Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


வூட்பிரிட்ஜ் துப்பாக்கிச் சூடு: மூவர் மருத்துவமனையில்

Posted: 04 Apr 2017 07:37 AM PDT

வூட்பிரிட்ஜ் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அதில் ஆண்கள் இருவரும் , ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 400ற்கும் Fenmar Driveற்கும் இடைப்பட்ட பகுதியில், Steeles Avenueவில் அமைந்துள்ள அந்த இரவுக் கேளிக்கை விடுதியின் உள்பகுதியிலும், வெளியிலும் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. […]

The post வூட்பிரிட்ஜ் துப்பாக்கிச் சூடு: மூவர் மருத்துவமனையில் appeared first on TamilStar.com.

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: மாற்றமின்றி ஆசனங்களை கைப்பற்றிய கட்சிகள்

Posted: 04 Apr 2017 07:35 AM PDT

கனடாவின் ஐந்து தொகுதிகளுக்கு நேற்று திங்கட்கிழமை நடாத்தப்பட்ட இடைத் தேர்தல்களில், குறித்த தொகுதிகளின் ஆசனங்களை கடந்த தேர்தலில் கைப்பற்றிய அதே கட்சிகளே இந்த இடைத் தேர்தலிலும் கைப்பற்றியுள்ளன. ஒன்ராறியோவில் மார்க்கம் – தோர்ன்ஹில், ஒட்டாவா – வெனியர், மொன்றியல் ஐலன்டில் செயின்ட் லோராண்டு்(Saint-Laurent) தொகுதிகளின் ஆசனங்களை லிபரல் கட்சியும், கல்கரி மிட்னாபோர் மற்றும் கல்கரி ஹரிட்டேஜ் தொகுதிகளின் ஆசனங்களை பழமைவாதக் கட்சியும் கைப்பற்றியுள்ளன. ஒன்ராறியோவில் மார்க்கம் – தோர்ன்ஹிலில் போட்டியிட்ட லிபரல் கட்சி வேட்பாளர் மேரி இங்க்(Mary […]

The post 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: மாற்றமின்றி ஆசனங்களை கைப்பற்றிய கட்சிகள் appeared first on TamilStar.com.

ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரத்தளபதிகளின் 8வது வீர வணக்க நாள்!

Posted: 04 Apr 2017 07:33 AM PDT

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக, பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும், தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப் புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான "கடற்தடுப்புச் சுவரை" வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. […]

The post ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரத்தளபதிகளின் 8வது வீர வணக்க நாள்! appeared first on TamilStar.com.

விமலுக்கு வந்த புதுச்சிக்கல் : இரகசியங்கள் அம்பலமாக்கப்படுமா…?

Posted: 04 Apr 2017 07:29 AM PDT

மைத்திரியை வெற்றி பெற வைத்ததோடு மகிந்தவை தோல்வியடைய செய்து அவரை அழித்தவர்கள் விமல், கம்மன்பில, ஞானசார தேரர் போன்றோரே என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். பிரதியமைச்சர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விமல் வீரவங்ச ஏனையோரை விட்டு விட்டு தன்னை மட்டும் வம்புக்கு இழுப்பது ஏன் என்பது தெரியவில்லை. அவர் என் மீது கொண்ட கோபத்திற்கான காரணம், அவர் மனைவி சஷி வீரவங்சவிற்கு […]

The post விமலுக்கு வந்த புதுச்சிக்கல் : இரகசியங்கள் அம்பலமாக்கப்படுமா…? appeared first on TamilStar.com.

மகிந்தவின் ஆட்சியை முற்றாக தோற்கடிக்க முடியவில்லை

Posted: 04 Apr 2017 07:25 AM PDT

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அரசியல் ஆட்சியாளர்களை முழுமையாக தோற்கடிக்க முடியாது போனதாக சிவில் அமைப்புகளின் செயற்பட்டாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் செயற்பாட்டு ரீதியான அரசியல் பாத்திரங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தற்போதைய அரசாங்கத்திற்குள்ளும் இருந்தமையே இந்த நிலைமைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை ஏற்பட்டிருப்பது ஒரு அனர்த்தம் எனவும் சரத் விஜேசூரிய கூறியுள்ளார். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் […]

The post மகிந்தவின் ஆட்சியை முற்றாக தோற்கடிக்க முடியவில்லை appeared first on TamilStar.com.

பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த காரணமா? பிரதமரிடம் புள்ளி விபரம் கோரும் கூட்டு எதிர்க்கட்சி

Posted: 04 Apr 2017 07:20 AM PDT

மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடன் காரணமாகவே நாட்டில் தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதாக தெரிவித்தமை தொடர்பில் நாட்டின் பொறுப்புமிக்க ஒருவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புள்ளி விபரங்களுடன் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரச ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பளம் வழங்குவதற்காக வருடாந்தம் 658 பில்லியன் பணத்தை ஒதுக்க […]

The post பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த காரணமா? பிரதமரிடம் புள்ளி விபரம் கோரும் கூட்டு எதிர்க்கட்சி appeared first on TamilStar.com.

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று மாதங்களால் நீடிப்பு

Posted: 04 Apr 2017 07:16 AM PDT

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களால் நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருக்கின்றார் என தெரியவருகின்றது. கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு மூன்று மாதங்களுக்குள் தனது விசாரணை அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. எனினும், விசாரணைகள் இன்னும் நடந்து வருவதால் அதன் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார் என்று ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை […]

The post பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று மாதங்களால் நீடிப்பு appeared first on TamilStar.com.

சர்வதேசத்துடன் போட்டியிட ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் – பிரதமர்

Posted: 04 Apr 2017 07:13 AM PDT

சர்வதேசத்துடன் போட்டியிட இலங்கையின் தொழிற்துறையை மேலும் வலுப்படுத்தி ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தொழிற்துறையுடன் சிறிய தொழிற்துறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் சுபீட்சமான இலங்கை தேசிய கண்காட்சியின் இறுதி நாளான இன்று, அதனை திறந்து வைத்து பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். ஏற்றுமதிகளை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் அந்நிய செலாவணியின் […]

The post சர்வதேசத்துடன் போட்டியிட ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் appeared first on TamilStar.com.

வடக்கிற்குச் செல்கிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்!

Posted: 04 Apr 2017 07:10 AM PDT

அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ், மூன்று நாட்கள் பயணமாக இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, 2009 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது. […]

The post வடக்கிற்குச் செல்கிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்! appeared first on TamilStar.com.

அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுவது நல்லது : எஸ்.பி.திஸாநாயக்க

Posted: 04 Apr 2017 07:07 AM PDT

நாட்டிற்குள் காணப்படும் சிக்கலான நிலைமையில், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டு வருவது மிகச்சிறந்த விடயம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது சகல தரப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகிறது. மேலும் அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் […]

The post அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுவது நல்லது : எஸ்.பி.திஸாநாயக்க appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™