Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


'ராமர் மோடிக்கு, மக்கள் எல்லாம் அனுமார்கள் : லாலு கிண்டல்!

Posted: 14 May 2017 03:33 PM PDT

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மோடி தன்னை சர்வாதிகாரி போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். அவரை கடவுள் ராமர் போலவும், மக்களை எந்த கேள்வியும் கேட்காமல் அடிபணியும் அனுமார் போலவும், மாற்ற முயற்சிக்கிறார் எனக் கூறியுள்ளார் லாலு. மேலும் இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும்" அவர் விமர்சித்துள்ளார். இதனிடையே ஆம் ஆத்மி கட்சியில், நடைபெறும் குழப்பங்கள் ...

90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!

Posted: 14 May 2017 03:30 PM PDT

- சமூகவலைதளங்களில் அன்னையர் தினம் கொண்டாடி வரும் நிலையில், 90 வயது மூதாட்டி ஒருவர் தனது 120 வயது மாமியாருக்கு கழிவறை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். -------------- உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சந்தனா . 90 வயதான இவருக்கு, 120 வயதில் மாமியார் ஒருவர் உள்ளார். அவர்களது வீட்டில் கழிவறை இல்லை. இதனால், கடந்த மாதங்களுக்கு முன் காலை கடனை கழிப்பதற்காக, அவரது  மாமியார் வெளியே சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது கால் உடைந்துள்ளது. இதையடுத்து, ...

வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை

Posted: 14 May 2017 03:27 PM PDT

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அ றிக்கையில் கூறியிருப்பதாவது:– நிதிநிலை அறிக்கை 2016–2017 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில் தமிழகத்தில் தான் வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2016–2017–ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ...

ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

Posted: 14 May 2017 03:23 PM PDT

சண்டிகார், கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த புதன் கிழமையில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் 11, 12-ம் வகுப்பும் படிக்கும் மாணவிகள் மூன்று கிலோ மீட்டர் தொலைவு சென்று கான்வாலியில் நாங்கள் படிக்க வேண்டியது உள்ளது. நாங்கள் செல்லும் போது ஈவ்-டீசிங் தொல்லைக்கு ஆளாக ...

அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது

Posted: 14 May 2017 03:18 PM PDT

- புதுடெல்லி, அந்தமானில் தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கியது. பருவமழை தொடங்கியது அந்தமான் கடல் பகுதியில் வழக்கமாக கோடை காலம் முடிந்து மே மாதம் 17-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் கே.ஜி.ரமேஷ் கூறியதாவது:- அந்தமானில் தென்மேற்கு பகுதியில் இருந்து பலத்த காற்று வீசிவருவதுடன், மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதை ...

பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Posted: 14 May 2017 10:45 AM PDT

ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் 'பீலி' என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.

இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------

பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Posted: 14 May 2017 08:15 AM PDT

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் முன்கூட்டியே துவங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அமைச்சருடன் போக்குவரத்து ஊழியர்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தங்களது வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை (15 ம் தேதி ) நடக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பல மாவட்டங்களில் பஸ்களை பணிமனைகளில் நிறுத்திவிட்டு போராட்டத்தை முன்கூட்டியே துவக்கியுள்ளனர். தஞ்சாவூரில் 120க்கும் மேற்பட்ட நகர ...

கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி: வெட்டி விட்டு தப்பிய 5 பேர் கும்பலுக்கு வலை

Posted: 14 May 2017 08:04 AM PDT

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம், கோடநாடு காவலாளி கொலையை தொடர்ந்து, ஜெய லலிதாவின் சமையல்காரரையும் கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலை, கொள்ளை யில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜெய லலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயலலிதாவின் சமையல் காரராக இருந்தவரை கொலை செய்யும் நோக்கில் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். சிவகங்கையை சேர்ந்தவர் கே.பஞ்சவர்ணம் ...

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

Posted: 14 May 2017 07:07 AM PDT

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க? நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க? கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் ...

நீர் போராட்டக் கதைகள் - முருங்கத்தொழுவு

Posted: 14 May 2017 06:25 AM PDT

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தினை நபார்டு வங்கி துணையுடன் மக்கள் தூர் வாரி சாதனை புரிந்துள்ளனர். தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் ...

