Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆயுஸ் சர்மாவுக்கு ஜோடியாக கத்ரீனா கைப்.?

Posted:

நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானின் கணவர் ஆயுஸ் சர்மா. இவர் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் முதல்படத்தை அறிமுக இயக்குநர் ஆதித்யா தர் இயக்குகிறார். படத்திற்கு ராத் பாகி என்று பெயர் வைத்துள்ளனர். காதல் கலந்த மியூசிக்கல் படமாக இப்படம் உருவாக உள்ளது.
இந்நிலையில் முதல் படத்திலேயே ஆயுஸ் சர்மா, நடிகை ...

ஒருவாரம் முடிவில் ஹாப் கேர்ள்பிரண்ட் - ஹிந்தி மீடியம் வசூல்

Posted:

கடந்த மே 19ம் தேதி அர்ஜூன் கபூர் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் ஹாப் கேர்ள்பிரண்ட் படமும், இர்பான் கான் - சபா ஓமர் நடிப்பில் ஹிந்தி மீடியம் படமும் ரிலீஸாகின. இதில் ஹிந்தி மீடியம் படம் விமர்சர்களால் பாராட்டை பெற்றது, ஆனால் ஹாப் கேர்ள்பிரண்ட் படத்திற்கு அந்த பாராட்டு கூட கிடைக்கவில்லை. மேலும் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ...

பிக்பாஸ் நிகழ்ச்சி என்னை தமிழக குடும்பத்துக்குள்ளும் கொண்டு செல்லும் - கமல்

Posted:

சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக்பாஸ். மக்கள் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதற்கு முக்கிய காரணம், இதை தொகுத்து வழங்க இருப்பது கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. பிக்பாஸ் புரோமோவை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசும்போது,

நான் கம்பெனி ஆரம்பித்த போது ...

தெலுங்கில் அடியெடுத்து வைக்கும் எழுத்தாளர்கள் சுபா..!

Posted:

தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி இயக்குனர்கள் தான், கதாசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றி வருகிறார்கள். அந்தவகையில் ஒரு காலகட்டத்தில் ஷங்கரின் ஆஸ்தான கதாசிரியராக மறைந்த எழுத்தாளர் சுஜாதா இருந்தார். அவரது மறைவுக்குப்பின் எழுத்தாளர் ஜெயமோகனும், இரட்டை ...

103 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய அமிதாப் பச்சன்

Posted:

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த, இப்போதும் படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சனுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமே. ஆனால் எல்லா ரசிகர்களாலும் அமிதாப்பை சந்தித்துவிட முடிகிறதா என்ன..?, நம் சூப்பர்ஸ்டார் ரஜினி கூட கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்தாலும், ஒரு குறிப்பிட அளவிலான ரசிகர்களுக்கே அந்த பாக்கியம் கிடைத்தது. ...

18 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் கால் பாதிக்கும் ராதிகா..!

Posted:

சின்னத்திரையில் கோலோச்சிக்கொண்டு இருந்தாலும் கூட, தர்மதுரை, சங்கிலி புங்கிலி கதவ தொற என ஏதாவது நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் தலைகாட்டவே செய்கிறார் ராதிகா. தமிழ் மட்டுமல்லாது நீண்ட நாட்களாக தொடர்பே இல்லாமல் இருந்த மலையாளத்தில் கூட 24 வருடங்கள் கழித்து 'ராம்லீலா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ...

மோகன்லாலால் கனவு நனவானது ; ஆனந்த கண்ணீரில் லால் ஜோஸ்..!

Posted:

சமீப வருடங்களில் பார்த்தால் புதிய இயக்குனர்கள் டைரக்சனில் மோகன்லால் நடித்ததாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அவருடைய ஆஸ்தான இயக்குனர்கள் மற்றும் ஒரு சில படங்களையாவது இயக்கிய இயக்குனர்கள் படங்களில் மட்டுமே மோகன்லால் நடித்து வருகிறார். அப்படி இருக்கையில் இயக்குனர் லால் ஜோஸ் மட்டும் என்ன பாவம் செய்தார்..? மலையாள ...

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - கண்காணிக்கும் கமல்

Posted:

நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பிக்பாஸ் புரொமோ டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அதில், தோன்று கமல்...
"நான் நடிகனாக சினிமாவில் பல வேஷங்கள் போட்டுள்ளேன். ஆனால் என்னை ...

யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் - கமல் அட்வைஸ்

Posted:

தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன், முதன்முறையாக சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார். வடமாநில சேனல்களில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய்டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதை கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதுதொடர்பான பிரஸ் மீட் ...

சீக்கிரம் அரசியலுக்கு வாங்க : ரஜினிக்கு சத்ருகன் அழைப்பு

Posted:

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரவேண்டும், அவருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன், என பா.ஜ., - எம்.பி.,யும், நடிகருமான, சத்ருகன் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.
யோசனை : நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா, தனிக்கட்சி துவங்குவாரா, பா.ஜ.,வில் சேருவாரா என்பதுதான் தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ...

