Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்தியாவில் முதலீடு செய்ய இதைவிட சாதகமான நேரம் இல்லை; துருக்கிக்கு மோடி அழைப்பு

Posted: 01 May 2017 09:24 AM PDT

புதுடில்லி: ''முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதைவிட சாதகமான நேரம் இல்லை,'' என, துருக்கி முதலீட்டாளர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை அளித்தார்.

மேற்காசிய நாடான துருக்கியின் அதிபர், ரீசெப் தயீப் எர்டோகன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் நேற்று நடந்த, துருக்கி - இந்திய வர்த்தக நிறுவனங்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அமைந்து மூன்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளோம். கடந்த மூன்று ...

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அதிரடி! போலீஸ் உதவியுடன் மே 4ல் மனநலத்தை பரிசோதிக்க உத்தரவு

Posted: 01 May 2017 09:45 AM PDT

புதுடில்லி: 'கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, சி.எஸ்.கர்ணனுக்கு, வரும், 4ல், போலீஸ் உதவியுடன் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கடந்த ஆண்டு, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போது, அந்த உத்தரவை ரத்து செய்து, தானாகவே உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கினார். பின், மன்னிப்பு கேட்டு, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
அவமதிப்பு வழக்கு
இதனிடையில், சென்னை ஐகோர்ட் தலைமை ...

ஜாதி அரசியலுக்கு முழுக்கு: ஆதித்யநாத் அதிரடி

Posted: 01 May 2017 09:46 AM PDT

லக்னோ,: ''நாட்டில், ஜாதிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; நாட்டின் முன்னேற்றம், தேச பக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, மக்களின் நம்பிக்கையைபெற்று திகழும் இவர், ஜாதிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, பேசியுள்ளார்;
ஜாதி அரசியல் ஒழிக்கப்படும்
இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.லக்னோவில், ...

போலீஸ் காவல் விசாரணை முடிந்ததால் திகாரில் தினகரன்! கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு பணம் கடத்தியதாகவும் பகீர்

Posted: 01 May 2017 10:07 AM PDT

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள, சசிகலா அக்கா மகன் தினகரனை, டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

தினகரன், கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் கடத்தியதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ள போலீசார், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளனர். மேலும், டில்லியில் போலீசார் நடத்திய விசாரணையின் போது, ஹவாலா ஏஜன்ட் மூலம் பணப் பரிமாற்றம் செய்ததை, அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
அம்பலமானது
அ.தி.மு.க., பிளவுபட்டுள்ள நிலையில், முடக்கி ...

மனிதரில் கடவுளை கண்ட மகான் ராமானுஜர்; பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

Posted: 01 May 2017 10:33 AM PDT

புதுடில்லி''சமூக சீர்திருத்தவாதியும், வைணவ துறவியுமான ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தில் அவரது தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர்,'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

வைணவத் துறவி ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு தபால் தலை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் வேறுபாடின்றி வாழ்ந்து காட்டியவர் ராமானுஜர். சுயநலம் சிறிதும் இன்றி சமூக நல்லிணக்கத்திற்காக ...

கோடநாடு கொலையாளி ரகசிய வாக்குமூலம்; பீதியில் உறைந்த அ.தி.மு.க., புள்ளிகள்

Posted: 01 May 2017 10:45 AM PDT

கோடநாடு கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மாஜிஸ் திரேட்டிடம் அளித்துள்ள, 'ரகசிய வாக்குமூலம்' முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. இதனால், மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்புடைய, அ.தி.மு.க., புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், ஏப்., 23 நள்ளிரவு, மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்; பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சேலத்தைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கார் ...

மந்திரிகளின் நாளுக்கு ஒரு பேச்சு, செயலால் கடுப்பு தனித்து செயல்பட பன்னீர் அணியினர் முடிவு

Posted: 01 May 2017 10:49 AM PDT

சசிகலா அணி அமைச்சர்களின் பேச்சு, நாளுக்கு ஒரு விதமாக இருப்பதாலும், அதற்கு மாறாக, அவர்களின் செயல்பாடுகள் உள்ளதாலும், இணைப்பு பேச்சு நடத்துவது பிரயோஜனமாக இருக்காது என, பன்னீர் அணியினர் கருதுகின்றனர். அதனால், தனி அணியாகவே செயல்பட முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளையும் முடுக்கிவிட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இருதரப்பிலும் சிலர் ஆசைப்பட்டனர். பன்னீர் அணியினரோ, 'சசிகலா குடும்பத்தை, முழுமையாக நீக்க வேண்டும்; ஜெ., மறைவில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, நிபந்தனை விதித்தனர்.இது பற்றி, அமைச்சர்கள் கூடி ...

