Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜுன் 1 முதல் 'விவேகம்' டப்பிங் ஆரம்பம்

Posted:

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'விவேகம்'. இப்படத்தின் டீசர் மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டீசர் விரைவில் 14 மில்லியன் பார்வையையும், 4 லட்சம் லைக்குகளையும் தொட ...

யாருக்கும் பேட்டி கொடுக்காதீர்கள் : ரசிகர்களுக்கு கடிவாளம் போட்ட ரஜினி

Posted:

மன்ற தலைமையின் ஒப்புதல் இன்றி, யாரும், யாருக்கும் பேட்டி கொடுக்காதீர்கள் என தன் ரசிகர்களுக்கு கடிவாளம் போட்டுள்ளார் ரஜினி. நடிகர் ரஜினிகாந்த், தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தபோது, தன் அரசியல் பயணம் பற்றி மறைமுகமாக வெளிப்படுத்தினார். இது ரஜினி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என பல ...

தமிழுக்கு வரும் அபய் தியோல்

Posted:

ஹிந்தி நடிகர் தர்மேந்திராவின் உறவினரான அபய் தியோல் 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். அஷ்வின், ஐஸ்வர்யா ராஜஷ் ஆகியோருடன் அபய் தியோலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான போட்டோ ஷுட் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது அபய்யுடன் ...

'காலா' வாய்ப்பு, அமைதி காக்கும் ஹுமா குரேஷி

Posted:

ரஜினிகாந்த்தின் பேத்தி வயதிருக்கும் நடிகைகள் கூட அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று தங்களது பேட்டிகளில் அவர்களது ஆசை என வெளிப்படுத்துவார்கள். ஆனால், ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஹுமா குரேஷி அமைதியாகவே இருக்கிறார்.
ஹிந்தியில் ஓரிரு படங்களில் ...

'வேலைக்காரன்' வெளியீட்டுத் தேதி மீண்டும் மாறுமா ?

Posted:

மோகன்ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.
இப்படத்தை முதலில் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று ...

'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம்

Posted:

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்ப விழா, பத்து நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் சுந்தர் .சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ...

விஜய் ரசிகருக்கு வாக்கு கொடுத்த ஜெயராம்..!

Posted:

கேரளாவில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இன்றும் மலையாள படங்களில் பெரும்பாலானவற்றில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்கள், போஸ்டர்கள் என ஏதோ ஒன்று தவறாமல் இடம்பிடித்து விடுகிறது. டிவி ஷோக்களில் கேட்கவே வேண்டாம்.. விஜய் பாடல்களை பாடுவது, விஜய் போல மிமிக்ரி பண்ணுவது ...

பிறந்த குழந்தைக்கு புதிய கார் பரிசளித்த நிவின்பாலி..!

Posted:

பிறந்த குழந்தைக்கு கார் ஓட்ட தெரியுமா என்ன..? ஆனால் தனது மகிழ்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்த சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தைக்கு பரிசாக கார் வாங்கி இருக்கிறார் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி. கடந்த சில தினங்களுக்கு முன் நிவின்பாலி அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார். அந்த குழந்தை இனி எங்கு அழைத்துச்செல்லப்பட்டாலும் ...

மம்முட்டியின் படப்பிடிப்பு தளத்தில் கலாட்டா..!

Posted:

மம்முட்டி தற்போது நடித்து வரும் படம் 'மாஸ்டர் பீஸ்'. அஜய் வாசுதேவ் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இது கல்லூரி சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக கோல்கட்டாவில் உள்ள பாத்திமா மாதா கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதனால் ...

50வது நாளை நெருங்கும் 'சகாவு'..!

Posted:

'பாகுபலி-2' படத்திற்கு பத்து நாட்கள் முன்னதாகவே மலையாளத்தில் ரிலீசான படம் தான் நிவின்பாலி நடித்த 'சகாவு'.. கேரளாவிலும் 'பாகுபலி-2'வின் தாக்கத்தால் பல படங்கள் தியேட்டரில் இருந்து பின்வாங்கின. ஆனால் 'சகாவு' படம் திரையிட்ட பல இடங்களில் ஐம்பதாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.. ஆனால் ...

