அமைச்சர்களாக நீடிப்பதா; எங்களுக்கும் பதவி வேண்டும்' என, கோஷம் எழுப்ப துவங்கி உள்ள னர். அவர்களை சமாளிக்க வழி தெரியாமல், இரு தலை கொள்ளி எறும்பாக, முதல்வர் பழனிசாமி தவிக்கிறார்.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. பன்னீர் அணியில், 12 எம்.எல்.ஏ., க் களும்; சசிகலா அணியில், 123 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த நேரத்தில், சசிகலா அணி எம்.எல். ஏ.,க் கள், பன்னீர் ...

ஆந்திர அரசை 'டிஸ்மிஸ்' செய்யணும்!ஜனாதிபதிக்கு நீதிபதி கட்ஜு கடிதம்

Posted: 20 May 2017 09:10 AM PDT

'ஆந்திராவில், கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படு வதால், தெலுங்கு தேசம் கட்சி தலைமையி லான அரசை, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண் டேய கட்ஜு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளது, அம்மாநில அரசியல் வட்டாரத் தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்வராக உள்ளார். மாநில அரசு தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு எழுதியுள்ள கடிதம்:ஆந்திராவில், தெலுங்கு தேசம் தலைவர், சந்திரபாபு ...

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என...சவால்....! புகாரை நிரூபிக்க கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

Posted: 20 May 2017 09:45 AM PDT

புதுடில்லி, : ''மின்னணு ஓட்டுப் பதிவு இயந் திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ள தாகக் கூறும் அரசியல் கட்சிகள், தங்கள் தரப்பு வாதத்தை நிரூபிக்க, தேர்தல் கமிஷன் வாய்ப்பளித் துள்ளது. ஜூன் 3 முதல், அரசியல் கட்சிகள், ஆதாரங்களுடன் வந்து தங்கள் தரப்பு குற்றச் சாட்டை நிரூபிக்கலாம்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர்நசீம் ஜைதி சவால் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநி லங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதற்கு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப் பட்டதே காரணம் என, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ...

தினகரன் மீது டில்லி போலீஸ் தெரிவித்துள்ள புதிய குற்றச்சாட்டால்... பரபரப்பு!

Posted: 20 May 2017 10:31 AM PDT

பணம் பட்டுவாடா புகாரால், ரத்து செய்யப் பட்ட, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை, தனக்கு ராசியான, மே, 5ம் தேதி மீண்டும் நடத்தக்கோரி, இடைத்தரகர் மூலம், தேர்தல் கமிஷனுடன், சசிகலாவின் அக்கா மகன் தினகரன், பேரம் பேச முயன்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில், தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு லஞ்சம் தர முயன்றதாக, ஏற்கனவே கைதான வழக்கில், குரல் மாதிரி சோதனைக்கு ஆட்பட முடியாது என்றும், கோர்ட்டில், தினகரன் முரண்டு பிடித்துள்ளார்.முதல்வராக இருந்த, ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகு திக்கு, ஏப்ரல், 12ல் இடைத்தேர்தல் அறிவிக்கப் ...

முழு அளவில் ரேஷன் பொருள் பெற ஜூன் முதல் 'ஆதார்' எண் கட்டாயம்

Posted: 20 May 2017 11:44 AM PDT

ரேஷனில் 'ஆதார்' எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே முழு அளவில் பொருட்களை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசம்; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ரேஷன் முறைகேட்டை தடுக்க தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதற்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரர்களிடம் இருந்து, ரேஷன் கடைகளில், ஆதார் எண் விபரம் பெறப்பட்டது.
தற்போது, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 1.35 கோடி கார்டுதாரர்கள், தங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களை ...

உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு

Posted: 20 May 2017 12:43 PM PDT

புதுடில்லி: என்னை சுற்றி வந்த அந்த மூன்று அணிகள் குறித்து தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி சச்சின் உருக்கமாகபேசினார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 43, தனது இளமை காலம் முதல் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ‛‛சச்சின் பில்லியன்டிரீம்ஸ்'' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் எர்கின்ஸ் இயக்கியுள்ளார். வரும் மே. 260ம் தேதிவெளியாகியது.முன்னதாக இத்திரைப்படத்தின் ப்ரிவியூஷோவை டில்லியில் ஆயுதப்படையினரும் கண்டு ரசித்தார்.
பின்னர் அவர்கூறுகையில், நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கும் வீரர்களுடன் படம் பார்த்தை பெருமையாக ...

பிரிந்தவர்கள் மீண்டும் வர வேண்டும் தமிழக முதல்வர் பழனிசாமி அழைப்பு

Posted: 20 May 2017 12:58 PM PDT

மேட்டுப்பாளையம்:''ஜெ., கனவை நிறைவேற்ற வேண்டுமானால், பிரிந்தவர்கள், கட்சியில் ஒன்றிணைய வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில், முதல்வர் பழனி சாமி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய தாவது:முன்னாள் முதல்வர் ஜெ., மறைந்தா லும், அவர், விட்டு சென்ற பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும். கட்சியை உடைத்து, ஆட்சியை அகற்ற வேண்டும் என, நினைத்தவர்களின் கனவு, தகர்ந்து போனது. ஜெ., உதவியால், பதவி பெற்ற சிலர், வெளியே சென்று விட்டனர். ஜெ..வின் கனவு, தொலை நோக்கு எண்ணம் நிறைவேற வேண்டுமானால், ...

வினையாக வந்த சாலை மறியல் போராட்டம் :ஆம்புலன்சில் உயிரிழந்த சிறுவன்

Posted: 20 May 2017 01:16 PM PDT

நொய்டா: சாலை மறியல் செய்தவர்களால் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில் ஆம்புலன்சில் இருந்த 7 வயது சிறுவன் உடனடி சிகிச்சை பெற முடியாமல் இறந்தான்.உ.பி மாநிலம் பெரோஷாபாத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் லூ குஷ், கடுமையான காய்ச்சல் காரணமாக மேல் சிகி்ச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப் பட்டான். கிரோட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ஆம்புலன்ஸ் சென்ற போது திடீரென பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 10 கி.மீ.தொலைவுக்கு வாகனங்கள் நகர முடியாமல் நின்றன.இதில் சிறுவன் வந்தஆம்புலன்சும் சிக்கியதால், சிகிச்சை ...

இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி

Posted: 20 May 2017 01:49 PM PDT

ஜகார்தா: இந்தோனேஷியாவில் 192 பேருடன் சென்ற கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்ததில் 5 பேர் பலியாயினர். மீட்புபணிகள் நடக்கின்றன.

இந்தோனேஷியாவின் மாஸாலம்போ தீவில் இருந்து 192 பேருடன் கப்பல் கடந்த வெள்ளியன்று புறப்பட்டுச் சென்றது. ஜாவா தீவு நோக்கி சென்ற போது நேற்று (சனிக்கிழமை) நடுக்கடலில் திடீரென தீப்பிடித்தது. இதில் 5 பேர் பலியாயினர். கப்பல் தீப்பிடிப்பதையறிந்த பயணிகள் அலறியடித்து உயிரை காப்பாற்ற கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தேசிய மீட்புபடையினர் கப்பலில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும் எத்தனை பேர் கடலில் குதித்தனர் என்பது தெரியவில்லை. ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™