'விஜயபாஸ்கரிடம் நடந்த விசாரணை கண் துடைப்பாகி விடக்கூடாது'

Posted: 01 May 2017 10:58 AM PDT

சென்னை :''அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடந்த வருமான வரி சோதனை நடவடிக்கை, கண்துடைப்பாக இருந்து விடக்கூடாது; அவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை, பா.ஜ., அரசு வெளிப்படுத்த வேண்டும்'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

தொழிலாளர் தினத்தையொட்டி, சென்னை, மே தின பூங்கா நினைவு சின்னத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின், அவர் அளித்த பேட்டி: கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது; டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டாக்டர்களின் அனுமதிகிடைத்தால், பிறந்த நாளில், நிச்சயம் தொண்டர்களை சந்திப்பார்.
அ.தி.மு.க.,வின் ஒரு ...

பன்னாட்டு குளிர்பானம் விற்பனை அமோகம்; வணிகர்கள் அறிவிப்பு காற்றோடு போயாச்சு!

Posted: 01 May 2017 11:14 AM PDT

வணிகர்களின் அறிவிப்பு, வெறும் பேச்சோடு நின்று விட்டதால், பன்னாட்டு குளிர்பானங்களின் விற்பனை, அமோகமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்ற இளைஞர்கள், உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய, பன்னாட்டு குளிர்பான விற்பனையை தடை செய்யுமாறு வலியுறுத்தினர்.
அதை ஏற்று, வியாபாரிகள் சங்கத்தினர், தாங்களாகவே முன்வந்து, 'மார்ச் 1ல் இருந்து வெளிநாட்டு குளிர்பான விற்பனை
நிறுத்தப்படும்; பிப்ரவரி மாதம் முழுவதும், இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்' என, அறிவித்தனர். ஆனால், அறிவித்த நாள் ...

கேபிள் 'டிவி' கட்டண கொள்ளை; டி.டி.எச்.,சுக்கு மாறும் பொதுமக்கள்

Posted: 01 May 2017 12:31 PM PDT

கேபிள், 'டிவி' வாடிக்கையாளர்களிடம், ஊழியர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாலும், தவறான அணுகுமுறையாலும், டி.டி.எச்., என்னும், 'டிஷ் ஆண்டனா' வழி சேவைக்கு, மாறும் போக்கு அதிகரித்து வருகிறது.

கேபிள், 'டிவி' தொழிலில், எம்.எஸ்.ஓ., எனும் தனியார் நிறுவனங்கள் ஏகபோகமாக இருந்ததால், அதற்கு மாற்றாக, அரசு கேபிள், 'டிவி' வந்தது. இத்தொழிலை நம்பி, பல ஆயிரம் குடும்பம் வாழ்வதாக, கேபிள் ஆப்பரேட்டர்கள் சொல்கின்றனர். தற்போது, அதன் மீது, புகார்கள் எழுந்துள்ளன.
அரசு கேபிள், 'டிவி' தன் வாடிக்கையாளர்களை தக்க வைக்க, 'மொபைல் ஆப்' மூலம், 70 ரூபாயை, நேரடியாக செலுத்தும் வசதியை ...

சேலம், கோவையில் ஆடம்பர நகைகள் விற்பனை? - கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா என சந்தேகம்

Posted: 01 May 2017 01:36 PM PDT

சேலம், கோவையில் ஆடம்பர நகைகளை சிலர் விற்றுள்ளனர்; அவை, கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா என, சந்தேகம் எழுந்துள்ளதால், உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், ஆத்துார், கோவை, சென்னை உட்பட சில பகுதிகளில் உள்ள நகைக்கடை, நகை அடகு கடை மற்றும் நகை அடமானம் பெறும் தனியார் நிதி நிறுவனங்களில், பணக்கார குடும்பத்தினர் பயன்படுத்தும் ஆடம்பர நகைகளை, ஜனவரி, பிப்ரவரியில், குறைந்த விலைக்கு சிலர் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள், உறவினர்கள், நெருக்கமான வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™