Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரபாஸை நடிக்க வைக்க கடும் போட்டி

Posted:

ஒரு மாபெரும் வெற்றி, திரையுலகத்தில் மட்டுமல்ல வேறு எந்தத் துறைகளிலும் வாழ்க்கையை மாற்றிவிடும். ஐந்து வருடங்களாக வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்காக மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பிரபாஸ். அந்த ஒரு தியாகத்திற்காகவே அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து, 1000 கோடி கிளப்பின் முதல் நாயகன் ...

25 நாளைக்கு கடந்த 'ப பாண்டி, கடம்பன், சிவலிங்கா'

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போது வெளியாகும் படங்கள் பத்து நாளைத் தாண்டுமா என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர், நடிகைகளும் பதட்டத்துடன்தான் இருக்கிறார்கள். 'பைரசி' சினிமாவை ஒரு புறம் கெடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் தியேட்டர் டிக்கெட்டுகள், பார்க்கிங், ஸ்நாக்ஸ், ஆகியவற்றின் கட்டுப்பாடில்லாத விலைகள் மக்களை ...

அப்பா - மகனாக நடிக்கும் அமிதாப்-ரிஷி கபூர்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர். தற்போது இருவருக்கும் வயதாகிவிட்டதால் வயதுக்கு ஏற்ற ரோலில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர், அதுவும் அப்பா-மகனாக நடிக்கின்றனர். படத்திற்கு 102 நாட் அவுட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உமேஷ் ...

ஜாலி எல்எல்பி-2 தெலுங்கு ரீ-மேக்கில் வெங்கடேஷ்

Posted:

ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜாலி எல்எல்பி-2 என்ற பெயரில் உருவானது. இதில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் குவித்தது. இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரீ-மேக்காக உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து ...

ராணுவ வீரனாக நடிக்கும் ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக்கான், தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தப்படியாக உருவாகும் ஒரு படத்தில் ராணுவ வீரனாக நடிக்க உள்ளார். 2000-மாவது ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் நடந்த குக்ரி போரை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இதை ஷாரூக்கானே தனது ரெட்சில்லிஸ் நிறுவனத்தின் சார்பில் ...

லிவ் இன் ரிலேஷன்சிப் வாழ்க்கை வாழ விரும்பும் அர்ஜூன் கபூர்

Posted:

திருமணத்திற்கு முன்பாக லிவ் இன் ரிலேஷன்சிப் வாழ்க்கையை வாழ விரும்புவதாக பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் கூறியுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூரின் வாரிசு அர்ஜூன் கபூர். பாலிவுட்டில் நடித்து வரும் இவர் இப்போது ஹாப் கேர்ள்பிரண்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மே 19ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதனால் புரொமோஷன் ...

விதிமீறல், அபராதம் செலுத்திய சாகித் கபூரின் மனைவி - ஆச்சர்யப்பட்ட போலீஸார்

Posted:

சினிமாவோ அல்லது அரசியலோ, பிரபலங்களை விட பிரபலங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் விதி மீறல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதை அடிக்கடி வெளியாகும் செய்திகளின் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. அப்படி ஒரு விதிமீறல் சம்பவத்தில் ட்ராபிக் போலீசிடம் பாலிவுட் நடிகரான சாஹித் கபூரின் மனைவி மிரா ராஜ்புத்தும் ...

“சின்ன ரம்யா கிருஷ்ணன் தான் ரெஜினா” ; இயக்குனர் புகழாரம்..!

Posted:

மாநகரம் படத்தில் நம் மனம் கவர்ந்த ஜோடியான 'சந்தீப்-ரெஜினா இருவரும் தற்போது தெலுங்கில் 'நட்சத்திரம்' என்கிற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணாவின் கணவரே தான். இவர் ரெஜினா குறித்து சமீபத்தில் கூறுகையில், "இந்தப்படத்தில் ரெஜினாவுடன் இணைந்து ...

கௌதமிக்கு வந்த ஞாபகமறதி நோய்..!

Posted:

எண்பதுகளின் இறுதியில் தமிழில் முன்னணி நடிகையாக கோலோச்சிய நடிகை கௌதமி, மலையாளத்தில் கிட்டத்தட்ட 12 படங்களில் நடித்துள்ளார். இடையில் 2003-ஆம் ஆண்டு 'வரும் வருன்னு வன்னு' என்கிற படத்தில் நடித்த கௌதமி, கிட்டத்தட்ட 14 வருடம் கழித்து மலையாளத்தில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே 'விஸ்வாசபூர்வம் மன்சூர்' என்கிற படத்தில் ...

துல்கர் படத்தில் 'சேகுவேரா'வுக்கு குரல் கொடுத்த பஹத் பாசில்..!

Posted:

சமீபத்தில் மலையாளத்தில் அமல் நீரத் இயக்கத்தில் வெளியான 'காம்ரேட் இன் அமெரிக்கா' படத்தில் துல்கர் சல்மான் தான் ஹீரோ. ஆனால் இந்தப்படத்தில் நடிக்காவிட்டாலும் கூட, இளம் ஹீரோ பஹத் பாசிலின் பங்கும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது என்கிற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.. ஆம்.. இந்தப்படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோகும் சேகுவேரா ...