மீத்தேன்.....பற்றிய பதிவுகள் !

Posted: 14 May 2017 06:23 AM PDT

மீத்தேன் .பற்றிய பதிவுகள் ... சாதக பாதகங்களை விளக்கும் பதிவுகளை இந்த திரி இல் பதிவிடுங்கள் நண்பர்களே!...........இது ஒரு விழிப்புணர்வு திரி யாக இருக்கட்டும் அன்புடன், கிருஷ்ணாம்மா தமிழகத்தை யாராலும் காப்பாற்ற  இயலாது..... அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்... மீத்தேன் என்னும் எமன் இன்று காலை தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலைவனமாய் மாற்ற கூடிய மீத்தேன் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்திற்கு ...

பறவைகள் பலவிதம்...!!

Posted: 14 May 2017 06:05 AM PDT

' கருவால் மூக்கன் ' பறவை கிளியூர் குளத்துக்கு வலசை வருகை. நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்னும் இடத்தில் இருந்து 2007 மார்ச் 17 – ந்தேதி புறப்பட்ட இந்த சிறிய பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் 8 நாட்கள் பறந்து 10,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ' யாலு ஜியாங் ' என்ற இடத்தை அடைந்தது. பின்னர், ஐந்து வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பி 5 நாட்களில் 7,400 கிலோமீட்டர் தூரம் பறந்து இனப்பெருக்கம் செய்யும் இடமான மேற்கு அலாஸ்காவின் யூகான் – குஷாக்வின் முகத்துவார ...

#save_farmers

Posted: 14 May 2017 06:02 AM PDT

தண்ணீர் மறு சுழற்சி

Posted: 14 May 2017 06:01 AM PDT

'தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் மறுசுழற்சி முறையை கட்டாயமாக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், நகரமைப்பு வல்லுனர்கள். நகரங்களில், தனி வீடுகள் பிரதானமாக இருந்த போது, ஒவ்வொரு வீட்டிலும் குளியல் அறை, சமையல் மற்றும் கழிப்பறை என, தனித்தனியாக அறைகள் இருந்தன. அவற்றில் இருந்து வெளியேறும் நீரும், தனித்தனியாக பிரிக்கப்பட்டன. கழிப்பறை நீர் மட்டும், 'செப்டிக் டேங்க்' வாயிலாக அகற்றப்பட்டது. மற்ற வகை நீர், நிலத்தில் ...

வெயில் ஊரிலிருந்து...!!

Posted: 14 May 2017 05:57 AM PDT

* கோடைக் காலத்தில் வேலூர் என்பதை வெய்யிலூர் என்றே அழைக்கப்படுகின்றது. அந்த அளவுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வெப்பநிலைக் குறைந்தபாடில்லை. அதற்கேற்ற வகையில் இயற்கைச் சுற்றுச்சூழல் அமைந்திருக்க வேண்டும். பசுமையான மரங்கள், நீர்நிலைகள் அவற்றை ஓரளவுக்கு சமப்படுத்தும். இங்குள்ள பரந்த பாலாறு கடுமையாக வறண்டு காணப்படுகின்றது. நகரைச் சுற்றியுள்ள இடங்களில் ஏரிகள், குளங்கள் கூட மிக மோசமாக வறண்டுக் கிடக்கின்றது. மேலும், கோடைகாலம் துவக்கத் தொடங்குவதற்கு முன்னரே, வெயில் தன் கோரமுகத்தை ...

இயற்கை உலகம்!

Posted: 14 May 2017 05:42 AM PDT

இயற்கை உலகம்: வலி அறியாத தேனீக்கள்! காயமடைந்த தேனீக்களுக்கு வலியைப் போக்கும் மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தையும், சாதாரண இனிப்பு திரவத்தையும் தந்து விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். ஆனால், காயமடைந்த தேனீக்கள் சாதாரண இனிப்பு திரவத்தையே உட்கொண்டன. இதனால், தேனீக்களுக்கு வலி உணர்வு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தததாக, 'ரியல் கிளியர் சயின்ஸ் டாட் காம்' இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் இந்த வாரம்.