தமிழ் சினிமாவின் ஆளுமை ஆச்சி மனோரமாவின் 80வது பிறந்த தினம் இன்று

Posted:

தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஆச்சி மனோராமா. 5 முதல்வர்களோடு நடித்தவர். 5 தலைமுறையினரோடு நடித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். நாடக நடிகையாக, சினிமா நாயகியாக, காமெடி நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக, சின்னத்திரை நடிகையாக, தயாரிப்பாளராக அவர் எடுத்த அவதாரங்கள் அதிகம். மனோரமா ...

பெண் சாமியாராக நடித்தது ஏன்? கே.ஆர்.விஜயா விளக்கம்

Posted:

கே.தங்கவேலு என்பவர் தயாரிப்பில், ராசா விக்ரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாய மோகினி. இதில் குஷ்புவின் தம்பி அப்துல்லா, சாரிகா, ஜோதிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாக பெண் சாமியாராக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பெண் சாமியாராக ...

ஐ.டி கம்பெனிகளின் கருப்பு பக்கத்தை காட்டும் படம்

Posted:

வெளி உலகத்திற்கு பளபளப்பாக தெரியும் ஐ.டி கம்பெனிகளில் நடக்கும் முறைகேடுகள், அவற்றால் வாழ்க்கை இழக்கும் இளைஞர்கள் என அதன் கருப்பு பக்கத்தை காட்டும் படமாக உருவாகி உள்ளது விளையாட்டு ஆரம்பம். சாட்டை யுவன், ஸ்ரவியா, ரியாஸ்கான், பானுசந்தர், எலிசெபத் உள்பட பலர் நடித்துள்ளனர். அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா ...

புதியவர்கள் உருவாக்கும் எனக்குள் ஏதோ

Posted:

புதியவர்கள் இணைந்து எனக்குள் ஏதோ என்ற படத்தை உருவாக்குகிறார்கள். பிரின்ஸ் என்பவர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் ஒரு இயக்குனரின் காதல் டயரி படத்தில் நடித்த ஸ்வாதி ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சிங்கம்புலி, மனோபாலா, சுவாமிநாதன், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். ...

விஜய் டி.வியில் புதிய தொடர் ராஜா ராணி

Posted:

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் போன்ற பெரிய பட்ஜெட் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று புதிய புதிய நேரடி தமிழ் தொடர்களுக்கும் முக்கியத்தும் தருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜா ராணி என்ற தொடர்.
புகழ்பெற்ற திரைப்படத்தின் தலைப்புகளை சீரியல்களுக்கு வைப்பது பேஷன் என்பதால் இதற்கு ஆர்யா, நயன்தாரா ...

பிளாஷ்பேக்: பிரபு நடிகர் ஆன கதை

Posted:

நடிகர் திலகம் சிவாஜியின் ஆஸ்தான இயக்குனர் சி.வி.ராஜேந்திரன். சிவாஜியை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். அவர் இந்தியில் வெளியான காளிச்சரன் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். அதில் சிவாஜி நடிப்பது உறுதியானது. அந்தப் படத்தில் சிவாஜி கேரக்டருக்கு இணையான இன்னொரு கேரக்டர் ஒன்று இருந்தது. இந்த கேரக்டருக்கு ...

என் உயரம் எனக்கு தெரியும் - ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

காக்கா முட்டை ஐஸ்வர்யா, தற்போது விக்ரம், தனுஷ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகியிருக்கிறார். அதேபோல் மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின்பாலி என அங்குள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சில நடிகைகளைப் போன்று தனது சம்பளமும் உயரவில்லை என்ற வருத்தத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதாக செய்திகள் ...

குழந்தைகளுடன் பேவாட்ச் படத்தை பார்க்க வேண்டாம் - பிரியங்கா சோப்ரா

Posted:

குடும்பம் குழந்தை குட்டிகள் என்று தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்று தான் எல்லோருமே நினைப்பார்கள். ஆனால் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவோ, தான் நடித்துள்ள பேவாட்ச் படத்தை, தங்களது குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டாம் என்று பெற்றோர்கள் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

காரணம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ...

சங்கராந்திக்கு வெளியாகும் மகேஷ்பாபுவின் பாரத் அனி நேனு

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்து கோரட்டாலா சிவா இயக்கும் பாரத் அனி நேனு என்ற படத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ...

அனுஷ்காவுக்காக காத்திருக்கும் இயக்குநர்

Posted:

பாகுபலி-2 படத்திற்கு பிறகு அந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் புதிய படங்களில் கமிட்டாகி பிசியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பிரபாஸ், பாகுபலி-2விற்கு பிறகு ஓய்வெடுத்து வருபவர், அடுத்த மாதம் முதல் சாஹோ படத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து ராணா, நேனே ராஜூ நேனே மந்திரி, மடை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™