“குறையும் பலவீனமும் கூட 'த்ரிஷ்யம்' வெற்றிக்கு முக்கிய காரணம்” - ஜீத்து ஜோசப்..!

Posted:

மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'த்ரிஷயம்' படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என அனைவருக்கும் தெரியும். படத்தின் க்ளைமாக்ஸ் வரை பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் விதமாக திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் பார்த்த பல ரசிகர்கள், படம் சூப்பர் ...

தமிழ் பாட்டுடன் துல்கர் பட இயக்குனர் உருவாக்கிய டாக்குமென்ட்ரி..!

Posted:

கடந்த வெள்ளியன்று துல்கர் சல்மான் நடித்த 'காம்ரேட் இன் அமெரிக்கா' படம் வெளியானது.. அமெரிக்காவில் இருக்கும் தனது காதலியை தேடி, விசா இல்லாமல் மெக்ஸிகோ-அமெரிக்கா பார்டர் வழியாக கேரளத்து இளைஞன் ஒருவன் மேற்கொள்ளும் ரிஸ்க்கான பயணம் தான் படத்தின் கதை.. இந்தப்படத்தை இயக்கிய அமல் நீரத் தற்போது படத்தை விளம்பரபடுத்தும் விதமாக 5 ...

தமன்னாவை டென்ஷனாக்கிய கேள்விகள்

Posted:

பாகுபலி- 2 படத்தை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒருவர் மட்டும் பாகுபலி பற்றி பேச்சை எடுத்தாலே செம கடுப்பாகிறாராம். அவர் வேறு யாருமல்ல.... பாகுபலி- 2 படத்தில் நடித்துள்ள தமன்னாதான்.
பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை நீக்கியதால் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது தமன்னா செம கடுப்பில் இருப்பதாக ...

உதயநிதிக்கு ஏற்பட்ட டென்ஷன்

Posted:

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்திருக்கும் 'சரவணன் இருக்க பயமேன்' வருகிற 12- ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்தப்படத்தை 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
இது இந்த நிறுவனத்தின் 9 ஆவது தயாரிப்பாம். ...

ரசிகர்களை மகிழ்விப்பதே நடிகர்களின் பணி - பரிணிதி சோப்ரா

Posted:

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. லேடீஸ் வெஸ் ரிக்கி பாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் அக்காவை போன்று பிரபலமாக முடியவில்லை. மூன்றாண்டு இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோயினாக நடித்து, தற்போது வெளியாக தயாராகியுள்ள படம் மேரி பியாரி பிந்து. இப்படம் பற்றியும், இதில் ...

டுவிட்டரில் பிரபலங்கள் ஆபாசமாக ‛டிஷ்யூம், டிஷ்யூம்

Posted:

சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பு கிடைக்கிறது. தங்களைத் தொடரும் லட்சக் கணக்கானோர் மூலம் தங்கள் படங்களைப் பற்றிய நேரடி விமர்சனம், கருத்துக்கள் கிடைக்கிறது என பெரும்பாலான செலிபிரட்டிகள் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் ...

இளையராஜாவுக்கு பாராட்டு விழா!

Posted:

அன்னக்கிளி படம் துவங்கி, பாலாவின், தாரைத்தப்பட்டை படத்தோடு, ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து விட்டார், இளையராஜா. மேலும், பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவருக்கு, தமிழ் திரையுலகம் சார்பில், பாராட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார், நடிகர் விஷால். சென்னையில் நடக்கும் இவ்விழாவில், இந்திய சினிமா உலகினர் அனைவரும் கலந்து ...

1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!

Posted:

மூத்த மலையாள எழுத்தாளர், என்.டி.வாசுதேவநாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய, 'இரண்டாம் ஊழல்' என்ற கதையை, திரைப் படமாக, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் எடுக்கின்றனர். மகாபாரத பீமன் கதாபாத்திரத்திற்கு, முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள இப்படத்தில், பீமனாக, மலையாள ...

போர்க்கொடி தூக்கிய நடிகை!

Posted:

கமலுடன், ஆளவந்தான் படத்தில், நாயகியாக நடித்தவர், ரவீணா. பிரபல இந்தி நடிகையான இவர், தற்போது, மதர் என்ற படத்தில் நடிக்கிறார். பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தமான இப்படத்திற்கு, எந்த சான்றிதழும் வழங்க முடியாது என்று, சென்சார் போர்டு மறுத்து விட்டது. இதனால், கடும் கோபத்திற்கு ஆளான ரவீணா, 'சென்சார் போர்டின் சட்டதிட்டங்கள் பழமையாக உள்ளன; ...

மீண்டும் நாயகியான இனியா!

Posted:

வாகை சூடவா பட நாயகி இனியா, தற்போது, தமிழில் பொட்டு படத்தில் நடித்து வருபவர், மலையாளத்தில், சமுத்திரக்கனி இயக்கும், ஆகாச மிட்டாய் என்ற படத்தில், ஜெயராமிற்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபகாலமாக, தமிழைப் போலவே, மலையாளத்திலும், 'கேரக்டர்' வேடங்களிலேயே நடித்து வந்த இனியாவுக்கு, இப்படத்தில் நடிக்க இருந்த வரலட்சுமி விலகியதை அடுத்து, அந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™