Posted: 14 May 2017 05:39 AM PDT



நன்றி- தமெரிக்கா TV

அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் பிரிவின் (Havard University Tamil Chair) கீதம்.

Posted: 14 May 2017 05:36 AM PDT

அமெரிக்க ஹார்வார்ட்  பல்கலைக்கழக தமிழ் பிரிவின் (Havard University Tamil Chair) கீதம். ஹார்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University)  அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, இங்கு ஆங்கிலம் மூலம்  அமெரிக்க மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கிறார் ஜொனாதன் ரிப்லே (Jonathan Ripley - the Preceptor of Tamil at Harvard University) கனடாவில் ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் பிரிவு நடத்திய நிகழ்ச்சி. நன்றி- தமெரிக்கா TV

அமெரிக்காவின் பிரபலமான வாழைப்பழ ரொட்டி (Banana Bread)

Posted: 14 May 2017 05:30 AM PDT



அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.

Posted: 14 May 2017 04:54 AM PDT

மே 13, 2017, 04:27 PM சண்டிகார், ---- அரியானா மாநிலம் ரோக்தாக் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 9-ம் வேலைக்கு சென்ற போது 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. பாலியல் பலாத்காரம் செய்து, அவருடைய உடலை சிதைத்து காரை ஏற்றி மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்து உள்ளது. டெல்லியில் நிர்பயாவிற்கு நடந்ததை விட கொடூரமான செயல் மீண்டும் அரியானாவில் அரங்கேறி உள்ளது. இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த தகவலின்படியே ...

உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல்; கணினிகள் முடக்கத்தால் பெரும் பரபரப்பு

Posted: 14 May 2017 04:50 AM PDT

- உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கணினிகள் முடங்கின. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - மே 14, 2017, 05:15 AM சியாட்டில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 99 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கணினிகளில் சட்டவிரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் புகுந்து தாக்குதல் நடத்துகிற ...

அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!

Posted: 14 May 2017 04:15 AM PDT

துதிக்கை ரேகை பார்க்கணுமாம்…!

Posted: 14 May 2017 04:13 AM PDT

- - ஒரு வருஷம் சரக்கை ஸ்டாக் வெச்சுக்கிற மாதிரி பெரிய பிரிட்ஜ் கிடைக்குமா? - எதுக்கு? - ஒரு வருஷம் நான் டாஸ்மாக் கடைக்கு போக மாட்டேன்னு சபதம் போட்டிருக்கேன்! - வி.ராரதி டேச்சு - ------------------------------------ - கர்ப்பமா இருந்த காலத்தில நான் உப்புமா அதிகம் சாப்பிட்டு இருக்க கூடாது! - ஏன் என்ன ஆச்சு? - குழந்தை 'ரவா...ரவா'னு கத்துது...! - பர்வின் யூனூஸ் - -

என் மனைவி ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவ…

Posted: 14 May 2017 04:10 AM PDT

– என் மனைவி ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவ… – நேத்து கூட உங்களை அடிச்சதா சொன்னீங்கே? – தனியா இருக்கும்போதுதான் அடிப்பாளே தவிர வீட்டுக்கு யாராவது வந்திருந்தா, தொடமாடாய்யா…!! – வி.ரேவதி – ————————————- – மன்னா, நம் படைகள் வலுவிழந்து விட்டன! – உற்சாக பானம் ஏதாவது கொடுக்க வேண்டியதுதானே…! – ஏ.மூர்த்தி – ————————————-

அது ஒன் பை டூ காபி ராகமாம்…!!

Posted: 14 May 2017 04:06 AM PDT

அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்

Posted: 14 May 2017 03:40 AM PDT

அப்பாவுக்கு ஆயிரம் கண்கள் அப்பாவுக்கு ஆயிரம் கண்கள் அத்தனையிலும் என்னைப் பார்த்தபடியேயிருப்பார் கண்டிப்பு கனிவு அன்பு தைரியம் நம்பிக்கை என ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொரு உணர்ச்சி எப்போதும் ததும்பியபடியிருக்கும் அத்தனை கண்களில் ஒரு துளியும் அவரழுது பார்த்தேனில்லை தனது மெய்க்கண்கள் இரண்டையும் இப்போது நிரந்தரமாக மூடிக்கொண்டார் மிச்சக் கண்களனைத்திலும் என்னையே கூர்ந்து கவனிக்கிறார் மேலிருந்தபடி கடைசியாக இறுகத் தாழிடப்பட்ட கணத்தில் அப்பாவின் கண்களுக்கு நன்றாகத் தெரியும் என் ...

உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்…!!

Posted: 14 May 2017 03:39 AM PDT

- - புதுமையான கச்சேரியா…என்ன? – வெளியே போகணும்னாத்தான் டிக்கெட் எடுக்கணுமாம்..! – இசக்கி – ————————— – நம்ம படத்திலேஐ வில்லன் ஏ.டி.எம் மெஷினை உடைச்சு பணத்தை கொள்ளையடிக்கிறான்…! – கொஞ்சம் நம்பற மாதிரி கதை சொல்லுங்கஃ! – ஜி.ராஜலட்சுமி – ——————————-

தரமான நெல்லிக்கனி, மாங்கனி, பால்கனி கிடைக்கும்...!!

Posted: 14 May 2017 03:37 AM PDT

இலங்கையில் வேலைவாய்ப்பு

Posted: 14 May 2017 03:36 AM PDT

இலங்கையில் வேலைவாய்ப்பு Post by Delft Nenasala Today at 1:47 pm ஈகரை தமிழ் களஞ்சிய விதிகள் , 13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள். உங்கள் பதிவு நீக்கப்படுகிறது . தனி மடலே தவிர்க்கப்படவேண்டிய நிலையில் நீங்கள் வெளிப்படையாகவே அழைப்பு விடுகிறீர்கள் . தயவுசெய்து ஈகரை விதிமுறைகளை படித்து அவற்றை அனுசரிக்கவும் . ரமணியன்

2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 14 May 2017 03:33 AM PDT

சென்னை: தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப ...

கோணல் மாணல் - காணொளி-யூ ட்ப்யூ பகிர்வு

Posted: 14 May 2017 03:32 AM PDT


-

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.

Posted: 14 May 2017 03:29 AM PDT

-- உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வழிகளை சொல்கிறார் மனோசக்தி நிபுணர் விஜயலட்சுமி பந்தையன். * மற்றவர்களது உணர்வுகளை மதியுங்கள். சந்தேகத்துக்கு குட்பை சொல்லுங்கள் * எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். அதனால் உங்கள் முகத்தில் சுருக்கங்கள் வராமல் நீங்கள் என்றும் இளமையாக இருப்பீர்கள். இந்த ரகசியத்தை வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள். - * கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை பெரிய சைஸ் ரப்பரை எடுத்து வேகவேகமாக மனதிலிருந்து அகற்றிவிடுங்கள். - * உங்கள் வாழ்வில் ...

சுயம் தொலைத்தவளே! – கவிதை

Posted: 14 May 2017 03:26 AM PDT

- ரத்தத்தை அமுதாக்கி கருவறையில் பாரம் சுமந்து உன் வேதனையில் என்னை வெளிக்காற்றை சுவாசிக்க வைத்தவளே… ஊன் தந்தாய் உதிரம் தந்தாய் உயிர் தந்தாய் நானே உன் உலகம் என்று ஆனந்தப்பட்டாய்! என் கோர முகம் கோணாதிருக்க இயல்பு மாற்றி சுயம் தொலைத்தாய்! உன் உலகையோ என்னை சுற்றி அமைத்துக் கொண்டாய்! வறுமையிலும் ஈர விறகோடு விறகாய் பொசுங்கி என் வயிற்றுப்பசி தீர்க்க உன் வயிற்றளவை குறுக்கினாய்! நான் மிடுக்காய் உடை உடுத்தி பள்ளி செல்ல… நீயோ ஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய்! கருவறையில் மட்டுமல்ல நான் ...

ரியாலிட்டி ஷோ’வில் கமல்ஹாசன்!

