Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ஒன்ராறியோவின் வரி அறவிடும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் வரவேற்பு

Posted: 23 Apr 2017 08:21 AM PDT

வீடு வாங்கும் வெளிநாட்டவர்களிடம் இருந்து 15 சதவீத வரியினை அறிவிடும் ஒன்ராறியோ அரசாங்கத்தின் திட்டத்தை கனேடிய மத்திய அரசாங்கம் வரவேற்றுள்ளது. ஒன்ராறியோ அரசாங்கத்தின் இந்த திட்டங்கள் தொடர்பில் தாமும் ஏற்கனவே பரந்துபட்ட அளவில் ஆராய்ந்துள்ளதனால், இந்த அறிவிப்பு தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை என மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவின் இந்த திட்டங்கள், விரைவில் ரொரன்ரோ வீட்டுச் சந்தையில் ஒரு நல்ல நிலையினை ஏற்படுத்தும் என்றும், இந்த திட்டத்தை ரொரன்ரோ மற்றும் […]

The post ஒன்ராறியோவின் வரி அறவிடும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் வரவேற்பு appeared first on TamilStar.com.

Dorset Parkஇல் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபருக்கு வலைவீச்சு

Posted: 23 Apr 2017 08:18 AM PDT

ஸ்காபரோவின் Dorset Park பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் அளவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து சனிக்கிழமை மாலை 6.15அளவில் வடக்கு கெனடி வீதி மற்றும் புரோகிரஸ் அவனியூப் பகுதிக்கு அவசர மீட்ப்புப் படையினர் வரவழைக்க்பபட்டனர். அவர்கள் அங்கு சென்ற போது ஆண் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுச் காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவரை கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகவும் […]

The post Dorset Parkஇல் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபருக்கு வலைவீச்சு appeared first on TamilStar.com.

கூட்டு எதிர்க்கட்சியை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவே காலிமுகத் திடல் வழங்கப்பட்டுள்ளது: மகிந்த

Posted: 23 Apr 2017 08:08 AM PDT

கூட்டு எதிர்க்கட்சியை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கிலேயே கூட்டு எதிர்க்கட்சிக்கு மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத் திடல் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எந்த உடன்பாடுகளும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா தெல்கொட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க அனைத்து அர்ப்பணிப்புகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால […]

The post கூட்டு எதிர்க்கட்சியை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவே காலிமுகத் திடல் வழங்கப்பட்டுள்ளது: மகிந்த appeared first on TamilStar.com.

வரலாறு காணாத செயற்பாடு? நாமலின் புதுச் சபதம்

Posted: 23 Apr 2017 08:03 AM PDT

இப்போது அரசு எம்மை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நேற்று மொரட்டுவையில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் காலி முகத்திடலை மே முதலாம் திகதி எமக்கு தருவதாக அரசு தரப்பு ஒப்புதல் அளித்தது. ஆனாலும் இப்போது பொது மக்கள் ஆதரவு எமக்கு அதிகரித்து விட்டதை அறிந்து கொண்டதால் மீண்டும் பின்னோக்கி […]

The post வரலாறு காணாத செயற்பாடு? நாமலின் புதுச் சபதம் appeared first on TamilStar.com.

கைநழுவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை? – இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றில் தீர்மானம்!

Posted: 23 Apr 2017 08:00 AM PDT

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 55 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றே இந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும், ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகளை செயற்படுத்தல் குறித்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதற்கமைய, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதை தவிர்க்குமாறு ஐரோப்பிய […]

The post கைநழுவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை? – இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றில் தீர்மானம்! appeared first on TamilStar.com.

வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் – மகிந்த ராஜபக்ச

Posted: 23 Apr 2017 07:58 AM PDT

நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு வழங்கும் பரிசாக அரசாங்கம் தண்டனை வழங்க போகிறதா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்கும் சட்டத்தின் மூலம் படையினரை சிறைக்கு கொண்டு செல்ல போகின்றனர் எனவும், சட்டத்தின் பயங்கரத்தை நாட்டை நேசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காலஞ்சென்ற முன்னாள் […]

The post வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் – மகிந்த ராஜபக்ச appeared first on TamilStar.com.

மைத்திரியிடம் எழுத்துமூல உறுதிமொழி பெறவில்லை! – சுமந்திரன் சொல்வது பொய் என்கிறார் சுரேஷ்

Posted: 23 Apr 2017 07:56 AM PDT

தனியார் காணிகளை விடுவிப்போம் என்று மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் உத்தரவாதம் தந்துள்ளதாக சுமந்திரன் பொய் கூறுகின்றார். அவ்வாறு தந்திருந்தால் அந்த ஆவணத்தினை காட்டவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள், அடுத்தது என்ன..? எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்- 2015 […]

The post மைத்திரியிடம் எழுத்துமூல உறுதிமொழி பெறவில்லை! – சுமந்திரன் சொல்வது பொய் என்கிறார் சுரேஷ் appeared first on TamilStar.com.

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏற போகும் கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பிக்கள்

Posted: 23 Apr 2017 07:51 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த முறை நடாத்தும் மே தினக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

The post சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏற போகும் கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் appeared first on TamilStar.com.

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு மஹிந்த, சந்திரிகா ஆகியோருக்கும் அழைப்பு!

Posted: 23 Apr 2017 07:49 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி கெட்டம்பே மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்காக சுமார் ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். […]

The post சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு மஹிந்த, சந்திரிகா ஆகியோருக்கும் அழைப்பு! appeared first on TamilStar.com.

லசந்த கொலை சந்தேக நபருக்கு இராஜதந்திரப் பதவி கொடுத்து மாட்டிக் கொண்ட கோத்தா!

Posted: 23 Apr 2017 07:44 AM PDT

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராஜதந்திர பதவி வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சன்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலையுடன் ராஜபக்சவினருக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் எந்தவிதமான தொடர்பும் தமக்குக் கிடையாது என ராஜபக்ச குடும்பத்தினர் ஆரம்பத்தில் […]

The post லசந்த கொலை சந்தேக நபருக்கு இராஜதந்திரப் பதவி கொடுத்து மாட்டிக் கொண்ட கோத்தா! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™