Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ரியல் எஸ்டேட்' விதிகளை மீறினால் பத்திரப்பதிவு கிடையாது: வெங்கையா

Posted: 14 May 2017 09:48 AM PDT

சென்னை: ''ரியல் எஸ்டேட் சட்ட வரைவு விதிகளை, தமிழக அரசு தயார் செய்து வருகிறது. விதிகளை பின்பற்றாவிட்டால், பத்திரப்பதிவு செய்ய முடியாது,'' என, மத்திய அமைச்சர், வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

சென்னை, தலைமை செயலகத்தில், மத்திய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. வெங்கையா நாயுடு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதன் பின், வெங்கையா நாயுடு அளித்த பேட்டி: மத்திய அரசு திட்டங்களை, சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு, கூடுதல் நிதி வழங்கப்படு கிறது. ஒவ்வொரு துறையிலும், சீர்திருத்தம் கொண்டு வர ...

'சட்டசபையை கூட்ட வேண்டும்'

Posted: 14 May 2017 09:50 AM PDT

சென்னை: 'தி.மு.க., தலைவர், கருணாநிதி வைரவிழா நடக்கும் நேரத்தில், சட்டசபை கூட்டத்தை முன்கூட்டியே இறுதி செய்தது, ஜனநாயக விரோதம்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஜன., 23ல் துவங்கிய, 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடரை, மே, 11ல், கவர்னர் முடித்து வைத்திருப்பது, அ.தி. மு.க., ஆட்சியின் மோசமான ஜனநாயக விரோத செயல். தமிழக அரசின், 2017 - -18ம் ஆண்டின் பட் ஜெட், மார்ச் 16ல் தாக்கல் செய்யப் பட்டது. இன்னும், துறை சார்ந்த மானியக் கோரிக் கைகள் மீதான விவாதங்கள் நடைபெற வில்லை. அதன்மீது, சட்டசபை விதிகளின் படி, ஓட்டெடுப்பும் நடத்த வில்லை. ...

ரூ.10 ஆயிரம் கோடியில் 1 லட்சம் வீடுகள் : மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

Posted: 14 May 2017 09:55 AM PDT

சென்னை: ''சென்னையில், நீர்நிலை அருகே வசித்து வரும், இரண்டு லட்சம் குடும்பங் களுக்கு, மத்திய, மாநில அரசு பங்களிப்புடன், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர், வெங்கையா நாயுடுவிடம், முதல் வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் பழனிசாமி கூறிய தாவது: மத்திய அரசு திட்டங்களை செயல் படுத்துவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதனால், மத்திய அமைச்சரிடம், தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக, கோரிக்கை மனு அளித்துள்ளேன். சென்னையில், ...

அ.தி.மு.க., அணிகளுக்குள் மோதல் இல்லை: பன்னீர்

Posted: 14 May 2017 09:56 AM PDT

சென்னை: ''அ.தி.மு.க., அணிகளுக்குள் மோதல் அதிகரிக்கவில்லை. அ.தி.மு.க., வலுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, போராடி வருகிறோம்,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, தேனாம்பேட்டையில் நடந்த, கட்டட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில், பன்னீர்செல்வம் பேசியதாவது: கட்டடம் கட்ட தெரியாதவர்கள், ஒப்பந்தம் எடுக்கின்றனர். இதை தவிர்த்து, உங்களை போன்றவர்களுக்கு, ஒப்பந்தம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், உங்களை அழைத்து, ஆலோ சனைகள் கேட்டு, கோரிக்கை களை நிறைவேற்ற, நடவடிக்கை ...

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 'மாஜி' அமைச்சர் மிஸ்ரா... எச்சரிக்கை!சிறையில் அடைப்பேன் என மிரட்டல்

Posted: 14 May 2017 10:31 AM PDT

புதுடில்லி:''மிகப் பெரிய பண மோசடி செய் துள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், அவரது கழுத்தைப் பிடித்து, நானே திகார் ஜெயிலில் அடைப்பேன்,'' என, டில்லி முன்னாள் அமைச்சர், கபில் மிஸ்ரா எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள் ளது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தல் மற்றும் டில்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சியிலும் மிகப் பெரிய பிரச்னைகள் எழுந் தன. ...