Posted: 14 May 2017 01:19 AM PDT

- சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், சில ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியிலும் வரிந்து கட்டியுள்ளார். மேலும், இதுவரை, 'ரியாலிட்டி ஷோ'களில், கலந்து கொள்ளாதவர், முதன்முறையாக, இந்தியில், சல்மான்கான் நடத்தி வரும், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சியை, தமிழில், வரும் ஜூன் 18ம் தேதி முதல் விஜய் டிவியில் தொகுத்து வழங்க இருக்கிறார். – —————————– — சினிமா பொன்னையா

சினி துளிகள்!

Posted: 14 May 2017 01:18 AM PDT

– - * எங்கேயும் எப்போதும் படத்தை தொடர்ந்து, ஜெய்-அஞ்சலி ஜோடி, பலுான் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். – * சமூக பிரச்னைக்கு, தீர்வு சொல்லும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார், நிகிலா விமல்.- – * வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை அடுத்து, திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்திலும், கதாநாயகியாக நடித்து வருகிறார், அமலாபால். – * மாதவனுடன் நடித்துள்ள, விக்ரம் வேதா படத்தில், தாதா வேடத்தில் நடிக்கிறார், விஜயசேதுபதி. – ———————— வாரமலர்

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து

Posted: 14 May 2017 12:55 AM PDT

- இளைய தளபதி விஜய் பிறந்தநாளான வருகிற ஜுன் 22-ஆம் தேதி விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு தற்போது ஐரோப்பா கண்டத்திலுள்ள நாடுகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய ...

புரோ கபடி லீக் தொடர்: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்

Posted: 14 May 2017 12:51 AM PDT

- சென்னை : புரோ கபடி லீக்கில் தற்போது நான்கு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சென்னை அணியை சச்சின் டெண்டுல்கர் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளார். லீக் தொடர் அறிமுகம் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்). டி20 கிரிக்கெட் தொடரான இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி, கால்பந்து டென்னிஸ் போட்டிகளிலும் லீக் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. – 8 அணிகள் 2014-ம் ...

வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 25 பிளாட்கள் – நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்

Posted: 14 May 2017 12:50 AM PDT

- மும்பை : மராட்டிய மாநிலம் தானேவில் நடிகர் விவேக் ஓபராய் வீரமரணம் அடைந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு பிளாட்கள் வழங்கி உள்ளார். 25 குடும்பங்களுக்கு … விவேக் ஓபராயின் நிறுவனமான கர்ம் இன்ப்ராஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆப்ரேஷன்களில் வீரமரணம் அடைந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு பிளாட் வழங்கப் படுவது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 4 பிளாட்கள் ஏற்கனவே உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு ...

டார்கெட்

Posted: 14 May 2017 12:42 AM PDT

நெறியாளர் :  " மனம் திறந்து பேசு " என்ற இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் . இன்று நாம் எடுத்துக்கொண்டுள்ள பொருள் " என்னுடைய இலக்கு " என்பதாகும் .  ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஓர் இலக்கு வைத்திருப்பார்கள் . அதை அடைவதுதான் தன்னுடைய லட்சியம் என்று சொல்வார்கள் . " சுதந்திரம் எனது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவேன் " என்று திலகர் அவர்கள் முழங்கினார்கள் ; அதாவது அவருடைய இலக்கு , இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதாகும் .   இதுபோல உங்களில் ஒவ்வொருவருக்கும் ...

பெண்ணின் பெருமை...!!

Posted: 13 May 2017 10:03 PM PDT

அம்மா என்றால் அன்பு!

Posted: 13 May 2017 09:09 PM PDT

கணவன் மற்றும் சுற்றத்தார் இல்லாத நிலையிலும், ஒரு தாய், தனக்கான துணையாக கருதுவது, அவளது குழந்தையை மட்டுமே! அக்குழந்தையே அவளுக்கு ஊன், உயிர் எல்லாம். இதற்கு உதாரணமாக, தாய்ப் பாசத்தின் பெருமையை கூறும் கதை இது: ஓர் குடிசை வீட்டில், தன் கைக்குழந்தையோடு பாயில் படுத்திருந்தாள், ஒரு தாய். அக்குடிசையில் நெருப்பு பற்றியதை பார்த்த தெருவாசிகள், அவள் பெயரைச் சொல்லி எழுப்பினர்; அவள் எழுந்திருக்கவில்லை. கம்பால் கதவை தட்டினர்; அவள், அசையக் கூடவில்லை. அப்போது, ஒருவர், அருகில் இருந்த ...

