Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனேடியப் பிரதமர் அமெரிக்கா பயணம்

Posted: 06 Apr 2017 09:46 AM PDT

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். இந்த ஆண்டில் கனேடியப் பிரதமர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நியூயோர்க் செல்லும் அவர், அங்கு சில நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார் என்றும், அவற்றுள் யூ டியூப் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுசான் வோஜிக்கீ, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகம் அன்டோனியோ கோட்டெர்ஸ் ஆகியோருடனான சந்திப்புக்களையும் நடாத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இந்த […]

The post கனேடியப் பிரதமர் அமெரிக்கா பயணம் appeared first on TamilStar.com.

பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொள்ள முயன்றவர் கைது

Posted: 06 Apr 2017 09:40 AM PDT

பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொள்ளும் நோக்குடன் கனடாவில் இருந்து வெளியேறத் தாயாரான நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கனேடிய மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த அந்த நபர் ரொரன்ரோ காவல்த்துறையினரால் தடுப்புக் காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், இன்று அவர் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார். பயங்கரவாதம் தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள்பபட்டு வந்த நிலையிலேயே நேற்று புதன்கிழமை அவர் கைது […]

The post பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொள்ள முயன்றவர் கைது appeared first on TamilStar.com.

நாடாளுமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட தினேஷ் குணவர்தன

Posted: 06 Apr 2017 09:36 AM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த ராஜபக்ச அணி அரசாங்கத்தின் சிறப்புரிமைகளின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்பதை அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று சபையில் ஒப்புக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த சபை ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பிக்கப்படும் முன்னர், கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன கூட்டு எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்படும் நேரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, ஆளும் கட்சிக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் இருந்தே கூட்டு எதிர்க்கட்சிக்கு நேரம் ஒதுக்கப்படுவதால், […]

The post நாடாளுமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட தினேஷ் குணவர்தன appeared first on TamilStar.com.

தென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஸ்தாபிதம் : தமிழ் முற்போக்கு கூட்டணி, பிரதமர் சந்திப்பு

Posted: 06 Apr 2017 08:58 AM PDT

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், […]

The post தென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஸ்தாபிதம் : தமிழ் முற்போக்கு கூட்டணி, பிரதமர் சந்திப்பு appeared first on TamilStar.com.

கூட்டு எதிர்க்கட்சியினரும் ஐ.தே.கட்சியினரும் ஒன்றுகூடி விட்டார்கள் : இராஜாங்க அமைச்சர்

Posted: 06 Apr 2017 08:54 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சி காலி முகத்திடல் மைதானத்தை வழங்கியுள்ளது. இதன் ஊடாக இரு தரப்பிற்கும் இடையிலான இணக்கப்பாடு வெளிச்சமாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சிக்கு வசதிகளை வழங்கி கூட்டத்தை நடாத்த உதவினாலும் […]

The post கூட்டு எதிர்க்கட்சியினரும் ஐ.தே.கட்சியினரும் ஒன்றுகூடி விட்டார்கள் : இராஜாங்க அமைச்சர் appeared first on TamilStar.com.

வடமாகாண சபை என்ன செய்துள்ளது? என கேட்பவர்களுக்கு அவைத்தலைவர் கூறிய பதில்

Posted: 06 Apr 2017 08:46 AM PDT

வடமாகாண சபை 355 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன் சகல தீர்மானங்களும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாகாணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், வடமாகாண சபை 355 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அவை பொறுப்புவாய்ந்த […]

The post வடமாகாண சபை என்ன செய்துள்ளது? என கேட்பவர்களுக்கு அவைத்தலைவர் கூறிய பதில் appeared first on TamilStar.com.

இளமையுடன் இருப்பதற்காக அமெரிக்கா சென்று ஊசி போடுகிறாராம் மஹிந்த!

Posted: 06 Apr 2017 08:27 AM PDT

எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு சென்று ஊசி ஏற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்ப நலன் கருதி தன்னை பிரபலமாக மாற்றிக்கொள்வதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றார் என எதிரணியினரால் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இதில் அவர்கள் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும் […]

The post இளமையுடன் இருப்பதற்காக அமெரிக்கா சென்று ஊசி போடுகிறாராம் மஹிந்த! appeared first on TamilStar.com.

விடுதலைப்புலிகளின் குற்றங்கள்? அமைச்சரின் கருத்துக்கு வடக்கு முதல்வர் பதில்

Posted: 06 Apr 2017 08:26 AM PDT

நாட்டில் இருக்கும் உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன "போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளினால் இழைத்த குற்றங்களை எவரிடம் விசாரிப்பது?" என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே முதலமைச்சர் குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ‘கடந்த கால யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதென்பதையும் […]

The post விடுதலைப்புலிகளின் குற்றங்கள்? அமைச்சரின் கருத்துக்கு வடக்கு முதல்வர் பதில் appeared first on TamilStar.com.

உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது! – யோகேஸ்வரன் எம்.பி

Posted: 06 Apr 2017 08:12 AM PDT

உள்நாட்டு விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் தவறிழைத்த இராணுவ உறுப்பினர்களை ஜூரிகள் சபை குற்றமற்றவர்கள் என தீர்மானித்து விடுவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இவ்வாறே தீர்ப்பு அமைந்திருந்தது. உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்ட வாய்ப்பில்லை. எனவே சர்வதேச தலையீடு மிகவும் இன்றியமையாதது. சாட்சியங்கள் கூட இல்லாமல் செய்யப்பட்டு […]

The post உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது! – யோகேஸ்வரன் எம்.பி appeared first on TamilStar.com.

விமல் வீரவன்சவை பீடித்த காய்ச்சல் – டெங்கு இல்லை!

Posted: 06 Apr 2017 08:06 AM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஒருவகையான வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிறில் டி சில்வா, அது டெங்குக் காய்ச்சல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். உடல் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கின்ற, விமல் வீரவன்சவுக்கு நுண்ணுயிர் எதிர்வினை மருந்துகள் வழங்கப்படுவதாகவும், இரத்தப் பரிசோதனை ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில், கடந்த 21ஆம் திகதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அவர், 26ஆம் திகதி […]

The post விமல் வீரவன்சவை பீடித்த காய்ச்சல் – டெங்கு இல்லை! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™