மூன்று நாளில் ரூ.27.85 கோடி வசூலித்த சச்சின்

Posted:

மைதானத்தில் விளையாடி வந்த சச்சின் இப்போது திரையிலும் விளையாட தொடங்கிவிட்டார். சச்சினின் வாழ்க்கை, சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் சச்சினே நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் ...

மீண்டும் இணையும் தத்தா-அபிஷேக்

Posted:

இயக்குநர் ஜேபி தத்தா - அபிஷேக் பச்சன் கூட்டணியில் ஏற்கனவே ரெப்யூஜ், எல்ஓசி: கார்கில் மற்றும் உம்ராவ் ஜான் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இப்போது இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைய உள்ளனர். படத்திற்கு பல்தன் என்று பெயர் வைத்துள்ளனர். இது 1962-ம் ஆண்டில் நடந்த சினோ-இந்தியன் போரை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில் அபிஷேக் பச்சன் உடன் ...

ராணுவ வீரராக நடிக்கும் கார்த்திக் ஆர்யன்

Posted:

பியார் கா பஞ்ச்சனமா, ஆகாஷ் வாணி போன்ற படங்களில் நடித்தவர் கார்த்திக் ஆர்யன். இவர் அடுத்தப்படியாக நீரஜ் பாண்டே தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு ஜூதா காகின் கா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ராணுவத்தில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவருக்கும், அவரது ஜூனியருக்கும் இடையேயான முட்டல், மோதல்களை காமெடியாக சொல்ல போகிற ...

தமால்-3யில் அஜய் தேவ்கன் மற்றும் அனில் கபூர்

Posted:

இயக்குநர் இந்திர குமார் இயக்கத்தில் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான படங்கள் தமால் மற்றும் தமால்-2. இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இந்திர குமார் இப்போது தமால் 3 இயக்க உள்ளார். இதற்காக படத்திற்கு டோட்டல் தமால் என்று பெயர் வைத்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த சஞ்சய் தத் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ...

பழம்பெரும் ஹிந்தி நடிகையின் பரிதாப நிலை

Posted:

ஹிந்தி திரைப்படங்களில் நடித்த, பழம்பெரும் நடிகை கீதா கபூரை அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்து விட்டு காணாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த, 1972ம் ஆண்டு வெளியான, பகீஷா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தவர், கீதா கபூர். ரசியா சுல்தான் உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மும்பையில் உள்ள எஸ்.ஆர்.வி., ...

காலாவில் இணைந்த இன்னொரு தேசிய விருது நடிகர்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படம் காலா. கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்குகிறார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் தேசிய விருது பெற்ற நடிகைகள் ஹூமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனியும் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தேசிய ...

அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்: நெடுவாசலில் ஆரி பேட்டி

Posted:

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் தொடங்கியுள்ள போராட்டத்தில் நடிகர் ஆரி கலந்து கொண்டார், அவருடன் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆரி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும் அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ...

தமிழில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்

Posted:

தமிழில் தற்போது 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கிறது. பொழுதுபோக்கு, சினிமா, செய்தி, ஆன்மீகம், பழங்கால சினிமா, பாடல்கள், காமெடி ஆகியவற்றுக்கு தனித்தனி சேனல்கள் உள்ளது. அதேப்போல ஒவ்வொரு மதத்திற்கும் சேனல்கள் உள்ளது. கட்சிகளும் சேனல் தொடங்கி உள்ளது. ஆனால் விளையாட்டுக்கென்று தனி தமிழ் சேனல் கிடையாது.
தற்போது இந்த குறையை போக்க ...

சேம்பர் வளாகத்தில் 25 சதவிகித இடம் கேட்டு திரையுலகினர் திடீர் போராட்டம்

Posted:

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. சேம்பருக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக இன்னொரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதே வளாத்தில் தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடத்தின் மொட்டைமாடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ...

ஒருவழியாக ரிலீஸ்க்கு தயாரான கோபிசந்த் - நயன்தாரா படம்

Posted:

தெலுங்கில் நயன்தாரா பீக்கில் இருந்த நேரத்தில் அதாவது 2012ல் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் 'அரடுகுல புல்லட்'. கோபிசந்த கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படமத்தை முதலில் பூபதி பாண்டியன் இயக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் சில காரணங்களால் பூபதி பாண்டியன் வெளியேற சீனியர் இயக்குனரான பி.கோபால் இந்தப்படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப்படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™