அம்மா... அர்த்தம் என்ன?

Posted: 13 May 2017 09:06 PM PDT

- - அ' என்பது உயிரெழுத்து; 'ம்' என்பது மெய்யெழுத்து; 'மா' என்பது உயிர்மெய் எழுத்து. தன் உயிரான சதையை, மெய்யான உடம்பில், 10 மாதம் சுமந்து பெற்றெடுப்பதால் தான், 'அம்மா' என்று அன்பொழுக அழைக்கிறோம். தமிழை தவிர, வேறு எந்த மொழியிலும், தாய் என்பதற்கு இத்தகைய பொருள் பொதிந்த வார்த்தை இல்லை. - ----------------------------- —ஜோல்னா பையன்

ஜோடி பொருத்தம் சரியில்லையே...' வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்

Posted: 13 May 2017 08:54 PM PDT

பாரிஸ்: பிரான்சில், வயது குறைந்த இளம் அதிபராக இம்மானுவேல் மக்ரோன், 39, தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு, 63 வயது என்பதால், அந்நாட்டு மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர் இம்மானுவேல் மக்ரோன், அபார வெற்றி பெற்றார். வாழ்த்து இளம் வயதில் அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்ரோன், விரைவில் ...

உலக அன்னையர் தின ”கூகுள் டூடுல்”

Posted: 13 May 2017 08:45 PM PDT

- உலக அன்னையர் தினத்தையொட்டி தாய்மையை போற்றும் "கூகுள் டூடுல்" இன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் இஞ்சினின் முகப்பு பக்கமான டூடுலில், இன்று உலகம் முழுவதும் உள்ள அன்னையரை போற்றும் வகையில் ஸ்பெஷலாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அம்மாக்களின் தியாகத்தை கார்டூன் வாயிலாக கதையாக வெளிப்படுத்தி உள்ளது. ஒரு கள்ளிச்செடியின் கர்ப்பம் தொடங்கி, குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்ளிட்டவற்றை அழகான எளிமையான அனிமேஷன் மூலம் கதையாக வெளிப்படுத்தி உள்ளது. – —————————–

இவர் யாரெனத் தெரிகிறதா? .

Posted: 13 May 2017 08:38 PM PDT

தமிழினத்தின் பெருமை. மின்னஞ்சல் என்னும் அற்புதத்தை இவ்வுலகுக்குத் தந்த சிவா ஐயாதுரை என்னும் அற்புதத் தமிழனை இவ்வுலகுக்குத் தந்தவர். திரு ஐயாதுரை அவர்கள். நியூயார்க் நகரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர். பாரதியார் சங்கத்தின், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாரதிச் செம்மல் விருது வழங்கும் விழாவுக்கு (21.07.16) வருகை புரிந்த போது..... விருது விழாவின் மேலும் சில ஒளிப்படங்கள் உறவுகளுக்காக.... சிறப்புச் சொற்பொழிவு செய்த சிலம்பொலி செல்லப்பனார், கவிஞர் ஜெயபாஸ்கரன், மூத்த ...

மர்மமென்ன? **************

Posted: 13 May 2017 08:36 PM PDT

மர்மமென்ன? ********************* வார்த்தை வலை வீசி வன்முறைகள் பல கூட்டும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்புக் காதை அல்ல அவன் மோன மொழி பேசி ஊனை உருகவைக்கும் ஓசை இல்லா திருவாசகம் காலை ஒருகூடல் மாலை மறுகூடலென காமக் கவி பாடும் முக்கூடல் பள்ளு அல்ல அவன் இன்ப வேள்வியிலும் துன்பம் சூழ்கையிலும் அத்வைதம் ஆகிவிடும் திருக்கோவையார் சிற்றின்பக் கதை எல்லாம் சிலாகித்துப் பேசும் குறுந்தொகை அல்ல அவன் பேரின்ப உலகுக்கு சேரும் கதை சொல்லும் பெரிய புராணம் அவன் காதல் ...

டீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம்

Posted: 13 May 2017 08:33 PM PDT

டீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம் காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™