ரூ.20 ஆயிரம் கோடி எங்கே? சுப்ரீம் கோர்ட் கேள்வி!

Posted: 14 May 2017 10:43 AM PDT

புதுடில்லி:'கட்டுமானத் தொழிலாளர் நலனுக் காக ஒதுக்கப்பட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே போனது; தேனீர் விருந்துக்கும், அதிகாரி களின் விடுமுறை கால பயணங்களுக்கும் செலவிடப்பட்டதா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

'கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்தும் வகையில், கட்டுமான நிறு வனங்களிடம் இருந்து வரியாக பெறப்பட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய், முறையாக பயன்படுத் தப்படவில்லை' என, குற்றஞ்சாட்டி, அரசு சாரா அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கள், மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் ...

ஓட்டுக்கு பணம் தந்தால் நடவடிக்கை தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் ஆதரவு

Posted: 14 May 2017 10:46 AM PDT

புதுடில்லி:'ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், தேர்தலை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அளிக்க வேண்டும்' என்ற தேர்தல் கமிஷனின் கோரிக் கைக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித் துள்ளது. 'இது குறித்து மற்ற சட்டங்களிலும் திருத்தம் செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

'வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் லஞ்சம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் வகையில், அதிக அதிகாரம் அளிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி வருகிறது. தற்போதைய சட்ட விதிகளின்படி, வன்முறை நிகழ்ந்தால், குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தலை நிறுத்தி வைக்க, ...

இந்தியாவில் வேகமாக பரவும் கம்ப்யூட்டர் வைரஸ்

Posted: 14 May 2017 10:52 AM PDT

புதுடில்லி:உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை தாக்கி செய லிழக்கச் செய்து வரும், வான்னாக்ரை' வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவத் துவங்கி இருப்ப தாக, கம்ப்யூட்டர் அவசரநிலை பாதுகாப்பு குழு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின், என்.எஸ்.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் சர்வர் கம்ப்யூட்டர்களை, மென்பொருள் திருடர்கள், சாதுர்யமாக தாக்கி, அந்த கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப்பட்டி ருந்த, 'மால்வேர்' எனப்படும், மென்பொருள் வைரஸ்களை களவாடி உள்ளனர்.ஆந்திராவிலும் பாதிப்பு:'வான்னாக்ரை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொடிய வைரஸ், ...

ஜவ்வாக இழுக்கும் பிரச்னையை தீர்க்காத அரசு மீது மக்கள்...கோபம்!

Posted: 14 May 2017 11:10 AM PDT

சென்னை:இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த அரசு போக்குவரத்து ஊழியர் கள் நேற்று மாலையே பஸ்களை ஓட்ட மறுத்து போராட்டத்தை துவக்கினர். முன்னறிவிப்பின்றி திடீரென பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.

லாபகரமாக இயங்காத போக்குவரத்து துறை யில் ஜவ்வாக இழுக்கும் பிரச்னையை தீர்க்கா மல் பயணிகள் சேவையில் அலட்சியம் காட்டிய அரசு மீது மக்களின் ஒட்டுமொத்த கோபமும் திரும்பியுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1.43 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் ...

சரணடைகிறார் நீதிபதி கர்ணன்?

Posted: 14 May 2017 12:16 PM PDT

சென்னை : மேற்கு வங்க போலீசாரால் தேடப்பட்டு வரும், நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அம்பேத்கர் சிலை முன், சரணடைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த, கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனால், அவர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு, ஊழல் பட்டியலை அனுப்பி வைத்தார். இதனால், கர்ணன் மீது, உச்ச நீதிமன்றம், அவமதிப்பு வழக்கு ...

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

Posted: 14 May 2017 12:38 PM PDT

வேலூர்: சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எகஸ்பிரஸ் ரயில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக என்ஜின் மற்றும் முதல் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. விபத்தால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் உயிர் தப்பினார்
இந்த ரயிலில் தமிழகஉயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பயணம் செய்து கொண்டிருந்தார். விபத்தில் பெரும் சேதம் எதுவும் இல்லாததால் அமைச்சர் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™